கிறிஸ்மஸ் – மறைக்கப்பட்ட உண்மைகள்

Posted May 16, 2012 by arshathalathary
Categories: Uncategorized

முஹம்மட் அர்ஷாத்

arshathslm@gmil.com

dsc034121

‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’ –Christmas- என அழைக்கப்படும் ‘இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாள் விழா’ ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 அன்று பெரும்பாலான கிறிஸ்த்தவர்களால் கொண்டாடப்படுகின்றது. கிழக்கு மரபுவழி திருச்சபையினர் என்கின்ற கிறிஸ்த்தவ பிரிவினரால் ஜனவரி 7ம் நாள் கொண்டாடப்படுகின்றது.

பிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுபூர்வமானதா? கிறிஸ்த்தவ நம்பிக்கையின்படி இறைமகனுக்கே(?) பிறந்தநாளா? என்கின்ற வாதப் பிரதிவாதங்களுக்குள் நுழையாமல் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ல் கொண்டாடப்படுவது சரிதானா? என்பதை வரலாற்று ரீதியாகவும், பைபிள் மற்றும் திருக்குர்ஆன் ஒளியிலும் ஆய்வுக்குட்படுத்துவோம்.

வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ்…

கிறிஸ்மஸின் தோற்றம்

ஆரம்ப கால கிறிஸ்த்தவ சமுதாயத்தில் கிறிஸ்மஸ் உள்ளிட்ட எந்தவொரு பிறந்த நாள் கொண்டாட்டங்களும் கொண்டாடப்படவில்லை. கிறிஸ்மஸ் நாள் மரபுவழி வருவதேயன்றி இயேசுவின் உண்மையான பிறந்தநாள் அல்ல. மேலும், கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக் போன்ற அனுஸ்டானங்கள் புராதன பாபிலோனிலிய மக்களின் கலாசாரம் என என்சைக்ளோபீடியா -The world book Encyclopedia – The Encyclopedia of Religion and Ethics – the Encyclopedia Americana – கூறுகின்றது.

விக்கிபீடியா தருகின்ற தகவலின் அடிப்படையில், இத்தாலி போன்ற நாடுகளில் காணப்பட்ட ‘சட்டர்நாலியா’ (சடுர்நலியா பண்டிகை) – Saturnalia – மற்றும் உரோமர்களால் டிசம்பர் 25ல் கொண்டாடப்பட்டு வந்த வெற்றி வீரன் சூரியன் (Sol- Indicts) என்றழைக்கப்பட்ட சூரியக் கடவுளின் பிறந்த நாளான நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி- Natalis Solis Invicti- (சோல் இன்விக்டுஸ்) என்கின்ற குளிர்கால பண்டிகைகளை தழுவியே கிறிஸ்மஸ் தோன்றியதாக கூறுகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில்,

 • கிறிஸ்த்தவ எழுத்தாளர்கள் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள்உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதையும்,
 • இயேசு சோல்-இன் சூரியக்கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளதையும்,
 • சிப்ரியன் -Cyprian- என்கின்ற கிறிஸ்த்தவ மதபோதகரின்  “எவ்வளவு அதிசயச் செயல் சூரியன் பிறந்த நாளில்…. கிறிஸ்த்துவும் பிறந்தது….”  “ Oh ,how wonderfully  acted  Providence that on that day on which  that  Sun was born . . . Christ should be born…” என்கின்ற வாக்கு மூலத்தையும்,
 • இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இதனை முழுக்க முழுக்க உறுதிப்படுத்துகின்ற “சோல் இன்விக்டுஸ்-கிறிஸ்மஸின் தொடக்கத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளது” என்கின்ற கத்தோலிக்க கலைக் களஞ்சியத்தின் வாக்குமூலம்

போன்ற சான்றுகளை கோடிட்டு காட்டுவதன் மூலம், சூரியக் கடவுளின் பிறந்தநாள் உள்ளிட்ட குளிர்கால கொண்டாட்டங்களை அடிப்படையாக வைத்து மிகமிக பிற்பட்ட காலத்தில் தோன்றிய ஒரு பண்டிகையே கிறிஸ்மஸ் என்கின்ற கருத்தை உறுதி செய்கின்றது.

‘செக்டுஸ் ஜுலியஸ் அப்ரிகானுஸ்’ -Sextus Julius Africanus- என்கின்ற மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த  கிறிஸ்த்தவ எழுத்தாளரால் இயேசு கிறிஸ்து டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்து வரலாற்றில் முன் வைக்கப்படுகின்றது. இதற்கு ‘ஒரிஜென்’- Origen – போன்ற ஆரம்பகால முக்கிய கிறிஸ்த்தவ மதகுருக்களே மிக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். கிறிஸ்த்தவ இறையியல் அறிஞரான ஒரிஜென், “பார்வோன்- pharaoh – அரசனைப் போன்று இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாளை கொண்டாடக்கூடாது என்றும், பாவிகளே அவ்வாறு செய்வதாகவும், புனிதர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்” என்றும் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டார்.

ரோமப் பேரரசன் ‘கான்ஸ்டான்டின்’ – Constantin – காலத்தில் இடம் பெற்ற நைசியன் திருச்சபை பிரகடனத்தில் Declaration of  Nicean Council –

சூரியக்கடவுளின் பிறந்தநாள் -டிசம்பர் 25- இயேசுநாதரின் பிறந்தநாளாகவும், சூரியக் கடவுளின் பெயரால் உரோமர்கள் கொண்டாடிய கொண்டாட்டங்கள்- கிறிஸ்த்துவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டது.

இக்கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் “ஒரே கடவுள் மூன்று நிலைகளில் உள்ளார்” என்கின்ற கொள்கையை அடிப்படையாக கொண்ட கிறிஸ்த்தவ பிரிவினரால் கி.பி. 378ல் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. கி.பி. 379ல் கொன்ஸ்தாந்துநோபலில் – Constantinople – அறிமுகப்படுத்தப்பட்ட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பெரும் சர்ச்சையை தோற்றுவித்ததாக எட்வர்ட் கிப்பன் – Edward Gibbon -என்கின்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறர். வழக்கொழிந்து போன கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் கொன்ஸ்தாந்துநோபலில் கி.பி. 400 காலப்பகுதியில் ‘யோன் கிறிசொஸ்டம்’ -John Chrysostom- என்கின்ற கிறிஸ்த்தவ போதகரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றது.

dsc034121

மேலும், பேரரசன் சார்லிமெஜி -Charlemagie- என்பவன் கி.பி 800ம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக் கொண்டதாலும், கி.பி. 1066 ல் முதலாவது வில்லியம் (இங்கிலாந்து)- William I of England -மன்னன் கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக் கொண்டதாலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றது.

மத்திய கால கிறிஸ்த்தவ சீர்திருத்த திருச்சபைகள் “கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்- பாப்பரசின் ஆடம்பரம்” என்று விமர்சித்தனர். தூய்மைவாதிகள் -Puritans- எனும் கிறிஸ்த்தவ பிரிவினர் “கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை விலங்கின் (சாத்தானின்) கந்தல் துணி” என்று மிகக் கடுமையாக விமர்சித்தனர். மேலும் கி.பி. 1647ல் தூய்மைவாத கிறிஸ்த்தவ மறுசீரமைப்பினர் எனும் கிறிஸ்த்தவ பிரிவினர் முதலாம் சார்ல்ஸ் மன்னனின் உதவியோடு இங்கிலாந்தில் கிறிஸ்த்தவ கொண்டாட்டங்களை தடைசெய்தனர். இன்றும் கூட சில அங்கிலிக்கன் திருச்சபை கிறிஸ்த்தவ போதகர்களும், ஆர்மினியர்களும், செர்பியர்களும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை அங்கீகரிப்பதில்லை.

தூய்மைவாத கிறிஸ்த்தவ பிரிவினரால் கி.பி. 1659-1681 காலப்பகுதியில் புதிய இங்கிலாந்தின் பொஸ்டன் நகரில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அமெரிக்க புரட்சிக்குப் பின்னர் அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் முக்கியத்துவம் இழந்து காணப்பட்டன.

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை உயிர்ப்பிப்பதில் எழுத்தாளர் வாசிங்டன் இர்விங்- Washington Irving- எழுதிய -“The Sketch Book of Geoffrey Crayon”, “Old Christmas”- என்கின்ற சிறுகதை நூற்களும், அமெரிக்காவில் குடியேறிய ஜேர்மனியர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. எனினும், இர்விங் தனது நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கற்பனையானவை என்கின்ற விமர்சனமும் எழுந்தது. இதுவே அமெரிக்காவுக்கு கிறிஸ்மஸ் வந்த கதையாகும்.

சுருக்கமாக சொல்லப்போனால், கிறிஸ்மஸ் பண்டிகை -டிசம்பர் 25ம் நாள்- மித்ரா என்கின்ற சூரியக்கடவுளின் பிறந்தநாளாகும். சடுர்நலியா என்கின்ற குளிர்கால பண்டிகையை தழுவியே பெரியவர்களுக்கு மெழுகவர்த்தியும், சிறியவர்களுக்கு பொம்மைகள் வழங்குகின்ற கலாச்சாரமும் பரிசுப்பரிமாற்றங்களும், களியாட்டங்கள், கேளிக்கை நிகழ்வுகளும் மது அருந்துகின்ற வழக்கமும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது இடம்பிடித்தன.

எனவே, வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ் பண்டிகை- டிசம்பர் 25ம் நாள் கொண்டாட்டங்கள்- கிறிஸ்த்தவர்களுடைய பண்டிகை அல்ல. மாறாக, புறஜாதியினருடைய பண்டிகை என்பது நிரூபணமாகின்றது.

பைபிளின் ஒளியில்…..

லூக்கா அதிகாரம்: 02

1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.

2. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.

3. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.

4. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,

5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்.

6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.

7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.

8. அப்பொழுது அந்தநாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள்.

இயேசுவின் தாய் மரியாள், யோசேப் என்பவரின் துணையோடு நாசரத் எனும் ஊரிலிருந்து யூதேயா நாட்டில் உள்ள பெத்லகேம் எனும் ஊருக்கு சனத்தொகை கணக்கெடுப்புக்காக நீண்ட தூரம் பிரயாணம் செய்துள்ளதாக பைபிள் கூறுகின்றது. போக்குவரத்து வசதிகள் குன்றிய அக்காலகட்டத்தில் மரியாள் மேற்கொண்ட பயணம் மிகக் கடினமானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

இப்போது நமது கேள்வி என்னவென்றால், பைபிள் குறிப்பிடுகின்ற பிரதேசங்கள் டிசம்பர் 25 காலப்பகுதியில் பனி உறையக் கூடிய மிகக் கடுமையான காலகட்டமாகும். அக்காலகட்டத்தில் வாணிபக் கூட்டம் உள்ளிட்ட யாரும் பயணங்கள் மேற்கொள்வதில்லை. எனவே, மக்கள் பயணம் செய்ய முடியாத குளிர்காலத்தில் அகுஸ்துராயனால் இக்கட்டளை நிச்சயம் இடப்பட்டிருக்க முடியாது.

இரண்டாவதாக, லூக்கா சுவிசேஷம் 2:8 வசனம் குறிப்பிடுகின்ற ‘அந்தநாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள்’ என்கின்ற வசனத்தையும் நாம் கருத்தூன்றிப் படிக்க வேண்டும்.

பனிஉறைகின்ற குளிர்காலத்தில் இடையர்கள் வயல்வெளிகளில் தங்குவது கிடையாது. மாறாக, அறுவடை முடிந்ததன் பிற்பாடு கோடையின் பிற்பகுதியிலேயே வயல்வெளிகளில் தங்கி, மந்தையைக் காத்து வருவது (கிடை கட்டுவது) வழக்கமாகும். அதன் மூலம் அறுவடை முடிந்த விளை நிலங்களை அடுத்த வேளாண்மைக்கு முன் இயற்கை உரமிட்டு வளப்படுத்துவதும் வழக்கமாகும்.

எனவே, பைபிளின் கூற்றுப்படி இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது கோடையின் பிற்பகுதியாகும். மாறாக, குளிர்காலமான டிசம்பர் 25 கிடையாது.

இது குறித்து  –Joe Kovacs–  என்கின்ற கிறிஸ்த்தவ அறிஞர் தனது ‘Shocked by the Bible’  எனும் நூலில் இயேசு டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்தை நிராகரிக்கிறார்.

மேலும் lord.activeboard.com  எனும் கிறிஸ்த்தவ வலைத்தளம் இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பு குறித்து பைபிளை மேற்கோள் காட்டி குறிப்பிடுகின்ற விபரங்களை தகவலுக்காக தருகின்றேன்.

இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 1.

அதாவது, இயேசு கிறிஸ்துவுக்கு முன்னோடியான யோவான் ஸ்நானகன் என்ற ஸ்நான அருளப்பர் வயதிலேயே இயேசுவுக்கு ஆறு மாதங்களுக்கு மூத்தவர்.  எப்படியெனில் காபிரியேல் தூதர் இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு வாழ்த்துதல் கூறும்போது யோவான் ஸ்நானகனின் தாயாகிய எலிசபெத்துக்கு இது ஆறாம் மாதம் என்றார்.  ஆகவே, இயேசுவின் பிறந்த நாளை கண்டு பிடிக்க யோவான் ஸ்நானகனின் பிறப்பை கவனிப்பது அவசியம்.  எனவே, லுக்கா 1:5 முதல் 20 வசனங்களை வாசிக்கவும்.

இதில் 5-ம் வசனத்தில் அபியா என்ற ஆசாரிய முறைமையில் -Order- சகரியா என்ற ஒருவன் இருந்தான் என்றும், 8-9 வசனங்களில் சகரியா தன் ஆசாரிய முறைமையின்படி தேவ சந்நிதியிலே தூபங்காட்டுகிறதற்கு சீட்டைப் பெற்றான் என்று வாசிக்கிறோம்.

எனவே, யோவான் ஸ்நானகனின் தகப்பனாகிய சகரியா ஆலயத்திலே ஊழியம் செய்த, அந்த அபியாவின் முறை என்னவென்றும், அது எக்காலம் என்றும் நாம் அறிவது அவசியம்.

அதாவது தாவீது அரசனின் காலத்தில் ஆலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்ய, முறைமை வகுக்கப்பட்டது எப்படியெனில் ஆசாரிய ஊழியம் செய்ய 24 ஆசாரியர்கள் இருந்தார்கள்.  அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு இரண்டு இரண்டு பேராக 12 மாதத்திற்கும் 24 ஆசாரியர்களாக முறைப்படுத்தப்பட்டனர்.  ஒரு மாதத்தின் முதல் 15 நாட்களுக்கு ஒரு ஆசாரியனும் பின் 15 நாட்களுக்கு ஒரு ஆசாரியனுமாக முறைப்படுத்தப்பட்டு, ஆசாரியர்களின் பெயர்களை எழுதி சீட்டுப் போட்டு யார் யார் எப்போது ஆலயத்திலே ஊழியம் செய்ய வேண்டும் என்று, தாவீது அரசன் முறைப்படுத்தி இருந்தான்.

முதலாம் சீட்டுப் பெற்றவன் முதலாம் மாதம் முன் 15 நாட்களுக்கும், இரண்டாவது சீட்டுப் பெற்றவன் முதலாம் மாதம் பின் 15 நாட்களுக்கும் ஆசாரிய ஊழியம் செய்ய வேண்டும்.  அந்தப்படி, எட்டாவது அபியா என்ற ஆசாரியனுக்கு சீட்டு விழுந்தது.  எட்டாவது எண்ணும்போது அபியாவின் ஊழியகாலம் எபிரேயரின் மாதப்படி 4-ம் மாதமாகிய தம்மூஸ் மாதம் பின் 15 நாட்களாகும்.  இந்த காரியங்களை 1 நாளாகம புஸ்தகம் 21-ம் அதிகாரத்தில் பார்க்கலாம்.

dsc034121

எனவே, சகரியா ஆலயத்தில் ஊழியம் செய்த காலம் அவனது முன்னோரான அபியாவின் முறைமையின்படி எபிரேய மாதமான 4-ம் மாதம், தம்மூஸ் மாதத்தின் பின் 15 நாளாகும்.   சகரியாவின் இந்த ஊழியகாலம் நிறைவேறிய பின்பு அவன் வீட்டுக்குப்போனான்.  எந்த ஆசாரியனும் தனது ஆலய ஊழியக்காலத்தில் வீட்டிற்குப் போகமாட்டான்.  அந்த 15 நாட்களும் ஆலயத்திலே தங்கியிருப்பார்கள். ஊழியகாலம் நிறைவேறிய பின்பே தங்கள் வீடுகளுக்குப் போவது வழக்கம் அதன்படி, சகரியா தனது ஊழிய காலம் நிறைவேறின பின்பு, தனது வீட்டிற்குப் போனான்.  அதன் பிறகு அவன் மனைவி கர்பவதியானாள்.  (லுக்.1:23-24)

எனவே, யோவான் ஸ்நானகளின் தாய் எலிசபெத்து கர்ப்பம் தரித்து எபிரேய மாதப்படி   5-ம் மாதமாகிய ஆப் என்னும் மாதம் இது தமிழ் மாதத்திற்கு ஆடிமாதம், ஆங்கில மாதத்திற்கு ஜீலை மாதமாகும்.  எலிசபெத்தின் ஆறாம் மாதத்தில் காபிரியேல் தூதர் மரியாவிடம் அனுப்பப்பட்டார்  (லுக்.1:26-28).

 ஆகவே, காபிரியேல் மரியாளை சந்தித்து தேவசித்தத்தை தெரிவிக்கவும்.  உன்னதமானவரின் பெலன் நிழலிடவும், மரியாள் கர்ப்பவதியானாள்.  எனவே மரியாள் கர்ப்பம் தரித்தது எலிசபெத்தின் ஆறாம் மாதத்தில், அதவாது, ஆடி மாதத்திலிருந்து ஆறு மாதம் தள்ளி மார்கழி மாதத்திலிருந்து பத்தாம் மாதம் இயேசு பிறந்த மாதம்.

அதாவது மார்கழி 1, தை 2, மாசி 3, பங்குனி 4, சித்திரை 5, வைகாசி 6, ஆனி 7, ஆடி 8, ஆவணி 9, புரட்டாசி 10.  புரட்டாசி மாதமே இயேசு பிறந்தமாதம்.  இது ஆங்கில மாதத்திற்கு அக்டோபர் மாதம்.  எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் 25-ம் தேதியல்ல தமிழ் மாதமாகிய புரட்டாசி கடைசியிலும், ஆங்கில மாத்திலே அக்டோபர் முதலுக்குமாகும்.  இது எபிரேய மாதத்திற்கு ஏழாம் மாதம் எத்தானீம் மாதமாகும்.

இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-2.

அதாவது இயேசுவின் மரணநாள் வேதத்தில் திட்டமாக கூறப்பட்டுள்ளது.  இது யூதர் முறைப்படியான நீசான் மாதம் 14-ம் தேதி, முதல் மாதமாகிய நீசான் மாதம் நமது தமிழ் மாதமான பங்குனி மாதத்திற்கு சமமானது.  ஆங்கில மாதம் மார்ச் கடைசியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதலுக்கோ இருக்கும்.  இயேசு தமது 33½  வசயதில் மரித்தார் என்பதை தானியேல் தீர்க்கதரிசியின் புத்தகத்தின் வாயிலாக திட்டமாக அறியலாம்.  (தானி.9:24-47) இயேசு 33 வயதில் அல்ல. 33½ வயதில் மரித்தார்.  இது மார்ச் மாதக் கடைசியிலோ அல்லது ஏப்ரல் முதலுக்கோ வருகிறது என்றால் அவரது பிறந்தநாள் அதற்கு 6 மாதத்திற்கு முன்னதாக இருக்க வேண்டும்.  எனவே, மார்ச் மாதத்திலிருந்து பின்நோக்கி 6 மாதம் சென்றால் மார்ச் 1, பிப்ரவரி 2, ஜனவரி 3, டிசம்பர் 4, நவம்பர் 5, அக்டோபர் 6.  எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் 25 அல்ல.  அக்டோபர் மாதத்தில் என்பது தெளிவு.

இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-3.

