கூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா?

Posted October 4, 2010 by arshathalathary
Categories: Uncategorized

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

சகோதர, சகோதரிகளே! இன்றைய காலகட்டத்திலும் சரி இதற்கு முந்தைய காலக் கட்டங்களிலும் சரி உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இருப்பது இஸ்லாம் மட்டுமே! இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில் அல்-குர்ஆனின் வசனங்களால் கவரப்பட்டும் அதை அடிபிறழாது பின்பற்றியொழுகிய சத்திய சீலர்களின் நற்பண்புகளைக் கண்டும் எண்ணற்றோர் இஸ்லாத்தைத் தழுவினார்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான முஸ்லிம்களின் வாழ்க்கை முறையோ குர்ஆனிலிருந்து வெகு தூரமாகவே இருக்கிறது. ஆயினும் மேலை நாடுகளிலும் தூர கிழக்கு நாடுகளிலும் இஸ்லாமே வேகமாக வளரும் மார்க்கமாக இருக்கிறது. இதற்கு காரணம் தற்போதுள்ள முஸ்லிம்கின் வாழ்கை முறையைப் பார்த்தா என்றால் நிச்சயமாக இல்லை!

அருள்மறையாம் அல்-குர்ஆனின் அற்புத வசனங்களைக் கண்டு அதில் ஈர்க்கப்பட்டே ஏராளமானவர்கள் இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். இதை அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு, தாம் இஸ்லாத்தை ஏற்றதற்கான காரணமாக அவர்கள் குறிப்பிடும் காரணங்களில் தலையானதும் முக்கியமானதுமாக திருக் குர்ஆன் விளங்குகிறது. நாம் பேட்டி கண்ட பலரும் அல்-குர்ஆனே தாம் இஸ்லாத்தை தழுவ காரணமாக இருந்தது என்று கூறுகின்றனர். ஆனால் இஸ்லாமிய பெற்றோர்களுக்கு பிறந்த நம்முடைய சகோதர, சகோதரிகளின் நிலையோ குர்ஆனைக் கூட ஓதத் தெரியாமல் கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஓதவேண்டிய மிக பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது.

குர்ஆன் என்பது பட்டுத் துணியில் சுற்றி பரணியில் பத்திரமாக வைப்பதற்கோ அல்லது வீட்டில் இழவு (மரணம்) விழுந்தால் கூலிக்கு மத புரோகிதர்களை வரவழைத்து ஓதுவதற்காகவோ அருளப்பட்டதன்று!

அல்குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கத்தை அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 16 வசனம் 89 ல் கூறுகிறான்: -

“மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.”

அகில உலகங்களின் இரட்சகனான அல்லாஹ் அவனுடைய படைப்பினமான மனித குலம் முழுமைக்கும் நேர்வழி காட்டுவதற்காக அருளிய சத்திய திருமறையில், அனைத்து மனிதர்களையும் நேக்கி இந்தக் குர்ஆனைக் குறித்து சிந்தனை செய்து ஆராய்சி செய்யுமாறு பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறான்.

இறைவன் கூறுகிறான்: -

“அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா?” (4:82)

“(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்” (38:29)

சாதாரண பாமர மக்களால் கூட புரிந்துக்கொள்ளும் எளிமையான முறையில் அல்-குர்ஆனை அருளியிருப்பதக அல்லாஹ் கூறுகிறான்.

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; (அல்-குர்ஆன் 2:185)

அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்-குர்ஆன் 44:58)

இஸ்லாமிய பெயர் தாங்கிய மத புரோகிதர்களை கூலிக்கு அமர்த்தி அல்-குர்ஆனை ஓதுவதால் இறந்தவருக்கோ அல்லது அவ்வாறு கூலி கொடுத்து ஓத வைப்பவருக்கோ இறைவன் மேற்கண்ட வசனங்களில் கூறிய நல்லுணர்வும் அல்-குர்ஆனைப் புரிந்துக் கொள்ளும் பாக்கியமும் எவ்வாறு கிடைக்கும்? கூலிக்கு ஆட்கள் வந்து ஓதி விட்டுப் போனால் நாம் எவ்வாறு அல்குர்ஆனின் வசனங்களை கவனித்து சிந்தித்து ஆராய முடியும்? மேலும் கூலிக்காக வந்து ஓதுபவர்களிடம் இன்று இந்த வீட்டில் என்ன சாப்பாடு கிடைக்கும்? எவ்வளவு பணம் தருவார்கள் என்ற எண்ணமே மேலோங்கியே இருக்கும் என்பதல்லாது அந்தப் புரோகிதர்கள் உண்மையில் இவ்வாறு ஓத செய்பவர்களின் இறந்த உறவினர்களுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்றா நினைப்பார்?

அப்படியே அவர்கள் நன்மையையே நினைத்தாலும் கூட அது இஸ்லாம் காட்டித்தரும் வழிமுறையில்லையே! மாறாக இஸ்லாத்தில் இல்லாத புதுமையான செயல்களைச் செய்த பாவம் அல்லவா கிடைக்கும்? ஏனென்றால் கூலிக்கு ஆள் அமர்த்தி குர்ஆன் ஓதும் பழக்கம் நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது அவர்களை அப்படியே பின்பற்றி வாழ்ந்த சகாபாக்கள் காலத்திலோ இல்லாத, ஒரு பிற்காலத்தில் வந்தவர்களால் மார்க்கத்தில் நுழைக்கப்பட்ட ஒரு நூதன செயலாகும்.

“மார்க்கத்தில் நுழைக்கப்பட்ட செயல்கள் அனைத்தும் பித்அத்துகள். பித்அத்துக்ள அனைத்தும் நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடுகள்” என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். குர்ஆனை ஓதி அதன் நன்மைகளை அல்லாஹ்விடமே கேட்க வேண்டும் என்றும் அதற்கான கூலியை பிறரிடம் எதிர்பார்க்க கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இம்ரான் இப்னு ஹூஸைன் (ரலி) அவர்கள் வாயிலாக இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் தங்களின் சுனனில் அறிவிக்கிறார்கள் : (இம்ரான் இப்னு ஹூஸைன் (ரலி)) அவர்கள் குர்ஆன் ஓதும் ஒருவரை கடந்து சென்றார்கள். அப்போது அவர் அவர்களிடம் (ஏதோ சிலதை தருமாறு) கேட்டார். அதற்கு அவர் ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்’. நான் நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்:

“யாராவது குர்ஆன் ஓதினால் அதனைக் கொண்டு அல்லாஹ்விடமே கேட்கட்டும். பிற்காலத்தில் ஒரு சமூகத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதிவிட்டு அதன் மூலம் மக்களிடம் (பலனை) எதிர்பார்ப்பார்கள்” ஆதாரம் : திர்மிதி.

மேற்கண்ட ஹதீஸின் படியும், கூலிக்கு ஓதவது கூடாது என்பதும் அறியமுடிகிறது.

என தருமை சகோதர, சகோதரிகளே! அல்-குர்ஆன் அருளப்பெற்றதன் காரணம் அறிந்து அதை பொருளுடன் படித்து வருவோமேயானால் அது கூறும் நற்பலன்களை இன்ஷா அல்லாஹ் நாம் பெற முடியும். திருமறையை நாம் பொருளுடன் ஓதி வருவதால் ஏற்படும் நன்மைகளை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுகிறான்: -

- குர்ஆன் மூலமாக அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான் – (42:52)
- குர்ஆன் மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளை கொண்டதாகவுள்ளது – (45:20)
- குர்ஆன் நம்பிக்கையாளாகளுக்கு நேர்வழிவழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது – (45:20 , 27:77)
- குர்ஆன் நேர்வழி காட்டுகிறது – (17:9 , 46:30 , 45:11)
- குர்ஆன் முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது – (27:2)
- குர்ஆன் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது – (41:4 , 44:3)
- குர்ஆன் அகப்பார்வை அளிக்கிறது – (50:8)
- குர்ஆன் அகிலத்தார் அனைவருக்கும் நல்லுபதேசம் செய்கிறது – (50:8 , 81:27-28)
- குர்ஆனை செவிதாழ்த்திக் கேட்பவருக்கு படிப்பினை இருக்கிறது – (50:37)
- குர்ஆன் அறிந்துணரும் மக்களுக்கு தெளிவாக்கப்பட்டுள்ளது – (41:3)
- குர்ஆன் அகிலத்தார் அனைவருக்கும் நினைவூட்டும் நல்லுபதேசமாகும் – (68:52, 69:48, 73:19, 76:29-30, 80:11-12)
- குர்ஆன் பிரித்து அறிவிக்கக் கூடியது – (86:13-14)
- குர்ஆன் ஈமான் கொண்டவர்களுக்கு வழிகாட்டியும், மருந்துமாகும் – (41:44)
- குர்ஆன் பிரித்து அறிவிக்கக் கூடியது: வீனான வார்த்தைகளைக் கொண்டது இல்லை – (86:13-14)
- குர்ஆனில் எத்தகைய சந்தேகமும் இல்லை – (2:2)
- பயபக்தியுடையோருக்கு குர்ஆன் நேர்வழிகாட்டியாகும் – (2:2)

எனவே திருமறை கூறும் மேற்கூறிய நற்பலன்களை நாம் பெற வேண்டுமெனில் அதை பொருளுணர்ந்து நாம் படித்தால் தான் முடியுமே தவிர கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஓதுவதால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை.

இறந்தவர்களுக்கு அவர்களுடைய வாரிசுகளாகிய நாம் நன்மைகள் செய்து அவர்களுக்கு சேர்த்திட விரும்பினால் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைகள் ஏராளம் உள்ளன. அவற்றையறிந்து அதன்படி நடந்தால் நமக்கும் நபிவழியைப் பின்பற்றிய நன்மைகள் கிடைப்பதோடு அல்லாஹ்விடம் சேர்ந்து விட்ட நமது உறவினர்களுக்கும் இன்ஷா அல்லாஹ் நன்மைகள் கிடைக்கும்.

அதற்கு மாறாக மாறாக மாற்று மதத்தவர்கள் தங்களின் இறந்தவர்களுக்காக செய்கின்ற சடங்குகளைப் போல் கூலிக்கு மத புரோகிதர்களை வரவழைத்து குர்ஆன் ஓத வைத்தால் நாம் மேலே கூறப்பட்டுள்ள நற்பலன்களை இழந்து விடுவதோடு நபி (ஸல்) அவர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றி ஒழுகிய சஹாபாப் பெருமக்களின் வழிமுறைகளில்லாத பித்அத்துகளைச் செய்த பாவம் நமக்கு வந்து சேரும். அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாகவும்.

அல்லாஹ் கூறுகிறான்.

- குர்ஆனை பின்பற்றாதவனுக்கு ஷைத்தான் நன்பனாக்கப்படுவான் – (43:36-39)

- அறிவுடையோர் தாம் குர்ஆனைப் பின்பற்றுகின்றனர் – (39:9)

- கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்கள் குர்ஆன் நேர்வழிவழியில் சேர்க்கிறது என்று காண்கிறார்கள் – (34:6)

எனவே சகோதர, சகோதாகளே, மேற்கண்ட திருமறை வசனங்கள் மற்றும் நபிமொழிகள் வலியுறுத்துவது போல நம் வாழ்க்கை நெறிமுறைகளை குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளுக்கேற்ப அமைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் அருள்புவானாகவும்.

நன்றி: சுவனத்தென்றல்

அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்!

Posted October 4, 2010 by arshathalathary
Categories: Uncategorized

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்:

முதல் அடிப்படை:

அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி வந்துள்ள அல்குர்அன் வசனங்களையும் நபிமொழிகளையும் அணுகும் முறை.

அல்குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் பொறுத்தவரை அவை தருகின்ற வெளிப்படையான கருத்திலேயே அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது. ஏனெனில் அல்குர்ஆன் அரபி மொழியிலேயே அருளப்பட்டுள்ளது. அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் அரபு மொழியையே பேசினார்கள்.

அல்குர்ஆனும் நபிமொழிகளும் தருகின்ற வெளிப்படையான கருத்துக்களை விட்டுவிட்டு அவற்றுக்கு வேறு அர்த்தங்கள் கற்பிப்பது அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுவதாக அமையும். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

‘வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும் இரகசியமானதையும் எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே இறைவன் தடுத்துள்ளான் என (நபியே!) கூறுவீராக!’  (அல்-அஃராப் 7:33) என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேற்கூறப்பட்ட அடிப்படையைப் பின்வரும் உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنفِقُ كَيْفَ يَشَاء

‘மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்’ (அல்-மாயிதா 5:64)

இந்த வசனத்தில் ‘யதானிஎன்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரபு மொழியில் யதானி என்பதன் பொருள் ‘இரு கைகள்என்பதாகும்.

எனவே இவ்வசனத்திலிருந்து அல்லாஹ்வுக்கு ‘இருகைகள்’ இருப்பதாகவே விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு மாற்றமாக ‘கை’ என்பதற்கு ‘சக்தி’ என்று விளக்கம் கொடுப்பது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதாகவே அமையும்.

இரண்டாவது அடிப்படை:

அல்லாஹ்வுடைய பெயர்கள் தொடர்பானது.

(1) அல்லாஹ்வுடைய திருநாமங்கள் அமைத்தும் அழகியவை, அழகின் சிகரத்தில் உள்ளவை, அதில் எந்தக் குறையும் கிடையாது. அவை கூடவே பண்புகளையும் கொண்டிருக்கின்றன.

‘அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன’  (அல்-அஃராப் 7:180)

உதாரணமாக ‘அர்ரஹ்மான்’ (அளவற்ற அருளாளன்) என்ற திருநாமத்தைக் குறிப்பிடலாம். இந்தப் பெயர் கூடவே ‘ அருள் ‘ என்ற பண்பையும் கொண்டிருக்கிறது.

அதேவேளை ‘காலத்தைத் திட்டாதீர்கள். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் காலமாவான்’ (முஸ்லிம் – 2246) என்ற ஹதீஸை வைத்து ‘அத்தஹ்ரு’ (காலம்) என்பது அல்லாஹ்வுடைய திருநாமங்களில் ஒன்று என்று கூற முடியாது. ஏனெனில் இந்தச் சொல் அழகின் உச்சத்தையுடைய ஒரு பொருளை தருவதாக இல்லை. எனவே இந்த ஹதீஸின் கருத்து, ‘காலத்தை இயக்குகிறவன் அல்லாஹ்’ என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

ஹதீஸில் குத்ஸியில் அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘எனது கையிலேயே அதிகாரம் இருக்கிறது. நானே இரவையும் பகலையும் மாறிமாறி வரச் செய்கிறேன்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (7491), முஸ்லிம் (2246)

(2) அல்லாஹ்வின் திருநாமங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையைக் கொண்டவையல்ல.

‘யா அல்லாஹ்! உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் யாசிக்கிறேன். அந்தப் பெயரை நீயே உனக்குச் சூட்டியிருப்பாய், அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய், அல்லது உனது படைப்புகளில் எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய், அல்லது மறைவானவை பற்றிய ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருப்பாய்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்கள்: அஹ்மத், இப்னு ஹிப்பான், ஹாக்கிம், – சில்ஸிலா ஸஹீஹாவில் ஷேய்க் அல்பானீ (ரஹ்) அவர்கள் இதனை ஸஹீஹ் என்று குறிப்பிடுகிறார்கள். ஹதீஸ் எண் – 199)

அல்லாஹ் தனது மறைவானவை பற்றிய ஞானத்தில் வைத்திருக்கும் அவனது பெயர்களின் எண்ணிக்கையை அவனைத் தவிர வேறு எவராலும் அறிந்து கொள்ள முடியாது.

‘நிச்சயமாக அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றை யார் சரிவர அறிந்து கொள்கின்றாரோ அவர் சுவனம் நுழைவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரி (6410), முஸ்லிம் (2677))

இந்த ஹதீஸ் மேற்படி ஹதீஸுடன் எந்த வகையிலும் முரண்பட மாட்டாது. ஏனெனில் இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் திருப்பெயர்கள் 99 தான் என்று வரையறை செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

(3) அல்லாஹ்வின் திருநாமங்கள் அறிவினடிப்படையில் அமைந்தவையல்ல. மாறாக அவை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைக் கொண்டு தான் அமையும். எனவே அவற்றில் கூட்டல், குறைத்தல் கூடாது. அல்லாஹ் தனக்குத் தாமாக சூட்டிக்கொண்ட, அல்லது நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு இருப்பதாகச் சொன்ன) பெயர்களே தவிர புதிதாக அவனுக்குப் பெயர்களை உருவாக்குவதோ, அல்லது அவன் தனக்கு சூட்டிக் கொண்ட பெயர்களை மறுப்பதோ பெரும் குற்றமாகும்.

(4) அல்லாஹ்வுடைய திருநாமங்கள் ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் தாத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. அத்துடன் அது கொண்டிருக்கும் பண்பையும் அறிவிக்கிறது.

மூன்றாவது அடிப்படை:

அல்லாஹ்வுடைய பண்புகள் (ஸிபத்துக்கள்) பற்றியது.

(1) அல்லாஹ்வுடைய பண்புகள் அனைத்தும் உயர்ந்தவை, பூரணமானவை, புகழுக்குரியவை. அவை எந்தக் குறைபாடும் கிடையாது.

வாழ்வு, அறிவு, ஆற்றல், கேள்வி, பார்வை, ஞானம், அருள், உயர்வு போன்ற பண்புகளை உதாரணமாகக் கூறலாம்.

‘அல்லாஹ்வுக்கோ உயர்ந்த பண்பு உள்ளது’ என்று அல்லாஹ் கூறுகின்றான். (அந்நஹ்ல்16:60)

அல்லாஹ் பூரணமானவன் எனவே அவனது பண்புகளும் பூரணமாக இருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு பண்பு (ஸிஃபத்) பூரணத்துவம் இல்லாமல் குறைபாடுடையதாக இருந்தால் அது அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடாத ஸிஃபத்தாகும். மரணம், அறியாமை, இயலாமை, செவிடு, ஊமை போன்ற பண்புகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அல்லாஹ் தன்னைக் குறைபாடுடைய ஸிபத்துக்களால் வர்ணிப்பவர்களைக் கண்டிக்கிறான். அத்துடன் குறைகளிலிருந்து தன்னைப் பரிசுத்தப்படுத்துகிறான்.

‘ரப்பு’ என்ற நிலையில் இருக்கும் அல்லாஹ் குறைபாடுடையவனாக இருப்பது அவனது ருபூபிய்யத்தைக் களங்கப்படுத்தி விடும்.

ஏதாவது ஒரு ‘ஸிஃபத்’ ஒரு பக்கம் பூரணமானதாகவும் இன்னொரு பக்கம் குறைபாடு உள்ளதாகவும் இருந்தால் அந்தப் பண்பு அல்லாஹ்வுக்கு இருக்கிறது என்றோ அல்லது இருக்கக் கூடாது என்றோ ஒட்டு மொத்தமாகக் கூறக்கூடாது. மாறாக அதனைத் தெளிவு படுத்த வேண்டும். அதாவது அந்தப் பண்பு பூரணமாக இருக்கும் நிலையில் அது அல்லாஹ்வுக்குரிய பண்பு என்றும் குறைபாடுடையதாக இருக்கும் போது அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடாத பண்பு என்றும் கூற வேண்டும்.

உதாரணமாக, (المكر) மக்ர் (சூழ்ச்சி செய்தல்) (الخدع) கதஃ (ஏமாற்றுதல்) போன்ற பண்புகளைக் குறிப்பிடலாம்.

‘யாராவது சூழ்ச்சி செய்தால் பதிலுக்கு சூழ்ச்சி செய்தல்’ என்ற நிலையில் வரும்போது அது பூரணத்துவத்தை அடைகிறது. ஏனெனில் சூழ்ச்சி செய்தவனை எதிர் கொள்ள முடியாத அளவு பலவீனன் அல்ல என்ற கருத்திலேயே இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறல்லாமல் சூழ்ச்சி செய்தல் என்பது குறைபாடான ஒரு பண்பாகும்.

முதல் நிலையில் இப்படிப்பட்ட பண்புகள் அல்லாஹ்வுக்கு இருக்க வேண்டிய பண்புகளாகவும் இரண்டாவது நிலையில் இருக்கக் கூடாத பண்புகளாகவும் காணப்படுகின்றன.

இந்தக் கருத்திலே தான் பினவரும் வசனங்கள் அமைந்திருக்கின்றன.

‘அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கின்றான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்’ (அல்-அன்ஃபால்:30)

‘அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன்’ (அத்தாரிக்86:16,17)

‘நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றக் கூடியவன்’ (அந்நிஸா4:142)

அல்லாஹ் சதி செய்யக்கூடியவனா என்று நம்மிடம் வினவப்பட்டால், ஆம் என்றோ அல்லது இல்லையென்றோ பொதுப்படையாகக் கூறக்கூடாது. மாறாக யார் சதிசெய்யப்படத் தகுதியானவர்களோ அவர்களுக்கு சதி செய்யக் கூடியவன்’ என்றே கூற வேண்டும். அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

(2) அல்லாஹ்வுடைய பண்புகள் இரண்டு வகைப்படும்.

அ) (الثبوتية) அத்துபூதிய்யா: அதாவது அல்லாஹ் தனக்கு இருப்பதாகக் கூறிய பண்புகள் (உதாரணம்: வாழ்வு, அறிவு, சக்தி) அவை அல்லாஹ்வுக்கு இருக்கின்ற பண்புகள் என்று நம்ப வேண்டும்.

ஆ) (السلبية) அஸ்ஸலபிய்யா: அல்லாஹ் தனக்கு என்று மறுத்த பண்புகள் (உதாரணம்: அநீதி இழைத்தல்)

இப்படிப்பட்ட அவனுக்கு இருக்கக் கூடாத பண்புகளை மறுக்க வேண்டும். அதே நேரம் அதற்கு எதிரான பண்பு பூரணமான முறையில் அவனுக்கு இருக்கிறது என்று நம்ப வேண்டும்.

உதாரணமாக,

‘உமது இரட்சகன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்’ (அல்கஹ்ஃபு18:49) என்ற வசனத்தைக் குறிப்பிடலாம்.

இங்கு ‘அநீதி இழைத்தல்’ என்ற ‘ஸிஃபத்தை’ மறுக்கின்ற அதே நேரம் அவனுக்கு பூரணமாக ‘நீதி வழங்குதல்’ என்ற பண்பு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

(3) அல்லாஹ்வுக்கு இருக்கக்கூடிய பண்புகள் (الصفات التبوثية) இரண்டு வகைப்படும்.

அ) அவனுடன் எப்போதும் இருந்து கொண்டிருக்கக்கூடிய பண்புகள் (உதாரணம்: கேள்வி, பார்வை) இதற்கு அரபியில் (الذاتية) ‘தாதிய்யா’ என்று சொல்லப்படும்.

ஆ) அவன் நாடினால் செய்யவும், நாடினால் செய்யாமல் இருக்கவும் முடியுமான அவனுடைய செயல்களோடு தொடர்பான பண்புகள் (உதாரணம்: அல்லாஹ் வருவான், இறங்குகிறான்) இதற்கு அரபியில் (الفعلية) ‘fபிஃலிய்யா’ என்று சொல்லப்படும்.

சிலவேளைகளில் ஒரே ‘ஸிஃபத்’ ‘பிஃலிய்யா’வாகவும் ‘தாதிய்யா’வாகவும் இருக்கும். உதாரணம்: (கலாம்) பேசுதல்.

(4) ஒவ்வொரு ஸிபத் பற்றியும் பின்வரும் மூன்று கேள்விகள் எழுகின்றன.

  1. அல்லாஹ்வுடைய ‘ஸிஃபத்து’ யதார்த்தமானதா? அது ஏன்?
  2. அல்லாஹ்வுடைய ‘ஸிஃபத்தை’ விவரிக்க முடியுமா? ஏன்?
  3. அதற்கு படைப்பினங்களின் ‘ஸிஃபத்து’க்களைக் கொண்டு உதாரணம் கூற முடியுமா? ஏன்?

முதலாவது கேள்விக்கான பதில்:

ஆம்! அல்லாஹ்வின் ஸிஃபத்துக்கள் யதார்த்தமானவை. அரபு மொழியில் ஒரு சொல் பயன்படுத்தப்பட்டால் அதனுடைய யதார்த்தமான கருத்தில் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதே அடிப்படை விதி. அது அல்லாத வேறு அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு சரியான ஆதாரம் வேண்டும்.

இரண்டாவது கேள்விக்கான பதில்:

அல்லாஹ்வுடைய பண்புகளை விவரிக்க முடியாது. ‘அவனை அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ள மாட்டார்கள்’ (தாஹா20:110) என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவனுடைய ஸிஃபத்துக்கள் பற்றி அறிவால் அறிந்து கொள்ள முடியாது.

மூன்றாவது கேள்விக்கான பதில்:

அவனது பண்புகள் படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாக மாட்டாது.

‘அவனைப் போல் எதுவும் இல்லை’ (அஷ்ஷுரா26:11) என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் மிக உயர்ந்த பண்புகளுக்கு சொந்தக்காரன் என்ற வகையில் அவனைப் படைப்பினங்களுக்கு ஒப்பிட முடியாது.

உதாரணம், விவரனம் இரண்டுக்குமிடையில் உள்ள வித்தியாசம்:

அல்லாஹ்வுடைய கை மனிதனுடைய கையைப் போன்றது என்று கூறுவது உதாரணம் கூறுவதாகும்.

அல்லாஹ்வுடைய கை இப்படிப்பட்டது என்று குறிப்பிட்ட ஒரு அமைப்பை அதற்கு உருவாக்குவது விவரிப்பதாகும்.

இவை இரண்டுமே கிடையாது.

நாலாவது அடிப்படை:

அல்லாஹ்வுடைய பண்புகளை மறுப்போருக்கு மறுப்புச் சொல்லுதல்:

அல்லாஹ்டைய பண்புகளில் அல்லது திருநாமங்களில் எதையாவது மறுப்போர் அல்லது குர்ஆன் ஹதீஸில் வந்துள்ளவற்றைத் திரிவுபடுத்துவோர் (المعطلة) ‘முஅத்திலா’ என்றும் (المؤولة) ‘முஅவ்விலா’ என்றும் அழைக்கப்படுவர்.

இவர்களுக்குப் பொதுவாக நாம் சொல்லும் மறுப்பு:

நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அல்குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமானதாகும். ஸலஃபுகள் சென்ற வழிக்கு முரணானதாகும். மேலும் உங்களுடைய கூற்றுக்கு எந்த பலமான ஆதாரமும் இல்லை என்பதாகும்.

நன்றி: சுவனத்தென்றல்

தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்

Posted October 4, 2010 by arshathalathary
Categories: Uncategorized

‘அஸ்மா” என்பதற்கு ‘பெயர்கள்’ என்று பொருள். ‘ஸிஃபாத்’ என்பதற்கு ‘பண்புகள்’ என்று பொருள். எனவே தவ்ஹீது அஸ்மா வஸ்ஸிஃபாத் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய பெயர்களை, பண்புகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனுடைய இந்தப் பெயர்களில், பண்புகளில் அவனுடைய படைப்பினங்களில் எதற்கும் யாருக்கும் இணைவைக்காமல் இருப்பதாகும்.

அல்லாஹ்வின் பண்புகளில், ஆற்றல்களில் எதையும் மறுக்க கூடாது அல்லது அந்த பண்புகளுக்குள்ள அர்த்தங்களை மாற்றவோ, அல்லது குறைக்கவோ கூடாது. மேலும் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளை அவனுடைய படைப்பினங்களான பிறருக்கும் இருப்பதாக எண்ணக் கூடாது. இவ்வாறு நம்பிக்கை கொள்வதற்கு தவ்ஹீது அஸ்மா வஸ்ஸிஃபாத் என்று பெயர்.

உதாரணமாக, அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பெயர்களில் ஒன்றாகிய ‘அஸ் ஸமீவு’, அதாவது ‘எல்லாவற்றையும் கேட்கக் கூடியவன்’. ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான இந்தப் பெயரை அல்லாஹ் அல்லாத ஒரு மனிதருக்கோ அல்லது சமாதியில் அடக்க மாகியிருப்பவருக்கோ, அல்லது ஒரு சிலைக்கோ, அல்லது ஒரு நபிக்கோ இருப்பதாக எண்ணினால் நிச்சயமாக அவர் அல்லாஹ்வுக்கு உரிய இந்தப் பெயரை அல்லாஹ் அல்லாதவைகளுக்கு பங்களித்தன் மூலம் ‘ஷிர்க்’ என்ற மாபெரும் பாவமாகிய இணை வைத்தலைச் செய்தவராகிறார். (அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாகவும்)

மற்றொரு உதாரணமாக, யாராவது ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பெயர்களில் ஒன்றாகிய ‘அல் பஷீர்’ அல்லது ‘எல்லாவற்றையும் பார்க்கக் கூடியவன்’ என்ற இந்தப் பெயரை, பண்பை அல்லாஹ் அல்லாத ஒரு மனிதருக்கோ, அல்லது இறை நேசருக்கோ, அல்லது கப்ரில் அடக்கமாகி இருக்கும் நல்லடியாருக்கோ, அல்லது ஒரு நபிக்கோ இருப்பதாக எண்ணினால் அல்லது நம்பிக்கை கொண்டால் அவரும் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கும் இந்த ஆற்றலாகிய அல்லாஹ் ஒருவனே எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என்ற பெயரை, பண்பை, ஆற்றலை இணை வைத்தவராகிறாகிறார். இதன் மூலம் அவர் அல்லாஹ்வுக்கு ‘ஷிர்க்’ என்ற மாபெரும் இணைவைத்த குற்றவாளியாகிறார். (அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும்)

இவைகள் அல்லாஹ்வின் அனைத்துப் பெயர்கள் மற்றும் பண்புகளுக்கும் பொதுவான உதாரணங்களாகும்.