இயேசுகிறிஸ்து டிசம்பர் 25-ல் பிறக்கவில்லை என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு உண்டு.  அதாவது, இயேசுகிறிஸ்து பிறந்தபோது அவரது பிறப்பை தேவ தூதர் மேய்ப்பர்களுக்கு அறிவித்தார் என வாசிக்கிறோம். தேவ தூதர் மேய்ப்பர்களுக்கு தரிசனமானபோது அவர்கள் வயல்வெளிகளில் ஆட்டு மந்தைகளை வைத்திருந்தார்கள்.  (லூக் 2:8:11) டிசம்பர் மாதத்தில் நம் நாட்டில் இருப்பதுபோல கிஸ்லேவ் என்ற ஒன்பதாம் மாதம் பலஸ்தீனாவில் கடுங்களிராகயிருக்கும். அது அடைமழை காலமாகவும், குளிர்காலமாகவும் இருப்பதால் அக்காலங்களில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை வயல்வெளிகளில் நிறுத்தமாட்டார்கள்  இதை எஸ்றாவின் புத்தகத்திலும், பலஸ்தீனா சரித்திரங்களிலும் நாம் அறியலாம். (எஸ்றா. 10:9,13: எரே. 3:22)

எனவே, மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கியிருந்த காலம் மழைக் காலமாகிய டிசம்பருக்கு முன்னான காலமாக இருக்க வேண்டும்.  அக்டோபர் மாதமே மந்தைகளை வயல்வெளிகளில் வைப்பதற்கு ஏற்ற காலம். எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் மாதத்தில் அல்ல. அது டிசம்பருக்கு முன்னான அக்டோபர் மாதத்தில்தான் என்பதை நிதானித்து பார்க்கும் போது அறிந்து கொள்ளலாம்.

இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 4.

மேலும், சில காரியங்களை கவனிப்போமானால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் வழக்கம், திருச்சபையின் தொடக்க காலங்களில் இல்லை. சுமார் 4-ம் நூற்றாண்டு வாக்கிலேதான் கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் முதலாகக் கொண்டாடப்பட்டதாக –Encyclopaedia- மூலமாக அறியலாம்.  இதை ஆதி திருச்சபை வரலாறு நமக்குத் தெளிவாக்குகிறது.  அதாவது வடஜரோப்பா கண்டத்தில் வாழ்ந்த துத்தானிய ஜாதியினர் கிறிஸ்து மார்க்கத்தை தழுவும் முன்னே, அவர்கள்  இயற்கை சக்திகளை வழிபட்டு வந்தார்கள்.  சூரியனை வணங்கி அதன் கால மாற்றங்களை பண்டிகையாக கொண்டாடி வந்தனர்.  அதாவது சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தொடர்பில், சூரியன் பூமத்திய ரேகையிலிருந்து வடக்கு நோக்கி சஞ்சரித்து டிசம்பர் 22-ந் தேதி வடஅட்சத்தில் கடகரேகையை அடைகிறது.

இது வட ஐரோப்பாவில் சூரியன் தென்படும் உச்ச நிலையாகும்.  இது ஜுலியன் காலண்டர்படி டிசம்பர் 25-ம் தேதி என கணிக்கபட்டது.  ஆகவே, அந்த நாளிலே அங்கு வாழ்ந்த மக்கள் சூரியனுக்கு ஒரு பெரிய பண்டிகையாக ‘ஒளித்திருவிழா’ -Festival of Fires- என்று கொண்டாடி வந்தனர்.இதன் தொடர்ச்சியாக அதிலிருந்து 8-ம் நாள் ‘மகிழ்ச்சி திருவிழா’ -Joy Festival- என்று ஜனவரியில் கொண்டாடி வந்தனர்.  ஜெர்மானிய துத்தானிய ஜாதியினரான இவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்களாக மாறியும் தங்கள் பழைய பழக்கவழக்கங்களை விட்டுவிட மனம் இல்லாததால் டிசம்பர் 25 கிறிஸ்து பிறந்த நாளாகவும் அதிலிருந்து 8-ம் நாள் ஜனவரி முதல் தேதி இயேசுவின் விருத்தசேதன நாளாகவும் பிரகடனப்படுத்திவிட்டனர்.

இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 5.

இயேசுவின் பிறந்த நாளை கொண்டாடும்படி வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை.  சீடர்களும் கொண்டாடவில்லை.  ஆனால் கிறிஸ்துவின் மரண நாளை நினைவுகூறும்படி கற்பிக்கப்பட்டுள்ளது (லூக். 22:19) கர்த்தரின் ஞாபகார்த்தபஸ்காவாகிய இராப்போஜன பண்டிகையே அவரது மரணத்தை நினைவு கூறும் நாளாயிருக்கிறது.                              (1. கொரி. 11:22-26)

மேற்படி வலைத்தளம் பைபிளை மேற்கோள்காட்டி இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25 அல்ல. அக்டோபர் தான் என  ஆதார அடிப்படையில் வாதடுகின்றது.

பைபிளில் எங்குமே இயேசுவின் பிறந்தநாள் பற்றிய எந்தவொரு குறிப்பும் கிடையாது. மேலும், இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடுமாறு பைபிள் கட்டளையிடவுமில்லை.

மாறாக, பைபிள் வசனங்களை ஆய்குட்படுத்தும் போது இயேசு கோடைகாலத்தின் இறுதிப்பகுதியில் பிறந்தார் என்கின்ற முடிவுக்கே வரமுடிகின்றது.

திருக்குர்ஆன் ஒளியில்….

இயேசு கிறிஸ்த்து அவரை, திருக்குர்ஆன் “ஈஸா” என்று அழைக்கின்றது. ‘அவர் மீது சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்’ என்று முஸ்லிம்கள் வாழ்த்து கூறுகின்றார்கள். இறைவேதம் திருக்குர்ஆனில் 19 வது அத்தியாயம் அன்னாரின் அருமைத் தாயார் மர்யம் -மரியாள்- அவர்களின் பெயரால் அழைக்கப்படுகின்றது.  அந்த அத்தியாயத்தின் 22-26 வசனங்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றி பேசுகின்றது.

இதோ இறைமறையின் வார்த்தைகள்…

22. பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.

23. பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. ”நான் இதற்கு முன்பே இறந்துஇ அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?” என்று அவர் கூறினார்.

24. ”கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்” என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.

25. ”பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்” (என்றார்)

26. நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் ”நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்” என்று கூறுவாயாக.

திருமறைக்குர்ஆன் குறிப்பிடுகின்ற பேரீச்சம் பழம் உதிரக்கூடிய காலம் கோடையின் பிற்பகுதியாகும்.

எனவே, திருக்குர்ஆன் மற்றும் பைபிள் இயேசுவின் பிறப்பு குறித்து ஒத்தகருத்தையே –கோடை காலத்தின் இறுதிப்பகுதி- கூறுகின்றது. மாறாக, கிறிஸ்த்தவ அன்பர்கள்களால் கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகின்ற டிசம்பர் 25ம் நாள், என்பது  பைபிள் மற்றும் திருக்குர்ஆனுக்கு எதிரானது.

இறுதியாக, கிறிஸ்மஸ் பண்டிகை -டிசம்பர் 25- என்பது இயேசுவுக்கு தெரியாத, ஆதிக்கிறிஸ்த்தவர்கள் அறியாத, பைபிள் கூறாத ஓரு விடயமாகும். ஆதிக் கிறிஸ்த்தவர்கள் டிசம்பர் 25 என்பது ரோமானிய சூரியக் கடவுளான மித்ராவின் பிறந்தநாள் என்றுதான் அறிந்து வைத்திருந்தனர். எனவே, டிசம்பர் 25 அன்று புறஜாதிப் பண்டிகையான சூரியக் கடவுள் மித்ராவின் பண்டிகையையே கிறிஸ்த்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

உண்மைக் கிறிஸ்த்தவர்கள் சிந்திப்பார்களா?

பைபிள் -1 தெசலோனிக்கேயர் அதிகாரம்: 5 வசனம் : 21 கூறுகின்றது.

‘எல்லாவற்றையும் சோதித்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்’

துணை நின்றவை:

1.விக்கிபீடியா மற்றும் வலைத்தளங்கள்

2. இயேசு நாதர்- மறைக்கப்பட்ட உண்மைகள் ஆசிரியர்- கேப்டன் அமிருத்தீன்

வரலாற்று இயேசு Vs கிருஸ்துவ இயேசு

Posted May 16, 2012 by arshathalathary
Categories: Uncategorized

abuzaidalathary@gmail.com

பைபிளை இறைவேதமாக ஏற்றுக்கொண்டுள்ள கிருஸ்தவர்கள் அனைவரும் “இயேசு உலகில் அவதரித்தார்” என்றும் “அவர் பல‌ அற்புதங்களை நிகழ்த்தினார்” என்றும் “மனிதர்களின் பாவமீட்சிக்காய்” சிலுவையில் அறையப்பட்டு மரித்து, பின்பு உயிர்த்தெழுந்தார் என்றும் நம்புகின்றனர்.

எனினும் பைபிள் விபரிக்கும் இயேசு, கிருஸ்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள ‘இயேசு’ என்ற பாத்திரம் உண்மையிலேயே வரலாற்றில் வாழ்ந்த ஒருவரா? வாழ்ந்தவராயின் வரலாறு இயேசு பற்றி என்ன குறிப்பிடுகிறது என்பதை மத, இன, மொழி, தேச வேறுபாடுகள் இன்றி பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களும் விமர்சகர்களும் ஆய்வுகள் செய்துள்ளனர்;  செய்துவருகின்றனர்.

இவ்வாறு “கிருஸ்துவ இயேசுவு“க்கும் “வரலாற்று இயேசு” வுக்குமிடையேயான ஒப்பீட்டு ரீதியான விபரங்களை தமிழில் தரும் நாம் இது பற்றிய தங்களது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், ஆதாரங்கள் அடிப்படையிலான மாற்றுக் கருத்துகளையும் பெரிதும் வரவேற்கின்றோம்.

“வரலாற்று இயேசு” தொடர்பில் அண்மைக்காலம் வரை பல்வேறுபட்ட ஆய்வாளர்களும் பல ஆய்வு நூற்களை வெளியிட்டுள்ளனர். அவைகளுள் குறிப்பிடத்தக்கதாக:

1.வரலாற்று இயேசு-  பேராசிரியர் கிரீபிலியூப்

2.நம்பிக்கையிலிருந்து பகுத்தறிவை நோக்கி- ப்ரூஸ்பர் அல்பிரீக்

3.இயேசு கிருஸ்து ஒரு மூடப்புராணம்- முன்னால் கிருஸ்துவ மதபோதகர் கைபூ

4.வரலாற்று இயேசுவைத் தேடி–  அல்பிரட்ஸ் பைஸ்டர்

5.கடவுளாய்ப் போன மனிதன்–  ஜீரார் மீஸாதியஃ

ஆகிய நூற்களைச் சுட்டிக்காட்டலாம்.

இவ்வாறு பைபிள் கூறும் “இயேசு கிருஸ்துவை” வரலாற்று ரீதியாக ஆய்வுக்குட்படுத்திய அறிஞர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் கிருஸ்துவர்களது “நம்பிக்கை இயேசு” தொடர்பில் மூன்று விதமான பிரிவினராகக் காணப்படுகின்றனர்.

1. கிருஸ்துவம் கூறும் “இயேசு” என்பவர் வரலாற்றில் ஒரு போதும் வாழவில்லை என ஒரேயடியாக மறுத்துரைக்கும் சாரார்.

2. கிருஸ்துவம் கூறும் ”இயேசு” என்பவர் வரலாற்றில் வாழ்ந்த, அக்காலத்தில் மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்பட்ட புராணப் பாத்திரங்கள் பலதை வைத்து திருச்சபையால் சோடிக்கப்பட்ட ஒரு “கலவைப் பாத்திரம்” என்று கூறும் சாரார்.

3. கிருஸ்துவம் கூறும் “இயேசு” என்பவர் ஏனைய ”தீர்க்கதரிசிகள்” போன்று சாதாரணமாக அற்புதங்கள் நிகழ்த்தி, உபதேசங்கள் செய்து வாழ்ந்த ஒருவரே அன்றி சுவிஷேசங்கள் சித்தரிப்பது போன்ற ஒரு பாத்திரம் அல்ல என்று கூறும் சாரார்.

இவ்வாறு பல்வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த, சிந்தனைப் பிண்ணனிகளைக் கொண்ட அறிஞர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் பைபிள் கூறும் இயேசுவை, கிருஸ்தவர்களது “நம்பிக்கை இயேசு”வை நிராகரிக்கும் வகையில் முடிவுகளைக் கூறுவதற்கான முக்கிய காரணம் என்ன‌ என்பதையே இக்கட்டுரையில் நாம் அலச உள்ளோம்.

எனவே, பைபிள் கூறும் “கிருஸ்தவ இயேசு” பற்றிய விபரங்களை முதலில் பார்த்து விட்டு பின்பு “வரலாற்று இயேசு” பற்றி நோக்குவோம்.

கிருஸ்துவ இயேசு

கிருஸ்துவர்கள் இறைவேதமாக நம்பும் பைபிள், அதன் புதியஏற்பாடு “இயேசு” பற்றி பின்வரும் விபரங்களைத் தருகின்றது.

1.இயேசு பற்றிய, இயேசுவுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய நூற்றுக்கணக்கான “முன்னறிவுப்புகள்” பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றன. இயேசு, யூத சமுதாயத்துக்கு மத்தியில் யூதமத போதனைகளை க்கடைப்பிடிப்பவராக, சடங்கு சம்பிரதாயங்களை எதிர்ப்பவராக வாழ்ந்தார்.

எனவே, இயேசு பற்றிய விபரங்களை அக்காலயூதர்கள் நன்கறிந்திருந்தனர்.

2.இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய விஷேட நட்சத்திரத்தை அடையளங்கண்டு பாலஸ்தீனத்திற்கு கிழக்கே பாரசீகத்திலிருந்து (இன்றையஈரான்) ஞானிகள் வருகை தந்து இயேசுவை பணிந்து சென்றனர். (ம‌த்தேயு 2: 1-12)

எனவே, இயேசு பற்றிய விபரங்களை பாரசீகர்கள் அறிந்திருந்தனர்.

3. பாரசீக ஞானிகளிடத்தில் இருந்து அக்கால ஆட்சியாளன் ‘ஏரோது ராஜாவும் எருசலேம் நகரமக்கள் அனைவரும்’ இயேசு பற்றிய விபரங்களை கேட்டறிந்தனர்.(மத்தேயு 2:3)

எனவே இயேசு பற்றிய விபரங்களை ஆட்சியாளனும் எருசலேம் மக்கள் அனைவரும் அறிந்திருந்தனர்.

4. ஏரோது ராஜா “யூதர்களின் அரசன்” பிறந்து விட்டான் என்ற அச்சத்தின் காரணமாக “பெத்தலேகம்” மற்றும் அதனைச் சூழவுள்ள நகரங்களில் உள்ள குழந்தைகளைக் கொல்லும்படி கட்டளையிட்டான். ( மத்தேயு 2:16)

இக்கொலை நடவடிக்கையில் 14,000 குழந்தைகள் கொல்லப்பட்டதாக கிருஸ்துவ மூலங்கள் உறுதி செய்ய வேறு சிலரோ இத்தொகை 144,000ஆக இருக்கலாம் எனக் கணிக்கின்றனர்.

எனவே, இந்த நகரங்களில் வாழ்ந்தவர்கள், அக்குழந்தைகளின் குடும்பத்தார்கள், உறவினர்கள் என குறைந்தது கால் மில்லியன்-இரண்டரை இலட்சம் மக்களாவது இச்சம்பவத்தினால் இயேசு பற்றிய விபரங்களைஅறிந்திருந்தனர்.

5.இக்கொலை நடவடிக்கைக்குப் பயந்து இயேசுவின் குடும்பம் எகிப்துக்கு தப்பிச் சென்று சிலகாலம் அங்கு வாழ்ந்தனர். (மத்தேயு2: 14-15)

எனவே, எகிப்தியர்களும் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.

6.பின்பு, இயேசு பயணங்கள் பல மேற்கொண்டு இன்றைய பாலஸ்தீன், லெபனான், சிரியா ஆகிய தேசங்களுக்குச் சென்று அங்கு மக்கள் கூடும் இடங்களில் போதனைகள் செய்தார். இத்தகைய உபதேசங்களின் இறுதியில் ‘சுவிஷேச ஆசிரியர்கள்’ பெரும்பாலும் “அதிகமானவர்கள் இயேசுவை விசுவாசித்தனர்” என்று எழுதியுள்ளனர். (மத்தேயு4: 14 -15 மற்றும் 4: 23- 24)

எனவே, பலஸ்தீன், லெபனான், சிரியா ஆகிய தேசமக்களும் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.

7.இயேசு மக்களுக்கு பகிரங்க சொற்பொழிவுகள் ஆற்றியதுடன் யூதமதத்தலைவர்களுடன் சர்ச்சைப்படுபவராகவும், தேவாலயங்களுக்குள் நுழைந்து வியாபாரிகளின் பலகைகளை கவிழ்த்துப் போடுபவராகவும் இருந்தார்.(யோவான் 2:13-25)

எனவே, மத்தலைவர்கள் மற்றும் வியாபாரிகள் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.

8.பல்வேறுபட்ட மக்கள் மத்தியில் இயேசு பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார். அவைகளின் எண்ணிக்கை சுமார் நாற்பது அளவில் சுவிஷேசங்களில் கூறப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கலாநிதி வில்லியம் ஹாம்பல் என்பவர் தனது “வரலாற்று மற்றும் விஞ்ஞான ஒளியில் அல்குர்ஆனும் பைபிளும்” என்ற நூலில் 302ம் பக்கம் முதல் 319ம் பக்கம் வரை பைபிள் கூறும் இயேசுவின் அற்புதங்களையும் அதை அறிந்தவர்களது எண்ணிக்கையையும் பட்டியலிட்டுள்ளார்.

கீழ்வரும் அட்டவனையினூடாக அதை நாமும் நோக்குவோம்.

தொடர் இலக்கம்

அற்புதம்

ஆதாரம் அறிந்தவர்களது எண்ணிக்கை

1

முப்பெத்தெட்டு வருட நோயாளியை இயேசு குணப்படுத்தல் யோவான் 5: 5-9

200

2

பத்து குஷ்டரோகிகளைக் குணப்படுத்தல் லூக்கா 1 7:12-14

1000

3

நாலாயிரம் பேருக்கு உணவளித்தல் மாற்கு 8: 1-‍ 9

4000

4

அதிக நோயாளிகளைக் குணப்படுத்தல் மாற்கு 1: 32-34

4000

5

இரண்டு மீன்கள், கொஞ்ச ரொட்டிகளை வைத்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல் யோவான்     7: 1-‍14

5000

6

கலீலியோ, யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தானுக்கு அக்கரை திருசீதோன் பட்டணங்களின் அநேக நோயாளிகளக் குணப்படுத்தல் மாற்கு 3: 8-11

20,000

7

கலீலியோ கடலுக்கு கிழக்கு பகுதியில் அநேக நோயாளிகளைக் குணப்படுத்தல். மத்தேயு      15: 29-31

20,000

8

இயேசு தடவியவர்கள் அனைவரும் குணமடைதல் மாற்கு 6: 53-56

40,000

9

இயேசுவின் பேரால் அற்புதங்கள் நிகழ்த்தும் 72 பேரை இயேசு இரண்டிரண்டு பேராக நகரங்களுக்கு அனுப்பி வைத்தல் லூக்கா 10: 1-17

72,000

10

தீய ஆவியினால் பிடிக்கப்பட்டவனை இயேசு குணப்படுத்தல் மாற்கு 5: 2-15

அப்பகுதி மக்கள் அனைவரும்

இவ்வட்டவணையின்படி ‘கலாநிதி வில்லியம் ஹாம்பல்’ அவர்கள் “இயேசுவின் காலத்தில் 20 இலட்சம் மக்கள் வசித்தார்கள் என்றிருந்தால் அதில் குறைந்தது 5% வீதமான மக்கள் அதாவது, ஒரு இலட்சம் பேர் இயேசுவின் அற்புதங்களைக் கண்டோ அல்லது கேள்விப்பட்டோ இருப்பார்கள்” என்ற முடிவுக்கு வருகிறார்.

சுருங்கக்கூறின், மருத்துவ வசதிகள் அதிகமில்லாத அன்றைய காலகட்டத்தில் சுவிஷேசங்களில் “ஒரு நடமாடும் வைத்தியசாலையாக” சித்தரிக்கப்படும் இயேசு பற்றிய விபரங்களை அதிகம் பேர் அறிந்திருந்தார்கள் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியுமாயிருக்கிறது.

இதனோடு சேர்த்து “இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகின்றேன்” (யோவான்21:25) என்ற இறுதி சுவிஷேசத்தின் இறுதி வசனத்தையும் நாம் கவனத்திற்கொண்டால் பைபிள் கூறும் கிருஸ்தவர்களது “நம்பிக்கை இயேசு” அக்காலமக்கள் அனைவரும் அறிந்துவைத்திருந்த ஒரு “ஜனரஞ்சகநாயகனாக” இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

9.இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லவேண்டும் என்ற தீர்மானம் ரோமசக்கரவர்த்தியின் பிராந்திய ஆட்சியாளரான பிலாத்து என்பவரால் நிறைவேற்றப்பட்டது. (யோவான்18:29 – 19:16)

எனவே அரசஅதிகார அலுவலகர்கள் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.