ஒருவர் தம் வாயால் வெளிப்படையாக கூறியோ அல்லது வெளிப்படையாக கூறாமல் தமது செயல்களின் மூலமாக அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பெயர்களை, பண்புகளை அல்லாஹ் அல்லாதவருக்கு இருப்பதாக கருதி செயல்பட்டாலும் அவரும் இணைவைத்தவராகவே கருதப்படுவார். (அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும்)

வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் நம்மில் சிலர் தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொண்டு அல்லாஹ் அல்லாதவர்களான இறந்தவர்களிடம் அவர்களுடைய கப்ருகளுக்குச் சென்றோ அல்லது வீட்டிலிருந்தோ அழைத்து அவர்களிடம் உதவி தேடுகின்றனர். மேலும் இவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடி தங்களின் தேவைகளைப் பெற்றுத் தருவார்கள் எனவும் கூறுகிறார்கள். அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு ‘எங்கிருந்தாலும் கேட்கும் தன்மையும், எங்கிருந்துக் கொண்டும் எல்லாவற்றையும் பார்க்கும் தன்மையும் இருப்பதாக தவறுதலாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு உதாரணமாக சிங்கப்பூரில் இருக்கும் ஒருவர் இந்தியாவில் உள்ள நாகூரில் அடக்கமாகி இருக்கும் ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ் அவர்களிடம் தமது தேவையைக் கூறி கேட்பதாக வைத்துக் கொள்வோம். இங்கே அவர்

  • ‘எங்கிருந்து அழைத்தாலும் கேட்கக் கூடியவன்’,
  • ‘மனதில் உள்ள இரகசியங்களை அறியக் கூடியவன்’,
  • ‘ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் பார்க்கக் கூடியவன்’

என்பன போன்ற இறைவனுக்கு மட்டுமே இருக்கக் கூடிய இந்த பண்புகள் அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாமல் ஷாஹூல் ஹமீது வலியுல்லாஹ்வுக்கும் உண்டு என்று நம்புகிறார். இதுவும் ‘தவ்ஹீதுல் உலுஹிய்யாவுக்கு’ எதிரன ‘ஷிர்க்’ என்னும் இணை வைத்தலாகும். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும் என பிரார்த்திப்போம்.

அல்குர்ஆன் அத்தியாயம் 10, ஸூரத்து யூனுஸ் (நபி), வசனங்கள் 17-18 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

10:17 அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன் – இவர்களைவிட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.

10:18 தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், ‘இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை’ என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; ‘வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்’ என்று கூறும்.

அல்லாஹ் நம் அனைவரையும் அவனை மட்டுமே வணங்கக் கூடிவர்களாக ஆக்கி நம் பாவங்களை மன்னித்து சுவனபதியில் சேர்த்தருள்வானாகவும். ஆமீன்.

நன்றி: சுவனத்தென்றல்

தவ்ஹீதுல் உலூஹிய்யயா

Posted October 4, 2010 by arshathalathary
Categories: Uncategorized

2. தவ்ஹீதுல் உலூஹிய்யயா (வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவுது)

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கே செய்து அவனையே வணங்க வேண்டும் என்றும் நம்பிக்கை கொள்வதற்கு “தவ்ஹீதுல் உலுஹிய்யா” என்று பெயர்.

அல்லாஹ் மடடுமே இப்பேரண்டத்தை படைத்து, பரிபாலித்து உணவளித்துக் கொண்டிப்பவன் ஆகையால் அவன் மட்டுமே வணக்கத்திற்கு முழு தகுதியுடையவன் ஆவான். வணக்கம் என்பது அல்லாஹ்தஆலாவிற்கே முழு உரிமையுள்ள ஒன்றாகும். எனவே அவனுடைய படைப்பினங்களான நாம் அவனை மட்டுமே வணங்க வேண்டும்.

அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும், அதாவது தொழுகை, நோன்பு வைத்தல், ஜக்காத் கொடுத்தல், பிரார்த்தனை செய்தல், மன்றாடுதல், உதவி கோருதுல், நேர்ச்சை செய்தல், குர்;பானி கொடுத்தல், பேரச்சம் கொள்ளுதல் இன்னும் பிற அனைத்து வகையான வணக்கக்கங்களையும் அவனுக்கே செய்து அவனையே வழிபடவேண்டும் என நம்பிக்கை கொள்வதற்கு தவ்ஹீதுல் உலூஹிய்யா என்று பெயர்.

இந்த வகை தவ்ஹீதை ஏற்றுக்கொள்வதில் தான் எல்லாக் காலகட்டங்களிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றி அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களை முன்னர் வாழ்ந்த முஷ்ரிக்குகளும், இணை வைப்பவர்களும் நிராகரித்து வந்தனர். இந்த முஷ்ரிக்குகள் இந்த பேரண்டத்தையும் மற்றும் அதில் உள்ள அனைத்துப் படைப்பினங்களையும் படைத்து பரிபாலித்து வருபவன் அல்லாஹ்வே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தனர். ஆனால் அவனுக்கே முழு உரிமையான வணக்கங்களை அவனல்லாது பிறருக்கு செய்து வந்தனர்.

அவர்களாகவே பதிய கடவுளர்களை உருவாக்கி வைத்துக் கொண்டு அவைகள் அவர்களை அல்லாஹ்வுக்கு நெருக்கமாக்கி வைக்கும் என்று அவைகளை வழிபட்டு அல்லாஹ்வால் மன்னிக்கப்படமாட்டாத மாபெரும் பாவமாகிய ஷிர்க் என்னும் இணை வைத்தலைச் செய்த குற்றவாளியாகின்றனர்.

தவ்ஹீது உலூஹிய்யாவுக்கான குர்ஆன் ஆதாரங்கள்: -

அல்குர்ஆன் அத்தியாயம் 27. ஸூரத்துந் நம்லி(எறும்புகள்), வசனங்கள் 59-65 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

27:59 (நபியே!) நீர் கூறுவீராக: ‘எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய அடியார்கள் மீது ஸலாம் உண்டாவதாக! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?’

27:60 அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.

27:61 இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.

27:62 கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.

27:63 கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய ‘ரஹ்மத்’ என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? – அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.

27:64 முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: ‘நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.’

27:65 (இன்னும்) நீர் கூறுவீராக: ‘அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.’

ஆகையால் தவ்ஹீது உலூஹிய்யா என்பது வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனே என்று நம்பி அவனையே வணங்கி வழிபடுவதாகும்.

நன்றி: சுவனத்தென்றல்

1. தவ்ஹீதுர் ருபூபிய்யா (படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனாகிய அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது)

Posted October 4, 2010 by arshathalathary
Categories: Uncategorized

தவ்ஹீது ருபூபிய்யா என்பது: -

  • அனைத்துப் பொருட்களையும் அவைகள் ஒன்றுமே இல்லாமலிருந்தபோது உருவாக்கியவன் அல்லாஹ்வே
  • அவனே அனைத்துப் படைப்புகளுக்கும் அவைகளிடமிருந்து எந்தவித தேவைகளுமில்லாமல் உணவளித்து பாதுகாத்து வருபவன்
  • அவனே இந்தப் பேரண்டத்திற்கும் மற்றும் அதிலுள்ள அனைவருக்கும் ஒரே இறைவன்
  • அவனுடைய ஆட்சியதிகாரத்தில் யாருக்கும் எவ்வித பங்குமில்லை
  • அனைத்துப் பொருட்களுமே அல்லாஹ்வின் வல்லமையைக் கொண்டே இயங்குகிறது
  • அவன் அனுமதியில்லாமல் எதுவும் நடக்காது.

என்பன போன்ற அடிப்படைக் கொள்கையைக் கொண்டதாகும். அரபியில் படைத்துப் பரிபாலிக்கும் தன்மைக்கு “ருபூபிய்யா” எனப்படும். இது “ரப்” என்ற மூலச் சொல்லில் இருந்து உருவானது.

தவ்ஹீது ருபூபிய்யாவுக்கான குர்ஆன் ஆதாரங்கள்: -

“அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்” (அல்குர்ஆன் 39:62)

“உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்” (அல்குர்ஆன் 37:96)

“(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல – அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்” (அல்குர்ஆன் 8:17)

நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் – அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 64:11)

நன்றி: சுவனத்தென்றல்

இஸ்லாமிய ஏகத்துவம் (தவ்ஹீது) மற்றும் அதன் வகைகள்

Posted October 4, 2010 by arshathalathary
Categories: Uncategorized

தவ்ஹீது (ஏகத்துவம்)

தவ்ஹீது என்பதற்கு ‘ஒருமைப்படுத்துதல்’ என்று பெயர்.

இஸ்லாத்தில் தவ்ஹீது என்பதற்கு,

அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு ‘தவ்ஹீத்’ என்று பெயர்.

தவ்ஹீதின் வகைகள்: -

தவ்ஹீது மூன்று வகைப்படும். அவைகள்: -

1. தவ்ஹீதுர் ருபூபிய்யா (படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனை ஒருமைப்படுத்துவது)
2. தவ்ஹீதுல் உலூஹிய்யா (வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவுது)
3. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத். (அல்லாஹ்வுடைய பெயர்களில், பண்புகளில் அவனை ஒருமைப்படுத்துவது)

1. தவ்ஹீதுர் ருபூபிய்யா: -

இந்த பேரண்டத்தையும் மற்றும் அதில் இருக்கும் அனைத்து வஸ்த்துக்களiயும் படைத்து, காத்து, உணவளித்து பரிபாலிக்கும் விஷயங்களில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவற்கு “தவ்ஹீதுர் ருபூபிய்யத்” என்று பெயர்.

அதாவது, இந்த அனைத்து செயல்களையும் செய்பவன் அல்லாஹ் ஒருவனே என்றும் அவனுக்கு யாதொரு இணை துணையுமில்லை என்றும் மனதால் நம்பி நாவால் உறுதிகொள்வதாகும்.

2. தவ்ஹீதுல் உலூஹிய்யா: -

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை என்றும் அனைத்து வகையான வணக்கங்கங்களையும் அல்லாஹவுக்கே செய்து அவனை ஒருமைப்படுத்துவதற்கு ‘தவ்ஹீதுல் உலூஹிய்யத்’ என்று பெயர்.

அதாவது தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ், பிரார்த்தனை, நேர்ச்சை, குர்பானி, பேரச்சம் கொள்ளுதல், ருகூவு செய்தல், ஸூஜூது செய்தல் போன்ற அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்யவேண்டும் என உறுதிகொள்வதாகும்.

3. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்: -

அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகள் மற்றும் ஆற்றல்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அவ்வாறே நம்பி அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத் என்று பெயர்.

தவ்ஹீதின் முக்கியத்துவம்: -

மேற்கூறப்பட்ட மூன்று வகை தவ்ஹீதும் ஒன்றுக்கொன்று தொர்புடையதும் பிரிக்கமுடியாததாகும். இதில் ஏதாவது ஒன்றை ஒருவர் மறுத்தாலும் அவர் தவ்ஹீது கொள்கையை ஏற்றுக்கொண்டவராக மாட்டார்.

இந்த தவ்ஹீது வகைகளில் ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொள்ள மறுப்பது என்பது ‘ஷிர்க்’ என்னும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் செயலாகும். (அல்லாஹ் நம் அனைவைரயும் பாதுகாப்பானாவும்).

நன்றி: சுவனத்தென்றல்

அல்-குர்ஆனின் மொழி பெயர்ப்பை சதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாதா?

Posted October 4, 2010 by arshathalathary
Categories: Uncategorized

குர்ஆன் தன்னுடைய வார்த்தை என்றும், மனித குல சமுதாயம் அனைத்துக்கும் வழிகாட்டுவதற்காக அருளினேன் என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் குர்ஆன் புரிந்து கொள்வதற்கு எளிதானது என்றும் குர்ஆன் சொல்ல வந்த கருத்துக்களை நேரடியாகவும்,வெளிப்படையாகவும், சொல்கிறது என்றும் கூறுகிறான்.

மேலும் குர்ஆனில் திரித்துக் கூறப்பட்ட விஷயங்கள் எதுவும் இல்லை. மனிதகுல சமுதாயம் அனைத்துக்கும் மிகச்சரியான நேர்வழி காட்டியாக உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஆனால் மனிதர்களில் சிலர், குர்ஆனின் போதனைகள், வழிகாட்டுதல்கள் யாவும் சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்கின்றனர்.

அல்லாஹ் உண்மையை மட்டுமே பேசக் கூடியவன், மனிதனின் நினைப்புகள் எல்லாம் தவறானவைகள். அல்லாஹ்வின் வார்த்தை, மனிதனின் வார்த்தை இரண்டில் நாம் எதையாவது தேர்வு செய்ய நாடினால், அல்லாஹ்வின் வார்த்தையை மட்டும் தான் நாம் தேர்வு செய்ய வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:-

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; (அல்-குர்ஆன் 2:185)

அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்-குர்ஆன் 44:58)

ஹா, மீம். விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக. நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம். (அல்-குர்ஆன் 43:1-3)

(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டு விடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது; இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (அல்-குர்ஆன் 6:70)

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (அல்-குர்ஆன் 15:9)

அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.  (அல்-குர்ஆன் 12:1-2)

இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (அல்-குர்ஆன் 16:89)

(நபியே!) நாம் இ(வ் வேதத்)தை உம்முடைய மொழியில் (அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக் கொண்டு நீர் – பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும். (அல்-குர்ஆன் 19:97)

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை. (அல்-குர்ஆன் 41:2-4)

தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்.

அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு – நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). (அல்-குர்ஆன் 18:1-2)

(நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். (அல்-குர்ஆன் 2:99)

குர்ஆனில் போதனைகள், மற்றும் வழிகாட்டுதல்கள் யாவும் சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாது என்று புனித குர்ஆனில் ஒரு வசனத்தில் கூட அல்லாஹ் சொல்லவில்லை, இதற்கு மாறாக,குர்ஆனை புரிந்து கொள்வதற்கு, சாதாரண அறிவு போதும் என்று அல்லாஹ் குர்ஆனில் அவ்வப்போது கூறுகிறான்.

குர்ஆனில் போதனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை புரிந்து கொள்வதற்கு, மனிதர்கள் யாரும் விஞ்ஞானிகளாக மாற தேவையில்லை குர்ஆனின் போதனைகள் யாவும், சாதாரண அறிவு படைத்த மனிதர்களால் புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது. ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் புனித குர்ஆனை திறந்து அதை புரிந்து கொள்ளும் படியாக படிக்க வேண்டும்.

சில கொள்கையற்ற தலைவர்களும், தங்களுக்கு தாங்களே மகான்களாக ஆக்கிக்கொண்டவர்களும், மக்களை, புனித குர்ஆனின் போதனைகளை புரிந்து கொள்வதில் இருந்து தடுக்கிறார்கள். அவர்கள் இஸ்லாமிய உடை அணிந்து குர்ஆனை விட்டும் வழி கெடுக்கின்றனர். குர்ஆன் புரிந்து கொள்ள முடியாது என்றும், சாதாரண மக்களுக்கு புரிவது இல்லை என்றும் நீங்கள் புரிந்து கொள்ள நாடினால் அது உங்களை வழிகெடுத்து விடும் என்று திரும்பத் திரும்ப மக்களை எச்சரிக்கின்றார்கள்.மேலும் குர்ஆனின் ஒவ்வெரு வசனங்களும் பல அர்த்தங்களை கொண்டுள்ளது என்றும் ஒரு சில சாமானியர்களால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும் என்றும், ஆகையால் குர்ஆனை புரிந்து கொள்ள வேண்டும் எனில் இவர்களையே பின்பற்ற வேண்டும் என்றும் கூறுகின்றார்கள். அவர்கள் குர்ஆனின் தெளிவான கட்டளைகளை மறைத்து, அதன் மூலம் உங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை சுருட்டிக்கொண்டு உங்களை குர்ஆனின் பக்கம் வழிகாட்டுவதற்கு பதிலாக தங்களின் பக்கம் வணங்குவதற்கு கொண்டு வருகிறார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: -

எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்¢ அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (அல்-குர்ஆன் 2:174)

நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான் மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். (அல்-குர்ஆன் 2:159)

யா அல்லாஹ்! முஸ்லிமான எங்களுக்கு குர்ஆனை பொருளுணர்ந்து ஓதி அதன் தெளிவான தகவல்களை புரிந்து கொள்வதற்கு உதவி செய்வாயாக!

யா அல்லாஹ்! கொள்கையற்ற தலைவர்களையும், தங்களுக்குத் தாங்களே மகான்களாக ஆக்கிக்கொண்டவர்களையும் அடையாளம் கண்டு கொள்வதற்கு எங்களுக்கு அறிவையும் வீரத்தையும் கொடுப்பாயாக!

யா அல்லாஹ்! அவர்களின் உள் நோக்கங்களை புரிந்து கொள்வதற்கும் அருள் புரிவாயாக!

யா அல்லாஹ்! எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக!

யா அல்லாஹ்! குர்ஆனை படித்து அதன் எளிமையான வசனங்களை புரிந்து கொள்வதற்கு அருள்புரிவாயாக!

யா அல்லாஹ்! எங்களை நேரான வழியில் செலுத்துவதுடன், குர்ஆனிலிருந்து எங்களுடைய அறிவை அதிகப்படுத்துவாயாக!

நன்றி: சுவனத்தென்றல்

இஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள் (Horoscopes)

Posted October 4, 2010 by arshathalathary
Categories: Uncategorized

அனைத்துப் புகழும் சூரியன், சந்திரன், கிரகங்கள் நட்சத்திரங்கள் இவைகளை உள்ளடக்கிய அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவப் படுத்தி ஆட்சி செய்யும் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது.

பரந்த விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பற்றி இரு வகையாக ஆராய்கின்றனர்.

அவைகள்: -

1) நட்சத்திரங்கள், கிரகங்கள், சந்திரன்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகியவற்றின் அமைப்பு, நகர்வு, அவை இருக்கும் இடங்கள் ஆகியவற்றைப் பற்றிய அறியும் கலைக்கு வானவியல் (Astronomy)என்று பெயர்.

2) கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவைகளின் மூலம் பூமியில் உள்ளவர்களின் மீது ஏற்படும் தாக்கங்கள். (Astrology)

இதில் முதலாவது வகை அறிவியலை எடுத்துக் கொண்டால், இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி, திசைகளை அறிந்துக் கொள்வதற்காகவும், பல்வேறு கால நிலைகளை அறிந்துக் கொள்வதற்காவும், இறைவனின் படைப்பின் அற்புதத்தை கண்டு வியந்து அவனை துதி செய்வதற்காகவும் இந்தக் கலையைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை என்கின்றனர்.

அதே நேரத்தில், ஒருவர் இத்தகைய கல்வியின் மூலம், இதனால் தான் மழை வருகிறது அல்லது குளிர் அல்லது வெயில் அடிக்கிறது என்று  கூறாதிருக்கும் பட்சத்தில் இதில் தவறில்லை என்கின்றனர். இவ்வாறு கூறுவது ஷிர்க் ஆகும் ஏனென்றால் மழை பெய்ய வைப்பதும், பருவ நிலை மாறி வரச் செய்வதும் இறைவனின் செயலாகும்.

ஜோதிடக் கலை: -

இரண்டாவது வகையான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் தாக்கங்கள் என்பது பற்றிய ஆராய்ச்சி இஸ்லாம் முற்றுமுழுதாக தடுக்கும், ஒருவருடைய ஏகத்துவ நம்பிக்கையையே சிதைக்கும்  ஒரு கல்வியாகும்.

ஜோதிடக் கலையின் முக்கிய அம்சங்கள்: -

1) கிரகங்களும், நட்சத்திரங்களும் ஒருவருடைய வாழ்வில் நன்மை, தீமைகளை ஏற்படுத்துகின்றன என்று நம்புவது.

இது இறைவனால் என்றுமே மன்னிக்கப்படாத மாபெரும் பாவமாகிய ஷிர்க் என்னும் இணைவைத்தலாகும். ஏனென்றால் நன்மை தீமைகளை உருவாக்கும் சக்தி அல்லாஹ்வைத் தவிர அவனுடைய படைப்பினங்களுக்கும், உண்டு என்று நம்புபவன் இணைவைத்தவனாவான்.

2) நட்சத்திரங்கள் மற்றும் கிரக நிலை மாற்றத்தினால் ஒருவருடைய வாழ்வில் இன்னின்ன மாறுதல்கள்  ஏற்படும் என்பதைக் கணித்துக் கூறுவது, அதாவது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் ஏற்பட்ட மாற்றமானது, அந்த நட்சத்திரத்தில் பிறந்த ஒருவருடைய வாழ்விலும் இன்னின்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவது.

இத்தகைய நம்பிக்கை, இறைவனுக்கு மட்டுமே தெரிந்த மறைவான விஷயங்கள் இறைவனல்லாத ஜோதிடர்களுக்கும், குறி சொல்பவர்களுக்கும் தெரியும் என்று நம்புவதாகும். ஒருவர் தமக்கு மறைவான விஷயமாகிய எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஆற்றல் உண்டு என்று கூறுவாராயின் அது குப்ர் என்னும் இறை நிராகரிப்பாகும். அவர் இஸ்லாத்தை விட்டு அப்பாற்பட்டவராகிறார்.

இராசிப்பலன்கள்: -

ஜோதிடக் கலையின் ஒரு அம்சமே ராசிப்பலன் பார்த்தல் ஆகும்.

படைப்பனங்களிலேயே சிறந்த படைப்பாக இறைவனால் படைக்கப்பட்ட மனித இனம் ஈருலகிலும் வெற்றி பெற அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்-குர்ஆனிலும் மனிதர்களைப் புனிதர்களாக்கி அவர்கள் ஈடேற்றம் பெற்றிட வழிகாட்டியாக வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலும் இராசிப்பலன்கள் பார்பதற்குரிய அனுமதி குறித்தோ அல்லது இவர்கள் கற்பனையாக வடிவமைத்திருக்கின்ற ராசி மண்டலங்கள் (Zodiac Signs) குறித்தோ எவ்வித ஆதாரமும் இல்லை. மாறாக அல்-குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலும் இவற்றிற்கு எதிராக ஏராளமான சான்றுகள் உள்ளன.

எந்தவொரு படைப்பினத்திற்கும் கொடுக்கப்படாத இரண்டு சிறப்பங்சங்களை அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்திருக்கின்றான். அவைகளாவன: -

1) நன்மை தீமைகளை பகுத்து ஆராயும் பகுத்தறிவு
2) ஒருவன் தாம் விரும்பும் பாதையை சுயமாக சிந்தித்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விருப்பம்.

ஒருவனுடைய பழக்க வழக்கங்கள், குணங்கள், தன்மைகள் ஆகியவை அவனுடைய கல்வியறிவு, அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்தே தான் அமைகின்றதே தவிர வேறொன்றுமில்லை. இவற்றிற்கும் நட்சத்திரங்களுக்கும் மற்றும் இராசி மண்டலங்கள் என்று சொல்லப்படக்கூடிய வற்றிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. மேலும் ஒருவனுடைய பிறந்த தேதியோ அல்லது வருடமோ அவனுடைய வாழ்வில் எவ்வித பாதிப்பையோ நலவையோ ஏற்படுத்துவதில்லை.

ஒரு குறிப்பிட்ட கிரகமோ அல்லது நட்சத்திரமோ ஒருவருடைய வாழ்க்கையில் பாதிப்பையோ அல்லது நன்மையையோ ஏற்படுத்துகின்றது என்று நம்புவது மிகப்பெரும் பாவமாகிய ஷிர்க் எனும் இணைவைத்தலைச் சேர்ந்ததாகும்.

ஜோதிடம், ராசி பலன், நல்ல நேரம், இராகு காலம் பார்த்தல், சகுனம் பார்த்தல் இவைகள் அனைத்தும் அறியாமைக்கால மக்களின் மூட நம்பிக்கைகளாகும். இதில் வேதனையான விஷயம் என்ன வென்றால் தாம் உயர் கல்வியைப் பயின்று நாகரிகத்தின் உச்சிக்கு சென்று விட்டதாக இருமாப்புக் கொள்ளும் அறிவு ஜீவிகளும் தமது அறிவை அடகு வைத்துவிட்டு, தம் வயிற்று பிழைப்புக்காக தம் மனப்போன போக்கில் உளறிக் கொண்டிருக்கும் உதவாக்கரைகளிடம், தம் வாழ்வை எதிர்காலத்தை தாமே வணப்படுத்திக் கொள்ள தெரியாதவர்களிடம் போய் மண்டியிட்டு, தங்களின் எதிர் காலத்தைக் கணித்துக் கூறுமாறு கோருகின்றனர். இதை விட வேறு அறிவீனம் உண்டோ?

ஜோதிடம், ராசி பலன் பார்த்தல் போன்றவற்றை இஸ்லாம் தடை செய்ததோடல்லாமல் இதை செய்பவர்களை கடுமையாக எச்சரிக்கிறது. இவற்றின் மீது நம்மிக்கை கொள்வது ஒருவருடைய நன்மை தீமைகளைத் தீர்மானிப்பதன் பங்கு அல்லாஹ்வைத் தவிர இந்த கிரகங்கள், நட்சத்திரங்களுக்கும் உண்டு என்று நம்புவதாகும்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசித்த உண்மையான முஃமின்  இத்தகைய அறியாமைக் (ஜாகிலிய்யாக்) கால மூட நம்பிக்கைகளிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும். ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள சூரியன் சந்திரன் மற்றும் அனைத்து கிரகங்களும், நட்சத்திரங்களும் முற்று முழுதாக அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றது.

ஈமானின் முக்கியமான நிபந்தனையான விதியை ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொரு முஃமினும் நன்மை தீமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்றும் அவனையன்றி ஒரு அணுவும் அசையாது என்பதையும் உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: -

ஆயினும், (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, உறுதியான நம்பிக்கை இல்லாத இவர்கள் உம்மைக் கலக்கமடையச் செய்ய வேண்டாம். (அல்-குர்ஆன் 3:60)

உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம் (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் – அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (அல்-குர்ஆன் 10:106-107)

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (அல்-குர்ஆன் 31:34)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்” என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித் (ரலி), ஆதாரம்: புஹாரி

அல்லஹ் நட்சத்திரங்களை மூன்று காரணங்களுக்காக படைத்திருக்கின்றான்.

1) வானத்தை அலங்கரிப்பதற்காகவும்
2) சைத்தானை விரட்டுவதற்கான எரி கற்கலாகவும்
3) கப்பலில் வழி காட்டியாகவும்.

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: -

“யாராவது ஒருவர் ஜோதிடத்தின் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்வாராயின் அவர் சூன்யத்தை (ஸிஹ்ர்) கற்றவன் போலாவான்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ், ஆதாரம், அபூதாவுத்.

“யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்”  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் அபூதாவுத்.

“குறி சொல்பவனும் அதைக் கேட்பவனும், எதிர்காலத்தை கணித்துக் கூறுபவனும் அதைக் கேட்பவனும், சூன்யம் செய்பவனும், அதைச் செய்யச் சொன்னவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல் பஸ்ஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

எதிர் காலத்தைக் கணித்துக் கூறுவது என்பது மறைவான செய்திகளைக் கூறுவது போலாகும். இறைவனின் திருமறை பல இடங்களில் “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே” என்று வலியுறுத்திக் கூறுகிறது.

எதிர் காலத்தை, நல்ல நேரத்தை ஒருவர் கணித்துக் கூறுதல் என்பது “இறைவனைத்’ தவிர்த்து தமக்கும் மறைவான விஷயங்கள் தெரியும்” என கூறுவது போலாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: -

“(இன்னும்) நீர் கூறுவீராக: ‘அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்” (அல்-குர்ஆன் 27:65)

அறியமையினால் இத்தகைய படுபாதகமான தீய செயல்களாகிய அறியாமைக்கால மூடநம்பிக்கையில் சிக்கி உழன்றுக் கொண்டிருக்கும் நமது முஸ்லீம் சகோதர சகோதரிகள் உடனே இதிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்விடம் மன்றாடி பாவமன்னிப்புக் கோரவேண்டும். தம்முடைய அறியாமையினால் செய்த இத்தகைய அறிவீனமான செயலை மீண்டும் செய்ய மாட்டேன் என உறுதிபூண்டவராக அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் தம் வாழ்வை அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அல்லாஹ் இதற்கு அருள்பாலிப்பானாகவும்.

நன்றி: சுவனத்தென்றல்

அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவதாரங்கள்!-01

Posted September 9, 2010 by arshathalathary
Categories: Uncategorized

அவ்லியாக்களின் திரை கிழிகிறது.
அறிவுலகம் வெட்கித் தலைகுனிகிறது.
அவ்லியாக்கள் பெயரால்
அரங்கேறும் அவதாரங்கள் !