10.பின்பு, பெருந்திரளான மக்கள் மத்தியில் பொது இடத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.

எனவே, அப்பிராந்திய மக்கள் அனைவரும் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.

11.இயேசு சிலுவையில் அறையப்பட்டதும் மரணித்தவர்கள் கல்லறைகளில் இருந்து உயிர்த்தெழுந்து நகரங்களில் நுழைந்து அதிக மக்களுடன் பேசினர்.    (மத்தேயு 27:52-53)

எனவே, இயேசுவின் மரணத்தை அந்நகரங்களில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அறிந்திருந்தனர்.

12.அவ்வேளையில், பூமி அதிர்ச்சி ஏற்பட்டு மலைகளும் பிளந்ததுடன் பூமியெங்கும் சூரிய கிரகணம் ஏற்பட்டது. (லூக்கா 23:44)

ஆக, பைபிளின் பிரகாரம் கிருஸ்தவர்களது “நம்பிக்கை இயேசு” என்பவர் முதல் நூற்றாண்டில் பாமரர்கள், மதத்தலைவர்கள், மருத்துவர்கள், அரசஅதிகாரிகள், பௌதீகவியலாளர்கள் மற்றும் வியாபாரிகள் என சகல மட்டத்து மக்களாலும் பிராந்திய வேறுபாடு இன்றி அறியப்பட்ட “ஜனரஞ்சக நாயகனாக” இருந்தார் என்பதை நாம் நோக்கினோம்.

இனி “வரலாற்று இயேசு” வின் பக்கம் எமது பார்வையை திருப்புவோம்.

வரலாற்று இயேசு

பைபிளை இறைவேதமாக ஏற்றுள்ள கிருஸ்தவர்களது நம்பிக்கையின்படி ‘இயேசு’ என்ற பாத்திரம் அக்கால மக்கள் அனைவரும் அறிந்திருந்த ஒரு “ஜனரஞ்சகமான பாத்திரம்” என்பதை முதல் பகுதியில் நோக்கினோம்.

பைபிள் கூறும் பிரகாரம் சகல தரப்பு மக்களாலும் நன்கு அறியப்பட்டிருந்த இயேசு பற்றிய விபரங்கள், செய்திகள் அக்காலமக்களின், அப்பிரதேசவாசிகளின் இலக்கியங்கள், புத்தகங்கள், ஆவணங்களில் குறைந்தது சில நூறு தடவைகளாவது இடம் பெற்றிருக்க வேண்டும். ஏன் சில ஆயிரம் தடவைகள் என நாம் கூறினாலுங்கூட அது மிகையாகது.

இவ்வாறு சகல விதத்திலும் சகல தரப்பு மக்களிடமும் பிரபல்யமான “கிருஸ்துவ இயேசு” பற்றி அக்கால அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் என்ன வாக்கு மூலம் தருகிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

1.சிறிய பிப்லினூஸ் (கி.பி 61- 124)

இரண்டாம் நூற்றாண்டில் கிருஸ்துவர்கள் இயேசு பற்றிப் பாடிய பக்திப்பாடல் ஒன்றின் ஒரு வரியை மாத்திரம் இவர் குறிப்பிட்டுள்ளார்.

பைபிள் கூறும் இயேசு பற்றி எந்தத் தகவலையும் இவர் தரவில்லை.

2.தாஸிதூஸ் (கி.பி 55 – 120)

“நீறோன் மன்னன் காலத்தில் ரோம் நகரில் ஏற்பட்ட தீவிபத்து பற்றியும் ‘கிருஸ்து’என்ற பேரில் இருந்து தோற்றம் பெற்ற கிருஸ்துவர்கள் பற்றியும்……” என்று போகிற போக்கில்,  உறுதியில்லாத வதந்திகள் என்ற வகையில் சில வரிகளை எழுதியுள்ளார்.

அது தவிர இவர் இயேசு பற்றி எந்தத் தகவலையும் தரவில்லை.

3. பெரிய பிலீனூஸ் / காயூஸ்பிலீன் (கி.பி 23-79)

மிகப் பெரும் இலத்தீன் வரலாற்றாசிரியரும் பௌதீகவியலாளருமான ‘பிலீனூஸ்’ அவர்கள் கி.பி 65-70 காலப் பகுதியில் பலஸ்தீனத்துக்கு விஜயம் செய்து ஐந்து வருடகாலம் அங்கே தங்கியிருந்து பல்வேறு விடயங்களையும் மிக நுணுக்கமாக எழுதியுள்ளார்.

1947ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட “சாக்கடல் சாசனங்களுக்குச் சொந்தக்காரர்களான கும்ரான் குகைவாசிகள்” தொடர்பில் அன்று இவர் எழுதிய குறிப்புகள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ள ஆவணங்களுடன் பொருந்திப் போவது இவரது நுணுக்கமான வரலாற்றுப் பதிவுக்கு சான்று பகர்கிறது.

குறித்த “கும்ரான்” பகுதியில் இருந்து சில மைல்கள் தூரத்தில்தான் “கிருஸ்துவ இயேசு” வாழ்ந்த ,அற்புதங்கள் நிகழ்த்திய பிரதேசங்கள் காணப்படுகின்றன.

அத்துடன் பௌதீகவியலாளரான இவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டதும் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி, மலைகள் பிளவுபட்ட சம்பவம், சூரிய கிரகணம் என்பன இவரது கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றாசிரியரும், பௌதீகவியலாளருமான “பிலினூஸ்” அவர்கள் இயேசு பற்றி என்ன எழுதியுள்ளார்?

ஒன்றுமில்லை”

4.பீலூன் அலெக்ஸந்தரிய்யா (கி.மு 10-கி.பி 50)

அலெக்ஸந்தரிய்யாவில் வாழ்ந்த பிரபல்யமான யூத தத்துவவியலாளரான இவர் பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்கள் தொடர்பில் பலவிடயங்களை எழுதியுள்ளார்.

இயேசு காலத்து ஆட்சியாளன் “பிலாத்து” பற்றியும் குறிப்பிட்டுள்ள இவர் “யோவான் தனது சுவிஷேசத்தை எழுத முன்னரே “வார்த்தை” (லோகோஸ்) பற்றி பல இடங்களில் விரிவாக விளக்கியுள்ளார்.

பழைய ஏற்பாட்டின் ஆரம்ப‌நூல்களுக்கு விரிவுரை எழுதியுள்ள இவர் “கும்ரான் குகைவாசிகள்” பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றாசிரியர் இயேசு பற்றி என்ன குறிப்பிட்டுள்ளார்?.

ஒன்றுமில்லை”

5. ஸின்கா / லூஸியூஸ் அனாயூஸ் (கி.மு 4- கி.பி 65)

ரோம இலக்கியவாதியும், தத்துவவியலாளருமான இவ்வறிஞர் பன்னிரண்டு தத்துவக் கட்டுரைகளையும், ஒரு வானியல் கட்டுரையையும் எழுதியுள்ளார். அத்துடன் எரிமலைகள், சூறாவளிகள், பூமியதிர்ச்சிகள் பற்றி ஆய்வுக்குட்படுத்தி பௌதீகவியல் தொடர்பிலும் ஒரு நூலை எழுதியுள்ள இவர் ரோம சக்கரவர்த்தி ”நீறோன்” என்பவரது ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

இவருக்கும் ஆரம்பகால கிருஸ்துவ போதகரான “பவுல்” என்பவருக்குமிடையே கடிதத் தொடர்புகள் காணப்பட்டதாக ஒரு வரலாற்று வதந்தி நிலவினாலும் அக்கடிதங்கள் நாலாம் நூற்றாண்டில் போலியாக உருவாக்கப்பட்டவை என்பதை கிருஸ்துவ சமூகமே உறுதி செய்துள்ளது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த “ஸின்கா” அவர்கள் இயேசு பற்றியோ அல்லது வானவியல் தொடர்பில் எழுதியவர் என்ற ரீதியில் “இயேசு பிறந்த போது தோன்றிய நட்சத்திரம்” பற்றியோ அல்லது பௌதீகவியலாளர் என்ற வகையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதும் ஏற்பட்ட பூமியதிர்ச்சி, மலைகளின் பிளவு, சூரிய கிரகணம் பற்றியோ என்ன குறிப்புகளை தந்த்துள்ளார்?

ஒன்றுமில்லை”

6. யூஸ்த் (கி.பி 2 ம் நூற்றாண்டு)

இரண்டாம் நூற்றாண்டில் பாலஸ்தீனத்தின் வட பகுதியில் இயேசு விஜயம் செய்த “கபர்நாகூம்” பகுதியில் வாழ்ந்த வரலாற்றாசிரியரான இவர் “யூத ராஜாக்களின் வரலாறு” என்ற நூலை எழுதியுள்ளார். இவர் எழுதிய எந்த நூலும் இன்று எம்மத்தியில் இல்லை என்றாலும் இவரது நூற்களில் இருந்து பலவிடயங்களை ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கொனஸ்தாந்து நோபில் தலைமை கிருஸ்துவ மதகுருக்களில் ஒருவரான “பூதியூஸ்” என்பவர் எடுத்தெழுதியுள்ளார்.

இவரது மேற்கோள்களில் இயேசு பற்றி எமக்கு என்ன தகவல்கள் கிடைக்கின்றன?

ஒன்றுமில்லை”

7 .சுபிதோன்/ ஜாயூஸ்திரான்கிலூஸ் (கி.பி 69 -140)

ரோம வரலாற்றை எழுதிய இவர் கி.பி 122 வரை ரோமச்சக்கரவர்த்தி “ஹாத்ரியான்” என்பவரது அந்தரங்க செயலாளராக கடமையாற்றினார். அத்துடன் 12 சீசரிய மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.

மேலும் கி.பி 39- 40 காலப்பகுதியில் ரோம சாம்ராஜ்யத்துக்கெதிராக யூதர்கள் செய்த கிளர்ச்சியையும் விரிவாக எழுதியுள்ளார்.

இவ் வரலாற்று ஆசிரியர் இயேசு பற்றி எந்த விபரங்களை எமக்குத் தருகிறார்?.

எதுவுமில்லை”

8.  யூஸிபியூஸ் பிலாபியூஸ் (கி.பி 38-100)

யூத வரலாற்றாசிரியரான இவர் எருசலேம் பகுதியில் பிறந்து யூதர்களுக்கும் ரோமர்களுக்கும் சண்டை மூண்டபோது கலீலியோவுக்கான ஆட்சிப்பிரதிநிதியாக பதவி வகித்தார். எருசலேம் நகர் கி.பி 70ம் ஆண்டு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ரோமுக்குச் சென்ற இவர் யூதவரலாறு பற்றி 20 பாகங்கள் கொண்ட நூலை எழுதியுள்ளார். சுமார் 50 எழுத்தாக்கங்களுக்கும் இவர் சொந்தக்காரராக உள்ளார்.

இவரது நூல் ஒன்றில் இவர் “இயேசு பற்றிக் குறிப்பிடுவது போல், இவரை கிருஸ்துவாரச் சித்தரிக்கும் வகையில் சில பந்திகளை பிற்கால கிருஸ்தவர்கள் இடைச்செருகல் செய்துவிட்டனர்.

எனினும், இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அனைவரும் குறித்த பந்திகள் இடைச்செருகல் செய்யப்பட்டதுதான் என்பதிலும் யூஸிபியூஸ் அவர்கள் கிருஸ்தவர் அல்ல, யூதர்தான் என்பதிலும் கருத்தொற்றுமை கொண்டுள்ளனர்.

இவ்வரலாற்று ஆசிரியர் இயேசு பற்றி என்ன குறிப்பிடுகிறார்?

ஒன்றுமில்லை”

9. புளூதர்கஸ் (கி.பி 48-125)

கிரேக்க வரலாற்றாசிரியரான இவர் அணியிலக்கணம்,, கணிதம் ஆகிய துறைகளில் பல நூற்களை எழுதியுள்ளார். ரோம், எகிப்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்த இவர் கல்வி, பண்பாடு, அரசியல், மதம் தொடர்பிலான பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இன்று காணப்படும் இவரது இரு நூற்களில் இயேசு பற்றி என்ன‌ தகவல்கள் காணப்படுகின்றன?

ஒன்றுமில்லை”

10.சாக்கடல் சாசனச் சுருள்கள் (கி.பி 1ம் நூற்றாண்டு)

1947ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சாக்கடல் சாசனச்சுருள்களின் சில ஆவணங்கள் இயேசு வாழ்ந்த பகுதியில், இயேசு வாழ்ந்த காலகட்டதில் எழுதப்பட்டதாக இருக்கின்றன.

இச்சுருள்களில் பைபிள் விபரிக்கும் இயேசு பற்றி என்ன கூறப்பட்டுள்ளது?

எதுவுமில்லை”

*சாக்கடல் சாசனச் சுருள்கள் எவ்வாறு கிருஸ்துவர்களது மதநம்பிக்கையைத் தகர்த்தெறிகிறது என்பதை தனியாக ஒருகட்டுரையில் வேறொரு சந்தர்ப்பத்தில் நோக்குவோம்.

11.ஸ்த்ராபூன் (கி.மு 58- கி.பி 25)

கிரேக்க அறிஞரும், புவியியலாளருமான இவர் மனித இனங்களின் மூலம், அவர்களின் இடம்பெயர்வு, ஆட்சி உருவாக்கம் பற்றியும் எழுதியுள்ளார்.

இயேசு பற்றி இவர் என்ன கூறுகிறார்?

ஒன்றுமில்லை”

12.ஜூபினால் (கி.பி 14 – 130)  மற்றும் லூகானூஸ் (கி.பி39- 65)

பிரபல்யமான ரோம இலக்கியவாதிகளான இவ்விருவரும் சில இலக்கிய ஆக்கங்களை எழுதியுள்ளார்கள்.

இவ்விருவரும் இயேசு பற்றி என்ன எழுதியுள்ளார்கள்?

ஒன்றுமில்லை”

இவ்வாறு வரலாற்றின் திரும்பிய திசைகள் எல்லாம் இயேசு பற்றிய தகவல்கள் குறித்து “ஒன்றுமில்லை”! ” ஒன்றுமில்லை”!! “ஒன்றுமேயில்லை”!!! என பதிலளிப்பது பைபிள் கூறும் கிருஸ்துவர்களது “நம்பிக்கை இயேசு” என்ற பாத்திரம் “வெறும் கற்பனைப் பாத்திரம்தான்” என வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் முடிவுக்கு வர முக்கிய காரணமாக அமைந்தது.

நாம் மேற்கண்டவாறு “முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட எந்த வரலாற்று நூற்களிலும், ஆவணங்களிலும் இயேசு பற்றிய விபரங்கள் எதுவும் நம்பகமான முறையில் இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மை ஆய்வாளர்கள் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனையே வரலாற்று ஆய்வாளர்கள் “ஒரு நூற்றாண்டின் மௌனம்” என்ற பரிபாஷயில்யில் சுட்டிக்காட்டுவர்.

அத்துடன் பைபிள் கூறும் “கிருஸ்துவ இயேசு”வின் போதனைகளைக் கேட்டு விசுவாசித்தவர்கள் எங்கே? அவர் பிறந்தபோதும் மரித்த போதும் ஏற்பட்ட பூகோள அடையாளங்களைக் கண்டவர்கள் எங்கே? இயேசுவின் அற்புதங்களைக் கண்டவர்கள், கேட்டவர்கள், நிவாரணம் பெற்றவர்கள் அனைவரும் எங்கே? இவர்களில் ஒருவர் கூடவா வரலாற்றுக் குறிப்புகளிலோ, ஆவணங்களிலோ, முதுசங்களிலோ, கல்வெட்டுகளிலோ இயேசு பற்றி எந்த ஒரு குறிப்பையும் எழுதவில்லை என்ற கேள்விக்கு கிருஸ்தவர்களிடம் எந்த பதிலும் இல்லை. பதிலளிக்கவும் முடியாது.

குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதா? உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?.

Posted May 16, 2012 by arshathalathary
Categories: Uncategorized

மூலம்: DR. ZAKIR NAIK
தமிழில்: அபூ இஸாரா

கேள்வி:

குர்ஆனின் பல பிரதிகள் உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில்; உஸ்மான் (ரலி) அவர்களால் எரிக்கப்பட்டது. குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதல்ல. மாறாக உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?.

பதில்:

இஸ்லாத்தின் மூன்றாவது கலிபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல குர்ஆனின் பிரதிகளை தொகுத்து ஒரே குர்ஆனாக உருவாக்கப் பட்டதுதான் இன்றைய அருள்மறை என்பது, குர்ஆனை பற்றி உலவுகின்ற கட்டுக்கதைகளில் ஒன்று.

எந்த அருள்மறை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டதோ அதே அருள்மறைதான், இஸ்லாமிய உலகத்தினரால் பெரிதும் போற்றி மதிக்கப்படும் அல்லாஹ்வின் வேதமாக இன்றும் இவ்வுலகில் திகழ்கின்றது. இன்றைக்கு இருக்கும் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட ஒன்று. கட்டுக்கதைக்கான ஆணிவேர் எது என்று நாம் இப்போது ஆய்வு செய்வோம்.

1. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் தொகுக்கப்பட்டு, அவர்களால் சரிபார்க்கவும் பட்டதுதான் இன்றைக்கு நம்மிடையே எழுத்து வடிவில் இருக்கும் அருள்மறை குர்ஆன்.
அல்லாஹ்வால் அருள்மறை குர்ஆனின் வசனங்கள்; அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்டவுடன், அதனை அவர்கள் மனனம் செய்து கொள்வார்கள். பின்னர் இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களை தனது தோழர்கள் அனைவருக்கும் தெரிவித்து, தனது தோழர்களையும் மனனம் செய்து கொள்ளச் செய்வார்கள்.

அத்துடன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களை தனது தோழர்களை கொண்டு எழுதிக்கொள்ளவும் செய்வார்கள். எழுதிக்கொண்ட வசனங்களை சரியானதுதானா என்று மீண்டும் பலமுறை உறுதி செய்து கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (UMMI) எழுதவும், படிக்கவும் தெரியாதவர்கள். எனவேதான் இறைவனால் அருள்மறை வசனங்கள் இறக்கியருளப்பட்டதும் – அந்த வசனங்களை தனது தோழர்களுக்கு தெரிவிப்பார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்களும் நபிகளால் தெரிவிக்கப்பட்ட இறைமறை வசனங்களை எழுதிவைத்துக் கொள்வார்கள். தம் தோழர்களால் எழுதிவைக்கப்பட்ட வசனங்களை மீண்டும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் – தம் தோழர்களை வாசிக்கக் சொல்லி கேட்டு சரியானதுதானா என்பதை உறுதிசெய்து கொள்வார்கள். அவ்வாறு எழுதப்பட்டதில் தவறுகள் ஏதேனும் இருந்தால் அதனை உடனயடியாக திருத்தி எழுதச் சொல்லி – அந்த தவறுகளையும் திருத்திக் கொள்வார்கள். அதேபோன்று தம் தோழர்களால் மனனம் செய்யப்பட்ட வசனங்களும் – தம் தோழர்களால் எழுதப்பட்ட வசனங்களும் சரியானது தானா என்பதை – மேற்படி வசனங்களை மனனம் செய்த தம்; தோழர்களை ஓதச் சொல்லி அதனைiயும் உறுதி செய்து கொள்வார்கள். இவ்வாறாக அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அருள்மறை குர்ஆனாக தொகுக்கப்பட்டது.

2. அருள்மறை குர்ஆனின் அத்தியாயங்களும் அத்தியாயத்தின் வசனங்களும், அல்லாஹ்வால் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது.