அவ்லியாக்களின் பெயரால் மக்கள் கண்மூடித்தனமான அனாச்சாரங்களை ஆங்காங்கே அரங்கேற்றி வரும் அவலங்களை நம்மைச்சுற்றிலும் பார்த்து வருகிறோம். குருட்டுத்தனமான பக்தியால் விவஸ்தையே இல்லாமல் அவ்லியாக்களின் இலக்கணம் தெரியாமல் யார் யாரையெல்லாம் அவ்லியாக்கள் (இறை நேசர்கள்) என கொண்டாடி வருகிறார்கள் தெரியுமா?
1. வாயில் போட்டு மென்ற வெற்றிலையால் பிள்ளை வரம் கொடுப்பவர் அவ்லியா !
2. எச்சிலைத் தண்ணீரில் துப்பி வேண்டியது நடக்க துப்பிக்கொடுப்பவர் அவ்லியா !
3. பச்சைத் தலைப்பாகை,நீண்ட அங்கி, ஜபமாலை சகிதம் உலா வருவோர் அவ்லியா!
4. மாந்திரீகம்,இஸ்மு,தகடு,தாவீஸ்,இலை,பீங்கான் என ஏமாற்றும் தங்ஙள்கள் அவ்லியா!
5. தர்காக்களின் ஆதீன கர்த்தா, அவ்லியாவின் வாரிசு என வசூலுக்கு வருவோர் அவ்லியா!
6. செய்கு முஹ்யித்தீன், நாகூர் நாயகம் பரம்பரை என தம்பட்டம் அடிப்போர் அவ்லியா!
7. குழி தோண்டி (துணி நெய்யும் குழியில்) கஃபாவை காண்பவர் அவ்லியா (பீரப்பா)
8. காமமோகம் கொண்டு பெண்களை தனிஅறையில் சந்தித்து முரீதுகொடுப்பவர் அவ்லியா!
9. பெண்களையும் ஆண்களையும் தடவிக்கொடுத்து ஓதி ஊதுபவர் அவ்லியா!
10. நிர்வாண கோலமாக அலையும் சன்னியாச பரதேசிகள் அவ்லியாக்கள் !
11. கஞ்சா அபின் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் அவ்லியாக்கள்!
12. இரவெல்லாம் கேளிக்கைகளிலும், சல்லாபங்களிலும் ஈடுபட்டுப் பகலிலே பத்தினிகளாக நடிப்போர் அவ்லியாக்கள்!

இவர்கள் பெயரை உச்சரித்துக் கொண்டு சில போலிப்பேர்வழிகள் ஆங்காங்கே கடற்கரையில், வாய்க்கால் ஓரங்களில், காடுகளில், மேடுகளில், பாலைப் பெருவெளிகளில் கல்லறைகளைக் கட்டிக் கொண்டு உள்ளே இருப்பவர் ‘அவ்லியா’ எனக் கூறி கட்டுக்கதைகளையும், கனவுக்காட்சிகளையும் அரங்கேற்றி மக்களை நம்ப வைத்து போலிச்சாமியார்;களையும் மிஞ்சுமளவுக்கு போடும் ஆட்டங்கள் அப்பப்பா சொல்லவே வாய் கூசுகிறது.

மனிதப்புனிதர்கள், மகான்கள், மெய் நிலை கண்ட ஞானிகள் எனச் சித்தரிக்கப்படுவோரின் பெயர்களைப் பார்த்தாலே இவர்கள் யார்? இவர்களின் வண்டவாளங்கள் என்ன என்பது தெரிந்து விடும்.
அவ்லியாக்களின் பெயர்களைப் பாரீர்!

1. பீடி மஸ்தான் (பீமா பள்ளி)
2. கட்டி மஸ்தான் (பொறையார் )
3. சட்டி மஸ்தான் (பொதக்குடி)
4. சங்கிலி மஸ்தான் (கோயம்பத்தூர்)
5. மோனகுரு மஸ்தான் (ஊமைப்பிள்ளை அவ்லியா-தொண்டி)
6. குரங்கு மஸ்தான். தஞ்சை
7. அனுமான் அவ்லியா தஞ்சை
8. அணிப்பிள்ளை அவ்லியா தஞ்சை
9. பாஸ்போர்ட் அவ்லியா தஞ்சை
10. கப்ரடி அவ்லியா (திருவிதாங்கோடு)
11. காட்டு பாவா அவ்லியா (தக்கலை அருகில், பேட்டை )
12. வேப்ப மரத்து அவ்லியா (கோட்டார்)
13. மாமரத்து அவ்லியா (நீலவெள்ளி)
14. மரத்தடி அவ்லியா (கோட்டார் )
15. மரக்கட்டை அவ்லியா (சென்னை ராயபுரம்)
16. மோத்தி பாவா (சென்னை,அண்ணா சாலை)
17. மிஸ்கீன் அவ்லியா நெல்லை
18. பச்சை அவ்லியா நெல்லை
19. பக்கீர் மஸ்தான். நெல்லை
20. பிச்சை அவ்லியா (திலி பேட்டை)
21. அப்துர் ரஸ்ஸாக் மஸ்தான். (திருவனந்தபுரம்)
22. மலுக்கர்; மஸ்தான் (மஞ்சேரி, கேரளா)
23. மைதீன் பிச்சை அவ்லியா (பொட்டல் புதூர்)
24. ஆத்தங்கரை அவ்லியா (ஆத்தங்கரை)
25. அக்கரைப்பள்ளி அவ்லியா (குளச்சல்)
26. அம்பலத்து அவ்லியா (திருவிதாங்கோடு)
27. மக்கட்டி லெப்பை அவ்லியா (திருவிதாங்கோடு)
28. காத்தாடி அவ்லியா (ஆளூர்)
29. பல்லாக்கு அவ்லியா (கீழக்கரை)
30. ஸந்தூக் அவ்லியா திருவை)
31. கால்துட்டு அவ்லியா (காயல் பட்டணம்)
32. சாலை சாஹிப் அவ்லியா (புது ஆயங்குடி)
33. நிர்வாண அவ்லியா(மஜ்தூப் வலி)(காயல் பட்டணம்)
34. ஹயாத் அவ்லியா (கோட்டார்)
35. ஹயாத்தே அவலியா (திட்டு விளை,
36. பிரேக் ஷா அவ்லியா (கொடிக்கால பாளையம்)
37. ஹாஸ் பாவா அவ்லியா (கொடிக்கால பாளையம்)
38. கேத்தல் பாவா அவ்லியா (புதுப்பட்டினம்)
39. பட்டாணி சாஹிப் அவ்லியா (திலி பேட்டை)
40. கோட்டு மூஸா அவ்லியா (கூத்தா நல்லூர்)
41. மொட்டைப பக்கீர் அவ்லியா (சிவகங்கை)
42. கோதரிசா அவ்லியா (பொட்டல் புதூர் அருNயுள்ள மலை)
43. அப்பா ராவுத்தர் அவ்லியா (கூத்தா நல்லூர்)
44. படேஷா ஹஸ்ரத் அவ்லியா (மஞ்சக்குப்பம்)
45. வண்ணம் தீட்டும் அவ்லியா (நக்ஷபந்த் அவ்லியா)
46. கோயுன் பாபா அவ்லியா (ஆடுகளின் தந்தை, துருக்கி)
47. தக்கடி அப்பா அவ்லியா (பஸீர் வலி மேலப்பாளையம்) புலிகள்
பாம்புகளிடையே வந்து காப்பாற்றியவர்)
48. ஜஹான்ஷா அவ்லியா (கொடிக்கால் பாளையம்)
49. ஒட்டகாஸ் அவ்லியா (உடன்குடி)
50. காட்டப்பா அவ்லியா ”
51. புளியடி அவ்லியா ”
52. காட்டானை அவ்லியா (வேதாளை)
53. கப்படா சாஹிப் அவ்லியா (காரைக்கால்)
அப்பப்பா அவ்லியாக்களில் தான் எத்தனை எத்தனை ரகங்கள்! எத்தனை எத்தனை வகைகள்!  இவர்களெல்லாம் எப்படி முளைத்தார்கள்? எங்கிருந்து வந்தார்கள்?
இவர்கள் யார் ? எந்த ஊர் ? எப்போது பிறந்தார்கள் ? எப்போது இறந்தார்கள் ?
இங்கே எதற்கு வந்தார்கள் ? இவர்கள் மக்களுக்காக செய்த சேவைகள் என்னென்ன?மார்க்கத்திற்காக என்ன தியாகம் செய்தார்கள் ?
சமுதாயம் அடைந்த பயன்கள் என்ன ? இவர்கள் செய்த சாதனைகள் என்ன ?
இவர்கள் குர்ஆன் நபிவழியில் வாழ்ந்தவர்களா?
என மக்களைக் கேட்டால் மக்கள் திருதிரு என்று முழிக்கிறார்கள்.              இவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? இவர்களின் முகவரி என்ன?
என்பதையெல்லாம் தெரியாமல் கூடு,கொடி, உரூஸ், சந்தனக்கூடு என கண்மூடித்தனமாக இந்த போலிகள் பெயரால் ஆண்டுதோறும் விழாக்கள் எடுத்து அமர்க்களப்படுத்துகிறார்கள்.
இந்த விஞ்ஞான யுகத்தில் வாழும் அறிவு ஜீவிகளான நாம் இந்தப் போலி மஸ்தான்கள், அவ்லியாக்களை நம்பலாமா? இநதப்போலிகளுக்கு நாம் பலியாகலாமா? நம்பி மோசம் போகலாமா ? உரூஸ்கள், கந்தூரிகள், யானை ஊர்வலங்கள் என நடத்தலாமா? என நாம் சற்று சிந்தித்தாலே இவையெல்லாம் போலியானவை., மார்க்கத்திற்கு எதிரானவை என நாம் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்.
அப்படியானால் மக்களை ஏமாற்றும் சாய்பாபாக்கள், சந்திர பாபாக்கள், பிரேமானாந்தக்கள், ஜான்கள், ஆனந்த ராஜ்கள் பின்னால் செல்லும் மக்களுக்கும் நமக்கும் என்ன தான் வேற்றுமை? திருப்பதிக்கும்,திருச்செந்தூருக்கும், வேளாங் கண்ணிக்கும் செல்லும் பக்தர்களுக்கும் நமக்கும் என்னதான் வித்தியாசம்?
இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களே! அறிவுக்கேற்ற மார்க்க்கமாக உலகே ஒப்புக்கொண்டிருக்கும் இஸ்லாத்தில் இப்படிப்பட்ட போலித்தனங்களை, பேதைத்தனங்களை அனுமதிக்கலாமா? பின்பற்றலாமா ? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
மதத்தின் பெயரால் ஏமாற்றும் கபோதிகளின் களியாட்டங்கள் நாளிதழ், வார இதழ், மாத இதழ், தொலைக்காட்சிகள்,இன்டெர்நெட் போன்றவற்றில் அம்பலப்படுத்தும் போலித்தனங்களை நாள் தோறும் கண்டு வருகிறோமே! இன்னுமா இந்த அறியாமை ? இந்த மாயையிலிருந்து விடுபடவேண்டாமா? என உங்கள் மனதைக் கேட்டுப்பாருங்கள்.
இதோ பாருங்கள் ! நம் மக்களின் அறியாமையை !
யானைக்கு ஒரு தர்ஹா!
குதிரைக்கு ஒரு தர்ஹா!!
கழுதைக்கு ஒரு தர்ஹா!!!
கழிப்பறைக்கு ஒரு தர்ஹா!!!!
வியப்பாக இருக்கிறதா ?

ஆம். இவையெல்லாம் உண்மை தான்!
நெல்லை மாவட்டம் பொட்டல் புதூரில் ‘மைதீன் பிச்சை’ யென்ற யானைக்கு தர்ஹாகட்டிவழி படுகிறார்கள்.
பாக்கியம் பெற்ற யானை!

கன்னியா குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் முஹ்யித்தீன் பள்ளிவாசல் எதிரிலுள்ள கப்ருஸ்தானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கப்ரடி அவ்லியாவின் பக்கத்து கப்ரு, அவர் பயணம் செய்த குதிரையின் சமாதி! இதற்கும் ஆண்டு தோறும் விழாக்கள் எடுக்கின்றனர்.
கொடுத்து வைத்த குதிரை!

திருநெல்வேலி பேட்டையிலிருந்து சேரன்மாதேவி செல்லும் வழியில் ஓரிடத்தில பெயர் தெரியாத அவ்லியா ஒருவர் கழுதையில் பயணம் செய்து வந்தார். திடீரென்று ஒருநாள் அது இறந்து விடவே அங்கேயே அடக்கம் செய்துவிட்டார்கள். இன்று அதற்கும் வழிபாடு நடக்கிறது.
அதிர்ஷ்டக்காரக் கழுதை!

கேரளாவில் கொல்லம் முல்லக்கல் அருகே ஒருகழிப்பிடம் (டாய்லெட் கட்டிடம்) இருக்கிறது. அது இன்று ஒரு தர்ஹாவாக ஆராதனை செய்யப்பட்டுவருகிறது. அங்கே சென்ற கப்ரு பக்தரான ஆலிம் பேராசிரியர் ஒருவர் மக்கள் கூட்டமாகச் செல்வதைப் பார்த்து தானும் சென்று தமது பங்காக ஸியாரத்தை மிகவும் பயபக்தியோடு முடித்துக்கொண்டு திரும்பினார். பின்னர் அது பற்றி விசாரித்த போது தான் அது அவ்லியாவின் கப்ரல்ல. அது மக்கள் செல்லும் ஒரு பொதுக் கழிப்பறை எனத் தெரிய வந்தது.
தரிசனத்துக்குரிய தர்ஹா!

என்னே மக்களின் மதியீனம். இதில் படித்தவர்களும் பலியாகிறார்களே! புரிதாபமாக இருக்கிறது. பக்திப்போதையில் எதையுமே விசாரிக்காமல் கண்மூடித்தனமாக செய்யும் வழிபாடுகளின் இலட்சணத்தைப் பார்த்தீர்களா?

தொடரும்..

நன்றி: http://albaqavi.com/

அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவதாரங்கள்!-02

Posted September 8, 2010 by arshathalathary
Categories: Uncategorized

விண்ணுயர அவ்லியாவின் கப்ருஸ்தான்!

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் உலகிலேயே ஒரு வித்தியாசமான கப்ருஉள்ளது. அது மேற்கூரையை முட்டும் வண்ணம் மிகஉயரமாகக் கட்டப்பட்டுள்ளது. ஏன் இந்த கப்ருமட்டும் இவ்வளவு உயரமாகக் கட்டப்பட்டுள்ளது என அதன் ஆதீன கர்;த்தாவான மக்காமு இலப்பையிடம் 1958-ம் ஆண்டு நாம் கேட்டபோது ‘இது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். இது வளர்ந்துகொண்டேஇருக்கும்.வளர்ந்து வளர்ந்து விண்ணை முட்டும் போது கியாமத் நாள்-மறுமை நாள்- வந்துவிடும் என்றார்.
அவர் காலமான பிறகு அவரது மகனார் தந்தையின் பதவிக்கு வந்தார். அவரிடம் இது பற்றி விசாரித்தபோது “அப்படி மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” எனக் கூறிவிட்டார். இப்போது அவரது பேரரைக் கேட்டால் “இதுவெல்லாம் போலியான செய்திகள்” என விளக்கமளித்தார். ஆதீன கர்த்தாக்களான அவரது குடும்பத்தாரே இந்தப் பொய்ச் செய்திகளை நம்பமுடியவில்லை. இருந்தும் பொய்களைப் பரப்பி மக்களை வழி கெடுத்து வருகின்றனர்.
வியாபாரி அவ்லியா

அவரே மாலிக் முஹம்மது ஒலியுல்லாஹ். இவர் யார் ? எந்த ஊர் ? எப்போது
பிறந்தார்? என்பது தெரியவில்லை. வியாபாராத்திற்காக வந்தவர் அந்த ஊரிலே இறந்து விட்டார். நல்ல மனிதராகத் தெரிந்ததால் அவரை அடக்கம் செய்து பெரிதாக கப்ரும் கட்டிவிட்டார்கள். பின்னர் அவரை ஒரு மகானாகச் சித்தரித்து “மெய்நிலை கண்ட ஞானி மஹான் மாலிக் முஹம்மது ஒலியுல்லாஹ்வாக” விளம்பரப்படுத்தி இன்று ஆண்டு தோறும் விமரிசையாக விழா நடத்தி வருகிறார்கள் அந்த ஊர் மக்கள்.

மோதீனார் அவ்லியா

இவர் தான் மஹான் நூருத்தீன் ஒலியுல்லாஹ்! திருவிதாங்கோடு அஞ்சு வன்னம் ஜும்மா பள்ளியில் அடக்கமாயிருக்கும் இவர் அந்தப்பள்ளி வாசலில் மோதீனாராக பணியாற்றி வந்தவர். அங்கே அவ்லியா இல்லாத குறையை போக்க வழி தேடிக்கொண்டிருந்த ஊர் மக்களுக்கு,”இது நமக்குக் கிடைத்த மிகப் பெரும் பேறு” எனக் கருதி சாதாரண நூருத்தீன் மோதீனாராக இருந்த இவரை “மஹான் நூருத்தீன் ஒலியுல்லாஹ்” என விளம்பரப்படுத்தி இன்று அவருக்கும் கோலாகலமாக ஆண்டு தோறும் விழா நடைபெற்று வருகிறது.
பாறையை தாங்கி நிற்கும் ராட்சஸ அவ்லியா
சிரியாவிலிருந்து படகேறி வந்த இவரும் இவரது சீடர்களும் திருச்சி வந்து அங்குள்ள மலைமீது தவம் செய்து வந்தனர்.அப்போது சில பூதங்கள் ஒன்று திரண்டு இவர்கள் மீது ஒரு பாறையைத்தள்ள இவர்கள் தம் தவவலிமையால் அது தம்மீது விழாது செய்தனர். அப்பாறை இப்போதும் சாய்ந்த நிலையிலேயே இருக்கிறது. அது தம்மீது விழாது இவர்கள் தம் பாதங்களை ஊன்றி நின்றபோது இவர்களின் பாதங்கள் பதிந்த அடையாளமும், பாறையின் மீது இவர்களின் கை பதிந்த அடையாளமும் இப்பொழுதும் இருக்கின்றன என அவர்களது பக்தர்கள் கூறி வருகின்றனர். திருச்சி நத்ஹர்ஷh வலியைப்பற்றிச் சொல்லப்படும் இந்த கதையை நம்ப முடிகிறதா ? அனுமான் கதை தான் இது!
புலியாக வந்து காப்பாற்றும் நடமாடும் அவ்லியா

நெல்லை மாவட்டம் பொட்டல் புதூருக்கு மேற்கே ஏழு கல் தொலைவில் 1800 அடி உயரத்தில் கோதரிசா மலை உள்ளது. இங்கு கோதரிசா என்ற அவ்லியா வாழ்ந்து மறைந்தார். அவரின் நடமாட்டம் இப்பொழுதும் இருக்கிறதென்றும் புலிமீது இவர் இவர்ந்து வருவதைச் சிலர் பார்த்திருப்பதாகவும், சிலர் அவருடன் உரையாடியிருப்பதாகவும், எவருக்கேனும் வன விலங்குகளால் ஆபத்து நேரும்போது இவர் காட்சி அளித்துக் காப்பாற்றுவதாகவும் கூறப்படுகிறது. கிள்று (அலை)மீது கட்டிவிடப்பட்ட கதை தான் இது.
ஐவேளையிலும் ஆடுபோல் கத்தும் அவ்லியா

துருக்கி நாட்டைச் சேர்ந்த கோயுன் பாபா என்ற அவ்லிய வாய்பேசுவது இல்லை. ஐந்து வேளை தொழுகைகளின் போது ஆடு கத்துவது போன்று கத்துவார். இதன் காரணமாக இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது எனக்கூறும் மக்கள், எப்படித்தான் வாய் பேசாமல் ஆட்டைப்போன்று கத்தும் ஊமையரை ஆன்மீக ஞானம் பெற்ற அவ்லியா என ஏற்க மனம் வந்ததோ ?
காடு மலைகளில் தாவி தவமிருந்த அவ்லியா

கருவிலே ஞானியான மோன குரு மஸ்தான் ஏழு வயதிலேயே வாயை மூடியதால்”ஊமைப்பிள்ளை” என்று அழைக்கப்பட்டார்.இளம் வயதிலேயே துறவறத்தை மேற் கொண்ட இவர் நாற்பது நாட்கள் கல்வத்தில் (தனித்திருந்து இறை தியானத்தில)ஈடு பட்டிருந்தனர். பின்னர் சிகக்ந்தர் மலையிலும், பீரான் மலையிலும், மலேயாவிலுள்ள கொடிமலையிலும், இலங்கையிலுள்ள ஆதம் மலையிலும், தஃப்தர் ஜெய்லானியிலும் தவமிருந்தார். பின்னர் சாமி நாதன் செட்டியாரும், சுப்ரமண்யம் செட்டியாரும் இவருக்கு தொண்டியின் கடற்கரை அருகில் கடடிக் கொடுத்த மடத்தில் அமர்ந்து அருளுரை வழங்கினார்.இவர் யாரிடமும் பேசுவதில்லை. எப்போதும் மௌனமாகவே இருப்பார். பின்னர் எப்படித்தான் அருளுரை வழங்கினாரோ? அவரைப்பற்றிய மோனகுரு மஸ்தான் சாகிபு பாடலில் இந்தச்செய்தி இடம் பெற்றிருக்கிறது.
பறக்கும் அவ்லியாக்கள்!

விமானங்களோ விண்கலங்களோ பறக்கும் தட்டுகளோ இல்லாமல் மனிதர்கள் பறக்கும் அதியத்தைப் பார்த்திருக்கிறீர்களா?
பல்கு நாடு ஈன்ற மாபெரும் இறை நேசர் எனப்போற்றப்படும் அஹ்மது இப்னு கஸ்ரவிய்யா அவர்களுக்கு 1000 க்கு மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். இவர்களது வரலாறறில் இவர்கள் அத்தனை பேரும் ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்லும் போது நடந்து செல்வதில்லையாம். பறந்தே செல்வார்களாம!
இதைப்போன்றே ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் தண்ணீரிலே தொழுகை விரிப்பை (முஸல்லாவை) விரித்து தொழுது கொண்டிருந்தார்களாம். இதைப்பார்த்துக் கொண்டிருந்த இறை நேசச்செல்வி ராபியா பஸரிய்யா அவர்கள், இதற்குப் போட்டியாக” இவ்வளவு தானா உங்களின் வல்லமை!” நான் விண்ணிலே தொழப்போகிறேன்’ என முஸல்லாவை வானத்தை நோக்கி வீசியெறிந்து விட்டு அதில் தாவிச்சென்று தொழுது கொண்டிருந்தார்களாம். இப்படியெல்லாம் சாகஸங்கள் செய்ய இந்த அவ்லியாக்களுக்கு என்ன அவசியம் வந்து விட்டது? விளம்பரமே இல்லாது இலைமறைகாயாக வாழ்ந்த இந்த இறையடியார்களை மார்க்கத்தின் பெயரால் இப்படித்தான் புகழவேண்டுமா? இவ்வாறு தான் பெருமைப் படுத்த வேண்டுமா? கப்ஸாக்களை அள்ளி வீசவேண்டுமா? ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.
மிதக்கும் மஹான்கள்!!!

மஹான் அஹ்மது கஸ்ரவிய்யாவின் மாணவர்கள் தண்ணீரிலே நடந்து செல்வார்களாம். இவ்வாறு பல அவ்லியாக்கள் தண்ணீரிலே நடந்ததாகவும் மிதந்ததாகவும் பலரைப்பற்றியும் பொய்க் கதைகளை வாய் கூசாமல் அள்ளி வீசுகிறார்கள்.எழுதுகிறார்கள். இதற்கெல்லாம் மறுமையில் விசாரணைகள்  இல்லையா?
இலங்கையில ஒளிவீசும் அவ்லியா

இலங்கையில் தஃப்தர் ஜெய்லானி என்றொரு இடம் மலை முகட்டில் உள்ளது. அங்கே உள்ள துவாரத்தில் பார்த்தால் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜெய்லானின் ஒளி வீசிக்கொண்டு இருப்பதாக ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்து வருகின்றனர். இந்த அதிசயத்தை 1978ல் நாமும் பார்த்து வர மாணவர் குழுவுடன் சென்றோம்.அந்த இடத்தை பார்வையிட்டபோது துவாரம் செல்லும் அடிவாரத்தில் சூரியனின் ஒளிபட்டு அங்கே வெளிச்சம் தெரிகிறது. இதை வைத்து அவ்லியாவின் ஒளி வீசுகிறது என கதை கட்டிவிட்டார்கள். இந்த ஒளி பகலில் மட்டும் தான் தெரியும். இரவில் தெரிவதில்லை.இதிலிருந்தே அவ்லியாவின் ஒளி இல்லை எனடபதை எந்த பாமரனும் புரிந்து கொள்ளலாம். முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி இலங்கைக்கு வந்ததாக வரலாறே கிடையாது. ஏன் இந்தியாவுக்கக் கூட அவர்கள் வந்ததில்லை.
இந்த கதையைப்பார்க்கும் போது கடலூர் வள்ளலாரின நினைவு தான் வருகிறது. கடலூரில் வள்ளலாரின் ஜோதி அதிகாலை 4.30 மணிக்குத் தெரியும் என்று மக்கள் திரளாகச் சென்று பார்த்துவருவார்கள். இதைப்பற்றி தீர விசாரித்தபோது அங்கே ரயில் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நமது சகோததரர் சொன்ன செய்தி நம்மை சிரிக்க வைத்தது.
அங்கே ஒவ்வொரு நாளும் சிதம்பரத்திலிருந்து சென்னை நோக்கிப்போகும் இரயில் அதிகாலையில் கடலூர் வழியாகச் செல்லும்.கடலூரை கடந்து செல்லும் ரயில் அங்கே உள்ள வளைவில் திரும்பும்போது அதன் விளக்கொளி சிலநிமிடங்கள் ஊருக்குள் வீசும். அதைப்பார்த்து வள்ளலாரின் ஒளி வீசுவதாக வள்ளலார் பக்தர்கள் கட்டி விட்ட கதை இது என்று அவர் சொன்னபோது வாய்வெடிக்ச் சிரித்தோம்.
காலடியில் கஃபத்துல்லாஹ்!

பல்லாயிரம் மைல்களைத் தாண்டி கண நேரத்தில் மக்கா வந்து தொழும் அவ்லியாக்களைப் பார்த்திருக்கிறீர்களா ? ஒருமுறை ‘பீர் முஹம்மது ஒலியுல்லாஹ் அவர்கள் பள்ளிவாசல் வந்து தொழுவதில்லை’ என மக்கள் ஸதகத்துல்லாஹ் அப்பாவிடம் புகார் கூறினார்கள். அதை நேரிலேயே கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக அவர்களின் வீட்டைத்தேடி வந்த அப்பா அவர்கள், பீரப்பாவின் நலன் விசாரித்த பிறகு வந்த விசயத்தை கேட்டேவிட்டார்கள். அப்போது பீரப்பா அவர்கள் ‘நான் மக்கள் நடமாடும் பள்ளிவாசல்களில் தொழுவதில்லை.எப்போதும் மக்கா சென்று கஃபத்துல்லாஹ்வில் தொழுவது தான் வழக்கம் என்று கூறியதும், அது எவ்வாறு சாத்தியப்படும்? என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள் ஸதகத்துல்லாஹ் அப்பா அவர்கள். அதைக் கேட்ட பீரப்பா அவர்கள் ‘இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டுவிட்டு ‘இதோ பாருங்கள்! என்று தாம் நெசவு நெய்துகொண்டிருந்த குழியிலிருந்து தமது காலை அகற்றினார்கள். அங்கே பாதம் இருந்த இடத்தில் கஃபத்துல்லாஹ் தெரிந்ததாம். அதில் பீரப்பா பக்தியோடு தொழுது கொண்டிருந்தார்களாம். இந்தப் பொய்க் கதையை அறிவுலகில் வாழும் உங்களால் நம்ப முடிகிறதா?
கஃபாவுக்குப் பறக்கும் அவ்லியா

காயல்பட்டணம் தைக்கா சாஹிப் வலியுல்லாஹ் ஒவ்வொரு வக்துக்கும் கஃபத்துல்லாஹ்வுக்குச் சென்று தொழுது வருவார்களாம். அதற்காக வைத்திருக்கும் ஒருமரப்பெட்டியில் ஏறி அமர்ந்ததும் அது கஃபாவுக்குப் பறந்து சென்று திரும்பி வந்து விடுமாம். அந்த மரப்பெட்டி இன்றும் அவர்கள் நினைவாக அங்கே தொங்கிக் கொண்டிருக்கும் வேடிக்கையைப் பார்க்கலாம்.
குடலைக்கழுவும் அவ்லியா!

ஒருமுறை ஸதகத்துல்லாஹ் அப்பா அவர்கள் காட்டுபாவா சாஹிப் மலை முகட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தார்களாம். அங்கே ஒரு நீரோடையில் பீரப்பா அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் தமது குடலை காறி உமிழ்ந்து துவைத்துக் கொண்டிருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? எனக்கேட்டார்கள் அப்பா அவர்கள். உடனே பீரப்பா அதை மீண்டும் விழுங்கிவிட்டு ‘ துவைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன்’. என பதில் சொன்னார்களாம். இவையெல்லாம் நடக்கக்கூடிய காரியங்களா?
கயிறில்தொங்கும் அவ்லியா

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் 1950களில் மக்கட்டி இலப்பை என்று ஒரு மஹான் இருந்தார்.அவர் பல வேடிக்கைகளை செய்வதுண்டாம். ஒரு நாள் ஒரு கடைக்குச் சென்று வாழைப்பழம் கேட்டிருக்கிறார். கடைக்காரர் இல்லையென்று விரட்டிவிட்டார். மறுநாள் காலையில் கடையைத்திறந்தபோது இந்த அவ்லியா பழக்குலை கட்டியிருந்த கயிற்றில் கழுத்தைக்கட்டி தொங்கிக் கிடந்தாராம். திடுக்கிட்ட கடைக்காரர் உடனே காவல் துறைக்குத் தகவல் கொடுத்ததும் அவர்கள் விரைந்து வந்தனர். பிரேத விசாரணைக்காக உடலை பரிசோதனைக்குக் கொண்டு செல்ல கயிற்றை அறுத்தபோது ‘ இங்கேயும் தூங்க விடமாட்டீர்களா?  தொல்லை தருகிறீர்களே! என்று சலித்துக்கொண்டு அங்கிருந்து மாயமாக மறைந்து விட்டாராம்.
புறா,வண்டு,ஈ,ஓலையிடம் பேசும் வித்தக அவ்லியா!

கி.பி 1268 ல் வாழ்ந்த கீழக்கரை பல்லாக்கு வலியுல்லாஹ்வைப்பற்றி ஏராளமான கதைகள் சொல்லப்படுகின்றன. இவர் ஒரு மஜ்துர்ப். தன்னிலை மாறும் போது உணர்வற்று வாயில் வந்த படி உளறுவார். அப்போது இவர்களுக்கு தொழுகை கடமையில்லையாம்.
புறா,வண்டு, ஈ, ஓலை ஆகியவை பேசும் பேச்சை அறியும் ஆற்றலை இறைவன் இவர்களுக்கு வழங்கியிருந்தானாம். ஒரு தடவை இவர்கள் ஒரு புறாவைச் சுட்டிக்காட்டி ‘இது என்னை காத்தமுல் வலி (வலிமார்களுக்கெல்லாம் இறுதி வலி) என்று கூறுகின்றது என்றார்;. மற்றொரு தடைவ ஒரு வண்டைச் சுட்டிகாட்டி இது என்னை ‘ ஸையிதுல் ஆலிம்’ ( அறிஞர்களின் தலைவர்’ என்று கூறுகின்றது என்றார்.
வேறொரு தடவை தம் உடல் மீது வீற்றிருந்த இரு ஈக்களை சுட்டிக்காட்டி ‘ இதில் ஒன்று பல்லாக்குத் தம்பி ஒரு முஃமின்’ என்று கூறுகின்றது. முற்றொன்று பல்லாக்குத் தம்பி ஒரு வலியென்று கூறுகின்றது என்றாராம்.
நபி ஸுலைமான் (அலை) அவர்களுக்கு மட்டுமே பறவை இனங்களின் மொழியை அறியும் ஆற்றல் வழங்கப்பட்டிருப்தாக திருக்குர்ஆனின் 27:16 வசனம் கூறுகிறது.ஆனால் இந்த மகானோ தனக்கே எல்லாம் வழங்கப்டிருப்பதாகக் கூறுகிறார்.தன்னிலை மறந்து உளறும் இவரது கூற்றை எப்படி நம்புவது ? அதுவும் தொழுகையே இல்லாத இவர் எப்படி அல்லாஹ்வின் அருளைப்பெற்று பறவை,வண்டு,ஈ போன்றவற்றின் மொழிகளை அறிந்திருக்கும் ஆற்றலைப் பெற்றார். இது சாத்தியம் உண்டுமா என ஆராய்ந்தாலே இவரைப் பற்றிக் கூறப்படும் கதைகள் பொய்யானவை என்பது நமக்குப் புரிய வரும்.

40, 60, 80 அடி நீளத்தில் அவ்லியாக்கள்.

தஞ்சை மாவட்டம் முத்துப்பேட்டையில் அடங்கப்பெற்றிருக்கும் செய்கு தாவூது வலி யார் , எங்கிருந்து எப்பொழுது இங்கு அடக்கமானார் என்று எவருக்கும் தெரியாது.இவரின் அடக்கவிடம் 40 ழுழம் நீளமுள்ளதாக இருக்கிறது. இவர் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து பல சித்து வேலைகள் செய்து அடங்கப்பெற்றார் என்றும் அது கால வெள்ளத்தால அழிந்து விட்டதென்றும் பின்னர் 200 ஆண்டுகளுக்குப்பின் கருப்பையாக் கோனார் தம் தரிசு நிலத்தை உழவே ஏரின் கொழுமுனை இவரின உடலைத் தாக்கி இரத்தம் பீருட்டு வந்ததென்றும், அவரும் கண்ணொளி இழந்தார் என்றும் அன்றிரவு, அவரின் கனவில் இவர் தோன்றி ‘ தம் பெயர் iஷகு தாவூத் என்பதாகவும் தாம் அங்கே அடங்கப் பெற்றிருப்பதாகவும் அண்மையிலுள்ள நாச்சி குளத்துக்குச் சென்று அங்குள்ள பீர்கான், ஹமீது கான் இருவரையும் அவ்விடம் அழைத்துவரின் அவர் கண்ணொளி மீளப்பெறுவார் என்று கூறியதாகவும் அவ்விரு பெரியார்களின் கனவிலும் இம்மகான் தோன்றி தம்மைப்பற்றியும் கோனார் வருவது பற்றியும் எடுத்துரைத்து மறைந்ததாகவும், அவ்வாறே கோனார் செய்யவே கண்ணொளி மீளப்பெற்றார். அந்த நன்றிகடனாகவே ஐந்தரை வேலி நிலத்தை மானியமாக வழங்கி அதன் மீதே 40 அடி தர்கா எழுப்பியதாகவும் கதை போகிறது.
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளர்கள்,சித்த சுவாதீனமற்றவர்கள்,சூனியம் வைக்கப்பட்டவர்கள், மகப்பேறில்லாதவர்கள் இங்கு வந்து தங்கிச் செல்கின்றனர்.அவர்களின் கனவில் இம்மகான் தோன்றி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும்,கனவில் நோயாளர்களுக்கு அறுவை சிகிட்சை செய்வதாகவும் , அவர்களுக்குத்துணையாக ஒரு பர்லாங் தொலைவில காஷ்மீரிலிருந்து வந்து அடங்கப் பெற்றுள்ள ‘பாத்திமா நாச்சியார்’ நர்ஸாக நின்று உதவுவதாகவும் கதை கூறப்படுகிறது.
அவ்லியாவின் சித்து வித்தைகளும் அந்நிய மங்கையான ‘காஷ்மீர் கன்னி’ இரவிலே வந்து இவருக்கு உதவும் கற்பனைக் கதைகளையும் இன்னும் நம்பிக் கொண்டு ஈமானை அடகு வைக்கும் மக்களின் அறியாமையை என்னென்பது ?
இவருக்கு போட்டியாக கொடிக்கால் பாளையத்தில் ஜஹான்ஷா அவ்லியாவின் அடக்கவிடம் 60 அடி நீளமுள்ளது என்றும் அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.
இன்னும் ஒரு படி மேல் சென்று ஓமான் நாட்டில் ஸலாலாவில் ஸாலிஹ் என்ற பெரியாரின் கப்றை 80 அடி நீளத்தில் கட்டி இவர் 80 அடி உயரமுள்ளவர் எனக்கூறி வருவது இதை விட வேடிக்கையாக இல்லையா ?
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பாதம் பதிந்த (மகாமு இப்றாஹீம்) கல்லைப்பற்றி திருமறை திருக்குர்ஆன், ‘அல்லாஹ்வின அத்தாட்சியாக’ வர்ணிக்கும் தடயத்தை புனித ஹஜ்ஜுக்குச் செல்வோர் ஆண்டுதோறும் தம் கண்களாலேயே கண்டு வருகின்றனர். அந்தக் கல் அடையாளத்தைப் பார்க்கும் போது இப்றாஹீம் நபி சுமார் ஏழு அடி உயரமுடையோராகவே இருந்திருப்பார்கள் என நம்மால் கணிக்க முடிகிறது. இவ்வாறிருக்க 700 ஆண்டுகளுக்குள் வாழ்ந்த மனிதர்கள் 40,60,80 அடி உயரமுடையவர்களாக இருந்திருக்க முடியும் என்பதை நம்ப முடிகிறதா? கற்பனை செய்து பார்க்க முடிகிறதா ? இன்றைய அறிவுலகம் இதை ஏற்றுக் கொள்ளுமா ? இவ்வாறு பிதற்றுவோரைப் பைத்தியக்காரர்கள் என உலகம் நகைக்காதா ?
காற்றாடி அவ்லியா

1975 ஆம் ஆண்டுகளில் கன்னியா குமரி மாவட்டம் ஆளுரில் ஒரு அதிசயம் நடைபெற்றது. அங்கிருந்த கப்ரு ஒன்றில் கப்ரைப் போர்த்தியிருக்கும் துணி காற்றில் வேகமாக ஆடிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட சுற்று வட்டார மக்களும், பள்ளிவாசல் இமாம்களும், ஹஸ்ரத் மார்களும் கப்ரு ஆடிக் கொண்டிருக்கும் அதிசயத்தைக்காண படையெடுத்துச் சென்றனர்.
பின்னர் தான் வேடிக்கை காட்ட அந்த ஊரிலுள்ள விஷமம் நிறைந்த சில இளைஞர்கள் ‘ இதை வியாபாரமாக்க துணிக்குள்ளே சிறிய மின் விசிறி ஒன்றை பொருத்தி மூடிவிட்டனர். சற்றுத் தொலைவில் யாரும் பார்க்காத வண்ணம் மின்விசிறிக்கு மின்சார இணைப்பைக் கொடுத்து இயக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
மின்விசிறியினால் துணி ஆடிக்கொண்டிருந்ததால் ‘அவ்லியாவே ஆடிக்கொண்டிருப்பதாக’ வதந்திகள் பரவின. காற்றாடி அவ்லியாவைப் பார்க்க பக்தர்களும், பக்தைகளும் திரள ஆரம்பித்தனர். இந்த ஒரு மாத காலத்தில் நேர்ச்சைகளும், உண்டியல் பணங்களும் குவியத்தொடங்கின. திட்டமிட்ட வசூலைப் பெற்றதும் அந்தப் போலிகள் அங்கிருந்து தலை மறைவாகிவிட்டனர். மக்களை ஏமாற்ற எத்தனையோ வழிகள் ! வியாபார வித்தைகள் !! மக்கள் ஏமாற ஏமாற புதுப்புது அவ்லியாக்கள் திடீர் பிள்ளையாரைப் போல் திடீர் திடீரென முளைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஹயாத் அவ்லியாக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார், திட்டுவிளையில் இரு கப்றுகளை ‘ஹயாத் அவ்லியா’ என்று கூறுகின்றனர். இவர்களை மண் தோண்டிப் புதைத்தபிறகு மீண்டும் வேறு வழியாக வெளியேறிவிடுவதால் இவர்கள் ‘ஹயாத் அவ்லியா’ உயிருள்ள அவ்லியா என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மட்டும் உயிரோடிருந்து மற்றவர்களெல்லாம் செத்த அவ்லியாக்கள் என சொல்ல வருகிறார்களா? இவையெல்லாம் சாத்தியப்படுமா? என்பதைக்கூட சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?
படகிலே மையித்தாக மிதந்து வந்த குளச்சல் அவ்லியா

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் முன்பொரு காலம் ஒரு படகு மிதந்து வந்ததாம். அதை கிறித்தவர்கள் பிடிப்பதற்காக சென்றபோது அது ஓடிவிட்டதாம். பின்னர் இந்துக்கள் பிடிப்பதற்காக ஓடினார்களாம். படகு பிடிதரவில்லை. இறுதியாக முஸ்லிம்கள் பிடிப்பதற்குச் சென்ற போது அது அருகே வந்ததாம். பின்னர் அந்த படகைத் திறந்து பார்த்தபோது அதனுள் ஒரு கடிதம் இருப்பது தெரியவந்தது. அதை படித்த போது ‘ நான் இன்னார்! என்னை குளச்சலில் இந்த கடற்கரை அருகில் அடக்கம் செய்யவேண்டும்’ என எழுதப்பட்டிருந்தது.
இதை 1974 ல் குளச்சல் வந்த பன்னூலாசிரியர் எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீம் அவர்களிடம் ஊர் தலைவர் சொன்ன தகவலை எழுதிக்கொடுத்தேன். பின்னர் சென்னை வந்தபோது கடற்கரை பகுதிகளான நாகப்பட்டினம்,அதிராம்பட்டணம் போன்ற நான்கு ஊர்களிலிருந்தும் இதைப்போன்ற செய்திகள் வந்திருந்தன. அப்போது தான் புரிந்தது இதில் எந்த உண்மையும் இல்லை.யாரோ கடற்கரை பகுதிகளில் பயானில் கப்ஸா விட்டிருக்கிறார்கள். நம்பவே முடியவில்லை.
‘மையித் படகு’ மக்களைத்தேடி ஓடி வருமா ? அதை நம்பவேண்டுமாம்! அவரது பெயர், முகவரி. எந்த ஊர்? எப்போது பிறந்தார்? எப்போது இறந்தார்? ஊருக்கு என்ன செய்தார்? என்ற எந்த விதமான நம்பகரமான தகவலுமில்லை. ஊர் மக்கள் முதலில் ‘வப்பூசன்’ எனப் பெயர் சொன்னார்கள்.பின்னர் ‘வாப்பு ஹுஸைன்’ என்று சொல்லத்தொடங்கினார்கள். அவ்லியாவுக்கு கூட்டம் சேரச் சேர இப்போது செய்கு பாபுல் ஹுஸைன் அவ்லியா (ரலி)’ என கிரேடு உயர்த்தி பெயர் பலகையும் தொங்க விட்டிருக்கிறார்கள். மக்கள் சாரை சாரையாக இப்போது படையெடுத்து வரத் தொடங்கிவிட்டார்கள்.
இவ்வளவு காலமாக இல்லாதிருந்த இந்த ஊரில் இப்போது மவ்லிது,கந்தூரி, நேர்ச்சை, விழா என திடீரென்று எப்படி முளைத்தது? இப்போது ஆண்டுதோறும் இங்கு பெரிய விழாவே நடத்தப்படுகிறது.மக்கள் மூட்டை மூட்டையாக அரிசி,மசாலா,பழவகைகளைக் கொண்டு கொட்டுகிறார்கள். ஆடு, கோழிகள் என இன்னொரு பக்கம் குவிகிறது. சில்லரையாக சிறிது விளம்பிவிட்டு மொத்தமாக வேறு பக்கம் பதுக்கப்படுகிறது.
இந்தப் போலித்தனங்கள் ஊர் மக்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் தெரிந்தும் அவ்லியாவின் மீது கொண்ட பக்தி இவர்களின் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது. இவர்களெல்லாம் கண்டுகொள்ளாமல் மறைமுகமாக ஆதரித்து வருகிறார்கள்.
சுனாமி வந்தபோது இன்னொரு புரளியையும் கிளப்பிவிட்டார்கள் இந்த கப்ரு ஆராதனைக்காரர்கள். சுனாமி வந்த போது கப்றைச் சுற்றிலும் வெள்ளம் புரண்டு வந்து அனைத்தையும் அழித்துவிட்டதாம். ஆனால் கப்றின் மீது விரிக்கப்பட்டிருந்த பட்டுத்துணி மட்டும் நனையவில்லையாம். எல்லாம் அழிந்த பின்னர் கப்ரின் மீது ஒரு புதிய பட்டுத்துணியை விரித்துவிட்டு அவ்லியாவின் பட்டுத்துணி மட்டும் நனையவில்லை. அது அப்படியே தான் இருந்தது என கிளப்பிவிட்டார்கள் புதிய புரளியை! பாருங்கள் அவ்லியாவின் கராமத்தை!

மறுபிறவி எடுத்த கமுதி அவ்லியா!

இப்போது ஆங்காங்கே சில கம்பங்களைக்கட்டி நாகூர் தர்ஹா கொடி, அஜ்மீர் நாதா கொடி! கவ்துல் அஃலம் கொடி என எழுதி சற்று உயரமான கொடிகளில் கம்பங்களை நாட்டி சென்னை மண்ணடி , புதுப்பேட்டை, அண்ணா சாலை போன்ற பகுதிகளில் காணிக்கை உண்டியல்களைக் காணலாம். அது போல சில ஊர்களில் நாகூர் தர்ஹா போன்ற ஒரு கப்ரைக்கட்டி இங்கும் நாகூர் அவ்லியா அடக்கமாயிருக்கிறார்கள் என்று கூறுவார்கள்.
இவ்வாறு போலியாக எழுப்பப்பட்ட ஒரு கட்டடம் கமுதியில் காணப்படுகிறது. நாகூர் நாயகம் எங்கள் ஊரிலும் வந்து மீண்டும் அடக்கமாகி இருக்கிறார்கள் என்று அந்த ஊர் மக்களே சொல்லும் போது தலையை முட்டிக்கொள்ளலாம் போலிறிருக்கிறது. இது போல் பொட்டல் புதூரிலும் முஹ்த்தீன அப்துல் காதிர் (ரஹ்) பெயரில் ஒரு கப்றை கட்டிவைத்திருக்கிறார்கள்.அவர்கள் இந்தியாவுக்கு வந்ததாகவே எந்த ஆதாரமுமில்லை. போலி சமாதிகள் எப்படி உருவாகிறது? மக்களின் கற்பனை வளத்தைப் பாருங்கள்.
இன்றும் நடமாடும் அவ்லியா

தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த காயல் ஜலீல் மைதீன் என்னும் நடமாடும் அவ்லியா தம் சீடப்பெண்ணுக்கு ஆண்மகவு தான் பிறக்கும் என்று தமது ஞானக் கண்களால் அறிந்து ஆரூடம் கூறியிருக்கிறார். அதை நம்பியிருந்த அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை ஏமாற்றத்தோடு தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறார். உடனே அந்த அவ்லியா அது பெண் குழந்தை இல்லை.ஆண்குழந்தை தான்! நான் வந்து நிரூபித்துக்காட்டுவதாகக் கூறி அந்த ஊருக்குப் பயணம் போயிருக்கிறார் நடமாடும் அந்த அவ்லியா. அங்கு சென்ற அவ்லியா சில மந்திரங்களை ஓதிவிட்டு ‘இப்போது பாருங்கள்! இது பெண்குழந்தையல்ல. ஆண்குழந்தை தான். உங்கள் கண்களுக்கு பெண் குழந்தையாகத் தெரிந்திருக்கிறது என்று கூறியதும் அந்தக் குடும்பமே வியந்து போனதாம். அவர்களின் கண்களையே நம்ப முடியவில்லையாம்’ என்று அந்த அவ்லியாவே ஒரு மேடையில் பேசியிருக்கிறார். இதை நம்புவதற்கும் ஒரு கூட்டமிருக்கிறது. பாருங்கள் இந்த அறியாமையை.
தொடரும்..
நன்றி: www.albaqavi.com

அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவதாரங்கள்!-03

Posted September 8, 2010 by arshathalathary
Categories: Uncategorized

அவ்லியாவின் ஆசி பெற டிஸ்கோ நடன நிகழ்ச்சிகள்.

திருவாரூர் மாவட்டம் திட்டச்சேரி மன்சூர் அவ்லியாவின் வருடாந்தர விழாவை வெகுவிமரிசையாக நடத்துவார்கள் அந்த ஊர் அவ்லியா பக்தர்கள்.நாகூரைப் போன்று உரூஸ் நடத்த நம்மிடம் அவ்லியாக்கள் இல்லையே என்று தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட அவலியா தான் மகான் மன்சூர் அவ்லியா. அப்படி ஒரு மனிதர் அந்த ஊரில் வாழ்ந்ததாக வரலாறே இல்லையாம். இன்று இந்த அவ்லியா பெயரில் அர்ச்சனைகள்!ஆராதனைகள்! ஆடல் பாடல்கள்! அமர்க்களமாக நடைபெறுகிறது.
1977ல் அந்த ஊருக்குச் சென்றபோது நம்மை வரவேற்றதே அந்த அவ்லியாவின் உரூஸ் விளம்பரம் தான்! அது தான் கிளைமேக்ஸ்! அந்த விளம்பர அழைப்பிதழ் வாசகங்கள் என்ன தெரியுமா ?

மன்சூர் அவ்லியாவின் ஆசி பெற வெண்ணிற
ஆடை நிர்மலாவின் நடன நிகழ்ச்சி காண வாரீர்!

இந்த விளம்பர நோட்டீஸைப் பார்த்ததும் அதிர்ந்து விட்டோம்.
சமுதாயம் எங்கே சென்றுவிட்டது பர்hத்தீர்களா?

அவ்லியாவின் மாண்பைப்பெற திரைப்படங்கள்!கரக ஆட்டங்கள்!

சோலியக்குடி என்னும் முத்துவடுகநாத பட்டணம் செய்யது முஹம்மது வலியுல்லாஹ் அவர்களின் 56-வது ஆண்டு சந்தனக்கூடுவிழா! ஹிஜ்ரி 1403 ஜமாதுல் அவ்வல பிறை 19 (4.3.83) வெள்ளி பினனேரம் சனி இரவு சந்தனக்கூடு விழா அதிவிமரிசையாக நடைபெறும்.
அன்று இரவு 10 மணியளவில் இரண்டு திரைப்படங்கள் இலவசமாகக் காண்பிக்கப்படும். (பெண்களுக்கு தனி இடம் உண்டு) அன்று இரவு 7 மணியளவில் கரக ஆட்டமும் உண்டு.
இப்படிக்கு தர்ஹா கமிட்டியார், சோலியக்குடி எம்.வி.பட்டணம்.
அவ்லியாவின் ஆசியைப் பெற இத்தனை அம்சங்களும் இடம் பெறவேண்டுமாம். எப்படி அவ்லியாவின் மீது நம்பிக்கையை வளர்த்துவைத்திருக்கிறார்கள் பாருங்கள். அவ்லியாவுக்கும், திரைப்படத்துக்கும், கரக ஆட்டத்துக்கும் என்ன தொடர்போ? எப்படிப்பட்ட சம்மந்தத்தைப் பிணைத்து வைத்திருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்தாலே மார்க்கத்தை எந்த இலட்சணத்தில் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது புரியவரும்.

அவ்லியாவின் ஆசிபெறும் சிவப்பு விளக்குக் கன்னியர்!

இதயமே வெடித்து விடும் போலிருந்தது அந்த ஆபாசக் காட்சியைக் கண்டதும்! வேறு எங்கும் அல்ல. சுல்தானுல் ஆரிபீன் நாகூர் நாயகத்தின் தர்கா வளாகத்தில் தான்! 1960ல் நாகூரில் என்ன நடைபெறுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள சாபு குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் ஆசிரியரின் தம்பி என்னை வளாகத்தின் உள்ளே நடக்கும் ஆபாசங்களை விவரித்து வந்தார். அங்கே வடிவமைக்கப்பட்ட சில டென்டுகளின் முன் அரை நிர்வாணத்தில் தங்ளை அலங்கரித்துக்கொண்டு நிற்கும் இளம் குமரிகள் சிலர் அங்கே நின்று கொண்டிருந்தனர். திடுக்கிட்டவனாக இவர்கள் யார்? எதற்காக இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள் ? எனக் கேட்டபோது வாடிக்கையாயர்களை எதிர்பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள் என்றார் அந்த நண்பர். அவ்லியா கண்டு கொள்ளாமல் அனுமதிக்கிறாரே ! இவருக்கு இந்த அசிங்கத்தை தடுப்பதற்கோ இந்த வேசிகளை அழிப்பதற்கோ சக்தியில்லையா ? எனக்கேட்டபோது இது இங்கே சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது என்றாரே பர்க்கலாம். அன்றுதான் அவ்லியாவுக்கு ஆக்கவோ அழிக்கவோ சக்தியில்லை என்ற முடிவுக்கு வந்தேன்.

அவ்லியாவின் ஆசியை வழங்கும் குடிமக்கள்.


குடிமக்கள் என்றதும் நாட்டு மக்கள் என நினைத்து விடாதீர்கள்!
இந்த புண்ணியவான்கள் யார் தெரியுமா? முத்துப்பேட்டை செய்கு தாவூது வலியுல்லாஹ்வின் ஆதீன கர்த்தாக்கள.இவர்கள் இரவு வேளையில் அவலியாவின் (கப்ரின்)அருகிலேயே அமர்ந்து கொண்டு பரோட்டா,விஸ்கி போன்ற மது வகைகளை அருந்திக்கொண்டிருந்ததை அந்த ஊரைச்சார்ந்த ”யாகூப் சார்” என்னும் ஆசிரியர் என்னிடம் காட்டி ”இதோ பாருங்கள் அவ்லியாவின் அருள் பெற்ற புரோகிதர்கள்” என்று அவர்களது வண்டவாளங்களை விவரித்தார். நீங்கள் நம்பும் இந்த அவ்லிக்களுக்கு தன் பக்கத்திலே நடக்கும் அக்கிரமங்களை , லீலைகளை கண்டிக்கும் ஆற்றல் இல்லையல்லவா? இவர்கள் எங்கே உங்களது வேண்டுகோளை ஏற்று உங்களுக்கு அருள் புரியப்போகிறார்கள்?
இதனால் தான் “அல்லாஹ்வையன்றி நன்மையோ தீமையோ செய்ய இயலாத இவர்களை நீங்கள் அழைத்துப்பிரார்த்திக்காதீர்கள்” ( 10:106)என இறைவன் கடுமையாக எச்சரிக்கிறான்.
அவ்லியாவின் அருளைப்பெற யானை,தேர் ஊர்வலங்கள்!
மேளதாளங்கள்!! வாண வெடிகள்!!

அவ்லியாவுக்கும் யானைக்கும் என்ன சம்பந்தமோ? அவர்கள் உயிர்வாழ்ந்த காலத்தில் உண்ண உணவுக்கும் உடுத்த உடைக்கும் வழியில்லாது, தங்குவதற்கு போக்கிடமில்லாது பரதேசிகளாக அலைந்து திரிந்தபோது ஏறிட்டுப் பார்க்க நாதியில்லை. இப்போது மட்டும் இந்த அவ்லியாக்கள் மீது இவ்வளவு பக்தியா? பாசமா?
இந்த அவ்லியாக்கள் பெயரால் இத்தனை அர்ச்சனைகளா ? ஆர்பாட்டங்களா? மேள தாளங்களா ? யானை ஊர் வலங்களா?
ஆயிரக்கணக்கில் வீடு தோறும் வசூல் செய்து பல இலட்சங்களை செலவு செய்து ஊரே அமர்க்களப்படுத்துகிறார்களே! யானையின் மீது பவனிவர, கொடியைப்பிடித்து முன்வரிசையில் நிற்க ஊர் பிமுகர்களிடையே போட்டா போட்டி! அடிதடிகள்! நானா ? நீயா ? என்ற வீராப்புகள்! கைகலப்புக்குப்பின்னரே ஒருவழி பிறக்கும். யார் ஆதீனத்துக்கு அதிகம் பணம் தருகிறார்களோ அவர்களுக்கே கொடியைப்பிடித்துவர அதிக வாய்ப்பு!
இதில் பல ஆயிரங்கள் புரளும். பின்னர் கேட்கவா வேணடும்? ஊர்வலத்தில் உலா வரும் அந்த மாண்புக்குரிய பக்தருக்கு ஜரிகைத்துணியால் தலைப்பாகை கட்டி, கிரீடம் அணிவித்து, பூமாலை சகிதமாக ஊர்வலமாக அழைத்துவரும் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக்காண தெருவெல்லாம் தோரணங்களோடு ஆண்கள், பெண்கள், சிறுவர்,சிறியவர், குழந்தைகள்,கிழடுகள் சகிதமாக கட்டிடங்கள், கூரைகள், மரக்கொப்புகள்; என உயரமான இடங்களில் ஏறி நின்று பார்க்க வரிந்து கொண்டு போட்டியிடும் காட்சிகள் உலகக் கோப்பையைத் தட்டிச் செலல்லப்போகும் ஒரு அதிசயத்தைப் பார்ப்பது போலிருக்கும்.
இவையெல்லாம் எங்கு நடைபெறுகின்றது எனக் கேட்கிறீர்களா ? கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை, தக்கலை, கோட்டார் போன்ற ஊர்களிலும், திருநெல்வேலி மாவட்டம் பொட்டல் புதூர் போன்ற புற நகரங்களிலும், நாகூர், காரைக்கால், திருச்சி போன்ற பெருநகரங்களிலும் இன்றும் வீம்புக்காக நடத்தப்பட்டு வருவதைப் போய் பார்த்து வாருங்கள்.
அப்போது தான் அறிவுக்கேற்ற மார்க்கத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் முஸ்லிம்களின் இலட்சணங்கள் புரியும். இந்த போலி முஸ்லிம் பெயர்தாங்கிகள் இந்த அறிவியல் யுகத்திலும் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியும்.
சமுதாயமே! இன்னுமா இந்த அறியாமை ?