அருள்மறை குர்ஆன் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருபத்து இரண்டரை ஆண்டு காலங்களில் அவசியம் ஏற்படும் போதெல்லாம் சிறிது, சிறிதாக இறக்கியருளப்பட்டது. குர்ஆனிய வசனங்கள் அது இறக்கியருளப்பட்ட கால வரிசைப்படி தொகுக்கப்படவில்லை. அருள்மறை கும்ஆனின் அத்தியாயங்களும் அந்த அத்தியாயங்களுக்கு உண்டான வசனங்களும் அல்லாஹ்வால் – வானவர் கோமான் – ஜிப்ரில் (அலை) அவர்கள் மூலம், அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட குர்ஆனிய வசனங்களை எப்போதெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு அறவிக்கிறார்களோ, அப்போதெல்லாம் அந்த குர்ஆனிய வசனம் எந்த அத்தியாயத்தைச் சார்ந்தது, அந்த அத்தியாயத்தின் எந்த வசனத்திற்கு அடுத்துள்ள வசனம் என்பதையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு அறிவிப்பார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.வருடத்தின் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும், அந்த வருடம் முழுவதும் இறக்கியருளப்பட்ட வசனங்களை வானவர் கோமான் – ஜிப்ரில் (அலை) அவர்களிடம் – வசனங்களின் வரிசைக்கிரமங்களையும், சரியான வசனங்கள் தானா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த கடைசி ஆண்டில் அருள்மறை குர்ஆன் முழுவதும் சரியானதுதானா என்று இரண்டு முறை சரிபார்க்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட முறைகள் மூலம் அண்ணல் நபி (ஸல்) உயிரோடிருந்த காலத்திலேயே – அருள்மறை குர்ஆனின் எழுத்து வடிவமும்- அருள்மறை குர்ஆனை மனனம் செய்த தோழர்களின் மனப்பாட வடிவமும் – நபிகளாரின் நேரடி கண்காணிப்பின் கீழ் சரிபார்க்கப்பட்டு – தொகுக்கவும் பட்டது என்பதற்கு மேற்கண்ட விளக்கங்கள் சான்றாக அமைந்துள்ளன.

3. அருள்மறை குர்ஆன் ஒரு பொதுவான வடிவில் பிரதியெடுக்கப்பட்டது.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அதன் சரியான வரிசைக் கிரமப்படி இருந்தது. ஆனால் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் துண்டு துண்டான தோல்களிலும், தட்டையான கல் துண்டுகளிலும், மரப் பட்டைகளிலும், பேரீத்த மரத்தின் கிளைகளிலும், மற்றுமுள்ள மரக் கிளைகிலும் தனித்தனியாக எழுதப்பட்டிருந்தது.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட முதல் கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள், பல பொருட்களிலும் தனித்தனியாக எழுதப்பட்டு இருந்த அருள்மறை குர்ஆனின் வசனங்களை, ஒரே இடத்தில் இருக்கும்படியாக தாள் (SHEETS) போன்ற ஒரு பொதுவான பொருளில் – எழுதும்படி பணித்தார்கள். அவ்வாறு பல பொருட்களில் எழுதப்பட்டு இருந்த அருள்மறை குர்ஆனின் வசனங்களை தாள் போன்ற பொருளில் எழுதி – அருள்மறை குர்ஆனின் மொத்தத் தொகுப்புகள் எதுவும் – சிதறிப்போய் விடக்கூடாது என்பதற்காக அதனைக் கட்டியும் வைத்தார்கள்.

4. உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரே பொருளில் தொகுத்து எழுதப்பட்டிருந்த அருள்மறை குர்ஆனை பிரதி எடுக்கும் பணியை மேற்கொண்டார்கள்.

அருள்மறை குர்ஆனின் வசனங்களை அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் தம் நாவால் மொழியும் போதெல்லாம், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அதனை தாமாகவே எழுதி வைத்துக் கொள்வார்கள். அவ்வாறு தோழர்களால் எழுதி வைக்கப்பட்ட வசனங்களில் நபி (ஸல் ) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களும் உண்டு. அவ்வாறு நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களில் தவறுகள் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் . தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்ன அருள்மறை வசனங்கள் எல்லாவற்றையும் – எல்லா நபித்தோழர்களும் நேரடியாக கேட்டிருக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு. ஆதலால் சில நபித் தோழர்கள் – சில வசனங்களை தவற விடக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்ப்பட்டிருக்கலாம் என்பன போன்ற விவாதங்கள், இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்த இஸ்லாமியர்களிடையே உருவானது.

மேற்படி விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்பிய உஸ்மான் (ரலி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்பட்ட அருள்மறை குர்ஆனை, அப்போது உயிரோடிருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள்.

பெற்றுக் கொண்ட அருள்மறை குர்ஆனை – நபி (ஸல்) அவர்கள் குர்ஆனிய வசனங்கள் அருளப்பட்ட பொதெல்லாம் தம் தோழர்களுக்கு சொல்லும் பொழுது – அதனை எழுதி வைத்துக் கொண்ட தோழர்களில் நான்கு பேரை தேர்வு செய்து – தேர்வு செய்யப்பட்டவர்களில் ஸெய்த் பின் தாபித் (ரலி) அவர்களின் தலைமையில் அருள்மறை குர்ஆனை இன்னும் சிறந்த முறையில் பிரதியெடுக்கச் செய்தார்கள். அவ்வாறு பிரதியெடுக்கப்பட்ட அருள்மறை குர்ஆன் உஸ்மான் (ரலி) அவர்களால் இஸ்லாமிய மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் தங்களிடம் சிலர் அருள்மறை குர்ஆனின் வசனங்களை வைத்திருந்தார்கள். அவ்வாறு வைத்திருந்த வசனங்களில் சில முற்றிலும் பூர்த்தியாகத வசனங்களும் – எழுத்துப்பிழையுள்ள வசனங்களும் இருக்கலாம். இதன் காரணத்தால் உஸ்மான் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்படாத வசனங்கள் எதுவும் மக்களிடம் இருந்தால், அதனை அழித்துவிடும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனின் பிரதிகள் இரண்டு இப்போதும் பல நாடுகளாக சிதறுண்டு போன ரஷ்யாவின் தலைநகர் தாஷ்கண்டில் உள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அருங்காட்சியகத்திலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

5. அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி அரபி மொழி அல்லாதவர்களுக்காக பிரித்தறியக் கூடிய குறியீடுகள் சேர்க்கப்பட்டது.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனில் – அரபி மொழி அல்லாதவர்களும் – அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி – பிரித்தறியக் கூடிய குறியீடுகள் சேர்க்கப்படாமல் இருந்தது. இக்குறியீடுகளை – ஃபத்ஆ – தம்மா – கஸ்ரா என்று அரபி மொழியிலும், ஸபர் – ஸேர் – பேஷ் என்று உருது மொழியிலும் அழைப்பார்கள். அரபி மொழி அரபியர்களின் தாய்மொழி என்பதால் – அருள்மறை குர்ஆனின் வசனங்களை சரியான முறையில் உச்சரித்து ஓதுவதற்கு – அரபியர்களுக்கு மேற்படி குறியீடுகள் தேவையில்லை.

ஆனால் அரபி மொழியைத் தாய் மொழியாக கொண்டிராதவர்களுக்கு – குர்ஆனின் வசனங்களை சரிவர ஓத வேண்டுமெனில் மேற்படி குறியீடுகள் அவசியம். மேற்படி குறியீடுகள் ஹிஜ்ரி 66-86 வரை (கி;. பி. 685 முதல் 705 வரை) ஆட்சி புரிந்த – உமையாத் – காலத்தின் ஐந்தாவது கலீஃபா – மாலிக் அர்-ரஹ்மான் என்பவரால் அல்-ஹஜ்ஜாஜ் என்பவர் ஈராக்கில் கவர்னராக இருந்த காலத்தில் அருள்மறை குர்ஆனில் இணைக்கப்பட்டது.

தற்போது நம்மிடையே இருக்கும் அருள்மறை பிரித்தறியக் கூடிய குறியீடுகளை கொண்டிருக்கிறது. ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறையில் இவ்வாறான குறியீடுகள் இல்லை என்ற காரணத்தால் குர்ஆனில் வேறுபாடுகள் இருக்கின்றது என்று சிலர் வாதிடலாம். அவ்வாறு வாதிடுவோர்கள் ‘குர்ஆன்’ என்ற வார்த்தைக்கு ‘ஓதுதல்’ என்ற பொருள் உண்டு என்பதை அறியாhதவர்கள். எனவே குர்ஆனை அதன் வசனங்களின் உச்சரிப்பு மாறாமல் ஓதுவதுதான் இங்கு முக்கியமேத் தவிர, எழுத்துக்களோ அல்லது பிரித்தறியக் கூடிய குறியீடுகளோ அல்ல. அரபி வார்த்தைகளின் உச்சரிப்பு சரியானதாக இருக்கும் பட்சத்தில், அதன் அர்த்தங்களும் சரியானதாகத்தான் இருக்கும்.

6. அருள்மறை குர்ஆனை பாதுகாப்பதாக அல்லாஹ் வாக்குறுதியளிக்கிறான்:

அருள்மறை குர்ஆனின் பதினைந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் ஹிஜ்ரின் ஒன்பதாவது வசனத்தில் அல்லாஹ் அருள்மறை குர்ஆனை அவனே பாதுகாப்பதாக கூறுகின்றான்:

‘நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம். நிச்ச்யமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கிறோம்.’ (அல்-குர்ஆன் 15 : 9)

 

source:ஒற்றுமை.கொம்

இறைவன் திருக்குர்ஆனில் தவறாக ஒரு வசனத்தை இறக்கிவிட்டு, பின்னர் வேறு ஒரு வசனத்தின் மூலம் செய்த தவறினை திருத்திக்கொண்டானா?

Posted May 16, 2012 by arshathalathary
Categories: Uncategorized

மூலம்: DR. ZAKIR NAIK
தமிழில்: அபூ இஸாரா

கேள்வி:

இஸ்லாமியர்கள் ‘விட்டொழிக்கும் விதி’ யில் நம்பிக்கையுள்ளவர்கள். (குர்ஆனில் முதலில் அருளப்பட்ட வசனங்களை விட்டு விட்டு, அதற்கு பின்பு அருளப்பட்ட வசனங்களில் நம்பிக்கை கொள்வது). இவ்வாறு செய்வது, இறைவன் தவறாக ஒரு வசனத்தை இறக்கிவிட்டு, பின்னர் வேறு ஒரு வசனத்தின் மூலம் செய்த தவறினை திருத்திக்கொள்வது போல் தெரியவில்லையா?.

பதில்:

 • 1. வித்தியாசமான இரண்டு பொருள் கொள்ளல்:

அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 106வது வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது:

‘ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டு வருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?.’ (அல் குர்ஆன் 2 : 106)

மேற்படி வசனத்திற்கு அணிசேர்க்கும் வகையில் அருள்மறையின் பதினாறாவது அத்தியாயம் ஸுரத்துன் நஹ்லின் 101 வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது.

‘(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால் (உம்மிடம்) ‘நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்’ என்று அவர்கள் கூறுகிறார்கள். எ(ந்த நேரத்தில் எ)தை இறக்க வேண்டு;மென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன். எனினும் அவர்களில் பெரும்பாலோர் இவ்வுண்மையை அறிய மாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 16 : 101)

மேற்கண்ட இரண்டு வசனங்களிலும் ‘ஆயத்’ என்கிற அரபி வார்த்தை பயன் படுத்தப்பட்டிருக்கிறது. மேற்படி ‘ஆயத்’ என்கிற அரபி வார்த்தைக்கு ‘இறைவனின் அத்தாட்சிகள்’ என்றும் ‘இறைவசனங்கள்’ என்றும் ‘இறை வேதங்கள்’ என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

அருள்மறையின் இரண்டாம் அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 106 வது வசனத்திற்கு நாம் இரு விதங்களில் பொருள் கொள்ளலாம்.

மேற்படி வசனத்தில் குறிப்பிட்டுள்ள ‘ஆயத்’ என்கிற அரபி வார்த்தைக்கு இறைவேதங்கள் என்று பொருள் கொண்டால் அருள்மறை குர்ஆன் என்று பொருள் கொள்ள வேண்டுமேத் தவிர, அருள் மறை குர்ஆனுக்கு முன்பிருந்த வேதங்களான தவ்ராத் – இன்ஜீல் – ஜபூர் வேதங்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது, குர்ஆனுக்கு முந்தைய வேதங்களான தவ்ராத் – இன்ஜீல் – ஜபூர் போன்ற வேதங்கள் மறக்கப்பட வேண்டும் என்றும் பொருள் கொள்ளுதல் கூடாது. மாறாக அவைகளுக்குச் சமமான அல்லது அவைகளைவிடச் சிறந்த வேதமான குர்ஆனை அருளியிருக்கிறான் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

மேற்படி வசனத்தில் குறிப்பிட்டுள்ள ‘ஆயத்’ என்கிற அரபி வார்த்தைக்கு இறை வசனங்கள் என்று பொருள் பொருள் கொண்டால், மேற்படி வசனங்கள் அருள்மறை குர்ஆனில் உள்ள வசனங்கள் என்று பொருள் கொள்ள வேண்டுமேத் தவிர, அருள் மறை குர்ஆனுக்கு முன்னால் அருளப்பட்ட வேதங்களான தவ்ராத் – இன்ஜீல் – ஜபூர் – வேதங்களில் உள்ள வசனங்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது. மேலும் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் எதுவும் அல்லாஹ்வால் வழக்கிலிருந்து விட்டொழிக்கப்பட்டு விட்டதாக கருதக் கூடாது.

மாறாக மேற்படி வசனங்களுக்கு சமமாக அல்லது மேற்படி வசனங்களை விடச் சிறந்த வசனங்களை அருளியிருப்பதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும். முன்னர் இறக்கப்பட்ட வசனங்களுக்கு சமமாக அல்லது அதைவிட சிறந்த வசனம் பின்னர் இறக்கியருளப்பட்டதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களிலும், முஸ்லிம் அல்லாத மாற்று மதத்தவர்களிலும் பலபேர் மேற்படி வசனங்களுக்கு பொருள் கொள்ளும் போது, ஒரு விஷயத்தைப் பற்றி புதிய வசனங்கள் இறக்கப்படும் போது அந்த விஷயம் சம்பந்தமாக முன்னால் இறக்கப்பட்ட வசனங்கள் வழக்கிலிருந்து விட்டொழிக்கப் படவேண்டும் என தவறான கருத்துக்களை கொண்டுள்ளனர். முந்தைய வசனங்கள் இன்றைய கால கட்டத்திற்குப் பொருந்தாது என்றும், பழைய வசனங்களுக்குச் சமமாக அல்லது, இன்னும் சிறப்பிற்குரிய புதிய வசனங்கள் இறக்கியருளப்பட்டதால் முந்தைய வசனங்களை வழக்கிலிருந்து விட்டு விட வேண்டும் என்கிற தவறான கருத்தைக் கொண்டுள்ளனர்.

இன்னும் முந்தைய வசனங்கள் – புதிதாக இறக்கியருளப்பட்ட வசனங்களோடு முரண்படுகின்றது என்கிற தவறான கருத்தையும் கொண்டுள்ளனர். இவ்வாறு இறக்கியருளப்பட்ட வசனங்களை சிலவற்றை உதாரணங்களோடு நாம் ஆய்வு செய்வோம்.

 • 2. முழு குர்ஆனைப் போன்ற ஒன்றையோ அல்லது குர்ஆனில் பத்து அத்தியாயங்களை போன்றவற்றையோ அல்லது ஒரே ஒரு அத்தியாயத்தைப் போன்றோ கொண்டு வருமாறு பணித்தல்.

இஸ்லாத்தை எதிர்த்து வந்த அரபிகளில் ஒரு சிலர் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வேதமல்ல. மாறாக அண்ணல் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்டது என்று குற்றம் சுமத்தி வந்தனர். அவ்வாறு குற்றம் சுமத்தி வந்த அரபிகளுக்கு சவால் விடும் விதமாக, அல்லாஹ் அருள்மறை குர்ஆனின் கீழக்கண்ட வசனத்தை இறக்கியருளினான்:

‘இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் சிலர் சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வர முடியாது’ என்று (நபியே!) நீர் கூறும்.’. (அல்-குர்ஆன் அத்தியாயம் 17 ஸுரத்துல் பனீ இஸ்லாயீல் – 88வது வசனம்.)

குற்றம் சுமத்தி வந்த அரபிகளுக்கு சவால் விட்ட அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம், கீழ்க்கண்ட வசனத்தின் மூலம் சவாலை இன்னும் எளிதாக்குகிறது.

அல்லது ‘இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்’ என்று அவர்கள் கூறுகிறார்களா?. ‘(அப்படியானால்) நீங்களும் இதைப்போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள்- நீங்கள் உண்மையாளராக இருந்தால்.! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்குச் சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்’, என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்-குர்ஆன் அத்தியாயம் 11 ஸுரத்துல் ஹுது – 13 வது வசனம்.)

குற்றம் சுமத்திய அரபிகளுக்கு, அருள்மறை குர்ஆன் கீழ்க்கண்ட வசனங்களின் மூலம் தனது சவாலை மேலும் எளிதாக்குகிறது.

இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப்போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்: அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!’ என்று. (அல்-குர்ஆன் அத்தியாயம் 10 ஸுரத்துல் யூனுஸ் – 38 வது வசனம்.)

இன்னும், ((முஹம்மது (ஸல் என்ற)) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து) க் கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.’
‘அப்படி நீங்கள் செய்யாவிட்டால் – அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது – மனிதர்களையும், கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும், அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) நிராகரிப்பாளர்களுக்காவே அது சித்தப்படுத்தப் பட்டுள்ளது (அல்-குர்ஆன் அத்தியாயம் 02 ஸுரத்துல் பகராவின் – 23 – 24 வது வசனங்கள்.)

இவ்வாறு அல்லாஹ் ஸுப்ஹானஹுவத்தாலா தனது சவாலை சிறிது சிறிதாக எளிதாக்குகிறான். அருள்மறை குர்ஆன் முதலில் அருள்மறை பற்றி குற்றம் சுமத்திய அரபிகளுக்கு – குர்ஆனைப் போன்று வேறொரு வேதத்தை கொண்டு வருமாறு பணிக்கிறது. பின்பு குர்ஆனில் உள்ளது போன்று பத்து அத்தியாயங்களை கொண்டு வருமாறு பணிக்கிறது.

கடைசியாக குர்ஆனில் உள்ளது போன்று ஒரே ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள் என்று பணிக்கிறது. இவ்வாறு கொண்டு வருவதற்கு கட்டளையிட்டதன் மூலம் – அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 23 மற்றும் 24 வது வசனங்கள் அதற்கு முன்புள்ள முன்று வசனங்களான 17:88, 11:13, 10:38 ஆகிய வசனங்களோடு முரண்படவில்லை. இரண்டு கருத்துக்கள் அல்லது செயல்கள் ஒன்றுக்கொன்று மாறுபடும் நிலைக்கு – (அதாவது இரண்டு செயல்கள் அல்லது கருத்துகள் ஒரே நேரத்தில் செயல்பட முடியாத நிலைக்கு) – முரண்பாடு என்று பொருள்.

அருள்மறை குர்ஆனின் பதினேழாவது அத்தியாயத்தின் 88 வது வசனம் மாற்றப்பட்டு விட்டாலும், அந்த வசனம் அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்வின் வார்த்தையாக – அது சொல்லும் பொருளுக்கு விளக்கமாக -இன்றும் நிலைபெற்றுள்ளது.

அந்த வசனத்தின் மூலம் அருள்மறை குர்ஆன் விடுத்த சவால் இன்றைக்கும் நிலைபெற்று நிற்கிறது. அதபோலவே அதற்கு பின்னால் உள்ள வசனங்களான 11:13 மற்றும் 10:38 போன்ற வசனங்களும் அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்வின் வார்த்தைகளாக, அவைகள் சொல்லும் பொருளுக்கு விளக்கமாக நிலைபெற்று நிற்கின்றன. எந்த வசனத்தின் பொருளும் எந்த வசனத்தின் பொருளோடும் முரண்படாமல் – அவைகள் சொல்லக் கூடிய பொருளுக்கு உரிய நிலையில் நிலைபெற்று நிற்கின்றன. கடைசியில் சொல்லப்பட்ட வசனத்தின் மூலம் விடப்பட்ட சவாலானது, முந்தைய வசனங்களின் மூலம் விடப்பட்ட சவாலைவிட எளிதானது. இவ்வாறு கடைசி வசனத்தின் மூலம் விடப்பட்ட எளிதான சவாலே இன்னும் நிறைவேற்றப்படாத போது, முந்தைய மூன்று வசனங்களின் மூலம் விடப்பட்ட சவாலை நிறைவேற்றுவது என்கிற செயலுக்கு இடமில்லை.

உதாரணத்திற்கு – படிப்பில் மந்தமாக உள்ள ஒரு மாணவனைப் பார்த்து – அவன் பத்தாவது வகுப்பில் தேறுவதற்கு தகுதியானவர் இல்லை என்று சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே மாணவரைப் பார்த்து அவர் ஐந்தாவது வகுப்பில் தேறுவதற்கு தகுதியானவர் இல்லை என்று சொல்கிறேன். பின்பு அதே மாணவரைப் பார்த்து அவர் முதலாம் வகுப்பில் கூடத் தேறுவதற்கு தகுதியானவர் இல்லை என்று சொல்கிறேன். இறுதியில் அவர் பாலர் பள்ளியில் கூடத் தேறுவதற்கு தகுரியானவர் இல்லை என்று சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மாணவன் பள்ளியில் சேர வேண்டுமெனில் முதலில் பாலர் பள்ளியில் தேற வேண்டும். நான் கடைசியாக என்ன சொன்னேன் எனில் – மேற்படி மந்தமான மாணவன் பாலர் பள்ளியில் கூடத் தேறுவதற்று தகுதியானவன் இல்லை என்று சொன்னேன். நான் மேலே சொன்ன நான்கு வாக்குகளில் எதுவும் – ஒன்றுக் கொன்று முரண்படவில்லை என்பதை நன்றாகக் கவனிக்க வேண்டும். ஆனால் இறுதியாக நான் சொன்ன மேற்படி மந்தமான மாணவன் பாலர் பள்ளியில் கூடத் தேறுவதற்று தகுதியானவன் இல்லை என்கிற வாக்கு மாத்திரம் மேற்படி மாணவனின் அறிவுத் திறனை அறிந்து கொள்ள போதுமானதாகும். பாலர் பள்ளியில் கூடத் தேறுவதற்கு தகுதியில்லாத மாணவன் – முதலாம் வகுப்பிலும், ஐந்தாம் வகுப்பிலும், பத்தாம் வகுப்பிலும் தேர்வு பெற தகுதியுள்ளவன் என்கிற கருத்துக்கே இடமில்லாமல் போய்விடுகிறது.

 • 3. வெறியூட்டும் போதையை படிப்படியாக தடைசெய்தல்.

அருள்மறை குர்ஆனில் மேற்படி வசனங்களுக்கு மேலும் ஓர் உதாரணம் வெறியூட்டும் போதையை படிப்படியாக தடைசெய்தல் சம்பந்தமான வசனங்கள் ஆகும். கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 219 வது வசனம் குடிபோதையை தடைசெய்வது பற்றி இறங்கிய முதல் வசனமாகும்.

‘(நபியே!) மது பானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்: நீர் கூறும்: ‘அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கின்றது: மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு: ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம், அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.’(அல்குர்ஆன் 2:219)

குடி போதையை தடை செய்வது பற்றி இரண்டாவதாக இறக்கப்பட்ட வசனம் அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் நிஷாவின் 43வது வசனமாகும்:

‘நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்.’(அல்குர்ஆன் 4:43)

குடி போதையை தடை செய்வது பற்றி கடைசியாக இறக்கப்பட்ட வசனம் அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90 வது வசனமாகும்:

‘நம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத் தக்கச் செயல்களிலுள்ளவையாகும்: ஆகவே இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.’

அருள்மறை குர்ஆன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்ற பின்பு, அவர்கள் உயிரோடு வாழ்ந்திருந்த காலமான இருபத்து இரண்டரை ஆண்டு காலங்களில் சிறிது சிறிதாக இறக்கியருளப்பட்டது. அவர்கள் காலத்தில் சமுதாயத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் யாவும் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டது. சமுதாயத்தில் திடீரென- எதிர்பாராத விதத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், கலகம் அல்லது குழப்பம் விளைவிக்க காரணமாக அமையலாம். எனவே சமுதாயத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் யாவும் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டது

மதுபானம் அருந்துவதை தடை செய்யும் வசனங்கள் மூன்று நிலைகளில் கொண்டு வரப்பட்டது. முதலாவது வசனம் மதுபான போதையில் பெரும் பாவமும், சில பயன்களும் உண்டு. ஆனால் பாவமானது பலனைவிட அதிகமாகும் என்று உணர்த்துகிறது. மதுபானம் அருந்துவதை தடை செய்வது பற்றி இரண்டாவதாக இறங்கிய வசனம், போதையோடு இருக்கும் நிலையில் தொழுகையை மேற்கொள்ளாதீர்கள் என்று வலியுறுத்துகிறது.

தொழும் காலங்களில் – போதையில் இருத்தல் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வசனம், தொழாத நிலையில் போதையில் இருக்கலாமா – கூடாதா என்பது பற்றி குறிப்பிடாமல் விட்டு விடுகிறது. போதையில் இருக்கலாமா? இருக்கக் கூடாதா? என்பது பற்றி குர்ஆன் குறிப்பிடாமல் விட்டு விடுகிறது.

தொழாத நேரங்களில் போதையில் இருக்கலாம் என்று குர்ஆன் குறிப்பிட்டு இருந்தால், அது சொன்ன முந்தைய வசனத்தோடு கண்டிப்பாக முரண்பட்டிருக்கும். ஆனால் அல்லாஹ் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து அருள்மறை குர்ஆனை இறக்கியருளி இருக்கிறான். எனவேதான் அருள்மறை குர்ஆனில் முரண்பாடுகளே இல்லை. கடைசியாக எல்லா நேரங்களிலும் போதையை தடை செய்யும் வசனம் – அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90 வசனத்தின் மூலம் இறக்கியருளப்பட்டது.

மேற்குறிப்பிடப்பட்ட மூன்று வசனங்களும் ஒன்றுக் கொன்று முரண்படவில்லை என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட மூன்று வசனங்களும் ஒன்றுக் கொன்று முரண்பட்டால், சமகாலத்தில் குறிப்பிட்ட மூன்று வசனங்களையும் நாம் பின்பற்ற முடியாமல் போயிருக்கும். ஒரு முஸ்லிம் அருள்மறை குர்ஆனின் அனைத்து வசனங்களையும் பின்பற்ற வேண்டும் என்றிருப்பதால் மேற்குறிப்பிட்ட வசனங்களில் கடைசியாக இறக்கியருளப்பட்ட வசனமான ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90 வது வசனத்தை பின்பற்ற வேண்டும். அதே சமயம் அதற்கு முன்னால் இறக்கியருளப்பட்ட இரண்டு வசனங்களையும் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.

உதாரணத்திற்கு நான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றதில்லை என்று சொல்கிறேன். பின்பு நான் கலிஃபோர்னியாவிற்கும் சென்றதில்லை என்று சொல்கிறேன். கடைசியாக நான் சொல்கிறேன் நான் அமெரிக்காவிற்கும் சென்றதில்லை என்று சொல்கிறேன். மேற்படி எனது கூற்றுக்கள் எதுவும் ஒன்றுக்கொன்று முரண்படவில்லை. மாறாக எனது ஒவ்வொரு கூற்றும் அதிகமான விபரங்களைத்தான் தருகின்றன. எனது மூன்றாவது கூற்று முந்தைய எனது இரண்டு கூற்றுக்களையும் உள்ளடக்கியுள்ளது. இவ்வாறாக நான் கடைசியாக சொன்ன, நான் அமெரிக்கா சென்றதில்லை என்ற எனது கூற்று எனது முந்தைய இரண்டு கூற்றுக்களான நான் லா லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றதில்லை என்பதையும் நான் கலிஃபோர்னியாவிற்கும் சென்றதில்லை என்பதையும் உள்ளடக்கியுள்ளது.

அதுபோலவே, எல்லா நேரங்களிலும் போதiயுடன் இருப்பது தடை செய்யப் பட்டதற்கான வசனம் இறங்கியவுடன், தொழுகை நேரத்தில் போதையுடன் இருப்பதுவும் தானாகவே தடை செய்யப் பட்டுவிட்டது. தவிர போதையுடன் இருப்பவர்களுக்கு உண்டான ‘போதையுடன் இருப்பதில் நன்மையை விட தீமையே அதிகம்’ – என்கிற செய்தியும் இன்று வரை அழியாத உண்மையாக விளங்கி வருகிறது.

 • 4. அருள்மறை குர்ஆனில் முரண்பாடுகளே இல்லை.

மேலே சுட்டிக் காட்டப்ட்ட வசனங்களில் ‘விட்டொழிக்கும் விதி’யை நடைமுறை படுத்தவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை. ஏனெனில் மேலே சுட்டிக் காட்டப்பட்ட வசனங்கள் மூன்றையும் ஏக காலத்தில் ஒன்றாக பின்பற்றி நடக்கக் கூடிய சாத்தியக் கூறுகளே அதிகமாக உள்ளது.

அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட வேதம் என்பதால் – அதில் முரண்பாடுகளை காணமுடியாது. மேற்படி கருத்துக்கு ஆதாரமாக அருள் மறை குர்ஆனின் நான்காவது அத்தியாம் ஸுரத்துல் நிஷாவின் 82 வது வசனம் அமைந்துள்ளதை காணலாம்:

‘அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா?. (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால்’ இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.’. (அல்குர்ஆன் 4:82)

 

source:ஒற்றுமை.கொம்

மாற்கு எழுதிய மர்மச் சுவிஷேசம்

Posted May 16, 2012 by arshathalathary
Categories: Uncategorized

 

அபூ ஸைத் அல் அதரி
abuzaidalathary@gmail.com

உலகிலுள்ள கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானோர் இன்று நடைமுறையில் உள்ள‌ பைபிளை இறைவேதமாக நம்புகின்றனர். குறிப்பாக இயேசு கிறிஸ்துவின் வாழ்வு பற்றி பேசும் மத்தேயு, மாற்கு, லூக்கா, மற்றும் யோவான் என்போரால் எழுதப்பட்ட நான்கு சுவிசேஷங்களும், இயேசுவின் சீடர்களால்  “பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு” எழுதப்பட்டன என்றும் அவைகளில் கூட்டல், குறைத்தல், திருத்தல், மறைத்தல் எதுவும் செய்யப்பட்வில்லை எனவும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளனர். இந் நம்பிக்கை முற்றிலும் தவறானது என  தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தக்க சான்றுகளுடன்  நிரூபிக்கும் நாம் இது பற்றிய தங்களது அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் பெரிதும் வரவேற்கிறோம்.

“மாற்கு எழுதிய மர்மச் சுவிஷேசம்” எனும் இக்கட்டுரையின்  மையப்பகுதிக்குள் செல்லுமுன்  இது  தொடர்பான  நான்கு  முக்கிய  பின்னணிகளை, பின்புலங்களை அறிந்து கொள்வது  அவசியமாகும்.

1. அதிசயம் நிகழ்ந்தது…..

பேராசிரியர் “மோர்ட்டன் ஸ்மித்” (Morton Smith) அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் “புராதன வரலாறு” துறையில் பணியாற்றியவர். கி.பி 1940 காலப்பகுதியில் ஜெரூஸலம் நகரில் இருந்து 12 மைல் தொலைவில்  தென் கிழக்குப் பகுதியில் “மார் ஸபா”   எனும் இடத்தில் அமைந்துள்ள கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று க்கியத்துவம் வாய்ந்த கிறிஸ்துவ ‘ஓர்தொடெக்ஸ்  மடாலயம்’ ஒன்றுக்கு விஜயம் செய்தார். அங்கு இரு மாத காலம் தங்கியிருந்து அங்கிருந்த துறவிகளுடன் சேர்ந்து அவர்களது நாளாந்தப் பணிகளில் பங்கேற்றார். பின்பு மீண்டும் கி.பி 1958 ம் ஆண்டு குறித்த மடாலயத்திற்கு விஜயம் செய்து தனது ஓய்வு நேரங்களில் அங்கு காணப்பட்ட பண்டைய கிரேக்க மொழியில் அமைந்த தொன்மையான வரலாற்று ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகளுக்கான “அட்டவணை” (Catalogue) ஒன்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

dsc034121

இவ்வாறு பேராசிரியர் பழங்கால ஆவணங்களை தூசு தட்டி அவைகளுக்கான “அட்டவணை” (Catalogue) தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு,  17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நூலை பரிசோதித்துக் கொண்டிருந்த போதுதான் கிறிஸ்துவர்களது நம்பிக்கையின் அஸ்த்திவாரத்தையே ஆட்டங்காணச்   செய்த‌   அதிசயம்   நிகழ்ந்தது……. (பார்க்க 1)

2. கிளமென்ட் ஓஃப் அலக்ஸாந்தரிய்யா:

dsc034121

Clement of Alexandria

‘கிளெமென்ட் ஓஃப் அலக்ஸந்தரிய்யா’ (Clement of Alexandria) என்பவர் கிறிஸ்துவ மதத்திலும், கிறிஸ்துவ சமுதாயத்திலும் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். “கிறிஸ்துவ இறையியல் தத்துவத்தின் தந்தை” என இவரை கிறிஸ்துவர்கள் அடையாளப்படுத்துவர்.

கிறிஸ்துவ வரலாற்றை முதன் முதலில் பதிவு செய்த “யூஸாபியூஸ்” என்பவர் ‘கிளெமென்ட்’ அவர்களை “விவிலிய நூற்களில் நன்கு புலமை பெற்றவர்” என வர்ணித்துள்ளார். அவ்வாறே கிளெமென்ட் அவர்கள் அறிவு தேடுவதில் அடங்காத ஆர்வம் கொண்டவர் எனவும் கிரேக்க வரலாற்றில் மிக நிபுணத்துவம் பெற்றவர் எனவும் மத போதகர் ‘கிறீலஸ்’ என்பவர் சான்று பகர்ந்துள்ளார்.

“எங்களில் அதிக அறிவுடையவராக கிளெமென்ட் திகழ்ந்தார்” என அக்கால மத குரு “ஜீரோம்” குறிப்பிட ‘சாக்ரடீஸ்’ அவர்களோ “கிளெமென்ட் அனைத்து அறிவும் நிரம்பப் பெற்றவர்” என சிலாகித்துக் கூறியுள்ளார்.

“டி தியுஸ் ப்ளாவியுஸ் கிளெமென்ஸ்” எனும் இயற்பெயரை உடைய கிளெமென்ட் அவர்கள் கி.பி. சுமார் 150ம் ஆண்டளவில் சிலை வணங்கிகளான பெற்றோருக்குப் பிறந்தார்.  கிளெமென்ட் அவர்களை வரலாற்றாசிரியர்கள் சிலர் அலக்ஸாந்தரிய்யாவில் பிறந்தார் எனக் குறிப்பிட, வேறு சிலரோ “ஏதென்ஸ்” நகரில் பிறந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

‘கிளெமென்ட்’ அவர்கள் எப்போது சிலை வணக்கத்தைக் கைவிட்டு கிறிஸ்தவத்தை தழுவினார் என்ற விபரங்கள் எதுவும் வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை.

எனினும், பண்பாட்டு ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் ‘கிளெமென்ட்’ சிறந்து விளங்கினார். தென் இத்தாலி, சிரியா, பலஸ்தீன் ஆகிய பகுதிகளுக்குப் பயணம் செய்து அங்கு கிறிஸ்துவப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கிளெமென்ட், அக்காலத்தில் காணப்பட்ட வழிதவறிய கிறிஸ்த்தவ மதப் பிரிவுகளுக்கெதிராக தன‌து எழுத்தாலும், பேச்சாலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் எனவும் இறுதியில் அலக்ஸாந்தரிய்யா நகரில் தங்கியிருந்தார் என்ற விபரங்களையும் வரலாற்றில் நாம் காணக்கூடியதாக உள்ளது.

அலக்ஸாந்தரிய்யா மதபீடத்தின் தலைவர் “பந்தினூஸ்” என்பவரிடம் கல்வி கற்ற கிளெமென்ட் “பந்தினூஸ்” கி.பி.190ம் ஆண்டளவில் இந்தியா பயணமாகும் வரை அவருக்கு உதவியாளராகவும், பின்பு மதபீடத்தின் தலைவராகவும் பதவிவகித்தார்.

கி.பி 202ம் ஆண்டளவில் “செப்திமோஸ் ஸுவைரஸ்” என்ற ஆட்சியாளனின் அடக்கு முறைக்குப் பயந்து ‘அந்தாக்கியா’ சென்ற கிளெமென்ட் கி.பி 215ம் ஆண்டளவில் மரணித்தார்.

‘கிளெமென்ட்’ எழுதிய நூற்களுள் முக்கியமானதாக பின்வரும் மூன்று நூற்களை குறிப்பிடலாம்.

1. Protrepticus  –  “உபதேசம்”

2 .Paedagogas   –   “ஆசான்”

3 .Stromata    –  “கதம்பங்கள்”

நாம் மேலே சுருக்கமாக தந்திருக்கும் தகவல்கள் விரிவாக “ஹென்னி பிஸ்கா” என்பவர் எழுதிய “கிளெமென்ட் ஓஃப் அலக்ஸாந்தரிய்யாவும் எதிர்மறை இறையியலின்  ஆரம்பமும்” என்ற நூலில் 57ம் பக்கம் முதல் 70ம் பக்கம் வரை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. (பார்க்க 2)

3. கர்போக்ரடியர்கள்:

பெரும்பான்மை கிறிஸ்தவ சமுதாயத்தில் இருந்து ஆரம்பகாலத்தில் பிரிந்து சென்ற ஒரு நெறி பிறழ்ந்த பிரிவாக “கனூஸிய்யர்கள்” அடையாளங் காணப்படுகிறார்கள். கி.பி 130‍ முதல் கி.பி 150 வரையிலான காலப்பகுதியில் கனூஸிய்யர்களில் தோன்றிய உட்பிரிவு ஒன்றே “கர்போக்ரடியர்கள்” என அழைக்கப்பட்டனர்.

இயேசு கிறிஸ்து ‘கடவுளோ, கடவுளின் குமாரனோ அல்ல’ என்றும் அவர் ஞானம் பெற்றவர்களில் ஒருவர் என்றும் நம்பிய இப்பிரிவினர் தங்களுக்கிடையில் காணப்பட்ட ‘மனைவியர்’ உட்பட  சகல சொத்துகளையும் சகலருக்கும் பொதுவான(?) உடமையாகக் கருதி வந்தனர் என்ற தகவலை கொலம்பியா கலைக் களஞ்சியத்தின் ஆறாம் பதிப்பு உறுதி செய்கிறது. (பார்க்க 3)

மேலும் இப்பிரிவினர் பாலியல் நடவடிக்கைகளூடாக நித்திய ஜீவனை அடைய முடியும்(?) என நம்பினார்கள் என்பதையும் அதற்காக வேண்டி பைபிளில் இருந்தே ஆதாரங்கள் காட்டினார்கள் என்பதையும் நாம் சற்றுப் பின்னால் நோக்க இருக்கிறோம்.

4. மாற்கு எழுதிய சுவிஷேசமும் மறைக்கப்பட்ட வசனங்களும்:

இயேசு கிறிஸ்துவின் வாழ்வு பற்றி எடுத்துக்கூறும் நான்கு சுவிஷேசங்களை, குறிப்பாக மாற்கு எழுதிய இன்றைய நடைமுறையில் உள்ள சுவிஷேத்தை காய்தல், உவத்தல் இன்றி நடுநிலையுடன் கருத்தூன்றி வாசிப்பவர்கள் எவரும் சில இடங்களில் சம்பவத் தொடர்புகள் இன்மையையும், வசனங்கள் சில நீக்கப்பட்டிருப்பதையும் இலகுவாக கண்டுகொள்ளலாம். உதாரணமாக மாற்கு 10:46 வசனத்தை கவனியுங்கள்!! அது பின்வருமாறு அமைந்துள்ளது.

மாற்கு 10:46. பின்பு, அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.

எரிக்கோவுக்கு இயேசுவும் அவரோடிருந்த மக்களும் வந்தார்கள் என ஆரம்பித்த வசனம் எரிகோவில் இயேசு யார் யாரை சந்தித்தார்? என்னென்ன உபதேசங்கள் செய்தார்? எந்தெந்த அற்புதங்கள் செய்தார்? சாதாரணமாக அவரோடு வந்த “அவர்கள்” திரும்பிப்போகும் போது எப்படி “சீஷர்கள்” ஆனார்கள்? திரளான ஜனங்கள் அவருடன் எரிகோவை விட்டு வெளியேறும் அளவிற்கு அங்கு என்ன நடந்தது? அப்படி எதுவும் எரிகோவில் நடைபெறவில்லையானால் மாற்கு ஏன் இயேசுவின் எரிகோ வருகையை முக்கியத்துவம் கொடுத்து தனது சுவிஷேசத்தில் பதிவு செய்ய வேண்டும்? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் அனைத்துக்குமான ஒரே பதில் எரிகோவில் நடைபெற்ற சம்பவங்கள் “கவனமாக மறைக்கப் பட்டுவிட்டன” என்பதை தவிர வேறில்லை!

அதே போன்று மாற்கு 14:50,51,52,53 வசனங்களை பாருங்கள்! இயேசு “கெத்சமனே” என்ற தோட்டத்தில் கைது செய்யப்பட்ட போது நடந்த மர்மமான சம்பவத்தை இவ்வாறு விபரிக்கிறது!