எவ்வளவு காலத்துக்குத்தான் இப்படியே வாழ்வது? சமுதாயமே கொஞ்சம் சிந்தித்துபார்! அதள பாதாளத்துக்குச் செல்லும் நம் சமுதாயத்தைக் கட்டிக் காக்க வேண்டாமா? இவற்றிற்கெல்லாம் மறுமையில் கேள்வி கணக்குகள் கிடையாதா? அல்லாஹ்வின் முன்னிலையில் என்ன பதில் சொல்வது? என்பதை ஒரு கணம் ஆராய்ந்து பார்!
இதற்கெல்லாம் துணை போகும் ஆதீன கர்த்தாக்கள், செய்குமார்கள், ஆலிம்சாக்கள், ஊர் ஜமாஅத் தலைவர்கள், முக்கியப்பிரமுகர்கள் எல்லாம் இதற்குச் சமாதி கட்ட முன்வரக்கூடாதா? இந்த அறியாமையிலிருந்து நம் சமுதாயத்தைக் காத்து உலக அரங்கில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கத் துணை புரியக்கூடாதா? ஏனைய சமுதாயங்களெல்லாம் அறிவிலும்,திறமையிலும், கல்வியிலும், பொருளாதாரத்திலும் ஓங்கி நிற்கும்போது இவற்றிற்கெல்லாம் முன்னோடிகளாகத் திகழ்வேண்டிய நாம் தாழ்ந்து நிற்கலாமா ? தலை குனியலாமா? தலை நமிர்ந்து நிற்க வேண்டாமா?
அல்லாஹ்வை அஞ்சும் நேரம் இன்னும் வரவில்லையா?

இன்னும் ஒரு சுனாமி வரவேண்டுமா?
அல்லாஹ் தன்மானமுள்ள நம்மைப்பார்த்துக் கேட்கிறான் :-
விசுவாசம் கொண்ட மக்களுக்கு இறைவனுடைய போதனைகளைக் கேட்டும் இன்னும் அவனை அஞ்ச வேண்டிய நேரம் வரவில்லையா ? (அல்குர்ஆன் :57:16)
மக்களைக் காக்கும் கடவுள் அவதாரங்கள்!

கடவுளில் தான் எத்தனை எத்னை வகைகளை ரகம் ரகமாக வகைப்படுத்தியள்ளனர். ஊருக்கொரு கடவுள்! ஆளுக்கொரு கடவுள் என்ற நிலை வந்து விட்டது. இவைகள் என்ன என்று பாருங்கள்.
முருகன் துணை ! அம்மன் துணை! அனுமான் துணை! பராசக்தி துணை! என்ற நம்பிக்கை வாசகங்கள் இந்துக்களிடம் பரவலாகக் காணலாம். இதைக்காப்பியடித்த முஸ்லிம் பெயர் தாங்கிகள் தங்களுக்கும் இப்படிப்பட்ட கடவுள் அவதாரத் துணைகள் தேவைப்படுகின்றன என்று கருதி அவர்களும் இதுபோன்ற வாசகங்களை எழுதிவைத்திருக்கும் வேதனையைப் பாருங்கள்.
முகைதீன் ஆண்டவர் துணை!
காதர் அவ்லியா துணை!
யா கவுஸ் துணை!
ஷhஹுல் ஹமீது நாயகம் துணை!
செய்யிதலி பாத்திமா துணை!
சிக்கந்தர் அவ்லியா துணை!
ஏர்வாடி அவ்லியா துணை!
பீரான்மலை அவ்லியா துணை!
பாதுஷh நாயகம் துணை!
நாகூர் ஆண்டவர் துணை!
சுல்தான் அலாவுத்தீன் அவ்வியா துணை!
நத்கர் ஒலியுல்லாஹ் துணை!
பாசிப்பட்டணம் அவ்லியா துணை!
பீமா அம்மாள் துணை!
முஸாபர் அவ்லியா துணை!
இவையெல்லாம் என்ன தெரியுமா? மதுரையிலுள்ள ரிக்சாக்கள், லாரிகளில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள்.
இப்படியெல்லாம் இறைவனது படைப்புகளிடம் துணை தேடலாமா? உதவி தேடலாமா ? இஸ்லாம் இதை அனுமதிக்கிறதா? இவையெல்லாம் ‘ இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கும் கொடிய ‘ஷிர்க்’ என்னும் மிகப்பெரிய பாவமாகும். இதற்கு மன்னிப்பே கிடையாது. நிரந்தர நரகமே இதற்குரிய தண்டனையாகும். சுவர்க்கம் ஹராமாகிவிடும்.’ என்பதை வான்மறை அல் குர்ஆன் (4:48,5:72,46:5,31:13, 26:213) வசனங்கள் எச்சரிக்கின்றன.
இறைமறை அல்குர்ஆன் கூறுகிறது
1.அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள் 72:18,
2.அல்லாஹ்வைத்தவிர்த்து நன்மையோ தீமையோ செய்ய முடியாதவற்றை அழைக்காதீர்கள 40:14,
நீங்கள் உங்கள் தேவைகளுக்காக என்னையே அழையுங்கள். நான் உங்களு(டைய பிரார்த்தனைகளு)க்குப் பதிலளிப்பேன் 40:60,
3.உதவி என்பது வல்லமையும் ஞானமுடையோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிரவேறு (எவரிடமிருந்தும்)இல்லை 3:26,
4.உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.உன்னிடமே உதவி தேடுகிறோம் 1:5
என்ற இறைமறை வசனங்களும் ‘உதவி வேண்டுமாயின் அல்லாஹ்விடமே கேட்டுப் பெறுங்கள்’ (திர்மிதி) போன்ற நபிமொழிகளும் மனிதனின் எவ்வகை தேவையானாலும், எவ்வகை உதவியானாலும் இறைவனிடமே கேட்கவேண்டும். அவனைத்தவிர வேறு எவரிடமும் உதவியை தேடவே கூடாது. அவ்வாறு கேட்டால் அவன் இறைவனுக்கு இணைவைத்த பாவியாகி விடுவான். இறைவனே அனைத்துக்கும் துணை புரிபவன் என்பது முஸ்லிம்களின் அசைக்க முடியாத ஈமானிய நம்பிக்கையாகும். இன்று இந்த நம்பிக்கையிலிருந்து தடம் புரண்டு முஸ்லிம்கள் எங்கோ சென்றுவிட்டார்கள். யார் யாரிடமோ உதவி தேடுகிறார்கள். இறைவன் நம்மைக் காப்பானாக! நவூதுபில்லாஹ்.
அவ்லியாக்கள் யார்? அவர்களின் இலக்கணம் என்ன?

அவ்லியாக்களின் இலக்கணத்தை இறைமறை பின்வருமாறு கூறுகிறது:-அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை.அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.அவர்கள் இறைவனை நம்புவார்கள்.(அவனை) அஞ்சுவோராகவும் இருப்பார்கள். (அல்குர்ஆன்-10:62,63)    அவர்கள் 1) இறைவனைத்தவிர எவருக்கும் பயப்படமாட்டார்கள்.  2. எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள் 3) இறைவனை உறுதியாக நம்புவார்கள் 4. உள்ளும் புறமும் இறைவனைஅஞ்சுபவர்களாக (தக்வா உடையவர்களாக) இருப்பார்கள்.
இந்த பண்புகளில் ஒருவர் உண்மையாகவும் உறுதியாகவும் இறைவனை நம்புகிறாரா? இறைவனை அஞ்சுகிறாரா? என்பதை யாராலும் அறிய முடியாது. ஏனெனில் ஈமான், தக்வா என்னும் இருதன்மைகளும் வெளியில் தெரிபவை அல்ல. உள்ளங்களில் இருப்பவையாகும். இறைவனைத்தவிர எவரும் இதனை அறிந்து கொள்ள முடியாது. எனவே யார் “இறை நேசர்” என்பதை  எவரும் அறிந்து கொள்ள முடியாது.
மேலும் அவலியாவுக்குரிய இலக்கணத்தைப் பாருங்கள்:-
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் “வலி என்பவர் 1. அல் ஆலிமு பில்லாஹ்- இறைவனைப்பற்றி அறிந்தவராக இருப்பார்.2. அல்முவாளிபு அலா தாஅத்திஹி- அவனது கட்டளைகளை சரியாகக் கடைபிடிப்பவராக இருப்பார்.3. அல்முக்லிசு ஃபீ இபாததிஹி -அவனை வணங்கி வழிபடுவதில் பரிசுத்தமானவராக இருப்பார்”  என விளக்கமிளிக்கிறார்கள்.
இமாம் சவ்கானீ (ரஹ்) அவர்கள் ” இறைவேதத்தை முற்றிலும் கடைபிடிப்வராகவும், பெருமானார(ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறியைப் வாழ்வின் அனைத்து அமசங்களிலும் பின்பற்றுபவராகவும் இருப்பவரே இறைநேசராக  இருக்கமுடியும் எனக் கூறுகிறார்கள்.
இவ்வாறிருக்க, நாம் எவ்வாறு ஒருவரை “வலி” என்றும் “மகான்” என்றும் சான்றிதழ் வழங்க முடியும்? இன்று நாம் அவ்லியாக்கள் எனக்கூறிடு்ம் எவரைப்பற்றியும் எதையும்  நாம் அறிந்திருக்கவில்லை. அவர்களின்  அகவாழ்வைப்றியோ புறவாழ்வைப்பற்றியோ எதுவும் நமக்குத்தெரியாது.
இறைவனை உள்ளும் புறமும் அஞ்சி வாழ்ந்த அவனது அடியார்களைப்பற்றிக் குறிப்பிடும் போது,                                                                                                  ” அவர்களை அல்லாஹ்வும் பொரிந்துக்கொண்டான்.   அவர்களும் அவனைப் பொரிந்திக்கொண்டார்கள்”  (அல்குர்ஆன் 98:8) என இறை மறை குறிப்பிடுகின்றது. இதன்படி இறை நேசர்கள் என நாம் கூறுவோர் இறைவனைப் பொரிந்திக் கொண்டிருக்கலாம். ஆனால் இறைவன் அவர்களைப் பொரிந்திக் கொண்டானா இல்லையா என்பதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும் ? இறைவனோ இறை தூதரோ அறிவிக்காத ஒரு செய்தியை நாம் எவ்வாறு நம்ப முடியும?  எனவே எவரையும் நாமாக வலி என்றோ அவ்லியா என்றோ கூறவே முடியாது. அவ்வாறு ஒருவர் தன்னை அவ்லியா என்று கூறினால் அவர் பொய்யராகவே கருதப்படுவார்.
(வலி என்றால் இறை நேசர், அவ்லியா என்றால் இறைநேசர்கள் என்பது பொருளாகும்.  ஒருமைக்கும் பன்மைக்கும் வேறு பாடு தெரியாமல் அவ்லியா என்றே மக்கள் கூறுகின்றனர். எனவே வழக்குப்படியே நாம் அவ்லியா என்ற பன்மைச்சொல்லையே பயன்படுத்தியிருக்கிறோம் என்பதைக் கவனத்திற் கொள்க!)
(முற்றும்)
நன்றி:  http://albaqavi.com/

Posted September 5, 2010 by arshathalathary
Categories: Uncategorized

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு…
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக….

செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?

வினவு இணையதளத்தில் கடந்த மாதம் வெளிவந்த ஒரு கட்டுரையின் தலைப்பு இது.

செயற்கை செல் (Synthetic Cell) ஆராய்ச்சி முடிவுகள் குறித்து மருதையன் என்ற சகோதரரால் எழுதப்பட்ட இந்த கட்டுரைக்கான நேரடி பதிலை யார் சொன்னால் நன்றாக இருக்கும்?

இந்த ஆராய்ச்சியை நடத்திய கிரேக் வென்டர் கழகத்தின் தலைவரும் (J.Craig Venter Institute (JCVI)), செயற்கை செல் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவருமான டாக்டர் கிரேக் வென்டர் அவர்கள் சொன்னால் சரியாக இருக்குமா?

“Kornberg did not create life in a test tube, nor did we create life from scratch. We transformed existing life into new life. We also did not design and build a new chromosome from nothing. Rather, using only digitized information, we synthesized a modified version of the naturally occurring Mycoplasma mycoides genome. The result is not an “artificial” life form” – J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010.

நாங்கள் உயிரை ஆரம்பத்திலிருந்து (from scratch) உருவாக்கவில்லை. இருந்த ஒரு உயிரை வேறொரு புது உயிராக உருமாற்றியுள்ளோம். அது போல, நாங்கள் ஒன்றும் ஒரு புது உயிர் அணுககோலை (Chromosme) ஒன்றுமில்லாததிலிருந்து வடிவமைக்கவோ, கட்டமைக்கவோ இல்லை. முடிவோ, செயற்கை உயிர் இல்லை - (Extract from the original quote of) J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010.

இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்தியவரே சொல்கின்றார் ‘நாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லையென்று”. இந்த விஷயம் சகோதரர் மருதையனுக்கு ஏன் தெரியவில்லை?.

இதே போன்றதொரு கருத்தை தான் “தி நியூயார்க் டைம்ஸ்” நாளிதழில் வந்த ஒரு கட்டுரையும் பிரதிபலிக்கின்றது.

“He has not created life, only mimicked it” – Dr. Baltimore, Researchers Say They Created a ‘Synthetic Cell’, The New York Times, dated 20th May 2010.

அவர் உயிரை உருவாக்கவில்லை, ஒரு உயிரை மிமிக்ரி மட்டுமே செய்துள்ளார் - (Extract from the original quote of) Dr. Baltimore, Researchers Say They Created a ‘Synthetic Cell’, The New York Times, dated 20th May 2010.

ஒரு செயற்கை உயிரை வென்டர் உருவாக்கிவிட்டார் என்று மருதையன் போன்ற சகோதரர்கள் நினைத்தால் அது நிச்சயமாக உண்மையல்ல. படிப்பவர்களை உண்மையை விட்டு திசைதிருப்பும் முயற்சியே இது மாதிரியான தலைப்புக்கள்.
மருதையன் அவர்களின் கட்டுரைக்கான தலைப்பு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்,
செயற்கை உயிர்: பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன?
ஆம், ஒரு முக்கிய நாத்திக கொள்கையை  (ஒரு வாழும் செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற கொள்கையை) சுக்குநூறாக நொறுக்கியிருக்கின்றன செயற்கை செல் ஆராய்ச்சி முடிவுகள்.
அதே கட்டுரையில் மருதையன் அவர்கள் பின்வருமாறு எழுதுகின்றார்,

“சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு என்று கூறி வரும் மதக் கோட்பாடுகள் மற்றும் பல கருத்துமுதல்வாத கோட்பாடுகள் அனைத்தின் முகத்திலும் பூசப்பட்டிருக்கும் கரி – சிந்தடிகா” – வினவு, 8/7/2010.

இந்த செயற்கை செல் ஆராய்ச்சி உண்மையில் யார் முகத்தில் கரியை பூசியிருக்கின்றது?, இறை நம்பிக்கையாளர்கள் மீதா அல்லது சகோதரர் மருதையன் போன்ற நாத்திகர்கள் மீதா?, செயற்கை செல் (Synthetic Cell) என்றால் என்ன?, இந்த ஆராய்ச்சியால் நாம் பெரும் பலன்கள் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைக்காண முயல்வதே இந்த பதிவின் நோக்கம். இன்ஷா அல்லாஹ்.
செயற்கை செல் என்றால் என்ன?

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவையே. அவை ஒருசெல் உயிரினங்கள், பலசெல் உயிரினங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நுண்ணுயிரிகள் (உதாரணத்துக்கு பாக்டீரியாக்கள்) ஒரு செல் உயிரினங்களே. ஆக, ஒரு செல்லை ஆரம்பத்திலிருந்து உருவாக்கினாலே (from Scratch) உயிரியலைப் பொறுத்தவரை அது ஒரு உயிரை உருவாக்கியதாகத் தான் அர்த்தம்.

இப்போது செயற்கை செல் ஆய்வுக்கு வருவோம்.

JCV கழகம் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஒரு முக்கியமான உயிரியல் கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. “ஒரு வாழும் செல்லுக்கு குறைந்த பட்சம் எத்தனை மரபணுக்கள் (Genes) தேவை? (what is the minimum number of genes required to make a living cell?)” என்ற கேள்விதான் அது. இந்த ஆய்வுக்கு அவர்கள் சூட்டிய பெயர் “குறைந்தபட்ச மரபணு திட்டம் (Minimal Genome Project)”.

இந்த கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதற்காக ஒரு மிகச் சாதாரண உயிரினமான Mycoplasma mycoides பாக்டீரியாவை பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றார்கள். இந்த பாக்டீரியா சுமார் 475 மரபணுக்களால் ஆனது. ஒப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், மனித மரபுரேகை அல்லது மரபணுத் தொகுப்பு (Genome, which means a full complement of genes found in the cell) சுமார் 20,000-25,000 மரபணுக்களால் ஆனது.

முதலில் இந்த பாக்டீரியாவின் (475 மரபணுகளுக்குண்டான) டி.என்.ஏ வார்த்தைகளை வரிசைப்படுத்தி கொண்டார்கள். கணிப்பொறியில் அந்த தகவல்களை பதிந்து கொண்டனர்.  பின்னர் அவற்றை 1,100 துண்டுகளாக பிரித்து கொண்டார்கள். ஒவ்வொரு துண்டையும் செயற்கையான முறையில் நான்கு வெவ்வேறு விதமான வேதிப்பொருட்களை கொண்டு உருவாக்கினார்கள்.

இப்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட 1,100 டி.என்.ஏ துண்டுகளையும் ஒன்று சேர்த்து (Assembling) மரபுரேகையை (Genome) உருவாக்கினார்கள்.

இந்த துண்டுகளை எப்படி இணைத்தார்கள் என்றால், ஈஸ்ட் (Yeast) செல்களை கொண்டுதான். அதாவது, செயற்கையாக ஒரு மரபுரேகையை உருவாக்க ஏற்கனவே இயற்கையாக உள்ள ஒரு வாழும் செல் தான் அவர்களுக்கு உதவியிருக்கின்றது.

“The synthetic Mycoplasma mycoides genome was assembled by adding the overlapping DNA fragments to yeast. Once inside a yeast cell, the yeast machinery recognized that two DNA fragments had the same sequence and assembled them at this overlapping region” - J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010.



இந்த வாழும் செல் இல்லையென்றால் செயற்கை மரபுரேகையை உருவாக்கியிருக்க முடியாது. இது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம்.

இப்படி உருவாக்கப்பட்ட மரபுரேகை சுமார் 1.08 மில்லியன் (1 Million = 10 lakhs) வார்த்தைகளை கொண்டதாக இருந்தது. இதுதான் உலகிலேயே இது வரை உருவாக்கப்பட்ட செயற்கை மரபுரேகைகளில் மிகப் பெரியது.

இப்படியாக செயற்கை மரபுரேகை (Synthetic Genome) உருவாக்கப்பட்டது. இப்போது இதனை வேறொரு பாக்டீரியாவின் செல்லுக்குள் (Recipient Cells) செலுத்தி சோதனை செய்ய வேண்டும். இதற்கு ஆய்வாளர்கள் தேர்ந்தெடுத்த பாக்டீரியா Mycoplasma capricolum என்பதாகும். முதலில் இந்த பாக்டீரியாவின் மரபுரேகையை நீக்கிவிட்டனர்.

பின்னர், Mycoplasma capricolum பாக்டீரியாவின் தடுப்பு நொதி மரபணுவை (Restriction Enzyme gene) செயலிழக்க செய்தார்கள். அப்படி செய்யவில்லை என்றால் அது உள்ளே வரும் செயற்கை மரபுரேகையை அழித்து விடும்.

அந்த மரபணுவை செயலிழக்க செய்த பின்பு செயற்கை மரபுரேகையை Mycoplasma capricolum பாக்டீரிய செல்லின் சய்டோப்லாசத்தின் (Cytoplasm) உள்ளே செலுத்தினர் (Transplantation). செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகையை அந்த பாக்டீரியா ஏற்றுக்கொண்டு (Booted up) பிரதி எடுக்க (replicate) ஆரம்பித்து விட்டது.

இது குறித்த விரிவான ஆய்வு முடிவுகள் சயின்ஸ் எக்ஸ்பிரஸ் (Science Express) இணைய இதழில் மே மாதம் 20 ஆம் தேதி வெளிவந்தன.

இப்படி உருவான அந்த பாக்டீரியாவிற்கு அவர்கள் வைத்த பெயர் “Mycoplasma mycoides JCVI-syn1.0″ என்பதாகும். இதற்கு சின்தியா (Synthia) என்ற செல்லப் பெயரும் உண்டு. (இதைத்தான் “சிந்தடிகா” என்று எழுதினாரோ மருதையன்)

சற்று எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு காரின் ஒரு பாகத்தை பார்த்து அந்த தகவல்களை கணிப்பொறியில் ஏற்றிக்கொண்டு, பின்னர் அதே போன்ற ஒன்றை ஆய்வுக்கூடத்தில் உருவாக்கி அதனை வேறொரு காரில் பொருத்தி அது வேலை செய்கின்றதா என்று பார்ப்பது.

ஆக, இவர்கள் செய்தது, ஒரு பாக்டீரியாவை நன்கு ஆராய்ந்து அதன் மரபுரேகையை கணிப்பொறி துணையோடு ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கி பின்னர் அதனை மற்றொரு பாக்டீரியாவில் செலுத்தியது.

மொத்தத்தில், இவர்கள் மரபுரேகையை புதிதாக உருவாக்கவில்லை. ஏற்கனவே இருந்த ஒன்றை பார்த்து அதே போன்ற ஒன்றை சிற்சில மாற்றங்களோடு உருவாக்கியுள்ளனர். இது எப்படி செயற்கை உயிரை உருவாக்கியதாக அமையும்? அதனால் தான் கிரேக் வென்டர், தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை என்றும், ஏற்கனவே இருந்த ஒரு உயிரை உருமாற்றி மட்டுமே உள்ளோம் என்று தெளிவாக விளக்கியுள்ளார்.

விஞ்ஞானிகள் செயற்கை உயிரை உருவாக்கிவிட்டார்கள் என்று சிலர் நினைத்தால் அது அவர்களது அறியாமையே தவிர வேறொன்றுமில்லை…..

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கலாம். அதாவது, கிரேக் வென்டர் குழு (JCVI) செயற்கையாக உருவாக்கியது பாக்டீரிய செல்லின் மரபுரேகையைத் தானே?, பிறகு ஏன் ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கியது போல “செயற்கை செல்” என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்?

உங்களுடைய சந்தேகம் மிக நியாயமான ஒன்றுதான். இந்த கேள்வியைத்தான் பலரும் கேட்கின்றனர். மரபுரேகையை மட்டும் நகலெடுத்து செயற்கையாக உருவாக்கிவிட்டு அதற்கு “செயற்கை செல்” என்று பெயரிடுவது என்ன மாதிரியான லாஜிக்?, “செயற்கை மரபுரேகை” (Synthetic Genome) என்றுதானே பெயரிட்டிருக்க வேண்டும்?

“First, as many have noted, the technical accomplishment is not quite what the JCVI press release claimed. It’s hard to see this as a synthetic species, or a synthetic organism, or a synthetic cell; it’s a synthetic genome of Mycoplasma mycoides, which is familiar enough” - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.

“முதலில், பலரும் குறிப்பிட்டது போல, JCV கழகம் வெளியிட்ட அறிக்கை கோருவது போல இந்த ஆராய்ச்சி தொழில்நுட்ப சாதனையாக தெரியவில்லை. இதனை ஒரு செயற்கை இனமாகவோ, அல்லது செயற்கை உயிரியாகவோ, அல்லது செயற்கை செல்லாகவோ பார்க்க கடினமாக உள்ளது; Mycoplasma mycoidesனுடைய செயற்கை மரபுரேகையான இது நமக்கெல்லாம் நன்கு அறியப்பட்ட ஒன்றுதான்” – (Extract from the original quote of) Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.

ராய்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் செயற்கை செல் குறித்து எழுதும் போது “Artificial life? Synthetic genes ‘boot up’ cell” என்று தலைப்பு வைத்ததற்கு இந்த குழப்பம் ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ?

இது குறித்து வென்டர் என்ன கூறுகின்றார்?…செல்லை கட்டுபடுத்துவது செயற்கையாக உருவான மரபுரேகை என்பதால் இதற்கு “செயற்கை செல்” என்று பெயர் வைத்ததாக கூறுகின்றார். ஆனால் அவருடைய இந்த விளக்கம் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றது…

“The explanation from the Venter camp is that the genome took over the cell, and since the genome is synthetic, therefore the cell is synthetic. But this assumes a strictly top-down control structure that some biologists now question. Why not say instead that the genome and the cell managed to work out their differences and collaborate, or even that the cell adopted the genome (and its identity)? Do we know enough to say which metaphor is most accurate?” - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.

ஆக, இவர்களது ஆய்வுக்கு சரியான பெயர் “செயற்கை மரபுரேகை” என்பது தானே தவிர “செயற்கை செல்” அல்ல.

இந்த ஆய்வின் மூலம் JCV கழகம் தங்கள் திட்டத்தை நோக்கி ஒரு படி மேலே சென்றிருக்கின்றனர். அதாவது, ஒரு வாழும் செல்லுக்கு குறைந்த பட்சம் எத்தனை மரபணுக்கள் தேவை என்பது பற்றி அறியும் திட்டம்.

இங்கு நான் சொல்ல முயற்சித்திருப்பது மிகச் சிறிதுதான். இந்த ஆய்வு பல நுணுக்கமான விஷயங்களை உள்ளடக்கியது. அதனால் நீங்கள் இது பற்றி மேலும் ஆராய்ந்தறிய வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த ஆய்வு, உயிர் என்பது வெறும் வேதிப்பொருட்களால் ஆனது என்று கூறுகின்றதா? (Does the Venter Institute’s achievement show that life is just chemicals?)

இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை.
செயற்கையாக டி.என்.ஏவை உருவாக்கி அவற்றை மற்ற உயிரின செல்களுக்குள் செலுத்துவதென்பது பல காலங்களாக நடந்து வருவதுதான். இந்த முறை நடந்ததுதான் அளவுக்கோளில் மிகப் பெரியது.
ஒரு முக்கிய விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.
அதாவது, Mycoplasma capricolum பாக்டீரியாவின் மரபுரேகை வெளியே எடுக்கப்பட்டு விட்டாலும் அது இன்னும் உயிருள்ள ஒரு செல் தான் (மரபுரேகையை வெளியே எடுத்தவுடன் அது செத்துவிடவில்லை). ஆனால், அது தன்னுடைய தன்மையான “தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொள்வதை” செய்யாது. செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகை உள்ளே செலுத்தபட்டவுடன் அந்த பாக்டீரியா தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டது.
வாழும் மற்றும் பிரதி எடுக்கும் என்று இவற்றுக்கான வித்தியாசம் இன்னும் சரிவர அறிவியலாளர்களுக்கு புலப்படவில்லை. ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்குவது எப்படி என்றும் விளங்கவில்லை.
“What separates a bag of DNA from a living, replicating cell is still unclear and un-synthesizable. To me, life is still “special” and incredibly powerful” - Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010.
“வாழும் மற்றும் பிரதி எடுக்கும் செல் என்று இவற்றுக்கான வித்தியாசம் இன்னும் சரிவர அறிவியலாளர்களுக்கு புலப்படவில்லை. ஒரு செல் செயற்கையாக உருவாக்கப்படவும் இல்லை. என்னை பொறுத்தவரை உயிர் என்பது தனித்துவம் மிக்கது மற்றும் மிகவும் வலிமையானது” - (Extract from the Original quote of) Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010.
ஆக, உயிருள்ள ஒரு செல்லுக்குள் தான் செயற்கை மரபுரேகை புகுத்த பட்டுள்ளது.
ஒரு வாழும் செல்லை செயற்கையாக வேதிப்பொருட்களை கொண்டு உருவாக்கும் வரை உயிர் என்பது வெறும் வேதிப்பொருட்களால்  ஆனது என்று கூற முடியாது.


செயற்கை செல் இறைவனை மறுக்கின்றதா?

இதற்கான பதிலை வென்டர் தெளிவாக கூறிவிட்டார். தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை என்று. ஏற்கனவே இருந்த ஒரு உயிரை ரி-ப்ரோக்ராம் (Re-Program) தான் செய்துள்ளார்கள்.

மரபுரேகையையும் (Genome) இவர்களாக உருவாக்கவில்லை, இயற்கையாக இருந்த ஒரு உயிரின் மரபுரேகையை பார்த்து அதே போன்ற ஒன்றை செய்துள்ளனர்.

உதாரணத்துக்கு, மரபுரேகையை ஒரு மென்பொருளோடு (Software) ஒப்பிட்டால், அந்த மென்பொருளை இவர்களாக எழுதவில்லை, ஏற்கனவே இருந்த ஒரு மென்பொருளை பார்த்து காப்பி அடித்திருக்கின்றனர், அவ்வளவுதான். (They didn’t write a new software, they just copied a existing one).

“The work reported by Venter and his colleagues is an important advance in our ability to re-engineer organisms; it does not represent the making of new life from scratch.” – Jim Collins, Artificial life? Synthetic genes ‘boot up’ cell, Reuters, dated 20th May 2010.

வென்டர் மற்றும் அவருடைய குழுவினருடைய ஆய்வு, உயிரினங்களை மறுசீரமைப்பு செய்யும் தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய முன்னேற்றம். (ஆனால்) அது ஒரு புது உயிரை ஆரம்பத்திலிருந்து உருவாக்கவில்லை – (Extracted from the original quote of) Jim Collins, Artificial life? Synthetic genes ‘boot up’ cell, Reuters, dated 20th May 2010.