மாற்கு:14

50.அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.

51.ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள்.

52. அவன் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போனான்.

53.இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்;  அங்கே ஆசாரியர், மூப்பர், வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள்.

இயேசுவை படையினர் கைது செய்த போது ‘சீஷர்கள்’ எல்லோரும் ஓடிப்போய்விட, தனது ‘நிர்வாண மேனியின்’ மேல் துப்பட்டியை மாத்திரம் போர்த்திக் கொண்டு  இயேசுவைப் பின் தொடர்ந்த “ஒரு வாலிபன்” யார்? இயேசுவைப் பின் தொடர்ந்த அந்த “மர்ம வாலிபன்” பற்றி விவரங்கள் வேறு எந்த இடத்திலும் சுவிஷேசங்களில் கூறப்படாதது ஏன்? “கெத்சமனே” தோட்டத்தில் அவ்வாலிபன் இயேசுவுடன் என்ன செய்து கொண்டிருந்தான்? சீடர்களை எல்லாம் தப்புவதற்கு விட்டு விட்ட ரோம சாம்ராஜ்யத்தின் வலிமை மிகு படைவீரர்கள்(?) இயேசுவோடு சேர்த்து அவ்வாலிபனை மாத்திரம் ஏன் பிடிக்க முயற்சித்தனர்? என்பது போன்ற கேள்விகளுக்கு இரு நூற்றாண்டுகளாக மூளையைக் கசக்கிப் பிழிந்து பதில்காண முற்பட்ட விவிலிய விரிவுரையாளர்களால் எந்தவொரு ஏற்றுக் கொள்ளக் கூடிய, திருப்திகரமான பதில்களையும் வழங்க முடியவில்லை என்பதும் சம்பவத்துடன் தொடர்பான வசனங்கள் சில மாற்குவின் சுவிஷேசத்தில்  இருந்து நீக்கப்பட்டு விட்டன என்பதையே உறுதி செய்கிறது.

இவ்விபரங்களை கிருஸ்துவ மதத்தைச் சார்ந்த விவிலிய ஆராய்சியாளர் “பார்த் டி எர்மான்” என்பவர் தனது “LOST CHRISTIANITIES”   “தொலைந்து போன கிருஸ்தவம்” என்ற நூலில் 79ம் 80ம் பக்கங்களில் தெளிவுபடுத்தியுள்ளார். (பார்க்க 4)

இந்நான்கு பின்னணிகளை, பின்புலங்களை நோக்கிய நாம் இனி கட்டுரையின் மையப்பகுதிக்குள் செல்வோம்.

மோர்டன் கண்டெடுத்த கடிதம்:

மோர்டன் ஸ்மித் “மார் ஸபா” மடாலயத்தில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த நூலை ஆய்வு செய்து கொண்டிருந்த போது ‘கிளெமென்ட் ஓஃப் அலக்ஸாந்தரிய்யா என்பவர் தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய பதில் கடிதத்தின் பிற்கால பிரதி ஒன்றைக் கண்டெடுத்தார். அப்பிரதிதான் பைபிள் தொடர்பான கிருஸ்தவர்களது நம்பிக்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டது.!!  (பார்க்க 5)

‘மோர்டன்’ கண்டெடுத்த ‘கிளெமென்டின்’ கடிதத்தின் ஆங்கில மொழிபெயர்பையும் அதன் த‌மிழாக்கத்தையும் பார்த்து விடுவோம்.

To Theodore.

You did well in silencing the unspeakable teachings of the Carpocrations. For these are “wandering stars” referred to in the prophecy, who wander from the narrow road of the commandments into a boundless abyss of the carnal and bodily sins. For, priding themselves in knowledge, as they say, “of the deep things of Satan, they do not know that they are casting themselves away into “the netherworld of the darkness” of falseness, and boasting that they are free, they have become slaves of servile desires. Such men are to be opposed in all ways and alltogether. For, even if they should say something true, one who loves the truth should not, even so, agree with them. For not all true things are the truth, nor should that truth which merely seems true according to human opinions be prefered to the true truth, that according to the faith.

Now of the things they keep saying about the divinely inspired Gospel according to Mark, some are altogether falsifications, and others, even if they do contain some true elements, nevertheless are not reported truely. For the true things being mixed with inventions, are falsified , so that, as the saying goes, even the salt loses its savor.

As for Mark, then, during Peter`s stay in Rome he wrote an account of the Lord`s doings, not, however, declaring all of them, nor yet hinting at the secret ones, but selecting what he thought most useful for increasing the faith of those who were being instructed. But when Peter died a martyr, Mark came over to Alexandria, bringing both his own notes and those of Peter, from which he transferred to his former books the things suitable to whatever makes for progress toward knowledge. Thus he composed a more spiritual Gospel for the use of those who were being perfected. Nevertheless, he yet did not divulge the things not to be uttered, nor did he write down the hierophantic teaching of the Lord, but to the stories already written he added yet others and, moreover, brought in certain sayings of which he knew the interpretation would, as a mystagogue , lead the hearers into the innermost sanctuary of truth hidden by seven veils. Thus, in sum, he prepared matters, neither grudgingly nor incautionously, in my opinion, and, dying, he left his composition to the church in 1, verso Alexandria, where it even yet is most carefully guarded, being read only to those who are being initated into the great mysteries.

But since the foul demons are always devising destruction for the race of men, Carpocrates, instructed by them and using deceitful arts, so enslaved a certain presbyter of the church in Alexandria that he got from him a copy of the secret Gospel, which he both interpreted according to his blasphemous and carnal doctrine and, moreover, polluted, mixing with the spotless and holy words utterly shameless lies. From this mixture is withdrawn off the teaching of the Carpocratians.

To them, therefore, as I said above, one must never give way ; nor, when they put forward their falsifications, should one concede that the secret Gospel is by Mark, but should even deny it on oath. For, “For not all true things are to be said to all men”. For this reason the Wisdom of God, through Solomon, advises, “Answer the fool with his folly,” , teaching that the light of the truth should be hidden from those who are mentally blind. Again it says, “From him who has not shall be taken away” and “Let the fool walk in darkness”. But we are “children of Light” having been illuminated by “the dayspring” of the spirit of the Lord “from on high”, and “Where the Spirit of the Lord is” , it says, “there is liberty”, for “All things are pure to the pure”.

To you, therefore, I shall not hesitate to answer the questions you have asked, refuting the falsifications by the very words of the Gospel. For example, after “And they were in the road going up to Jerusalem” and what follows, until “After three days he shall arise”, the secret Gospel brings the following material word for word:

“And they came into Bethany and a certain woman whose brother had died was there. And, coming, she knelt down before Jesus and said to him, “Son of David, have mercy on me”. But the disciples rebuked her. And Jesus got angry with them and went off with her into the garden where the tomb was. Right away there was a loud cry from inside the tomb. Then Jesus rolled away the stone from in front of the tomb. He went in where the youth was and stretched forth his hand and raised him up. The youth, looking upon him, loved him and began to beg him to be with him. They they left the tomb and went to the young man’s house, for he was rich. Six days later, Jesus gave him instructions of what to do and in the evening the youth came to him, wearing nothing but a linen cloth over his naked body. He remained with him that night, for Jesus thaught him the mystery of the Kingdom of God. And when Jesus woke up, he returned to the other side of the Jordan.”

And these words follow the text, “And James and John come to him” and all that section. But “naked man with naked man” and the other things about which you wrote, are not found.

And after the words,”And he comes into Jericho,” the secret Gospel adds only, “And the sister of the young man whom Jesus loved was there, along with his mother and Salome, but Jesus did not receive them.” But many other things about which you wrote both seem to be and are falsifications.

தியோதருக்கு…..

கர்போக்ரடியர்களது தரங்கெட்ட போதனைகளை வாய் மூடச்செய்ததின் மூலம் நல்ல காரியத்தைச் செய்துள்ளீர்கள். ஏனெனில், அவர்கள் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டது போல் “வழிதவறிய நட்சத்திரங்களைப்” போன்றவர்கள். நல்லுபதேசங்களுக்காக வரையறை செய்யப்பட்ட பாதையை விட்டும், வரையறையில்லாத சரீரப் பாவங்கள் எனும் படுகுழியை நோக்கியே செல்கின்றனர்.

சாத்தானின் ஆழ்ந்த விடயங்களில் ‘இறை ஞானம்’ எனத் தம்பட்டம் அடித்துக் கொண்டே போலியான ‘ஜடங்களின் இருண்ட உலகை’ நோக்கிப் பயணப்படுகிறார்கள் என்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். தங்களை சுதந்திரமானவர்கள் என அழைத்துக்கொண்டே உடலிச்சைகளுக்கு, கேவலமான அடிமைகளாகப் போய்விட்டனர். இவ்வாறானவர்களை பலவழிகளிலும் நாம் அனைவரும் எதிர்த்துப் போராடுவது அவசியமாகும்.

அவர்கள் சரியான விடயமொன்றைக் கூறினாலும் கூட சத்தியத்தை விரும்புபவர்கள் அவர்களுடன் கருத்துடண்பாடு காணாமல் இருப்பது அவசியமாகும். ஏனெனில், சரியான விடயங்கள் அனைத்தும் சத்தியம் அல்ல. ஒரு மனிதனுக்கு சத்தியமாக தோன்றும் விடயத்தை,  நம்பிக்கை பிரகாரம் சத்தியமாக உள்ள விடயத்தை விடவும் சிறந்தது எனக் கருதக்கூடாது. ஏனெனில் சத்தியங்கள் போலியான விடயங்களுடன் கலப்படம் செய்யப்பட்டு – “உப்பு அதன் உவர்ப்பை இழந்துவிட்டது” என்ற பழமொழிக்கு ஒப்ப- தவறான முறையில் முன்வைக்கப்பட்டு விட்டது.

மாற்குவினைப் பொருத்தவரை (இயேசுவின் சீடர்) பேதுரு (பீட்டர்) ரோமில் தங்கியிருந்த போது, இயேசுவின் செயல்கள் பற்றி எழுதினார். எனினும், இயேசுவின் அனைத்து செயல்களையும் எழுதவில்லை. இயேசுவின் இரகசிய செயற்பாடுகள் பற்றியும் சுட்டிக்காட்டவில்லை. மாறாக, தான் கற்பித்தவர்களது விசுவாசத்தை அதிகப்படுத்துவதில் பலனளிக்கும் என தான் கருதியவைகளை மாத்திரம் தேர்ந்தெடுத்து எழுதினார். ஆனால், பேதுரு கொல்லப்பட்ட பின் தான் எழுதியவைகளையும், பேதுருவிடம் இருந்து கேட்ட போதனைகளையும் அலக்ஸாந்தரிய்யாவுக்கு கொண்டு வந்தார். அங்கு கூடுதல் ‘இறை ஞானத்தை’ பெற பொருத்தமானவைகளை தனது நூலில் சேர்த்து எழுதினார்.

இவ்வாறு மாற்கு ஆன்மீக போதனைகள் அதிகம் நிறைந்த தனது சுவிஷேசத்தை எழுதினாலும் கூட இரகசிய போதனைகளை அவர் எழுதவில்லை. ஏற்கனவே எழுதிய விடயங்களுடன் வேறு சில விடயங்களை அதிகரித்து எழுதினார். அத்துடன் மதத் தலைவர் என்ற வகையில் ஏழு திரைகளுக்குப் பின்னால் மறைக்கப்பட்டுள்ள இரகசிய போதனைகளை அறிந்து கொள்ளக் கூடிய விளக்கங்களைக்  கொண்ட வரையறுக்கப்பட்ட சில வார்த்தைகளை அதனுடன் சேர்த்திருந்தார்.

சுருங்கக் கூறின், எனது அபிப்பிராயப்படி எந்த சூழ்ச்சியோ, எச்சரிக்கையோ இன்றி சில விடயங்களை இவ்வாறுதான் சேர்த்திருந்தார்.

மாற்கு மரணிக்கும் போது, தான் எழுதியவைகளை அலக்ஸாந்தரிய்யா தேவாலயத்தில் விட்டுச் சென்றார். அவைகள் அங்கு மிகக் கவனமாக பாதுகாக்கப்பட்டு மிகப்பெரும் இரகசியங்களை அறிந்தவர்களுக்கு மட்டும் போதிக்கப்பட்டு வருகின்றன.

எனினும், தீய ஆவிகள் மனித குலத்தை நாசம் செய்யும் வகையிலேயே திட்டமிட்டு வருகின்றன என்ற வகையில் ‘கர்போக்ரடியர்கள்’ அத்தீய ஆவிகளிடம் இருந்து கற்ற‌ ஏமாற்றும் கலைகளை பயன்படுத்தி, அலக்ஸாந்தரிய்யா தேவாலயத்தில் இருந்த மூத்த மதகுரு ஒருவரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவரிடமிருந்து மர்மச் சுவிசேஷத்தின் ஒரு பகுதியின் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். அதற்கு தங்களது உட‌லிச்சையும், நிராகரிப்பும் நிறைந்த நம்பிக்கைக் கோட்பாட்டுக்கு ஒப்ப விளக்கமளித்தனர். அதையும் தாண்டி தூய்மையான புனித வார்த்தைகளுடன், இழிவான பொய்களையும் கலந்து விட்டனர். இவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட ஒன்றில் இருந்துதான் தங்களது கர்போக்ரடிய போதனைகளை கொண்டுவந்தனர்.

இவர்களைப் பொறுத்த வரைக்கும் நான் ஏற்கனவே கூறியது போல், இவர்கள் தங்களது போலி (ஆதாரங்)களை முன்வைத்தாலும் இவர்களுக்கு நாம் (ஒரு போதும்) இடமளிக்கக் கூடாது. மாற்கு அவரது மர்மச் சுவிஷேசத்தை எழுதினார் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது, சத்தியம் செய்தாவது அதை நாம் மறுத்துவிட வேண்டும். காரணம் “அனைத்து உண்மைகளும் அனைவருக்கும் சொல்லப்படுவது தகுமானதல்ல. இதன் காரணமாகவே சாலமோனின் நீதி மொழியில் “முட்டாளுக்கு அவனது முட்டாள்தனத்தைக் கொண்டே பதிலளி” எனக் கூறப்பட்டுள்ளது. சத்திய ஒளி அறிவுக் குருடர்களுக்கு மறைக்கப்பட வேண்டும்.

மேலும் கர்த்தரின் நீதி “அதிலிருந்து நீர் வெகு தூரத்துக்கு எடுத்துச் செல்லப்படமாட்டீர்” எனவும், “மூடனை இருளிலேயே நடக்க விட்டுவிடு” எனவும் அமைந்துள்ளது.

ஆனால், நாமோ ஒளியின் புத்திரர்களாக உள்ளோம். கர்த்தரின் ஜீவனும் (வரையறையற்ற) சுதந்திரமும் கொண்ட  பரலோகத்தில் உள்ள கர்த்தரின் ஆவியின் வைகறை ஒளியால் ஒளியூட்டப்பட்டுள்ளோம். ஏனெனில் “தூய்மையானவனுக்கு அனைத்து விடயங்களும் தூய்மையானதுதான்”.

எனவே, தியோதரே சுவிஷேசம் தொடர்பான பொய்களைக் களையும் நிமித்தம் நீர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க நான் தயக்கம் கொள்ளவில்லை.

உதாரணமாக (மாற்கு 10:32) “அவர்கள் ஜெருஸலமுக்குப் போகும் பாதையில் சென்று கொண்டிருந்த போது” என்ற வசனத்திற்குப் பின் (மாற்கு 10:34 ) “மூன்று நாட்களுக்குப் பின்பு அவர் எழுவார்” என்ற வார்த்தைக்குப் பின் மர்மச் சுவிஷேசத்தில் பின்வரும் பந்தி(கள்) அப்படியே காணப்படுகிறது.

அவர்கள் பெத்தேஹானி என்ற ஊருக்குச் சென்றார்கள். அங்கே தனது சகோதரன் மரணித்து விட்ட ஒரு பெண் இருந்தாள். அவள் இயேசுவிடம் வந்து அவருக்கு சிரம்பணிந்து. ‘தாவீதின் குமாரனே! என் மீது இரக்கங்காட்டும்’ என்றாள். .அப்போது சீஷர்கள் அப்பெண்ணை விரட்ட எத்தனித்தனர். அதனால் இயேசு அவர்கள் மேல் கோபம் கொண்டு அப்பெண்ணுடன் கல்லறை இருந்த தோட்டத்திற்குச் சென்றார். அவ்வேளையில் இயேசு கல்லறையில் இருந்து வந்த உரத்த குரலிலான அழுகை சத்தத்தைக் கேட்டார்.

இயேசு அக்கல்லறையின் முன்பக்கமிருந்த பாறையை உருட்டிவிட்டார். வாலிபன் இருந்த இடத்திற்கு சென்று இரு கரங்களையும் நீட்டி அவனை உயிப்பித்தார். அவ் வாலிபன் இயேசுவைப் பார்த்ததும் அவர் மீது விருப்பம் கொண்டு தன்னோடு தங்கிருக்கும் படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். அவர்கள் கல்லறையில் இருந்து வெளியே வந்து அவ்வாலிபனின் வீட்டிற்குச் சென்றனர். ஏனெனில் அவ்வாலிபன் செல்வந்தனாக இருந்தான்.

ஆறு நாட்கள் இயேசு அவ்வாலிபனுக்குக் கற்றுக் கொடுத்ததன் பின் மாலை வேளையில் அவ்வாலிபன் தனது நிர்வாண மேனியின் மேல் சணலால் ஆன போர்வை ஒன்றைப் போர்த்திக் கொண்டு இயேசுவிடம் வந்தான். அந்த இரவு முழுவதும் இயேசுவோடு தங்கியிருந்தான். இயேசு அவனுக்கு பரலோக ராஜ்யத்தின் இரகசியங்களைக் கற்றுக் கொடுத்தார். இயேசு விழித்தெழுந்ததும் யோர்தானின் மறுபுறத்திற்கு திரும்பிச் சென்றார்.

இதன் பிறகு (இன்று நடைமுறையில் உள்ள சுவிஷேசத்தில் காணப்படுவது போல்) (மாற்கு 10:35) யாக்கோபும் யோவானும் இயேசுவிடத்தல் வந்தனர்….. என தொடர்ந்து காணப்படுகிறது.

எனினும் “நிர்வாண மனிதனுடன் நிர்வாண மனிதன்” என்ற வார்த்தையோ அல்லது நீர் எழுதியுள்ள ஏனைய விடயங்களோ (மர்மச் சுவிஷேசத்தில்) காணப்படவில்லை.

மேலும் (மாற்கு 10;46)  ”பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள் ” என்ற வசனத்துக்குப் பின் மர்மச் சுவிஷேசத்தில் “அங்கு இயேசு விரும்பிய அவ்வாலிபனின் சகோதரி அவனது தாயோடும் சாலோமுடனும் இருந்தாள். இயேசு அவர்களை வரவேற்கவில்லை.” என்று மாத்திரம் காணப்படுகிறது. இதல்லாத நீர் எழுதியுள்ள அதிகமான விடயங்கள் பொய்கள் என்றே தோன்றுகின்றது. அவைகள் பொய்கள்தான்.- (கடிதத்தின் தமிழாக்கம்)

மேற்படி கிறிஸ்தவர்களது தவறான நம்பிக்கையை தரை மட்டமாக்கும் விதத்தில் அமைந்துள்ள ‘கிளெமென்ட்’ அவர்களால் எழுதப்பட்ட இக்கடிதம் பேராசிரியர் ‘மோர்டனால்’ கண்டுபிடிக்கப் பட்டு வெளியிடப்பட்டதும் கிறிஸ்தவ மதத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றியவர்களும், திருச்சபைகளால் கூலிக்கு அமர்த்தப்பட்ட ஆய்வாளர்களும் (?) மோர்டன் கண்டெடுத்த கடிதத்தைப் பொய்ப்படுத்த பகீரதப் பிரயதனம் மேற்கொண்டனர்.

மோர்டனின் நிரூபண முறை:

எனினும் மோர்டன் தனது கண்டுபிடிப்பு உண்மையானது என்பதையும், குறித்த கடிதம் ‘கிளெமென்ட் ஓஃப் அலக்ஸாந்தரிய்யா’ என்ற அறிஞரால்தான் எழுதப்பட்டது என்பதையும் அதில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் வசனங்கள் மாற்குவினால் எழுதப்படதுதான் என்பதையும் அழுத்தம் திருத்தமாக நிரூபித்து The Secret Gospel: The Discovery and Interpretation of the Secret Gospel According to Mark “மாற்கு எழுதிய மர்மச் சுவிஷேசம் கண்டுபிடிப்பும் விளக்கவுரையும்” என்ற நூலையும் Clement of Alexandria and a Secret Gospel of Mark  “கிளெமென்ட் ஓஃப் அலக்ஸந்தரிய்யாவும், மாற்கு எழுதிய மர்மச் சுவிஷேசமும்” என்ற இரு நூற்களையும் வெளியிட்டார்.

மோர்டனின் நிரூபண முறை கீழ்வருமாறு நுணுக்கமானதாகவும், நவீன அறிவியல் ஆய்வு முறைமையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைந்திருந்தது.

1.மோர்டன் கண்டெடுத்த கடிதம் நவீன காலத்தில் எழுதப்பட்டதா? அல்லது 18ம் நூற்றாண்டைச் சார்ந்த ஒருவரால் மூலத்திலிருந்து பிரதி எடுக்கப்பட்டதா என்பதை பண்டைய எழுத்துமுறை ஆய்வாளர்களிடம் காண்பித்து அபிப்பிராயம் கேட்டார். அவர்களில் அதிகமானோர் கடிதத்தில் காணப்படும் எழுத்து முறை நவீன காலத்தையது அல்ல பதினேழாம் நூற்றாண்டுக்கும் பதினெட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட பிரதிதான் என்பதை உறுதிசெய்தனர்.

2. குறித்த கடித்தில் காணப்பட்ட எழுத்து ‘கிளெமென்ட் உடையது தானா என்பது தொடர்பிலும் கிளெமென்ட் உடைய எழுத்து நடையுடன் நன்கு பரிச்சயமான நிபுணர்களிடம்  அபிப்பிராயம் கேட்டார். அதிக நிபுணர்கள் கடிதத்தில் காணப்படும் எழுத்து நடை கிளெமென்ட் உடைய நடையையே பெரிதும் ஒத்திருப்பதை உறுதி செய்தனர். அத்துடன் மோர்டன் கடித்தில் காணப்படும் சொற்களையும் எழுத்து நடையையும் விடயத்தை விபரிக்கும் முறையையும் கருத்தாக்கங்களையும் எடுத்து  இன்று உள்ள, ஏற்கனவே கிளெமென்ட் எழுதிய நூற்களுடன் மிக நுணுக்கமாக ஒப்பிட்டு கடிதம் கிளெமென்ட் உடையதுதான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். இவரது இந்த நிரூபண முறை கடித்ததை கிளெமென்ட் தவிர வேறு யாரும் எழுதியிருக்க முடியாது என ஏனையோர் ஒப்புக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது.

3.மேலும், கடிதத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள சுவிஷேச வசனங்கள் மாற்குவின் சுவிஷேசம் எழுதப்பட்ட அதே நபரால்தான் எழுதப்பட்டுள்ளது என்பதையும் இன்று பாவனையில் உள்ள சுவிஷேச வார்த்தைகள், எழுத்து நடை மற்றும் சமயச் சித்தாந்தவியல் ஆகியவைகளை ஒப்பு நோக்கியும் நிரூபித்தார். (பார்க்க 6)

இறுதியாக ‘கிளெமன்ட் அவர்களின் கடிதம் உணர்த்தும் உண்மைகள் என்ன என்பதையும் பார்த்து விடுவோம்.

1.ஆரம்பகால கிறிஸ்தவ மதப்பிரிவுகள் தங்களது கொள்கை கோட்பாடுகளுக்கு ஆதாரங்களாக சுவிஷேசங்களில் இருந்து ஆதாரங்களைக் காட்டினார்கள். அவ்வாதாரங்கள் சுவிஷேசங்களில் இருந்து நீக்கப்பட்டு விட்டன அல்லது மறைத்து வைக்கப்பட்டு கவனமாகப் பாதுகாக்கப் படுகின்றன.

2.கிறிஸ்தவர்களது நம்பிக்கைப் பிரகாரம் இன்றுள்ள மாற்கு எழுதிய சுவிஷேசம் “பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு” எழுதப்பட்டதல்ல. அதனால்தான் ‘மாற்கு’ தான் எழுதிய சுவிஷேசத்துடன் (இன்று புழக்கத்தில் இல்லாத) வேறு விடயங்களையும் சேர்த்து  எழுதினார்.

3.இயேசுவின் இரகசிய போதனைகள் சுவிஷேசங்களில் எழுதப்படவில்லை. மாறாக அவை ஏழு திரைகளுக்கு அப்பால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

4.பண்டைய தேவாலயங்கள் கிறிஸ்துவின் போதனைகளை மறைத்து வருவதுடன் அவை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் போதிக்கப்படுகின்றன.

5.கிறிஸ்துவ மதகுருக்கள் உண்மைக்கு மாறாக சத்தியம் செய்யவும் தயங்கமாட்டார்கள்.

6.ஒரு சில உயர் நிலை மத குருக்களைத் தவிர ஏனைய கிறிஸ்துவர்கள் அனைவரும் முட்டாள்கள்! இருட்டிலே தத்தளிக்கும் மூடர்கள்!!.

7.அந்த உயர்நிலை மதகுருக்களுக்கு அனுமதிக்கப்பட்டது, விலக்கப்பட்டது என்ற வரையறைகள் எதுவும் கிடையாது. அனைத்தும் அவர்களுக்கு தூய்மையானதே!

8.இயேசு அரை நிர்வாண வாலிபனோடு ஒரு இரவு முழுவதும் தங்கியிருந்து!! பரலோக ராஜ்ஜியத்தின் இரகசியங்களை (?) கற்றுக் கொடுத்தார்.

இவ்வாறு ‘மாற்கு எழுதிய மர்மச் சுவிஷேசம்’ பற்றிய விடயங்கள் அம்பலத்துக்கு வந்ததன் மூலம் பைபிளை இறைவேதம் என்று நம்புகின்ற, அதில் கூட்டல், குறைத்தல் செய்யப்படவில்லை, என்ற கிறிஸ்த்தவர்களது (மூட) நம்பிக்கை தவிடுபொடியாக தகர்த்தெறியப்பட்டது.

இது தொடர்பில் யாராவது மாற்றுக் கருத்துகளையோ, எதிர்வாதங்களையோ முன்வைத்தால் அவைகளை பரிசீலித்து அறிவுபூர்வமாகவும் ஆதாரங்கள் அடிப்படையிலும் பதில் தருவோம் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

துணை நின்றவை….

(1)

www.religioustolerance.org/chr_miss2.htm

During the 1940s, academic Morton Smith had visited the Christian Orthodox Monastery of Mar Saba in the Judean wilderness. He stayed there for two months, participating with the monks in their daily schedule. It was built in the fifth century CE and is located about 12 miles southeast of Jerusalem. As a professor of ancient history at Columbia University, he revisited the monastery in 1958. He had decided to use his sabbatical time to catalog their library. While examining an 17th century book………..

dsc034121“மார் ஸபா”   மடாலயம்

(2)

dsc034121

(3)

Carpocrates

CARPOCRATES [Carpocrates] , fl. c.130-c.150, Alexandrian philosopher, founder with his son Epiphanes of a Hellenistic sect, notoriously licentious, related to Gnosticism. Epiphanes wrote a treatise, On Justice, that advocated communal ownership of property, including women; he died, age 17, at Cephalonia and was long worshiped as a deity there.

The Carpocratians believed that men had formerly been united with the Absolute, had been corrupted, and would, by despising creation, be saved in this life or else later through successive transmigrations. Jesus, they held, was but one of several wise men who had achieved deliverance.

Author not available, CARPOCRATES., The Columbia Encyclopedia, Sixth Edition 2006

The Columbia Encyclopedia, Sixth Edition. Copyright 2006 Columbia University Press

(4)

dsc034121

___79_______    ___________________    _ __

There are some interesting features of the shorter version—the one found in

the New Testament—that can be explained if the longer version were the original,

and this is some of the evidence that Smith and others have adduced for

their view. To take the second quotation first. Clement indicates that it appeared

after the first part of Mark 10:46: “And they came to Jericho; and as he

was leaving Jericho with his disciples. . . .” This is a strange verse for several

reasons. Why does it say “they came to Jericho” but then not indicate what

happened there? In other words, why would Mark mention their arrival in town

if they left without doing anything? And why does the text say that “they”

came but that “he and his disciples” left? Why not just say “they” came and

“they” left? These may seem like minor issues, but they are the kind of small

details that should give one pause.

Notice what happens when the second passage cited by Clement is inserted

into the account. They come to Jericho. Jesus encounters three women there

but refuses to see them (this is not the first time in Mark’s Gospel that Jesus

might seem a bit rude; see Mark 3:31–35). Then he and his disciples leave. The

passage seems to make better sense and the tiny problems with the details

disappear.Or consider the other of Clement’s two quotations of the Secret Gospel.

One passage that has always perplexed students of the canonical version of

Mark’s Gospel occurs near the end, when Jesus is arrested in the Garden of

Gethsemane. When the soldiers seize him, all his disciples flee. But there is

someone else there, “a young man” who is “clothed with a linen cloth over his

__80 ________   ___         _______

naked body.” The soldiers grab this unnamed man, but he escapes, nude, leaving

them with the linen cloth in their hands (Mark 14:51–52). Who is this

person, this follower of Jesus who has never been mentioned before? What is

he doing in Gethsemane? And why is he wearing only a linen garment? Interpreters

have propounded a host of possible solutions to these questions over

the centuries, but there has never been any consensus.14

(5)

dsc034121

                                                    மோர்ட்டன் கண்டெடுத்த கிரேக்கப் பிரதி

(6)

www.religioustolerance.org/chr_miss2.htm

Smith attempted to confirm the authenticity of the letter:

  Was the copy of Clement’s letter handwritten in the book in the 18th century, or is it a modern forgery: The book was missing its covers and title page by the time that Smith found it. However, he was able to identify it as a book printed by Isaac Voss, a printer in Amsterdam, in 1646. 4 This established the earliest date when the letter was copied. Smith showed the photographs that he had taken of the letter to a number of palaeographers — ancient handwriting experts. Most of them agreed that the writing style dated the copy at between 1700 and 1800 CE. The letter does not seem to be a modern forgery.
  Was the original letter really written by Clement in the late second century CE or by a forger at a later time? Smith showed the text of the letter to many scholars who had specialized in the writings of Clement. Most agreed that the letter resembled closely Clement’s style. Smith then made “a point-by-point comparison of the vocabulary, writing style, modes of expression and ideas found in the letter with” other writings that are known to have been produced by Clement. 8 According to author Bart Ehrman, “it would be well nigh impossible to imagine someone other than Clement being able to write it.9
  Were the fragments of Secret Mark consistent with the writings of the author of the Gospel of Mark?  A careful analysis of the letter’s “vocabulary, writing style, modes of expression, and theology“ showed that it matched those of the author of Mark.

 

ஆணுக்கு ஒரு பாகம் எனில் பெண்ணுக்கு பாதி பாகம்தான் என்ற பாரபட்சமான நிலை இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் உள்ளதே. இது ஏன்?

Posted May 16, 2012 by arshathalathary
Categories: Uncategorized

 

மூலம்: DR. ZAKIR NAIK
தமிழில்: அபூ இஸாரா

பதில்:

அருள்மறை குர்ஆன் – வாரிசுகளுக்கு – முறையாக சொத்துக்களை பிரித்துக் கொடுப்பது பற்றி சரியான விளக்கமளிக்கிறது. சொத்துக்கள் பிரித்துக் கொடுப்பது பற்றி அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 180வது வசனத்திலும், அதே அத்தியாயத்தின் 240வது வசனத்திலும், நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் நிஷாவின் 7முதல் 9வது வசனங்களிலும், அதே அத்தியாயத்தின் 19வது வசனத்திலும், 33வது வசனத்திலும், ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 106 முதல் 108வது வசனங்களிலும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 11 மற்றும் 12 வது வசனமும் 176 வது வசனம் ஆகிய மூன்று வசனங்களும் நெருங்கிய உறவினர்களுக்கிடையே சொத்துக்களை பங்கிடுவது பற்றி மிகத் தெளிவான விளக்கமளிக்கிறது.

‘உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து, அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்.’ (அல்-குர்ஆன் 4 : 11)

‘இறந்தவருக்குக் குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்குக் குழந்தை இல்லாதிருந்து, பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம். (மீதி தந்தைக்கு உரியதாகும்): இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான். (மீதி தந்தைக்குச் சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான், உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் – இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்: ஆகையினால் (இந்த பாகப் பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்: நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.’(அல்-குர்ஆன் 4 : 11)

‘இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் – அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு. அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து உங்களுக்குக் கால் பாகம்தான். (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸணத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். தவிர, உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின், நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான். உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான். (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸணத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான். தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஒரு ஆணோ, அல்லது ஒரு பெண்ணோ, இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது ஒரு சகோதரியோ இருந்தால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. ஆனால் அதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். (இதுவும்) அவர்களின் மரண சாஸணத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். ஆனால் (மரண சாஸணத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது: (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும். இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.’. ( 4 : 12)

‘(நபியே!) கலாலா (தகப்பன், தாய், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்;: ஒரு மனிதன் இறந்து விட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு. யாரும் இல்லாதிருந்தால், (அவளுடைய சகோதரனாகிய) அவன், அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான். இரு சகோதரிகள் இருந்தால், அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள். அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும், பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு. நீ;ங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.’ (அல்-குர்அன் 4 : 176).
சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் பெண் வாரிசுகளுக்கு, ஆண் வாரிசுகள் பெறும் பங்கைவிட பாதி பாகம் அவர்களின் (பெண்வாரிசுகளின்) பங்காக கிடைக்கிறது. இறந்து போனவர் – தனக்கு வாரிசுகள் எதுவுமின்றி – தனது மனைவியின் முந்தைய கணவருக்குப் பிறந்த இரண்டு வாரிசுகள் – (அதாவது ஒரு மகனும் – மகளும்) இருந்தால் -அந்த மகனுக்கும், மகளுக்கும் – இறந்து போனவர் விட்டுச் சென்ற சொத்தில் ஆறில் ஒரு பாகமே – அவர்களது பங்காக கிடைக்கும். மேற்படி நபருக்கு வாரிசுகள் இருந்தால் – இறந்து போனவரின் சொத்தில் ஆறில் ஒரு பாகம் அவரது பெற்றோருக்கும் – கிடைக்கும்.

சில சமயங்களில் பெண் வாரிசுகள், ஆண் வாரிசுகளைவிட இரண்டு மடங்கு சொத்துக்களை தங்களது பங்காக பெறுவதும் உண்டு. இறந்து போனவர் ஒரு திருமணமாகிய பெண்ணாக இருந்து – அவருக்கு குழந்தைகளோ அல்லது சகோதர – சகோதரிகளோ இல்லாத பட்சத்தில் – அவரது கணவருக்கும் – இறந்து போன பெண்ணுடைய பெற்றோருக்கும் கிடைக்கும் பங்கு என்னவெனில் – கணவருக்கு பாhதி பங்கும், இறந்து போன பெண்ணுடைய – தாயாருக்கு(உயிரோடு இருக்கும் பட்சத்தில்) மூன்றில் ஒரு பங்கும் – தந்தைக்கு ஆறில் ஒரு பங்கும் கிடைக்கும். இது போன்ற வேளையில் பெண்ணுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கு – ஆணுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கைவிட இரு மடங்கு அதிகமாகும்.

ஆயினும் பெண்களுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கை விட – ஆண்களுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கு அதிகம் என்பது உண்மை. கீழ்க்காணும் உதாரணங்களை அதற்கு எடுத்துக் காட்டாக கொள்ளலாம்:

 • மகளுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கு – மகனுக்கு கிடைக்கும் சொத்தை விட பாதி பாகம்.
 • இறந்து போனவருக்கு குழந்தைகள் இல்லை என்னும் பட்சத்தில் – இறந்த போனவரின் தாயாருக்கு எட்டில் ஒரு பகுதியும் – இறந்து போனவரின் தந்தையாருக்கு நான்கில் ஒரு பகுதியும் சொத்தில் பங்காக கிகை;கும்.
 • இறந்து போனவருக்கு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் – இறந்த போனவரின் தாயாருக்கு நான்கில் ஒரு பகுதியும் – இறந்து போனவரின் தந்தையாருக்கு இரண்டில் ஒரு பகுதியும் சொத்தில் பங்காக கிடைக்கும்.
 • இறந்து போனவருக்கு முன் வாரிசு அல்லது பின் வாரிசு இல்லாத பட்சத்தில் – அவரது சகோதரருக்கு கிடைக்கும் பங்கைவிட பாதி பாகமே அவரது சகோதரிக்கு கிடைக்கும்.

இஸ்லாத்தில் பெண்கள் மீது பொருளாதாரச் சுமையோ அல்லது குடும்பத்தைக் கவனிக்கும் பொருப்போ சுமத்தப்படவில்லை. ஒரு பெண் திருமணம் முடிக்கப்படும் வரை அவளது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு அவளது தந்தை அல்லது அவளது சகோதரனின் கடைமயாகும். அவளது திருமணத்திற்குப் பிறகு, அவளது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு அவளது கணவன் அல்லது அவளது மகனின் கடைமையாகும்.

இஸ்லாத்தில் குடும்பத்தின் பொருளதார தேவைகள் அனைத்தையும் நிiவேற்றும் பொறுப்பு ஆண்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. மேற்படி குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றும் பொருட்டே இஸ்லாமிய ஆண்களுக்கு, பெண்களைவிட சொத்தில் அதிக பங்கு அளிக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு இரண்டு மக்களை உடைய ஒரு மனிதர் ( ஒரு ஆண், ஒரு பெண்) இறந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இறந்து போன மனிதருக்கு ரூபாய் 150,000 மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தால் – இறந்து போனவருடைய மகனுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களும், இறந்து போனவருடைய மகளுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்புள்ள சொத்துக்களும் அவர்களது பங்காக கிடைக்கும். ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக கிடைக்கப்பெற்ற மகனுக்கு குடும்பத்தில் உள்ள எல்லா செலவினங்களின் மீதும் பொறுப்பு உண்டு. அவருக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முழுவதையுமோ அல்லது அந்து சொத்துக்களில் பெரும் பங்கையோ (ரூபாய் என்பது ஆயிரம் மதிப்பள்ள சொத்துக்களை) – அவர் குடும்பத்திற்காக செலவு செய்துவிட்டு – எஞ்சியுள்ள இருபதினாயிரம் மதிப்புள்ள சொத்துக்களை மாத்திரம் அவர் தனது பங்காக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் ஐம்பதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்ற மகள் – அதிலிருந்து ஒரு பைசா கூட எவருக்கும் செலவு செய்யாது (ஏனெனில் இஸ்லாம் பெண்கள் மீது குடும்பத்தின் எந்த பொருளாதார சுமையையும் சுமத்தாத காரணத்தால்) முழு மதிப்புள்ள சொத்தையும் தன்னகத்தே கொண்டிருக்க முடியும்.

இஸ்லாமிய சொத்துரிமையால் பயன் பெறுவது யார் என்று இப்போது சொல்லுங்கள்.

ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்று, அதில் என்பதாயிரம் ரூபாயைச் செலவு செய்து விட்டு மீதி இருபதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தன்னகத்தே கொண்டிருக்கும் – ஒரு இஸ்லாமிய ஆண்வாரிசா? அல்லது ஐம்பதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்றுக் கொண்டு, அதிலிருந்து ஒரு பைசா கூட செலவு செய்யாது முழு மதிப்புள்ள சொத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்வாரிசா?

source:ஒற்றுமை.கொம்

விபச்சாரப் பெண்ணும் பைபிளும்!

Posted May 15, 2012 by arshathalathary
Categories: Uncategorized

அபூ ஸைத் அல் அதரி

abuzaidalathary@gmail.com

கிருஸ்தவ மதம் அன்பு, கருணை, மன்னிப்பு ஆகிய விழுமியங்களைப் போதிப்பதாக கிருஸ்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளதுடன் பிரச்சாரமும் செய்து வருகின்றனர்.

அதற்கு ஆதாரமாக பைபிளில் இருந்து சில வசனங்களையும் இயேசு கிருஸ்துவுடன் தொடர்பு பட்ட சில சம்பவங்களையும் மேற்கோள் காட்டுகின்றனர்.

இச்சம்பவங்களில் மிகப் பிரபல்யமானதும் பலரும் அறிந்து வைத்துள்ள சம்பவமுமான ‘விபச்சாரப் பெண்’ பற்றிய சம்பவம் இயேசு கிருஸ்துவின் வாழ்வு பற்றி விபரிக்கும் நான்கு சுவிஷேசங்களில் இறுதியானதும் இயேசுவின் இறை தன்மையை அதிகம் வெளிக்காட்டக் கூடியதுமான யோவான் எழுதிய சுவிஷேசத்தில் காணப்படுகிறது.