இவர்கள் கடவுளாக முயற்சிக்கவில்லை. கடவுள் உருவாக்கிய ஒரு உயிரின் சிறு பகுதியை பார்த்து அதனை 40 மில்லியன் டாலர்கள் செலவில், அதிநவீன இயந்திரங்களின் துணையோடு, 15 வருட கடின உழைப்பில், 25 விஞ்ஞானிகளின் கண்காணிப்பில் நகலெடுத்துள்ளனர். இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்?
மேலும், மரபுரேகை மட்டும் தான் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அது செலுத்தப்பட்ட செல்லோ  இயற்கையானது.

ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கினால் தான் உயிரியல் வரையரைப்படி அது உயிரினமாக கருதப்படும்.

ஆக, செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகையை செயற்கையாக உருவாக்கப்பட்ட செல்லுக்குள் இவர்கள் செலுத்தவில்லை. இயற்கையாக உள்ள மற்றொரு செல்லுக்குள் தான் செலுத்தியிருக்கிறார்கள்.


வேறுவிதமாக சொல்லப்போனால் இந்த மரபுரேகையை உருவாக்க ஒரு சிறு பகுதியை மிமிக்ரி செய்தும் மற்றவற்றை கடன் வாங்கியும் உள்ளனர்.

“It might be still more accurate to say that the researchers mimicked one part and borrowed the rest” – Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.

இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால், ஆய்வாளர்கள் ஒரு பகுதியை மிமிக்ரி செய்தும், மற்றவற்றை கடன் வாங்கியும் உள்ளனர் – (Extract from the original quote of) Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.

ஒரு கணிப்பொறியில் (Mycoplasma mycoides) உள்ள மென்பொருளை (Genome of Mycoplasma mycoides) காப்பி செய்து அதனை மற்றொரு கணிப்பொறியில் (Mycoplasma capricolum) மாற்றி விட்டு விட்டனர். ஆக, செல் என்னும் கணிப்பொறியை கடன் வாங்கியும், மரபுரேகை என்னும் மென்பொருளை மிமிக்ரி செய்தும் ஆய்வு முடிவுகளை அளித்திருக்கின்றனர். இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்?
அதுமட்டுமல்லாமல் இவர்களுடைய ஆய்வுக்கு உறுதுணையாக இருந்தது ஒரு வாழும் செல் தான் (ஈஸ்ட் செல்).
ஈஸ்ட் செல்கள் இல்லையென்றால் சின்தியா உருவாகியிருக்காது. ஆக, ஏற்கனவே இருந்த ஒரு உயிரைக்கொண்டு தான் செயற்கை மரபுரேகையை உருவாக்கியுள்ளனர்.

“Without life, Synthia wouldn’t be alive” - Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010.

உயிரில்லை என்றால் சின்தியா வந்திருக்காது -  (Extract from the original quote of) Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010.

செயற்கையான ஒன்றை உருவாக்குவதற்கு இயற்கையான ஒன்றுதான் இவர்களுக்கு தேவைப்பட்டிருக்கின்றது.

மொத்தத்தில், இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை “செயற்கை மரபுரேகையை” உருவாக்க பயன்படுத்தி கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு இறைவனுடைய படைப்புகள் தான் தேவைப்பட்டிருக்கின்றது.

இப்படி இறைவன் கொடுத்த அனைத்தையும் உபயோகப்படுத்தி கொண்டு, விஞ்ஞானிகள் ஒரு உயிரை செயற்கையாக உருவாக்கி கடவுளை பொய்பித்து விட்டனர் என்று கூறுவது அபத்தமானது மட்டுமல்ல, அறிவுக்கு ஒத்து வராததும் கூட.

இதனால் தான் வென்டர் “தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை” என்று மிக தெளிவாக, விரைவாக மறுத்து விட்டாரோ?

செயற்கை செல் நாத்திக கொள்கையை பொய்பிக்கின்றதா?

என்னை பொறுத்தவரை, ஆம்.
உலகில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தற்செயலாக ஒரு செல் உருவாகியிருக்க வேண்டும் (Abiogenesis), பின்னர் அவற்றில் இருந்து படிப்படியாக உயிரினங்கள் வந்திருக்க வேண்டுமென்பது பல நாத்திகர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்துள்ளது செயற்கை செல் ஆராய்ச்சி.
பல பேருடைய அயராத உழைப்பில், அதி நவீன கருவிகளைக் கொண்டு இந்த செயற்கை மரபுரேகை உருவாகியுள்ளது. (நகலெடுப்பதில் ஏற்பட்ட) ஒரு சிறிய தவறு பல மாதங்களுக்கு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு நடக்க விடாமல் தடுத்திருக்கின்றது. ஆக, அதி கவனமாக பதினைந்து வருடங்களாக பாடுபட்டு இந்த ஆய்வை செய்திருக்கின்றனர்.
ஆனால் பல நாத்திகர்களோ ஒரு வாழும் செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற வாதத்தை எந்தவொரு ஆதாரமும் இல்லாமலேயே நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஒரு சாதாரண பாக்டீரிய செல்லின் உள்ளே இருக்கும் மரபுரேகையை உருவாக்குவதற்கு அதிநவீன இயந்திரங்களின் உதவியும், பலருடைய தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறதென்றால், மிக சிக்கலான கட்டமைப்பை கொண்ட ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது என்ன விதமான வாதம்?
ஒரு செல்லே தற்செயலாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்னும் போது அதனை அடிப்படையாக கொண்டு மற்றவை வந்திருக்கும் என்பது பகுத்தறிவுக்கு உட்பட்டதா?
ஒவ்வொரு முறையும் இறைவனை மறுப்பதாக கூறிக்கொண்டு நாத்திகர்கள் கொண்டு வரும் அறிவியல் ஆதாரங்கள் எல்லாம் பூமராங் போல திரும்ப அவர்களையே வந்து தாக்கும். இந்த முறையும் அது தான் நடந்துள்ளது. என்ன, கடந்த காலங்களை போலல்லாமல் வெகு விரைவாகவே அந்த பூமராங் இந்த முறை வந்து விட்டது.

இதுபோன்ற ஆய்வுகள் சில நாத்திகர்களது உள்ளத்தில் நிச்சயம் பல கேள்விகளை எழுப்பியிருக்கும். தங்கள் நிலைப்பாட்டை தள்ளி வைத்துவிட்டு உண்மையை அறிய தூண்டியிருக்கும்.

மனித குலத்திற்கு இந்த ஆய்வால் என்ன பலன்?

பல பயன்கள் உள்ளதாக வென்டர் கூறியுள்ளார். சுத்தமான தண்ணீர் வழங்குவதிலிருந்து சுகாதாரம் வரை இந்த ஆய்வால் பயனுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த ஆராய்ச்சி கேன்சர் போன்ற நோய்களை பற்றி நன்கு அறிவதற்கும், புதிய மருந்துகளை உருவாக்குவதற்கும் பயன்படலாம்.
ஆனால் அதே சமயம் இந்த ஆய்வுகளால் விபரீதங்களும் ஏற்படலாம் என்று பலரும் அஞ்சுகின்றனர். Bio-Terrorism போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்று சமூக ஆர்வலர்கள் எண்ணுகின்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த ஆய்வு குறித்து கவலை தெரிவித்திருக்கின்றார்.

“This development raises the prospect of important benefits, such as the ability to accelerate vaccine development. At the same time, it raises genuine concerns, and so we must consider carefully the implications of this research.” – President Obama, in a letter to the chair of his new bioethics commission.

இந்த ஆய்வு சரியான திசையில் சென்றால் இதனை வரவேற்று ஊக்குவிக்க வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாகிறது.
இறைவன் எந்தவொரு நோயையும் அதற்குண்டான நிவாரணம் இல்லாமல் படைப்பதில்லை என்பது நபி மொழி. இது போன்ற ஆய்வுகள் மனித குலத்திற்கு சவாலாக இருக்கும் நோய்களை பற்றி நன்கு அறிவதற்கு பயன்படுகிறது என்றால் இதனை ஊக்குவிப்பதே ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரின் எண்ணமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
முடிவாக…

உயிரியல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படும் இந்த ஆய்வை மருதையன் போன்ற சகோதரர்கள் தங்கள் நாத்திக கொள்கையை வளர்க்க பயன்படுத்துவது ஆச்சர்யமாக உள்ளது.

ஆனால் பாவம், அவர்களும் என்ன செய்வார்கள்…கடவுளை மறுப்பதற்கு அறிவியல் ரீதியாக எந்தவொரு காரணங்களும் இல்லாத நிலையில் இப்படி ஏதாவது ஒன்று குறுக்கே வரும் போது அதனை வெளிச்சம் போட்டு காட்டிதான் தங்கள் நாத்திக நம்பிக்கையை தக்க வைத்து கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால் அந்த வெளிச்சமும் சிறிது காலமே நிலைத்திருக்கும் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். இந்த முறையும், “செயற்கை செல்” ஆராய்ச்சி கடவுளை பொய்பிக்கின்றது என்ற கருத்துக்கு அந்த ஆய்வை முன்னின்று நடத்தியவரே தெளிவாக பதில் சொல்லி இவர்களது பொய் பிரசாரத்திற்கு முற்றுபுள்ளி வைத்து விட்டார்.

இந்த ஆய்வு இறைவனை மறுக்காது, மாறாக இறைவனின் ஆற்றலை பறைச்சாற்றி இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கின்றது.
நான் நாத்திக சகோதரர்களை கேட்டுக்கொள்வதெல்லாம் இதுதான், நீங்கள் “செயற்கை செல்” ஆய்வை நன்கு ஆராய்ந்து பாருங்கள். அது கடவுளை மறுக்கின்றதா? அல்லது உங்கள் கொள்கையை அசைத்து பார்க்கின்றதா? என்று உங்கள் பகுத்தறிவை கொண்டு பதிலளிக்க முயலுங்கள்…..
முடிவாக, விஞ்ஞானிகளால் ஒரு உயிரை உருவாக்கவே முடியாதா? என்று நீங்கள் கேட்டால் அதற்கான பதிலை மே மாதம் வெளிவந்த பிரபல Nature இதழில் காணலாம்.

“Frankly, scientists do not know enough about biology to create life,” – Jim Collins, Life after the synthetic cell, Nature, 27th May 2010.

வெளிப்படையாக, ஒரு உயிரை உருவாக்கும் அளவு உயிரியலைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு தெரியாது - Jim Collins, Life after the synthetic cell, Nature, 27th May 2010.

விஷயம் முடிந்தது….முற்றுப்புள்ளி……

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக…ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்…

My Sincere thanks to:
1. Dr.Craig Venter.
2. The Wall Street Journal daily.
3. The Scientist magazine.
4. The New York Times daily.
5. Science magazine.
6. Reuters.
7. JCVI.org
8. Vinavu.
9. Nature Journal.

References:
1. Creation of a Bacterial Cell Controlled by a Chemically Synthesized Genome – Science, Vol. 329. no. 5987, pp. 52 – 56, dated 2nd July 2010.
2. Is Synthia Life From Scratch? No, But A Cell Controlled By A Synthetic Genome May Save Our Energy Future – Science 2.0, dated 20th May 2010.
3. Cell door opens on fantastic future – The Sydney Morning Herald, dated 27th May 2010.
4. How We Created the First Synthetic Cell – J. CRAIG VENTER AND DANIEL GIBSON, The Wall Street Journal, dated 26th May 2010.
5. Artificial life? Synthetic genes ‘boot up’ cell – Reuters, dated 20th May 2010.
6. First Self-Replicating Synthetic Bacterial Cell – J.Craig Venter Institute.
7. What Synthia means to me – Christina Agapakis, Oscillator, Scienceblogs.com, dated 21st May 2010.
8. Is the Synthetic Cell about Life? – Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.
9. Scientists create first synthetic cell – Hindustan Times, dated 22nd May 2010.
10. Synthetic Cell – Man playing God or plagiarising God? – Abu Musa, Khilafah.com, dated 27th May 2010.
11. Is Craig Venter’s Synthetic cell really life? – Uncommon descent.
12. Researchers Say They Created a ‘Synthetic Cell’ – The New york Times, dated 20th May.
13. Mycoplasma capricolum, Mycoplasma mycoides, Microorganism, Genome, Bacterial cell structure – Wikipedia
14. How many genes are there in an average human? – Answers.com
15. Life after the synthetic cell, Nature, 27th May 2010.
16. Vinavu’s Article on Synthetic cell, 8th July 2010.

Source: http://ethirkkural.blogspot.com/

நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு…

Posted September 5, 2010 by arshathalathary
Categories: Uncategorized


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…
டாக்டர் ஜெப்ரி லேங் (Dr.Jeffrey Lang), அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைகழகத்தில் (University of Kansas) கணிதத்துறை பேராசிரியராய் இருப்பவர். 1980 களின் முற்பகுதியில், தன் 28 ஆவது வயதில் இஸ்லாத்தை தழுவியவர். தன் பதினாறு வயதிலிருந்து இஸ்லாத்தை ஏற்கும்வரை நாத்திகராக இருந்தவர்.
நேர்த்தியாக பேசக்கூடியவர். அவருடைய கருத்துகளாகட்டும், அதை அவர் சொல்லக்கூடிய விதமாகட்டும், கேட்பவர்களை சிறிதாவது யோசிக்க வைத்துவிடும்.
தான் நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி அவர் கூறிய கருத்துக்கள் இந்த விதத்தை சார்ந்தவை தான். இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், அவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறியதை பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.
இந்த பதிவு, நடுநிலையோடு சிந்திக்கும் நாத்திக சகோதரர்களுக்கு தங்கள் வளையத்தை தாண்டி வர உதவலாம்...இன்ஷா அல்லாஹ்.
“நான் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவன் (1954). என் தாய் கடவுள் நம்பிக்கை மிக அதிகமுடையவர், மிக இனிமையானவர். என் தந்தையும் கடவுள் நம்பிக்கை உடையவர்தான், ஆனால் துரதிஷ்டவசமாக குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டார். அவருடைய வன்முறைக்கு அதிகம் இலக்கானது என் தாய்தான்.
என் தந்தையால் என் தாய்க்கு ஏற்ப்பட்ட கஷ்டங்கள் மிக மோசமானவை (லேங் அவர்களின் தாய் தன் கணவரின் வன்முறையால் மனநிலை பாதிக்கப்பட்டவர்). எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது, என் ஏழு, எட்டு வயதில் கடவுளிடம் வேண்டிக்கொள்வேன், கடவுளே தன் தந்தையை எங்களிடமிருந்து அழைத்து சென்று விடு என்று.
இந்த சூழ்நிலைகள் தான் என்னை நாத்திகனாக வைத்தன.
  • என் தாய் கடவுளையே தன் துணையாக கொண்டவர். அப்படிப்பட்ட நல்லவருக்கு, தன்னையே நாடியவருக்கு ஏன் இந்த கடவுள் இவ்வளவு கஷ்டங்களை கொடுக்க வேண்டும்?
  • ஏன் ஒருவன் மற்றொருவனை அடக்கியாள வேண்டும்? (Why should strong oppress the poor), அதனை ஏன் இறைவன் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்?
  • உலகில் எங்கு பார்த்தாலும் ஊழல்கள், வன்முறைகள், அநியாயங்கள்…இதையெல்லாம் அடக்காமல் இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?
  • இறைவன் பூரணமானவன் (perfect) என்றால், அவன் உருவாக்கிய இந்த உலகமும் பூரணமாகத்தானே இருக்க வேண்டும்?
  • நல்லதெல்லாம் இறைவனிடமிருந்து வந்ததென்றால், தீமையும் அவனிடமிருந்து தானே வந்திருக்க வேண்டும்?
இப்படி என்னுள் பல கேள்விகள், முடிவில் கடவுளே இல்லையென்று என் பதினாறாம் வயதில் முடிவெடுத்து விட்டேன்.
நன்றாக படித்தேன், நல்ல வேலையிலும் சேர்ந்தேன். நான் சான் பிரான்சிஸ்கோ பல்கலைகழகத்திற்கு வந்த போதுதான் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது. ஒரு அருமையான இஸ்லாமிய குடும்பத்தை சந்தித்தேன். நிறைய முறை அவர்களுடைய வீட்டிற்கு சென்றிருக்கிறேன்.
கடவுள் பற்றிய என்னுடைய கேள்விகளை அவர்களிடம் கேட்பேன். என்னுடைய கேள்விகள் அவர்களை பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தின. பதிலளிக்க மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
பிறகு ஒருமுறை, அப்துல்லா யூசுப் அலியால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில குரானை எனக்கு பரிசளித்தார்கள். “தங்களால் தான் அவர் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை,குரானைப் படிப்பதால் அவருக்கு  பதில்கள் கிடைக்கலாம்” என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.
அந்த குரானை படிக்கவேண்டும் என்று அப்போதைக்கு நான் விரும்பவில்லை. குரானை என் வீட்டிலிருந்த புத்தக மேசையில் வைத்து விட்டு அப்படியே விட்டுவிட்டேன். பல  நாட்கள் அந்த குரான் அங்கேயே இருந்தது.
ஒருநாள் ஓய்வு நேரம். என்னிடம் இருந்த அனைத்து புத்தகங்களையும் படித்தாகி விட்டது, புதிதாக படிப்பதற்கு ஒன்றுமில்லை. அப்போது, மேசையில் இருந்த குரான் கண்ணில் பட்டது.
வீட்டில் போரடிக்கும் போது, ஒரு வார இதழை எடுத்து நாலு பக்கங்களை புரட்டி பின்னர் வைத்துவிடுவோமே, அதுபோல நினைத்துதான் குரானைத் திறந்தேன்.

குர்ஆனில் குறை கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை. என்னைப் பொறுத்தவரை கடவுள் இல்லை, அவ்வளவுதான். இது மற்றுமொரு புத்தகம், அவ்வளவே…
முதல் அத்தியாயத்தை பார்த்தேன், அல் பாத்திஹா என்றிருந்தது. அதில் ஏழு வசனங்கள். நல்ல அழகான, கோர்வையான வசனங்கள். முஸ்லிம்கள் குரானை இறைவேதமென்று சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை அது மனிதரால் எழுத்தப்பட்டது. அதனால், இந்த புத்தகத்தை எழுதியவர் நல்ல இலக்கியவாதி என்று பாராட்டினேன். நல்ல புத்திசாலி என்றும் நினைத்தேன், படிப்பவர்களை துவக்கத்திலேயே நன்றாக கட்டிப்போடுகிறாரே…
அதில் ஒரு வசனம்,

தீர்ப்பு நாளின் அதிபதி — Qur’an 1:3

என்ன தீர்ப்பு நாளா?, இவரே மக்களுக்கு கஷ்டத்தை கொடுப்பாராம், இவரே தீர்ப்பு சொல்லுவாராம் என்று கோபப்பட்டேன்…
முதல் சூரா என்னை மேற்கொண்டு படிக்க தூண்டியது. அடுத்த அத்தியாயம், சூரத்துல் பகரா…
அதன் இரண்டாது வசனம்,

இது திரு வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு நேர்வழி காட்டியாகும். — Qur’an 2:2

என்ன ஒரு அதிகார தோரணை என்று வியந்தேன். நிச்சயமாக இந்த புத்தகத்தை எழுதியவர் அறிவாளிதான். அதுமட்டுமல்லாமல் ஒரு அறிவுசார்ந்த விவாதத்திற்கு தயார்படுத்தின அந்த வசனங்கள்.
படித்துக்கொண்டே வந்தேன். அந்த சூராவின் முப்பதாவது (30) வசனம் ஒரு கனம் என்னை திக்குமுக்காட செய்தது. ஏனென்றால் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்த கேள்வி அங்கு கேட்கப்பட்டிருந்தது.
ஏன் கடவுள் அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? என்ற கேள்விதான் அது…

என்னுடைய கேள்வியை இங்கே வானவர்கள் கேட்கின்றனர்.

இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி ரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னை துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.          — Qur’an 2:30

இந்த ஒரு வசனம் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது.


நான் நாத்திகனாக மாறியதில் இந்த ஒரு கேள்விக்கு நிச்சயம் முக்கிய பங்குண்டு.

வானவர்கள் கேட்பது நியாயம்தானே?. அவர்களோ தவறு செய்யாதவர்கள், இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களையே பூமியில் வாழ வைத்திருக்கலாமே? ஏன் இந்த அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? வானவர்களின் கேள்வி மிக நியானமானது…இதற்கு என்ன பதில் என்று ஆர்வமுடன் மேற்கொண்டு படித்தேன்.
அதே வசனத்தின் இறுதியில்,

அவன் ” நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான் — Qur’an 2:30.

என்ன நீ அறிவாயா? ஏன் பாவம் செய்யக்கூடிய மனிதர்களை படைத்தாய் என்று கேட்டால், அதற்கு அனைத்தையும் நீ அறிவாய் என்பதுதான் பதிலா?
இப்போது குரானுடன் நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டேன் (சிரிக்கிறார்), இந்த குரானை முழுமையாக படித்து என் மற்ற கேள்விகளுக்கும் என்ன பதிலளிக்கிறது என்று பார்த்து விட வேண்டியதுதான் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.
நாலு பக்கங்கள் மட்டுமே திருப்பலாம் என்றிருந்தவனை இந்த குரான் மெம்மேலும் படிக்க தூண்டிக்கொண்டே இருந்தது, என்னுடைய கேள்விகள் ஒவ்வொன்றாய் பதிலளிக்கப்பட்டு கொண்டே வந்தன.
என் அனுபவங்களை முழுமையாக சொல்ல இந்த நேர்க்காணல் நேரம் போதாது. ஆனால் நான் சொல்ல விரும்புவதெல்லாம், குரானை முழுமையாக படித்த பிறகு, தனி பட்டமுறையில் என் கேள்விகளுக்கு விடை கிடைத்தன.

குரானின் வசனங்கள் ஆணித்தரமானவை, ஆழ்ந்த கருத்துக்களை கொண்டவை.

பிறகு, என் இருபத்தி எட்டாவது வயதில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்.
ஒருமுறை என் மகள் கேட்டாள்,
“சரி dad, குரான் உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டது. ஆனால், உங்கள் கேள்விகளுக்கெல்லாம் ஒரு புத்தகம் பதிலளித்து விட்டால் மட்டும் இறைவன் இருக்கிறானென்று ஆகிவிடுமா, அல்லது அந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்துவிட்டதாக தான் நீங்கள் நினைத்துவிட முடியுமா?”
இது என்னிடம் பலரும் கேட்க நினைக்கக்கூடிய அர்த்தமுள்ள கேள்வி.
நான் குரானை மென்மேலும் படிக்க படிக்க, என் கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்க துவங்கின.பதில்கள் கிடைக்க கிடைக்க,நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன்.
நான் எந்த அளவு குரானை மேற்கொண்டு படித்தேனோ அந்த அளவு நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன்.
நான் கடவுள் இல்லை என்பதில் மிக உறுதியாய் இருந்தவன், யார் எப்படி விளக்கினாலும் கடவுள் இல்லை என்பதில் நின்றவன்.


ஆனால் குரான், அதனைப்பற்றி நிறைய கேள்விகளை எழுப்பிவிட்டது.

அதுமட்டுமல்லாமல், குரானைப் படித்து முடித்ததும் என் மனதில் ஏற்ப்பட்ட அமைதி இருக்கிறதே, இதுநாள் வரை என் வாழ்வில் அனுபவிக்காதது. இறைவனின் அன்பு என்பது இதுதானோ? சில நேரங்களில் அந்த உணர்வு பத்து, பதினைந்து நிமிடங்கள் கூட நிலைத்திருக்கும். என் மனம் அமைதியடைந்தது, ஒரு அற்புதமான உணர்ச்சி அது.
என் வாழ்நாளில் கஷ்டங்களை அதிகம் பார்த்தவன், அந்த அற்புத மன அமைதி எனக்கு பதிலளித்துவிட்டது, இறைவன் இருக்கிறானென்று, இது இறைவேதமென்று.
குரானை ஓதும்போது பலமுறை கண்கலங்கியிருக்கிறேன், அன்பு என்றால் என்னவென்று புரியவைத்தது குரான் தான்.

பலரும் என்னிடம் கேட்பார்கள், “இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் உங்கள் வாழ்வில் என்ன திருப்பம் வந்துவிட்டது” என்று.

நான் இப்போது சக மனிதர்களை அதிகம் நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுதான் இஸ்லாம் எனக்கு கற்றுகொடுத்த முதல் பாடம்.

தற்போது மனைவி, மூன்று குழந்தைகள் என்று ஒரு நிறைவான வாழ்வை இறைவன் எனக்கு அளித்திருக்கிறான்.
இஸ்லாத்தை ஏற்ற புதிதில், விடியற்காலை தொழுகைக்கும், மாலை நேர தொழுகைகளுக்கும் பள்ளியில் சென்று தொழுது வருவேன். குரான் ஓதப்படுவதை கேட்பது ஒரு மிக அழகான உணர்வு.
ஒருமுறை ஒருவர் என்னிடம் கேட்டார், “டாக்டர் லேங், உங்களுக்கு அரபி புரிகிறதா?” என்று,
நான் சொன்னேன், “ஒரு குழந்தை தன் தாயை எதிர்க் கொள்கிறதே, அதுபோல் தான்” என்று…
வாழ்வின் அர்த்தங்களை தேடி கொண்டிருப்போருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்று தான். நீங்கள் தேடுவதை தொடருங்கள், ஆனால் நேர்மையாய், திறந்த மனதுடன் தேடுங்கள்.
உங்களை என் மார்க்கத்தை ஏற்க சொல்லி கட்டாயப்படுத்தி நான் என் மார்க்கத்தை விற்க விரும்பவில்லை. முஹம்மது (ஸல்) அவர்களுக்கே அந்த உரிமையை இறைவன் வழங்கவில்லை. எடுத்து சொல்வது மட்டும்தான் எங்கள் கடமை, உங்களை நேர்வழியில் செலுத்துவதெல்லாம் இறைவனின் நாட்டம்.
அதனால் தேடுவதை தொடருங்கள்….”

இது தானே குரானின் பலம். ஒருவர் மிகத் தீவிரமாய் இருக்கக்கூடிய ஒரு கொள்கையை உடைத்தெறிய வைப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், குரான் அதை எளிதாக, நேர்த்தியாக செய்து முடித்துவிட்டது….அல்ஹம்துலில்லாஹ்.

இன்னும் இதுபோன்று எத்தனை உதாரணங்களை பார்க்கப்போகிறோம்….

இறைவனே அறிவான்.

நாத்திகர்களுக்கு முஸ்லிம்களாகிய நாங்கள் விடுப்பதேல்லாம் ஒரே ஒரு வேண்டுகோள்தான். நன்கு சிந்திக்கக்கூடியவர்களாய் இருக்கிறோம், அதனால் தயவு கூர்ந்து சிந்தியுங்கள், உங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்து சிந்தியுங்கள். ஒரு நேர்க்கோட்டை வரையும்போது, அதை அருகில் இருந்து பார்க்கும் போது நேராகத்தான் தெரியும், தூரத்தில் இருந்து பார்த்தால் தான் உண்மை புரியும்.

அதுபோல நீங்கள் உங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்து சிந்தியுங்கள். சொல்வதை சொல்லிவிட்டோம், ஏற்ப்பதும் ஏற்காததும் உங்கள் இஷ்டம்…

டாக்டர் ஜெப்ரி லேங் அவர்களை முதன் முதலில் நான் (வீடியோக்களில்) பார்த்தது, டாக்டர் ஜமால் பதாவி அவர்களுக்கும் கிறித்துவ மிசனரியான அனீஸ் ஷோறோஷ் அவர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தில் தான். அப்போது கேள்வி நேரத்தில் தன் கேள்வியை அனீஸ் ஷோறோஷ் அவர்களிடம் முன்வைத்தார் அவர்.

பிறகு டாக்டர் ஜமால் பதாவி அவர்களுடன் சேர்ந்து விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார் டாக்டர் லேங். தற்போது பல இஸ்லாமிய கருத்தரங்குகளில் பங்கேற்று தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.
இவர் எழுதி வெளிவந்து பலருக்கும் உதவியாய் இருந்த/இருக்கும் நூல்கள்
  • “Losing my religion, A call for Help”,
  • “Struggling to Surrender” மற்றும்
  • “Even Angels Ask:: A Journey to Islam in America”
இவர் இஸ்லாத்திற்கு வந்தது பற்றியான முழுமையான விளக்கம் இவருடைய “Losing my Religion, A call for help” புத்தகத்தின் முதல் அத்தியாயத்திலும், இவருடைய மற்றொரு புத்தகமான “Even Angels Ask” என்பதிலும் இடம் பெற்றுள்ளது.
நான் முன்பே கூறியது போன்று, தன் கருத்துக்களை மிக அழகாக, ஆழமாக வெளிப்படுத்துவதில் வல்லவர் டாக்டர் லேங். அல்ஹம்துலில்லாஹ்.
இவருடைய இந்த புத்தகங்களை படிப்பவர்கள் நிச்சயம் இதை உணர்வார்கள்.
அதிலும் இவருடைய “Even Angels Ask” என்ற புத்தகம், அமெரிக்காவில் இருக்கும் இளைய தலைமுறை முஸ்லிம்களை இலக்காக கொண்டு எழுதப்பட்டது. பலருடைய பாராட்டுதல்களையும் பெற்ற இந்த புத்தகத்தில் இஸ்லாமின் பல்வேறு அங்கங்களை தெளிவாக, ஆழமாக விளக்குகிறார் லேங்.
டாக்டர் லேங்கை போல, நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த மற்றுமொரு பிரபலமான நபர் சகோதரர் நூமன் அலி கான் (Nouman Ali Khan) அவர்கள். அமெரிக்காவின் பய்யினாஹ் கல்வி நிறுவனத்தின் (Bayyinah Institute) தலைவராய் இருக்கிறார். இவருடைய கதையும் சிந்திக்கும் நாத்திகர்களுக்கு அழகிய பாடம்.
For the believers, there is always a bright spot at the end of the tunnel…..

இறைவன் இவர்களுக்கு மெம்மேலும் உடல்நலத்தையும், மனபலத்தையும் தந்தருள்வானாக…ஆமின்.
இறைவன் நமக்கு இஸ்லாத்தை எடுத்துச் செல்கின்ற பாக்கியத்தை என்றென்றும் தந்தருள்வானாக….ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்…
Dr.Jeffrey Lang’s Books can be bought at:
1. Amazondotdom
2. Or by requesting any popular book shop with their ISBN numbers which follows.
a) Losing My Religion, A call for Help.  ISBN: 978-1590080276
b) Struggling to surrender. ISBN: 978-0915957262
c) Even Angels Ask. ISBN: 978-0915957675
My Sincere Thanks to:
1. Br. Eddie
2. Dr.Jeffrey Lang, Associate Professor, University of Kansas, USA.
3. Amazondotcom
References:
1. Dr.Lang’s Interview with Br.Eddie for The Deen Show. thedeenshowdotcom.

Source: http://ethirkkural.blogspot.com/

உயர்ந்தவனான இரட்சகன் உருவமற்றவனா?

Posted August 8, 2010 by arshathalathary
Categories: இஸ்லாம்

முஹம்மட் அர்ஷாத் அல்அதரி

அகில உலகங்களையும், அண்ட சராசரங்களையும் படைத்துப் பரிபாலிக்க கூடிய அருளாளன் அழ்ழாஹ்வை எவ்வாறு நம்ப வேண்டுமென அழ்ழாஹ்வும், அவனது அருமைத் தூதர் (ஸல்) அவர்களும் நமக்கு கற்றுத் தந்தார்களோ அவ்வாறு நம்பாத வரை நமது இறை நம்பிக்கை பரிபூரணமடையாது. அந்த வகையில் அகிலத்தின் இரட்சகன் அழ்ழாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா? என்பதில் நமது சமுதாய மக்களில் ஒரு சாரார் தொடர்ந்தும் தெளிவற்றவர்களாகவே இருந்து வருகின்றனர்.

இவற்றைத் தெளிவுபடுத்த வேண்டிய மார்க்க அறிஞர்களோ ‘ஸுன்னாக்களை சில்லறைகள்’ என சிறுபிள்ளைத்தனமாக விமர்சிப்பதற்கும், சத்திய இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் கூட்டல், குறைத்தல் செய்யாது எடுத்துரைப்பவர்களை சமூக ஒற்றுமைக்கு(?) எதிரானவர்களாக சித்தரிப்பதற்கும் மிம்பர் மேடைகளைப் பயன்படுத்தி பாழ்படுத்துகின்றனர்.

எனவே, சத்திய மார்க்கத்தின் தூய மூலாதாரங்களான அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் ஒளியில் அருளாளன் அழ்ழாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா? என்பது பற்றி நோக்குவோம்.

வல்லமைமிக்கவனின் இருகைகள்

‘எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?’ என்று (இறைவன்) கேட்டான். (அல்குர்ஆன் 38:75)

‘அழ்ழாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது’ என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக, அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான். (அல்குர்ஆன் 05:64)

கண்ணியமிக்கவனின் மகத்துவம் நிறைந்த முகம்

‘இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்’ (அல்குர்ஆன் 55:26,27)

சிரிக்கும் அளவற்ற அருளாளன்

அழ்ழாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகின்றார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றார்கள். இவர் அழ்ழாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்படுகின்றார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவமன்னிப்புக் கோர, அதை ஏற்று அவரை அழ்ழாஹ் மன்னித்து விடுகின்றான். பிறகு, அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகியாகி விடுகின்றார்கள் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)  நூல்: ஸஹீஹுல் புஹாரி-2826)

பேசுகின்ற நிகரற்ற அன்புடையோன்

(முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அழ்ழாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான். (அல்குர்ஆன் 04:164)

செவியுறும் அகிலத்தின் இரட்சகன்

‘தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அழ்ழாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அழ்ழாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அழ்ழாஹ் செவியுறுகிறான். அழ்ழாஹ் செவியுறுபவன் பார்ப்பவன்’ (அல்குர்ஆன் 58:01)

‘இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன், அறிந்தவன்’ என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 03:35)

‘அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ‘எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன், அறிந்தவன்’ (என்றனர்.)’ (அல்குர்ஆன் 02:127)

‘நீங்கள் நம்பிக்கை கொண்டது போல் அவர்களும் நம்பிக்கை கொண்டால் நேர் வழி பெறுவர். புறக்கணிப்பார்களாயின் அவர்கள் எதிரிகளே. அவர்கள் விடயத்தில் அழ்ழாஹ் உமக்குப் போதுமானவன் அவன் செவியுறுபவன், அறிந்தவன்.’ (அல்குர்ஆன் 02:137)

ஒற்றைக் கண்ணன் அல்லன்

….. பிறகு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அழ்ழாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள். நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத் தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உஙகளுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அழ்ழாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுஙகள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-3057, 3337)

திறக்கப்படும் கெண்டைக்கால்

கெண்டைக் கால் திறக்கப்பட்டு ஸஜ்தாச் செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது.  (அல்குர்ஆன் 68:42)

அருளாளனின் அழகிய பாதம்

(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், (வயிறு நிரம்பாத காரணத்தால்) இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று கேட்கும். இறுதியில் அழ்ழாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, போதும்! போதும்! என்று கூறும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-4848)

நரகத்திடம் உனக்கு வயிறு நிரம்பிவிட்டதா? என்று கேட்கப்படும். அது இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று கேட்கும். அப்போது அருள் வளமிக்கவனும், உயர்ந்தோனுமான அழ்ழாஹ் தனது பாதத்தை அதன்மீது வைப்பான். உடனே அது போதும்! போதும்! என்று கூறும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-4849)

மேலுள்ள அருள்மறை வசனங்களும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளும் அகிலத்தின் இரட்சகன் அழ்ழாஹ்வுக்கு தன்னிகரில்லா, தனி உருவம் உண்டு எனப் பறைசாற்றி நிற்கின்றன. மேற்கூறப்பட்ட அழ்ழாஹ்வின் பண்புகளை, படைப்புக்களின் பண்புகளுக்கு நிகராக்கி விடாது, நாமாக உருவம் கற்பிக்காது, வலிந்துரை செய்யாது நம்புதல் வேண்டும்.

உதாரணமாக, பார்வை என்கின்ற பண்பைப் பொறுத்தவரை மனிதப் பார்வையானது பல்வேறு குறைபாடுகளை உள்ளடக்கியது. ஆனால், அகிலத்தின் இரட்சகனின் பார்வையானது குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட தூய்மையான, பரிபூரணமான பார்வையாகும். குறைபாடுள்ள மனிதப் பார்வையினால் மின்சாரத்தையோ, காற்றையோ, ஒளியினால் படைக்கப்பட்ட ஜின்களையோ, பகல் வேளையிலும் வான்வெளியில் பரந்துபட்டு காணப்படும் பல்லாயிரக் கணக்கான நட்சத்திரங்களையோ காண முடியாது. ஆனால், இறைவனின் பார்வையோ இதற்கு முற்றிலும் மாறுபட்டது. இதனைப் போன்று அருளாளன் அழ்ழாஹ்வின் ஒவ்வொரு பண்புகளும் பலவீனங்களுக்குற்பட்ட மனிதப் பண்புகளுக்கு முரணனான தூய்மையானதாகும்.

இதனையே திருமறைக்குர்ஆன் பின்வருமாறு கூறிக்காட்டுகின்றது.

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன், பார்ப்பவன் (அல்குர்ஆன் 42:11)

‘அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்’ (அல்குர்ஆன் 06:103)

‘அழ்ழாஹ் ஒருவன்’ என (முஹம்மதே!) கூறுவீராக! அழ்ழாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:01-04)

மிஃராஜின் போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அழ்ழாஹ்வைப் பார்த்தார்களா?

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது அழ்ழாஹ்வைப் பார்த்ததாகவே இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் நம்பியுள்ளனர். இதன் உண்மை நிலை தொடர்பாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்கள்.

‘நான் (அன்னை) ஆயிஷா (ரழி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) அபூ ஆயிஷா, ‘மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அழ்ழாஹ்வின் மீது மிகப் பெரும் பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்’ என்று கூறினார்கள். நான், ‘அவை எவை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘யார் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அழ்ழாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்’ என்று சொன்னார்கள்.

உடனே சாய்ந்து அமர்ந்து (ஓய்வு எடுத்துக்) கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, ‘இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசரப்படாதீர்கள். வலிவும் மாண்புமிக்க அழ்ழாஹ், ‘அவரை தெளிவான அடிவானத்தில் பார்த்தார்’ (அல்குர்ஆன் 81:23) என்றும், ‘ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்’ (அல்குர்ஆன் 53:13) என்றும் கூறவில்லையா?’ என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள். இந்த சமுதாயத்தாரில் இது தொடர்பாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) ‘அது, (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவர் படைக்கப் பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக்கொண்டிருந்தது. என்று கூறினார்கள்.

மேலும், ஆயிஷா (ரழி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அழ்ழாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள். ‘அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்;. நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 6:103)

அல்லது (பின்வருமாறு) அழ்ழாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? ‘எந்த மனிதருடனும் அழ்ழாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அழ்ழாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.’ (அல்குர்ஆன் 42:51) (தொடர்ந்து) ஆயிஷா (ரழி) அவர்கள் மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-287)

‘நான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அவன் ஒளியாயிற்றே நான் எப்படி பார்க்க முடியும்?’ என்று கேட்டார்கள்.’ (அறிவிப்பவர்: அபூதர்(ரழி), நூல்:ஸஹீஹ் முஸ்லிம்-291)

மேலுள்ள நபிமொழிகள் மூலம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் அழ்ழாஹ்வைப் பார்க்கவில்லை. மாறாக, இவ்வுலகில் பார்க்கவும் முடியாது என்பதை தெளிவுபடுத்துகின்றது.

நபி மூஸா (அலை) அவர்கள் அழ்ழாஹ்வைப் பார்த்தார்களா?

நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது ‘என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்’ எனக் கூறினார். அதற்கு (இறைவன்) ‘என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்’ என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது, ‘நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்’ எனக் கூறினார். (அல்குர்ஆன் 07:143)

மேலுள்ள அருள்மறை வசனத்தில் அழ்ழாஹ் மூஸா (அலை) அவர்களைப் பார்த்து, ‘என்னை நீர் பார்க்கவே முடியாது’  என்று கூறுவதன் மூலம் நபி மூஸா (அலை) அவர்கள் அழ்ழாஹ்வைப் பார்க்கவில்லை என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

மறுமையில் காட்சி தரும் நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி

‘முழு நிலவுள்ள ஓர் இரவில் நாங்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் நிலவைக் கூர்ந்து பார்த்தபடி, அறிந்துகொள்ளுங்கள்! இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல், அல்லது குழப்பமடையாமல் காண்பது போன்று உங்கள் இறைவனையும் நீங்கள் நிச்சயம் காண்பீர்கள்… (அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-573)

‘நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வெரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள் (ஆனால்) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும். (அறிவிப்பவர்: அபூசயீத் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-4919)

‘மக்கள் (அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), அழ்ழாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? என்று வினவினர். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பௌர்ணமி இரவில் கீழே மேகம் சூழாத (வானில்) சந்திரனைக் காண்பதில் நீங்கள் ஐயம் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். மக்கள், இல்லை (ஐயம் கொள்ள மாட்டோம்) அழ்ழாஹ்வின் தூதரே! என்றார்கள். மீண்டும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கீழே மேகம் சூழாத சூரியனைக் காண்பதில் நீஙகள் ஐயம்கொள்வீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கும் மக்கள், இல்லை என்று பதிலளித்தனர். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவ்வாறுதான் உறுதியாக நீங்கள் இறைவனைக் காண்பீர்கள் என்று கூறிவிட்டு (பின்வருமாறும்) கூறினார்கள்:

மறுமை நாளில் மக்கள் அனைவரும் ஒன்று குவிக்கப்படுவார்கள். அப்போது, (உலகத்தில்) யார் எதனை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அதனைப் பின்பற்றிச் செல்லட்டும் என்பான் (இறைவன்). ஆகவே, சிலர் சூரியனைப் பின்பற்றிச் செல்வர். இன்னும் சிலர் சந்திரனைப் பின்பற்றிச் செல்வர். வேறு சிலர் தீய சக்தி(களான ஷைத்தான்கள், சிலைகள், மந்திரவாதிகள் போன்ற வழிகேடர்)களைப் பின்பற்றிச் செல்வர். இறுதியில் (எனது) இந்த சமுதாயம் மட்டும் தங்களிடையே நயவஞ்சகர்கள் இருக்கும் நிலையில் எஞ்சியிருக்கும்.

அப்போது வலிவும் மாண்பும் உடைய இறைவன் (அவர்கள் அறியாத தோற்றத்தில்) அவர்களிடம் வந்து, நான் உங்கள் இறைவன் என்பான். உடனே அவர்கள், எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம், என்று கூறுவார்கள். அப்போது அழ்ழாஹ் (அவர்கள் அறிந்த தோற்றத்தில்) அவர்களிடம் வந்து, நானே உங்கள் இறைவன் என்பான். அப்போது அவர்கள், நீ எங்கள் இறைவன்தான் என்பார்கள். பிறகு அவர்களை இறைவன் அழைப்பான். நரகத்தின் மேற்பரப்பில் பாலம் அமைக்கப்படும். (இறைத்தூதர்கள். தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். நானே அ(ந்தப் பாலத்)தை முதலாவதாகக் கடப்பவன் ஆவேன்.

அன்றைய தினத்தில் இறைத் தூதர்களைத் தவிர வேறுயாரும் பேசமாட்டார்கள். அன்றைய தினத்தில், இறைவா! காப்பாற்று! காப்பாற்று!, என்பதே இறைத் தூதர்களின் பிரார்த்தனையாகும். தொடர்ந்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்நரகத்தி(ன் பாலத்தி)ல் கொக்கிகள் அமைந்திருக்கும். அவை (ஊமத்தங்காயின் முள்வடிவில்) சஅதான் செடியின் முள்ளைப் போன்றிருக்கும் என்று கூறிவிட்டு, சஅதான், செடியின் முள்ளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள். மக்கள், ஆம் (பார்த்திருக்கிறோம்) என்று பதிலளித்தார்கள். தொடர்ந்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் சஅதான் செடியின் முள்ளைப் போன்றிருந்தாலும் அதன் பருமனை அழ்ழாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அப்போது அந்த கொக்கி மக்களை அவர்களின் (தீய) செயல்களுக்கேற்ப பற்றிப் பிடிக்கும். அவர்களிடம் தம் (தீய) செயல்களை முன்னிட்டு பேரழிவுக்கு உள்ளாபவர்களும் உண்டு. (அந்தப் பாலத்தில்) தட்டுத்தடுமாறிய பின் தப்புபவர்களும் உண்டு.

இறுதியாக இறைவன் நரகத்திற்குரியவர்களில் தான் நாடிய சிலர் மீது கருனை காட்ட நினைக்கும்போது வானவர்களிடம், அழ்ழாஹ்வை வணங்கிக்கொண்டிருந்தவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு கட்டளையிடுவான். அவ்வாறே வானவர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள். சஜ்தாச் செய்த அடையாளங்களை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள். சஜ்தா செய்ததனால் (ஏற்பட்ட) அடையாளங்களைப் புசிக்கக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துவிட்டான். ஆகவே (அழ்ழாஹ்வை வணங்கியவர்கள்) நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். சஜ்தா செய்த(தால் ஏற்பட்ட) வடுக்களைத் தவிர ஆதமின் மைந்த(னான மனித)ர்களுடைய முழு உடம்பையும் நரகம் புசித்துவிடும்.

இந்த நிலையில் அவர்கள் கருகிப் போனநிலையில் நரகத்திலிருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் மீது (மாஉல் ஹயாத் எனும்) ஜீவநீரை ஊற்றப்படும். உடனே அவர்கள் வெள்ளச் சேற்றில் முளைத்துவிடும் தானிய வித்தைப் போன்று செழிப்புடன் எழுவார்கள். பின்னர் அழ்ழாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்து முடிப்பான்.

இறுதியாக ஒரே ஒரு மனிதன் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே எஞ்சி நிற்பான். அவன்தான் நரகவாசிகளில் கடைசியாக சொர்க்கத்திற்கு செல்பவன். அவன் நரகத்தை முன்னோக்கியபடி, இறைவா! நரகத்தை விட்டும் என் முகத்தை திருப்புவாயாக! அதன் நச்சுக் காற்று என்னை அழித்துவிட்டது. அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது என்று கூறுவான். அப்போது அழ்ழாஹ், (உனது கோரிக்கைப்படி) இவ்வாறு உனக்கு செய்து கொடுக்கப்பட்டால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா? என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! (வேறெதையும் கேட்கமாட்டேன்) என்பான்.

அந்தமனிதன் அழ்ழாஹ்விடம் தான் நாடிய உறுதிமொழியையும் வாக்குறுதிகளையும் வழங்குவான். அழ்ழாஹ் நரகத்தைவிட்டும் அம்மனிதனுடைய முகத்தை திருப்பிவிடுவான். சொர்க்கத்தை நோக்கி அவனுடைய முகத்தை திருப்பியதும் அம்மனிதன் சொர்க்கத்தின் செழிப்பைப் பார்த்துக்கொண்டு அழ்ழாஹ் நாடிய அளவு நேரம் அமைதியாக இருப்பான். பிறகு, இறைவா! என்னைச் சொர்க்கத்தின் வாசலருகே செல்லவைப்பாயாக! என்று கேட்பான். அதற்கு இறைவன், முன்பு கேட்டதைத் தவிர வேறெதையும் நீ என்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறி உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், இறைவா! என்னை உன் படைப்புக்களிலேயே நற்கதியற்றவனாய் ஆகிவிடக்கூடாது!’ என்று கூறுவான். அதற்கு இறைவன் “(நீ கேட்டது) உனக்கு வழங்கப்பட்டால் வேறு எதையும் நீ கேட்காமலிருப்பாயா” என்பான். அம்மனிதன் “இல்லை உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதல்லாத வேறெதையும் நான் கேட்கமாட்டேன்” என்பான்.

இதுகுறித்து இறைவனிடம் உறுதிமொழியும் வாக்குறுதியும் அந்த மனிதன் அளிப்பான். உடனே இறைவன் அந்த மனிதனை சொர்க்கத்தின் வாசல் வரை செல்லவைப்பான். அதன் வாசலை அவன் அடைந்ததும் அதன் ரம்மியத்தைக் காண்பான் அதிலுள்ள செழுமையையும் (மனதிற்கு) மகிழ்ச்சி (தரத் தக்கவை)யையும் காண்பான். பிறகு அழ்ழாஹ் நாடிய அளவுக்கு அவன் அமைதியாக இருப்பான். அதன்பின் அந்த மனிதன் “இறைவா! என்னை சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிப்பாயாக!” என்று கூறுவான். அதற்கு உன்னதனாகிய அழ்ழாஹ் “ஆதமின் மகனே! உனக்கு என்ன கேடு! ஏன் வாக்கைக் காப்பாற்றத் தவறிவிட்டாய் முன்பு வழஙகப்பட்டதைத் தவிர வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே!” என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், இறைவா! உன் படைப்புகளிலேயே என்னை நிற்கதியற்றவனாய் ஆக்கிவிடாதே! என்பான். இம்மனிதனின் நிலை இறைவன் கண்டு சிரிப்பான். பிறகு அவனுக்கு சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதியளித்துவிடுவான்.

அதன் பின் இறைவன் அம்மனிதனிடம், நீ ஆசைப்படுவதைக் கேள்! என்று கூறுவான். அம்மனிதனும் தான் ஆசைப்படுவதை கூறுவான். இறுதியில் அவன் தன் ஆசைகள் யாவும் முற்றுப்பெறும் போது (அவனிடம்) இறைவன், இதைவிட அதிகத்தை நீ ஆசைப்படு! என்று சொல்லிக் கொடுப்பான். இறுதியில் ஆசைகள் முற்றுப் பெற்றுவிடும் போது உன்னதமானவனாகிய அழ்ழாஹ், உனக்கு இதுவும் உண்டு. இதைப்போன்று இன்னொரு மடங்கும் உண்டு என்பான்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-806)

இறுதியாக, அருள்மறை வசனங்களும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளும் போதிக்கும் அடிப்படையில் அகிலத்தின் இரட்சகன் அழ்ழாஹ்வுக்கு தன்னிகரில்லா, தனி உருவம் உண்டு எனவும், அகிலத்தின் இரட்சகனை இவ்வுலகில் ஒருபோதும் பார்க்கவே முடியாது எனவும், நம்புவதுடன் அழ்ழாஹ்வின் பண்புகளை, படைப்புக்களின் பண்புகளுக்கு நிகராக்கி விடாது, நாமாக உருவம் கற்பிக்காது, வலிந்துரை செய்யாது நம்புதல் வேண்டும்.


இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?

Posted May 1, 2010 by arshathalathary
Categories: இஸ்லாம், மறுப்புரைகள்

முஸ்லிமல்லாதவர்களை மதமாற்றம் செய்வதற்காகவும் மறுப்பவர்களைக் கொன்று குவிப்பதற்காகவும் பிறநாட்டில் உள்ள அழகு மங்கையரைக் கவர்ந்து செல்வதற்காகவும் அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் முஸ்லிம்கள் படையெடுத்து உள்ளனர் என்றும் இஸ்லாம், பிறமதங்களைச் சகித்துக் கொள்ளாத மார்க்கம் என்பதற்கும் அருவாள் முனையில் பரப்பப்பட்ட மார்க்கம் என்பதற்கும் இந்தப் போர்களும் படையெடுப்புகளும் சான்றுகளாக உள்ளன என்பது முஸ்லிமல்லாதவர்கள் அடிக்கடி எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

முகலாய மன்னர்களும், வேறு பல முஸ்லிம் மன்னர்களும் இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஏராளமான போர்களை நிகழ்த்தியுள்ளதையும் தங்கள் வாதத்துக்குச் சான்றாக அவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பல போர்களைச் சந்தித்ததும் உண்மை.

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததும் உண்மை.

ஆயினும் இவற்றை ஆதாரமாகக் கொண்டு எடுத்து வைக்கப்படும் வாதங்கள் தாம் உண்மைக்கு அப்பாற்பட்டவை.

இவர்கள் எடுத்துக் காட்டுகின்ற இரண்டு ஆதாரங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவர்கள் கூறுகின்ற காரணங்களுக்காகப் போர் செய்திருந்தால் அதைக் காரணமாகக் கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்வதில் நியாயம் உள்ளது. அவர்களைத் தவிர ஏனைய முஸ்லிம் மன்னர்கள் எந்தக் காரணத்துக்காகப் போர் செய்திருந்தாலும் அதற்காக இஸ்லாத்தை விமர்சிப்பது அறிவுடைமையாகாது.

ஆகவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி மட்டும் விளக்குவதுதான் நமது பொறுப்பாகும். ஆயினும் நாம் வாழக்கூடிய நாட்டில் முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்து வந்தது பற்றியே பிரதானமாகப் பேசப்படுவதால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாவிட்டாலும் அதுபற்றி சுருக்கமாக ஆராய்ந்து விட்டு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி ஆராய்வோம்.

அன்றைய காலத்தில் போர்கள் சர்வ சாதாரணமாக நடந்து வந்தன. மன்னர்களின் சுயநலத்திற்காகப் போர்ப் பிரகடனம் செய்யப்பட்டதுண்டு.

அன்றைக்கு தனித்தனி நாடுகளாக விளங்கிய சேர, சோழ, பாண்டிய நாட்டு மன்னர்கள் ஒருவருடன் ஒருவர் போர் புரிந்த வரலாறு உண்டு. அன்றைக்குத் தனி நாடாக விளங்கிய வடநாட்டின் மீது பாண்டிய மன்னன் படை நடத்திச் சென்று வெற்றி பெற்ற வரலாறும் உண்டு. இந்த நாட்டைச் சுரண்டுவதற்காக ஆரியர்கள் படையெடுத்து வந்த வரலாறும் உண்டு. மத நம்பிக்கையில்லாத திராவிடர்கள் மீது ஆரியர்கள் இந்து மதத்தை திணித்த வரலாறும் உண்டு. பலநாடுகள் மீது படையெடுத்துச் சென்ற அலெக்சாண்டரின் வீர(?) வரலாறும் உண்டு. வெள்ளையர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட சமீபத்திய வரலாறும் உண்டு. தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வதற்காகவும், பகைமை கொண்டிருந்த அண்டை நாட்டு மன்னனுக்குப் பாடம் புகட்டுவதற்காகவும், வளங்களை வாரிச் செல்வதற்காகவும் எத்தனையோ படையெடுப்புகளை உலகம் சந்தித்துள்ளது அது போன்ற ஒரு படையெடுப்பே முகலாயர்களின் படையெடுப்பும்.

முஸ்லிம் படையெடுப்புகள் :

வெண்ணி, வாகை, புள்ளலுர் பரியலம், மணி மங்கலம், நெய்வேலி, பெண்ணாடகம், விழிஞம், தௌ;ளாறு, திருப்புறம்பியம், வெள்ளூர், தக்கோலம், நொப்பம், கூடல், கலிங்கம், ஈழம், சுமந்திரம், மகேந்திரமங்கலம், மற்றும் கண்ணனூர் ஆகிய போர்கள் தமிழக அளவில் இந்து மன்னர்கள் நிகழ்த்திய போர்களில் சில. இன்னும் ஏராளமான போர்கள் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் நிகழ்ந்துள்ளன.

இந்தப் போர்களுக்கெல்லாம் எவை காரணமாக இருந்தனவோ அவைதாம் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புக்கும் காரணங்களாக இருந்தன. நிச்சயமாக மதத்தைப் பரப்புவதோ மதமாற்றம் செய்வதோ இதற்குக் காரணங்களாக இருந்ததில்லை.

முஸ்லிம் மன்னர்கள் 800 ஆண்டுகாலம் இந்த நாட்டை ஆட்சி புரிந்தனர். இந்து மதத்தை அவர்கள் அழிக்க நினைத்திருந்தால் அதற்கு 800 ஆண்டுகள் மிகவும் அதிகமாகும். அதற்கு குறைவான ஆண்டுகளிலேயே அழித்திருக்க முடியும்.

அவர்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயங்கள் இதற்கு இன்றளவும் சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றன.

இந்துக் கோவில்களைக் கட்டிய முஸ்லிம் மன்னர்களும் அவற்றுக்கு மானியம் வழங்கிய முஸ்லிம் மன்னர்களும் இருந்துள்ளனர்.

இஸ்லாம் தடை செய்துள்ள ஆடல் பாடல்களை அவர்கள் தடை செய்ததில்லை. வட்டியை அவர்கள் ஒழித்ததில்லை. குற்றங்களுக்கு இஸ்லாம் கூறக்கூடிய தண்டனைகளை அவர்கள் சட்டமாக்கவில்லை. அரசுப் பதவிகளில் முஸ்லிமல்லாதவர்களை பெருமவு நியமிருத்திருந்தார்கள். முஸ்லிமல்லாத பெண்களை மணந்தார்கள்.

இன்னும் இஸ்லாத்தின் ஆயிரமாயிரம் கட்டளைகளைப் புறக்கணித்தவர்கள் இஸ்லாத்தை இந்த நாட்டில் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்களா? நடுநிலையாக யோசிக்க வேண்டும்.

இஸ்லாத்தை விட்டும் வெகுதூரம் விலகியிருந்த முஸ்லிம் மன்னர்கள் வாளால் மிரட்டி இந்திய மக்களை முஸ்லிம்களாக்கினார்கள் என்று நியாயவுணர்வுடைய எவருமே கூறத்துணிய மாட்டார்.

நவீன ஆயுதங்களுடன் இந்த நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளையர்களை 200 ஆண்டுகளில் நாட்டு மக்கள் விரட்டியடித்தனர். அதற்கு முன்பே அவர்களை வெளியேற்ற ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன.

ஆனால் முஸ்லிம் மன்னர்கள் கத்தி, அரிவாள், வாள், கேடயம் போன்ற சாதாரண ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் ஆள்பலமே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்ற காலத்தில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர். முஸ்லிம் மன்னர்கள் மதமாற்றம் செய்வதில் ஈடுபட்டிருந்தால் வாள் முனையில் மிரட்டியிருந்தால் ஒரு சதவிதத்துக்கும் குறைவாக இருந்த அவர்களை இந்த நாட்டு மக்கள் வெறும் கையாலேயே அடித்து விரட்டியிருப்பார்கள். முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது அவர்கள் மக்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை என்பதற்குச் சான்றாக உள்ளது.

ஆயினும், ஒரு விஷயத்தை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். மோசமான நடத்தையுடைய முஸ்லிம் மன்னர்களின் மோசமான ஆட்சி, அதற்கு முன் நடந்த மன்னர்களின் ஆட்சிகளை விட சிறப்பானதாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், மிகச் சிறு படையுடன் வந்தவர்களை இந்திய மக்கள் பல நூற்றாண்டுகள் வரை சகித்துக் கொண்டிருக்க முடியாது.

இந்துக்களின் போர்களுக்கெல்லாம் இந்துமதம் தான் தூண்டிவிட்டது என எப்படி கூறமுடியாதோ அது போலவே முஸ்லிம்கள் நிகழ்த்திய போர்களை எல்லாம் இஸ்லாமே தூண்டிவிட்டது எனக் கூறமுடியாது.

சுருக்கச் சொல்வதென்றால் வாள்முனையில் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. பரப்பமுடியும் என்றாலும் இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் நிச்சயமாக யாரையும் வற்புறுத்தி மதமாற்றம் செய்ததில்லை. அப்படியே செய்திருந்தார்கள் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை. ஏனெனில் திருக்குர்ஆனில் கூறப்பட்டவையும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டிய வழியும் தான் இஸ்லாம். முஸ்லிம் பெயர் தாங்கிகளின் தவறான செயல்களுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது.

இம் மார்க்கத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாக உள்ளது. (அல்குர்ஆன் 2:256)

எனவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஏராளமான யுத்தங்களில் ஈடுபட்டுள்ளார்களே! அவர்களும் நாடு பிடித்துள்ளார்களே! இதற்கு என்ன கூறுகிறீர்கள்? என்ற அடிப்படையான விஷயத்துக்கு வருவோம்.

அது பற்றியே நாம் விரிவாக விளக்க வேண்டியுள்ளது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சந்தித்த போர்களங்கள் எந்த அடிப்படையிலானவை? என்பதை விரிவாகக் காண்போம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் போர்கள் நாடு பிடிப்பதற்காகவா?

தனது நாட்டை விரிவுபடுத்திக் கொள்வதற்காக நபி(ஸல்) அவர்கள் போர் நடத்தினார்களா? நிச்சயமாக இல்லை. இதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும், அவர்களின் முன்னூறுக்கும் சற்று அதிகமான தோழர்களும், மக்காவின் எதிரிகளுடன் ‘பத்ர்’ எனுமிடத்தில் போர் புரிந்தனர். ஆயிரம் பேர் கொண்ட எதிரிகளின் படை இந்த முதல் போரிலேயே படுதோல்வி கண்டு ஒடலாயிற்று. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர். அனைவரும் அறிந்து வைத்துள்ள வரலாற்று நிகழ்ச்சி இது.

நாடு பிடிப்பது அவர்களின் நோக்கம் என்றால் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? தோல்வியுற்று ஓடுபவர்களை விரட்டிச் சென்றிருக்க வேண்டும். விரட்டிச் சென்று அவர்களைக் கொன்று குவித்திருக்க வேண்டும். மேலும் முன்னேறி எதிரிகளின் தலை நகரம் மக்கா வரை சென்று வெறியாட்டம் போட்டிருக்க வேண்டும். அந்த ஒரு போரிலேயே மக்கா அவர்களின் கைவசமாக ஆகி விடக் கூடிய அருமையான சூழ்நிலை வெற்றியடைந்த எந்தத் தலைவரும் நடந்து கொள்ளும் முறையும் அதுதான்.

‘பத்ர்’ எல்லையத் தாண்டி அவர்கள் ஒரடியும் எடுத்து வைக்க வில்லை என்றால் நாடு பிடிப்பது அவர்களின் நோக்கமில்லை என்பதற்கு இதை விடவேறு என்ன சான்று வேண்டும்?

‘உம்ரா’ எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான தம் தோழர்களுடன் புறப்பட்டு மக்காவுக்குச் சென்றனர். ஹூதைபியா எனும் இடம் வரை வந்து விட்டனர். மக்காவுக்குள் அனுமதிக்க எதிரிகள் மறுத்தனர். நபியவர்களுக்கு ஆத்திரமூட்டும் அளவுக்கு பிடிவாதம் பிடித்தனர். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நாடு பிடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அரை மணி நேரத்திற்குள் மக்கா நகரம் அவர்களின் வசமாகி இருக்கும். ஆனாலும் நபியவர்கள் பல விஷயங்களில் விட்டுக் கொடுத்து அவர்களுடன் சமாதான உடன் படிக்கை செய்து கொண்டனர். மக்காவுக்குச் சென்று உம்ராவை நிறைவேற்றாமலேயே திரும்பி வந்தனர். இதுவும் அனைவராலும் அறியப்பட்ட வரலாறுதான். நாடு பிடிக்கும் எண்ணம் நபியவர்களுக்கு இருந்ததில்லை என்பதற்கு இவையே போதுமாகும்.

கொள்ளையிடுவதற்காகவா! எதிரி நாட்டு வளங்களைக் கொள்ளையிடுவதற்காகப் போர் நடத்தினார்களா என்றால் நிச்சயமாக இல்லை. ‘தாயிப்’ நீங்கலாக உள்ள மற்ற பகுதிகள் எதுவும் மதீனாவை விட வளமானதாக இருந்ததில்லை. போர் நோக்கமாக அது இருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் அவர்களுக்குத் தெளிவான கட்டளையும் பிறப்பித்துள்ளது.

விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்டால் தீர விசாரித்துக் கொள்ளுங்கள்! உங்களை நோக்கி ஸலாமை-(சமாதானத்தை) கூறியவரிடம் (அவரிடம் உள்ள) இவ்வுலக சாதனங்களை (கைப்பற்ற)நாடி ‘நீர் விசுவாசி அல்ல’ எனக் கூறாதீர்கள் அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. (அல்குர்ஆன் 4:94)

கொள்ளையிடுவது அவர்களின் குறிக்கோளாக இருக்கலாகாது என்று குர்ஆன் தெளிவான கட்டளையிட்டிருக்கும் போது அவர்கள் நடத்திய போருக்கு இது காரணமாக இருக்க முடியாது.

பழிவாங்குவதற்கா? எதிரிகள் ஏற்கனவே செய்த கொடுமைகளுக்குப் பழிவாங்குவதற்காக போர்க்களங்களைச் சந்தித்தார்களா? நிச்சயமாக அதுவுமில்லை.

மக்காவில் வெற்றிவீராக நபியவர்கள் நுழைந்த நேரத்தில் பழி வாங்குவதற்குரிய அத்தனை காரணங்களும் இருந்தன. சக்தியும் இருந்தது. நபிகள் நாயகத்தைக் கல்லால் அடித்தவர்கள் அங்கே நின்றார்கள். அவர்களைக் கொலைச் செய்யத் திட்டம் தீட்டியவர்கள், அவர்களை நாடு துறத்தக் காரணமானவர்கள், தோழர்களை கொன்றவர்கள், இஸ்லாத்தை ஏற்றதற்காக சுமையா என்ற பெண்ணின் மர்ம உறுப்பில் ஈட்டியை நுழைத்து கொன்றவர்கள், மதீனாவுக்குச் சென்ற பின்பும் பல முறை அவர்களுடன் போர் புரிந்தவர்கள், இப்படி பலரும் அங்கே நின்றார்கள். தங்களின் கதி என்னவாகுமோ என்று பயந்து போய் நின்றார்கள்.

அனைவருக்குமே பொது மன்னிப்பு வழங்கியது தான் அவர்கள் வழங்கிய தண்டனை. பழி வாங்குவதற்குரிய அத்தனை நியாயங்களும் அவர்கள் பக்கம் இருந்தன. ஆனாலும் எவரையும் பழிவாங்கவில்லை. இந்த ஒரு நிகழ்ச்சியே அவர்களின் உயர் பண்புக்குப் போதுமான சான்றாகும்.

ஒரு கூட்டத்தினர் மீது உங்களுக்குள்ள வெறுப்பு நீதியுடன் நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீங்கள் நீதியுடன் நடங்கள். அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)

என்று இறைவன் கட்டளையிட்டிருக்கும் போது எப்படி அவர்கள் அதை மீறியிருப்பார்கள்?

ஒரு போர்க்களத்தில் பெண்ணொருத்தி கொல்லப்பட்டுத் கிடப்பதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அதை ஆட்சேபித்து பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) – நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

போர்க்களத்தில் வரம்புமீறாதீர்கள்! சிறுவர்களையும், மத குருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: புரைதா(ரலி) நூல்கள்: முஸ்லிம்)

போர்க்களத்தில் எந்த தர்மமும் பார்க்க வேண்டியதில்லை என்பது உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தும் இங்கேயும் புது நெறியைக் கற்றுத் தரும் அளவுக்கு அவர்களின் உள்ளம் விசாலமானது. எனவே பழி வாங்குதல் என்பது அவர்களிடம் கற்பனை கூட செய்ய முடியாதது.

மத மாற்றம் செய்வதற்காகவா? மற்றவர்களை மத மாற்றம் செய்வதற்காக போர் நடத்தினார்களா என்றால் நிச்சயமாக அதுவும் இல்லை.

இம் மார்க்கத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாக உள்ளது. (அல்குர்ஆன் 2:256)

அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் கட்டாயமாக மதமாற்றம் செய்வதை தடை செய்கின்றது. வெற்றியடைந்த பின் அம்மக்களிடம் இஸ்லாத்தை எடுத்தச் சொல்வார்கள். விரும்பியவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். விரும்பாதவர்கள் ஜிஸ்யா வரி செலுத்திவிட்டு அவர்களின் மதத்திலேயே நீடிப்பார்கள். (ஜிஸ்யாவரி என்றால் என்ன? அது சரியா என்பது பற்றி பின்னர் வரும் கேள்விகளில் வர உள்ளது)

இணை வைப்பவர்களில்(அதாவது மாற்று மதத்தவர்களில்) உள்ள எவரேனும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் இறைவனின் வார்த்தையை அவர் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் கொடுப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்த்து விடுவீராக! ஏனெனில் அவர்கள் அறியாத மக்களாக உள்ளனர். (அல்குர்ஆன் 9:6)

மாற்று மதத்தவர்களிடம் நபியவர்களின் நடைமுறை எத்தகையதாக இருந்தது என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.

எதற்காகப் போர் செய்தனர்?

மேற்கண்ட காரணங்களுக்காக போர் நடக்கவில்லை என்றால் அவர்கள் போர் நடத்தியதாகச் சொல்லப்படுவது பொய்யா? அதற்கு வேறு காரணங்கள் ஏதும் உள்ளனவா? என்ற கேள்விகளுக்கு வருவோம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எந்தப் போரிலும் பங்கெடுத்ததில்லை என்று நாம் சொல்லவில்லை. சன்னியாசியாக வாழ்ந்தார்கள் என்று நாம் சொல்லவில்லை.

தாங்களே களத்தில் இறங்கியுள்ளார்கள் மிகச் சிறந்த படைத் தளபதியாக இருந்தார்கள். எத்தனை ஒட்டகங்களை எதிரிகள் அறுத்துள்ளனர் (உணவுக்காக) என்பதை விசாரித்து எதிரிகளின் எண்ணிக்கையை சரியாக மதிப்பிடக் கூடிய அளவுக்கு திறமை மிக்க தலைவராக இருந்தார்கள். அவர்கள் படை நடத்திச் சென்றதற்கு கீழ்கண்ட காரணங்கள் இருந்தன. இது சரியா தவறா என்று நடுநிலையுடன் சிந்தியுங்கள்.

முதலாவது காரணம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் சொந்த ஊரிலிருந்து அநியாயமாக விரட்டப்பட்டு மதீனா வந்து அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் போது மக்காவை விட்டு அவர்களை விரட்டியவர்கள், அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் கூண்டோடு கறுவறுப்பதற்காக படையெடுத்து வந்தனர். அவர்களை எதிர்த்துப் போரிடவில்லையானால் மொத்த சமுதாயமும் அழிந்து விடக்கூடிய அபாயம் ஏற்பட்ட போது எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக நபி(ஸல்) அவர்கள் போர்களை சந்தித்துள்ளனர். எல்லாப் போர்களுக்கும் இதுவே காரணமில்லை என்றாலும் சில போர்கள் இந்த ஒரு காரணத்துக்காகவே நடத்தப்பட்டன.

நியாய உணர்வுடைய எவரும் இதில் குறை காணமாட்டார்கள். இந்தக் காரணத்துக்காக நடத்தப்பட்ட போர்களில் இரண்டை மட்டும் இங்கே நாம் விளக்குவோம்.

‘உஹதுப் போர்’ என்பது பிரசித்தி பெற்ற போராகும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தலைமையேற்று நடத்திய இந்தப் போர் ‘உஹத்’ எனும் மலை அடிவாரத்தில் நடந்ததால் ‘உஹதுப் போர்’ என்று இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றது.

போர் நடந்த இடம் மதீனாவுக்கு ஐந்து மைல் தொலைவில் உள்ளது. மக்காவிலிருந்து ஏறத்தாழ முன்னூறு மைல் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. அதாவது மக்காவாசிகளான எதிரிகள் சுமார் முன்னூறு மைல்களைக் கடந்து மதீனாவின் எல்லை வரை வந்துவிட்டனர். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வெறும் ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்தித்தனர்.

முன்னூறு மைல்களைக் கடந்து வந்தவர்கள் வம்புச் சண்டைக்கு வந்தவர்களா? ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்திக்க நபியவர்கள் வம்புச் சண்டைக்குச் சென்றார்களா? முன்னூறு மைல்களைக் கடந்து வருவதென்றால் அன்றைய காலத்தில் அதற்கு எவ்வளவு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்! எவ்வளவு நாட்களுக்கு முன் புறப்பட்டிருக்க வேண்டும் இந்த நிலையிலும் ஆட்சித் தலைவராக உள்ள நபியவர்கள் தமது குடிமக்களின் நலனைப் பேண வேண்டிய நபியவர்கள் இதைக் கண்டு கொள்ளாமலிருக்க வேண்டும் என்று எவருமே எதிர்பார்க்க முடியாது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த இரண்டாவது போரின் நிலை. இதுவென்றால், அவர்கள் சந்தித்த முதல் போரின் நிலையும் இத்தகையது தான்.

‘பத்ருப் போர்’ என்று அறியப்படும் இப்போர் பத்ரு எனும் பள்ளத்தாக்கில் நடைபெற்றது. இந்த இடம் மதீனாவுக்கு எண்பது மைல் தொலைவிலும், மக்காவுக்கு இருநூறு மைல்களை விட அதிக தூரத்திலும் அமைந்துள்ளது.

வலியப்போர் செய்ய நபியவர்கள் சென்றிருந்தால் மக்காவுக்கு அருகில் உள்ள இடத்தில் போர் நடந்திருக்க வேண்டும். மதீனாவுக்கு அருகிலேயே இருப்போர் நடந்துள்ளதால் இதுவும் தற்காப்புப் போர் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறியலாம்.

தங்களின் ஒப்பந்தங்களை முறித்து விட்டவர்களுடன் நீங்கள் போரிட வேண்டாமா? (இறைத்) தூதரை வெளியேற்றத் திட்டமிட்டவர்களுடன் (நீங்கள் போரிட வேண்டாமா?) மேலும் அவர்களே உங்களிடம் முதலில் ஆரம்பித்துள்ள நிலையில் (நீங்கள் போரிட வேண்டாமா?) (அல்குர்ஆன் 9:13)

போரை முதலில் துவக்கியவர்களே அவர்கள்தான் என்று திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது. சில போர்கள் இந்தக் காரணத்துக்காகவே நடத்தப்பட்டவை.

இரண்டாவது காரணம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற பின் அங்குள்ள மக்களின் பேராதரவுடன் ஒரு ஆட்சியை நிறுவினார்கள். மதீனாவும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் அந்த நாட்டின் எல்லைகளாக இருந்தன. சிறியதோ, பெரியதோ ஒரு நாடு என்று ஆகிவிட்டால் அதற்கென இறையான்மை உண்டு. அதை மற்ற நாடுகள் பேணி நடக்க வேண்டும். ஒரு நாட்டுக்குள் அன்னிய நாட்டவர் பிரவேசிக்க வேண்டுமானால் அந்த நாட்டின் முன் அனுமதி பெற வேண்டும். இது இன்றைக்கு மட்டுமல்ல. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தது.

இதனால்தான் மக்காவுக்கு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றச் சென்ற நபியவர்கள் மக்காவாசிகளின் ஆட்சேபணைக்கிணங்கத் திரும்பி வந்தார்கள்.

ஆனால் மக்காவாசிகள் மதீனாவின் இறையாண்மையில் அவ்வப்போது குறிக்கிட்டுக் கொண்டிருந்தனர். பல ஊர்களுக்கு வியாபாரம் செய்யச் சென்று விட்டு மக்கா வியாபாரிகள் திரும்பும் போது மதீனாவுக்குள் புகுந்தோ அல்லது மதீனா எல்லைக்குள் புகுந்தோ போய் வந்து கொண்டிருந்தார்கள். இப்படி அனுமதியின்றி அத்து மீறுபவர்களை வழி மறிக்கவும் அவர்களின் பொருட்களை பறிமுதல் செய்யவும் நபியவர்கள் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டார்கள். இதனால் இவ்வப்போது சிறுசிறு சண்டைகள் நடந்துள்ளன. பத்ருப் போர்க்களத்துக்குச் சற்று முன்னால் அபூசுப்யானின் வணிகக் கூட்டம் வழி மறிக்கப்பட்டதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எந்த ஆட்சித் தலைவருக்கும் கடமையான ஒரு காரியமாகவே இதைக் கொள்ள வேண்டும். தம் விஷயத்தில் எதிர்மறையான நிலைய மேற்கொள்ளக்கூடியவர்களிடம், இத்தகைய அத்து மீறல்களை எந்த ஆட்சியாளரும் தத்தமது நாடுகளில் அனுமதிப்பார்களா என்பதை மாற்றார்கள் சிந்திக்க வேண்டும்.

மூன்றாவது காரணம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் தாயகம் மக்காவாகும். அவர்களுடன் தியாகப் பயணம் மேற்கொண்ட அனைவரின் தாயகமும் மக்காவாகும். சொந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப் பட்டவர்கள் என்று இவர்களைக் கூறலாம்.

நபிகள் நாயகத்தை எதிர்த்த மக்காவாசிகளுக்கு மக்காவில் எந்த அளவு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு நபிகள் நாயகத்துக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் உரிமை உள்ளது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்த பின் அவர்களின் சிறப்பையும், அவர்களின் உண்மையான கொள்கைகளையும் உணர்ந்து மக்காவாசிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்தனர். ஏற்றுக் கொண்டவர்களெல்லாம் மக்காவின் தலைவர்களது கொடுமைக்கு அஞ்சி மக்காவை விட்டு வெளியேறி மதீனாவுக்குச் சென்றனர்.

பெரும்பாலான மக்காவாசிகள் இவ்வாறு வெளியேற்றப்பட்டனர். இழந்ததை (சொந்த நாட்டை) மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் நபியவர்கள் மக்காவை இரத்தம் சிந்தாமலேயே வெற்றிக் கொண்டனர்.

தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக போரிடுபவர்களுக்கு(அதற்கு) அனுமதியளிக்கப்படுகின்றது. மேலும் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய சக்தி பெற்றவனாவான். அவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து ‘எங்கள் இறைவன் அல்லாஹ்’ என்று கூறியதற்காக அநியாயமாக வெறியேற்றப்பட்டனர்.

தங்கள் தாயகத்தை மீட்டிதற்காகப் போராடும் பாலஸ்தீனியர்களை இந்தியா உள்ளிட்ட அனேக நாடுகள் ஆதரிப்பதற்கு எவ்வளவு நியாயங்கள் இருக்கின்றனவோ அந்த அளவு நியாயங்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடமும் இருந்தது. இதையும் நியாய உணர்வு படைத்த எவரும் குறை சொல்ல மாட்டார்கள்.

நான்காவது காரணம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவில் நல்லாட்சி ஒன்றை நிறுவியது மக்காவின் தலைவர்களுக்கு எப்படி சகித்துக் கொள்ள முடியாததாக இருந்ததோ அதுபோலவே மதீனாவைச் சுற்றிலும் வாழ்ந்த யூதர்களுக்கும் சகித்துக் கொள்ள முடியாததாக இருந்தது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வருகைக்கு முன் மதீனாவைத் தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். நபிகள் நாயகத்தின் வருகைக்குப் பின் மதீனத்து மக்களில் மிகப் பெரும்பாலோர்(மதீனத்து யூதர்கள் உட்பட) நபியின் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள்.

இதனால் சுற்று வட்டாரத்தில் இருந்த யூதர்கள் சதிவேலைகளில் ஈடுபடலாயினர். சில்லரை விஷமங்களையும் செய்து வந்தனர். மக்காவுக்குத் தகவல் அனுப்பும் ஏஜண்டுகளாகச் செயல்பட்டனர். இஸ்லாத்தை அறிந்து கொள்ள என்று கூறி சில நபித்தோழர்களை அழைத்துச் சென்று கோரமாகக் கொலை செய்தனர். நபிகள் நாயகத்துடன் பல தடவை ஒப்பந்தம் செய்துவிட்டு ஒவ்வொரு தடவையும் அதை மீறி வந்தனர். இத்தகைய நம்பிக்கைத் துரோகிகளுடனும் நபியவர்கள் போர் செய்துள்ளனர். யூதர்களுடன் நடைபெற்ற போர்களில் பெரும்பாலானவை இந்த காரணத்துக்காக நிகழ்த்தப்பட்டவையே.

இதுவரை கூறிய நான்கு காரணங்களுக்காக போர் செய்வதை நேர்மையான ஆட்சியாளர்கள் என்று மாற்றார்களால் போற்றப்படும் தலைவர்கள் கூட தவிர்த்ததில்லை. நாம் வாழும் நாட்டுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டால் போரில் ஈடுபடுவதையே நாம் வரவேற்போம். இவையல்லாத மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.

ஐந்தாவது காரணம்

ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் இன்னொரு நாடு தலையிடக் கூடாது என்பதை உலகம் ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளது. உலகில் அமைதி நிலவிட இந்த கொள்கை அவசியமானதுதான். ஆனாலும் இதற்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் இன்னொரு நாட்டின் விவகாரத்திலும் தலையிடுவது தவறில்லை என்பதையும் உலகம் ஒப்புக் கொண்டிருக்கின்றது.

ஒரு மனிதன் தன் மனைவியை ஏசுகிறான். அடுத்த வீட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். அவளை அடிக்கிறான் அப்போதும் அடுத்த விட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். அவளைப் பட்டினிபோடுகிறான், அப்போதும் கூட அடுத்த வீட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். கூர்மையான கத்தியால் அவளைக் குத்திக் கொலை செய்யப்போகிறான். அப்போதும் அடுத்த வீட்டு விவகாரம் என்று போசாமல் எவரும் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவன் மனிதனாகவே இருக்க முடியாது. அடுத்த வீட்டு விவகாரத்திற்கு நாம் வைத்திருக்கும் எல்லை அடுத்த நாட்டுக்கும் பொருந்தக் கூடியது தான்.

ஒரு கொடுங்கோலன் தனது குடிமக்களைக் கொடுமைப்படுத்துகிறான் தாங்க முடியாத அளவுக்கு கொடுமை அதிகரிக்கின்றது. அவனை எதிர்ப்பதற்கான துணிவோ, பலமோ அம்மக்களுக்கு இல்லை. அந்த நாட்டு மக்களே இந்தக் கொடுங்கோலன் தொலையமாட்டானா? இந்த நாட்டை விட்டு நாம் வெளியேறிவிடுவோமா? என்று ஏங்குகின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அம்மக்களை மீட்பதை இஸ்லாம் அனுமதிக்கின்றது.

பலவீனமான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் ‘எங்கள் இறைவா! இந்த அக்கிரமக்கார ஊரிலிருந்து எங்களை வெளியேற்றி விடுவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு பொறுப்பானவரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு உதவியாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! என்று கூறிக் கொண்டுள்ள நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன வந்து விட்டது. (அல்குர்ஆன் 4:75)

யாராவது உதவிக்கு வரமாட்டார்களா என்று ஒரு நாட்டு மக்களே எதிர்பார்க்கும் நிலையில் அந்த அக்கிரம ஆட்சியாளருக்கு எதிராக போரிடுமாறு இந்த வசனம் கட்டளையிடுகின்றது.

மக்களைச் சுரண்டி கொள்ளையடித்து, நிற்பதற்கு வரி, நடப்பதற்குவரி, பேசுவதற்கு வரி, எழுதவரி, திருமணவரி, சாவு வரி, வியாபார விரி, விவசாயவரி, வாகனத்துக்கு வரி, குழந்தை பிறப்பதற்கு வரி, என்று தாங்க முடியாத வரிகளை மக்கள் மீது சுமத்தி, இப்படிப்பெறப்பட்ட பணத்தைக் மக்களுக்குச் செலவிடாமல் தங்கத்தால் செருப்பு முதல் சிம்மாசனம் வரை தங்களுக்குச் செய்து கொண்டு, அந்தப் புரத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் ஆட்சி புரியும் நாடுகள் மீதும் நபியவர்கள் படையெடுத்துள்ளனர். அவர்களின் நான்கு கலீபாக்களும் போர் செய்துள்ளனர். அங்குள்ள மக்களே அதை ஆதரிக்கவும் செய்தனர்.

பங்களாதேஷ் என்று அறியப்படும் முன்னால் கிழக்கு பாகிஸ்தான் மக்கள், ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டனர். அங்குள்ள வளங்கள் மேற்குப் பகுதியின் நலனுக்கே பயன்படுத்தப்பட்டன. இதை எதிர்த்து முஜீபுர் ரஹ்மான் என்பவரின் தலைமையில் போராட்டம் நடந்தது. அவரால் இந்தியாவின் உதவியும் கோரப்பட்டது. அன்னிய நாடு என்று பாராமல் அம்மக்களைக் காப்பாற்ற இந்தியா தனது இராணுவத்தை அனுப்பியது. அவர்களை மீட்டது.
விடுதலைப் புலிகள் இன்றைக்கு இந்தியாவிற்கு வேண்டாதவர்களாக ஆகி விட்டாலும், அவர்கள் வேண்டப்பட்டவர்களாக இருந்த காலத்தில் அவர்களுக்குப் பல வகையிலும் உதவிகள் வழங்கப்பட்டன. அந்த நாட்டுத் தமிழர்களை இலங்கை அரசு பட்டினி போட்டபோது இந்தியாவின் விமானங்கள் அந்நாட்டின் மீது பறந்து சென்று உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்தன.

மாலத்தீவு என்ற அன்னிய நாடு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட போர் இந்திய அதிரப்படை சென்று அதை மீட்டுக் கொடுத்தது.

இவற்றை நியாயப் படுத்துவோர் நியாயமான முறையில் நபியவர்கள் நடத்திய போர்களைக் குறை கூறுவது தான் வியப்பாக உள்ளது.

நபிகள் நாயகத்தின் போர்கள் அமெரிக்காவின் அடாவடித்தனமான போர்கள் போன்றவை அல்ல.

அனைவராலும் நியாயமானவை என இன்றளவும் ஒப்புக் கொள்ளப்பட்டு வருகின்ற காரணங்களுக்காகவே நபியவர்களும் போர் செய்துள்ளனர். இஸ்லாத்தைக் குறை கூற வேண்டுமென்பதற்காகவே இது சம்பந்தமாக தப்புப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

உருவ வழிபாட்டை அனுமதிக்காத இஸ்லாம், அதே நேரத்தில் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை இடிக்கக்கூடாது எனக் கூறுகிறது என்றால் அதிலிருந்து இஸ்லாத்தை அவர்கள் விளங்கட்டும்.

மக்களில் சிலர் மூலம் சிலரை அல்லாஹ் தடுக்காவிட்டால், கிறித்துவ, யூத, ஆலயங்கள் மற்றும் இறைவனின் பெயர் அதிகமாகக் கூறப்படும் பள்ளிவாயில்கள் இடிக்கப்பட்டிருக்கும். (அல்குர்ஆன் 24:40)

எந்த ஆலயமும் இடிக்கப்படக் கூடாது என்பதை இதன் மூலம் இறைவன் கூறுகின்றான்.

மற்றவர்கள் வணங்குபவற்றை நீங்கள் ஏசாதீர்கள். அதனால் அவர்களும் அறியாமையினால் அல்லாஹ்வை ஏசுவார்கள். (அல்குர்ஆன் 6:108)

ஏகத்துவக் கொள்கைளை உயிர் மூச்சாகக்கொண்டுள்ள இஸ்லாம், மற்ற மதத்தவர்களுக்கு அநீதி இழைக்க நாடியிருந்தால் இந்த இரண்டு போதனைகளையும் கூறியிருக்காது.

இதுபோலவே, மற்ற விஷயங்களில் இஸ்லாம் எவ்வளவு தாராளத்துடன் நடந்திருக்கும் என்பதை நடுநிலையான பார்வை இருப்பவர்கள் விளங்கலாம்.

நன்றி: egathuvam.blogspot.com


Follow

Get every new post delivered to your Inbox.