‘விபச்சாரப் பெண்’ பற்றிய இச்சம்பவம் உன்மையிலேயே இயேசுவின் வாழ்வில் இடம் பெற்றதா? யோவானின் சுவிஷேசத்தை எழுதிய சுவிஷேச ஆசிரியரால் தான் இச்சம்பவம் எழுதப்பட்டதா? அல்லது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றுக்கு சுவையூட்டும் நோக்குடன் கிருஸ்தவ மதத்திற்கு மெருகூட்டும் வகையில் பிற்காலத்தில் வாழ்ந்த அனாமோதய ஆசாமி ஒருவரால் இட்டுக் கட்டப்பட்டு கிருஸ்தவர்கள் இறைவேதமாக நம்பும் பைபிளில் இடைச்செருகல் செய்யப்பட்டதா? என்பதை தக்க சான்றுகளுடன் இக்கட்டுரையில் நாம் தமிழில் தருகிறோம்.

1.விவிலியம் கூறும் விபச்சாரப் பெண்:
கட்டுரையின் மையக்கருவுக்குள் நாம் நுழையுமுன் முதலில் நாம் விவிலியம் கூறும் விபச்சாரம் பெண் பற்றிய சம்பவத்தையும் அதன் பின்புலத்தையும் ஒரு முறை நோக்கி விடுவோம்.

“ஒரு நாள் காலை இயேசு தேவாலயத்தில் மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது யூத மத குருக்கள் விபச்சாரம் செய்த ஒரு பெண்ணைப் பிடித்து வந்து ‘எமது மதச் சட்டத்தின் படி, மோசேயின் நியாயப் பிரமாணத்தின் படி இவளைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்றுள்ளது; நீர் என்ன சொல்லுகிறீர்?’ என இயேசுவிடம் கேட்டார்கள். இந்த இடத்தில் ‘விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட பெண்ணை’ யூதர்கள் அவர்களது மதச்சட்டப்படி தண்டிக்க வேண்டியதுதானே! ஏன் அவர்கள் இயேசுவிடம் கொண்டுவந்து அவரது தீர்ப்பைக் கேட்க வேண்டும்? இயேசு என்ன யூத மதத் தலைவரா? அல்லது அக்கால ஆட்சியாளனால் நியமிக்கப்பட்ட நீதிபதியா? என்ற சந்தேகம் எமக்கு ஏற்படலாம். இங்குதான் இக்கதையை கற்பனை செய்தவரின் கைவண்ணம் மறைந்துள்ளது.

இயேசு அன்பு, கருணை, மன்னிப்பு என்பவைகளைப் போதித்ததாக பைபிள் கூறுகின்றது என நாம் ஏலவே குறிப்பிட்டோம் அல்லவா? விபச்சாரப் பெண்ணை இயேசு முன் கொண்டுவந்து நிறுத்தி எமது மதச் சட்டம் அவளைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று கூறுகிறது! நீர் என்ன சொல்லுகிறீர்? என யூதர்கள் கேட்டதன் மூலம் இயேசுவை யூதர்கள் தங்கள் சூழ்ச்சி வலைக்குள் சிக்கவைக்க முயற்சித்தார்கள்!

எப்படி?

இப்பெண்ணை மதச் சட்டத்தின் படி கல்லெறிந்து கொல்லுங்கள் என இயேசு தீர்ப்பளித்தால் அவர் போதித்த அன்பு, கருணை, மன்னிப்பு ஆகியவைகளை அவரே மீறியது போலாகிவிடும். அவைகள் நடைமுறைச் சாத்தியமற்ற போதனைகள் என மக்கள் மத்தியில் தெரிந்து விடும்! மாறாக, அப்பெண்ணை மன்னித்து விடுங்கள் என இயேசு கூறினாலும் இயேசு அக்கால மதச் சட்டத்தை மீறிவிட்டார், மோசேயின் நியாயப் பிரமாணத்தை உடைத்து விட்டார் என அவர் மீது குற்றம் சுமத்தி அவரைத் தண்டித்து விட முடியும்.

இப்படி தந்திரமாக யூத மதகுருக்கள் பிண்னிய சூழ்ச்சி வலையில் சிக்கிக் கொள்ளாமல் இயேசு எவ்வாறு சாதுர்யமாக தப்புகிறார் என்பதுதான் கதையின்  ‘கிளைமாக்ஸ்’.

அப்பெண்ணும் தண்டிக்கப்படக் கூடாது, மதச் சட்டத்தையும் அதாவது நியாயப் பிரமாணத்தையும் மீறியதாகவும் இருக்கக் கூடாது. அதற்காக இயேசு என்ன செய்தார்?

“உங்களில் பாவமில்லாதவன் முதலில் இவள் மேல் கல்லெறியக் கடவன்” என்றார். உடனே அங்கிருந்த அனைவரும் தாங்கள் செய்த பாவங்களை நினைத்து ஒவ்வொருவராக சென்றுவிட இயேசுவோ அப்பெண்ணுக்கு ‘நீ போ! இனி பாவம் செய்யாதே!’ என உபதேசித்து அனுப்பினார். இச்சம்பவத்திற்கு கிருஸ்துவர்கள், அவர்களது மத போதகர்கள் மிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களது போதனைகளிலும் பிரச்சார நடவடிக்கையிலும் கையாள்கின்றனர்.

உதாரணமாக ‘இயேசுவின் பாடுகள்’ (The Passion of the Christ) என்ற பெயரில் அமெரிக்க ஹொலிவூட்டில் ஒரு திரைப்படம் எடுத்தார்கள். அத்திரைப்படம் இயேசுவின் கடைசி பன்னிரெண்டு மணி நேரங்களை மையப்படுத்தியே எடுக்கப்பட்டாலும்  ‘விபச்சாரப் பெண்’ பற்றிய சம்பவத்துக்கு கிருஸ்தவர்கள் மத்தியிலும், கிருஸ்தவ போதனைகளிலும் உள்ள முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு ‘பிளஸ்பேக்’  காட்சியில்  இச்சம்பவத்தையும்  இணைத்து  படமாக்கியுள்ளார்கள்.

ஆனால், குறித்த இந்தச் சம்பவம் இயேசுவின் வாழ்வில் உண்மையிலேயே இடம் பெறவில்லை என்பதையும் யோவான் தனது சுவிஷேசத்தில் இச்சம்பவத்தை எழுதவில்லை என்பதையும் மிக மிக பிற்பட்ட காலத்தில்தான் இச்சம்பவம் இனந்தெரியாத ஒருவரால் இட்டுக்கட்டப்பட்டு கிருஸ்தவர்களது இறைவேதமான பைபிளில் இடைச்செருகல் செய்யப்பட்டது என்பதையும் ஆதாரங்கள் அடிப்படையில் நாம் இங்கு நோக்குவோம்.

2. இடையே குறுக்கிடும் இடைச் செருகல்:
நாம் மேற்குறிப்பிட்டவாறு ‘விபச்சாரப் பெண்’ பற்றிய சம்பவம் யோவான் எழுதிய சுவிஷேசத்தில் 7:53 தொடக்கம் 8:12 வரையிலான வசனங்களில் இடம் பெற்றுள்ளது.

முதலில் குறித்த வசனங்கள் இடைச் செருகல் செய்யப்பட்டதுதான் என்பதை எளிதில் விளங்கிக் கொள்ள அவ்வசனங்களையும் அவைகளுக்கு முன் பின்னுள்ள வசனங்களையும் கருத்தூண்றி வாசிப்பது அவசியம் என்பதால் அவைகளை சுவிஷேசத்தில் உள்ளவாறு அப்படியே தருகிறோம்.

40.ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.
41.வேறுசிலர்:  இவர் கிறிஸ்து என்றார்கள்.  வேறு சிலர்:  கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்?
42. தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.
43.இவ்விதமாக அவரைக் குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று.
44.அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க மனதாயிருந்தார்கள்; ஆகிலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.
45.பின்பு அந்தச் சேவகர் பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களை நோக்கி: நீங்கள் அவனை ஏன் கொண்டுவரவில்லை என்று கேட்டார்கள்.
46.சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறது போல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்.
47. அப்பொழுது பரிசேயர் நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?
48.அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா?
49.வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.
50.இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களை நோக்கி:
51.ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான்.
52.அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள்.
53. பின்பு அவரவர் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள்.

8 அதிகாரம்
________________________________________
1. இயேசு ஒலிவ மலைக்குப் போனார்.
2. மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் பண்ணினார்.
3.அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும், பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
4.போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
5.இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
6.அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும் பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
7.அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன்  இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,

8. அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
9. அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.
10. இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
11. அதற்கு அவள்: இல்லை ஆண்டவரே என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போஇ இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
12. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
13. அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக் குறித்து நீயே சாட்சிகொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.

யோவான் சுவிஷேசத்தின் ஏழாம் அதிகாரம் நாற்பதாம் வசனம் முதல் – எட்டாம் அதிகாரம் பதின்மூன்றாம் வசனம் வரை நாம் வாசித்துப் பார்க்கையில் ஒரு சரளமான சம்பாசனைத் தொடர் ஒன்றிற்கு நடுவில் சம்பாசித்தவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு! நாம் மஞ்சள் அடையாளமிட்டுள்ளவாறு ‘விபச்சாரப் பெண்’ பற்றிய சம்பவம் இடைச் செருகல் செய்யப்பட்டுள்ளதை இலகுவில் புரிந்து கொள்ள முடிகிறது.

இதை இன்னும் இலகுவாக நோக்க வேண்டுமென்றால் இடைச் செருகல் செய்யப்பட்ட மஞ்சள் வசனங்களை நீக்கிவிட்டும் பார்க்கலாம்.

7:52. அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள்.
8:12. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
8:13. அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக் குறித்து நீயே சாட்சிகொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.

இதன் மூலம் ஏழாம் அதிகாரம் 52ம் வசனத்திற்கும் எட்டாம் அதிகாரம் 12ம் வசனத்திற்கும் இடையிலான நெருங்கிய சம்பவத் தொடர்பும் எழுத்தோட்டத்தின் தொடர்ச்சியும் மேலோங்கி வெளிப்படுவதுடன் இடையில் உள்ள வசனங்களின் தொடர்பின்மையும் எழுத்து நடையின் ஒவ்வாத தன்மையும் நன்கு புலப்படுகிறது.

இவ்வுண்மையை அமெரிக்காவின் ஜோர்ஜியா பல்கலைக்கழக மதத்துறைப் பேராசிரியர் ‘லூயிஸ் ஏ. ரூப்ரச்ட் – LOUIS A. RUPRECHT’ என்பவர் தனது ‘This Tragic Gospel: How Jone Corrupted the Heart of Christianity’ (துன்பியல் சுவிஷேசம்: யோவான் எவ்வாறு கிருஸ்துவத்தின் இதயத்தைச் சிதைத்தார்) என்ற தனது நூலில் 114ம் பக்கத்தில் எடுத்தெழுதியுள்ள்ளார். (பார்க்க 01)

அத்துடன் இச்சம்பவம் ஒரு தூரநோக்கின்றி இட்டுக்கட்டப்பட்டு, பொருந்தாத இடத்தில் பொருத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு குறித்த சம்பவத்திலேயே சில ஆதாரங்கள் உள்ளதையும் எம்மால் அவதானிக்க முடியும்.

உதாரணமாக, சம்பவம் குறிப்பிடும் யூத மதச் சட்டத்தின் படி விபச்சாரம் செய்த பெண்ணை மட்டும் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்றில்லை; ஆணையும் கொல்ல வேண்டும் என்றுதான் உள்ளது. இதோ மேசேயின்  நீதிப்பிரமாணம் சொல்வதைப் பாருங்கள்:

லேவியராகமம்:
20:10.  ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும், அந்த விபசாரியும் கொலை செய்யப்படக்கடவர்கள்.

ஆனால், இச்சம்பவத்தில் அப்பெண் விபச்சாரத்தில் கையும்மெய்யுமாக பிடிக்கப்பட்டாள் (யோவான் 8:5) என்றிருப்பதால் அப்பெண் தன்னந்தனியாகவா விபச்சாரம் செய்து கொன்டிருந்தாள்? அவளுடன் ‘கையும் மெய்யுமாக’ பிடிக்கப்பட்ட ஆண் எங்கே? என்ற கேள்வியும் குறித்த சம்பவத்தின் போலித் தன்மையை அடையாளங்காட்டுவதாக அமைந்துள்ளது.

அவ்வாறே குறித்த சம்பவம் ‘அங்கிருந்தவர்கள் பெரியோர் முதல் சிறியோர் வரை ஒவ்வொருவராகப் போய்விட்டார்கள்’ (யோவான் 8:9) என்றும், ‘இயேசுவும் அப்பெண்ணும் தவிர வேறு ஒருவரும் காணப்படவில்லை’ (யோவான் 8:10) என்பதையும் வலியிறுத்த 8:12,13 வசனங்களோ ‘இயேசு அவர்களுக்கு தொடர்ந்தும் போதித்தார்’ என முற்றிலும் முரண்பாடாக அமைந்துள்ளதும் இச்சம்பவம் இட்டுக்கட்டப் பட்டு பொருந்தாத இடத்தில் பொருத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாக அமைந்துள்ளது.

இப்படி முன்னுக்குப் பின் முரண்பாடாக உள்ள சம்பவம் இறைவேதமாக இருக்குமா? பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு எழுதப்பட்டிருக்குமா? என்ற யோசனை சம்பவத்தைப் போதிக்கும் கிருஸ்தவ பாதிரிகளுக்கும் இல்லை; யாருமே இல்லாத தேவாலயத்தில் யாருக்கைய்யா இயேசு போதனை செய்தார்? என்ற சிந்தனையும் பைபிளை பக்திப் பரவசத்துடன் பாராயணம் செய்துவரும் மக்களுக்கும் இல்லை!

3.ஒவ்வாத எழுத்து நடையும் ஒத்துவராத சொற்பிரயோகங்களும்:
‘விபச்சாரப் பெண்’ பற்றிய சம்பவம் யோவான் எழுதிய சுவிஷேசத்தில் பிற்காலத்தில் இடைச் செருகல் செய்யப்பட்டது என நாம் ஏலவே குறிப்பிட்டோம்.

இவ்வுண்மைக்கு வலுசேர்க்கும் வகையில் யோவானின் சுவிஷேசம் நெடுகிலும்  வேறு எங்குமே பயன்படுத்தப் படாத, அதன் எழுத்து நடைக்கும் சொற்பிரயோக முறைக்கும் முற்றிலும் அந்நியமான சொற்கள் பல இடைச்செருகல் செய்யப்பட்ட வசனங்களில், சம்பவத்தில் காணப்படுவதாக சில ‘மூலப் பிரதிகள் விமர்சன அறிவியல்’ அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அச்சொற்களாவன:

தொடர் இலக்கம் கிரேக்கச் சொல் தமிழ் அர்த்தம் வசனம்
1 Ορος τωνελαιων ஒலிவ மலை யோவான் 8:1
2 Ορθρου காலையிலே யோவான் 8:2
3 Πας ο λαος ஜனங்கள் எல்லோரும் யோவான் 8:2
4 γραμματεις வேத பாரகர் யோவான் 8:3
5 γραμματεις καιοι φαρισαιοι வேதபாரகரும் பரிசேயரும் யோவான் 8:3
6 κατηγορεν சோதிக்கும் படி யோவான் 8:6
7 πρεσβυτέρων பெரியோர் யோவான் 8:9
8 κατακρίνω ஆக்கினைக்குள்ளாக்கத் தீர்த்தல் யோவான் 8:10,11

 இக்கருத்தையே ‘இச்சம்பவம் யோவான் சுவிஷேச எழுத்து நடைக்கு முன்னும் பின்னும் வெகுவாக வித்தியாசப்படுகிறது. மறு புறத்தே இச்சம்பவம் சுவிஷேசத்திற்கு அந்நியமான அதிக சொற்களையும், பந்திகளையும் உள்ளடக்கியுள்ளது’ என்று பிரபல விவிலிய பேராசிரியரும் பைபிள் மூலப் பிரதிகள் விமர்சன அறிவியல் ஆய்வாளருமான  ‘பார்த் டி. எர்மான்’ -BRAT D. EHRMAN- அவர்கள் தனது ‘மிஸ்கோடிங் ஜீஸஸ் ‘ – MISQUOTING JESUS-  என்ற நூலில் 65ம் பக்கம் குறிப்பிடுகிறார். (பார்க்க 02)

இக்கருத்தையே மேற்படி ஆய்வாளர் தனது ‘குழுசுபுநுனு’ எனும் மற்றுமொரு நூலில் 269ம் பக்கத்தில் சற்று விரிவாக பிற்காலத்தில் பைபிளை பிரதிபண்ணிய பேர்வழியால்தான் இச்சம்பவம் பைபிளில் சேர்க்கப்பட்டது என்பதையும் விளக்கி உறுதி செய்துள்ளார். (பார்க்க 03)

4. கையாடலை உறுதிசெய்யும் கையெழுத்துப் பிரதிகள்:
யோவான் எழுதிய நற்செய்தி நூலில் பிற்காலத்தில் வாழ்ந்த பேர்தெரியாத பேர்வழியால் ‘விபச்சாரப் பெண்’ பற்றிய சம்பவம் இடைச் செருகல் செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாக நாம் நோக்கிவருகிறோம்.

பைபிளில் நடந்த குறித்த கையாடலை கையெழுத்துப் பிரதிகள் எவ்வாறு உறுதி செய்கின்றன என்பதை இப்போது நோக்குவோம். அதற்கு முன்பு பைபிளின் குறிப்பாக புதிய ஏற்பாட்டின் மூலப் பிரதிகள் பற்றிய சில விபரங்களை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

‘இந்த வகையில், சுவிஷேச ஆசிரியர்களால் எழுதப்பட்ட மூலப்பிரதிகள் இன்று உலகில் இல்லை. அவைகள் தொலைந்து விட்டன என்பதையும் மூலப்பிரதிகளின் பிரதிகளின் பிரதிகளின் பிரதிகள்தான் அதாவது நான்காம் தலைமுறைப் பிரதிகள்தான் இன்று எம்மத்தியில் உள்ளன என்பதையும் அவைகளும் ஒன்றிலிருந்து ஒன்று பல்லாயிரம் இடங்களில் வித்தியாசப்படுகின்றன, முரண்பட்டு நிற்கின்றன என்ற விபரத்தையும் ‘தொலைந்து போன மூலப்பிரதிகள்’ என்ற உப தலைப்பில் ‘முற்றுப் பெறாத சுவிஷேசமும் மூடிமறைக்கப்படும் உண்மைகளும்‘ என்ற எமது முந்தைய கட்டுரையில் ஆதாரபூர்வமாகவும் நடைமுறை உதாரணங்களுடனும் குறிப்பிட்டிருந்தோம்.

பைபிளின் புதிய ஏற்பாட்டு நூல்கள் கிட்டத்தட்ட கி.பி 40 – கி.பி 100 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கக் கூடும் என பைபிள் ஆய்வாளர்களும், விவிலிய விற்பன்னர்களும், கிருஸ்தவ அறிஞர்களும் அனுமானிக்கிறார்கள்!

கி.பி 130- கி.பி 200 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாக கணிக்கப்படும் யோவான் எழுதிய சுவிஷேசத்தின் ஒரு பகுதியை நாம் தவிர்த்து விட்டு பொதுவாக நோக்கினால் கி.பி 350 ஆண்டளவிலும் அதற்குப் பிந்தைய காலங்களிலும் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளே முழுவடிவில் இன்று உலகில் உள்ளன.

அவைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை சுமார்  5,000 கிரேக்க மொழிப்பிரதிகளும் 10,000 இலத்தீன் மொழிப்பிரதிகளும் 9,300 இற்கும் அதிகமான ஏனைய மொழிப்பிரதிகளும் காணப்படுகின்றன. இத்தோடு சேர்த்து அக்கால இளந்திருச்சபை மதகுருக்களின் நூற்களிலும் சுமார் 36,000 இற்கும் அதிகமான புதிய ஏற்பாட்டு மேற்கோள்கள் காணப்படுவதாக மதிப்பிடப் பட்டுள்ளது.

இக்கையெழுத்துப்பிரதிகளை அவைகளின் மொழி, காலம், பிரதி பண்ணப்பட்ட பிரதேசம் மற்றும் பிரதி பண்ணப்பட்ட ஏட்டின் தன்மை என்பவைகளைக் கருத்திற் கொண்டு மூலப்பிரதிகள் விமர்சன அறிவியல் -Textual Criticism- அறிஞர்கள் அவைகளை குழுமங்களாகவும், குடும்பங்களாகவும் பிரித்துள்ளனர். எனினும் காலத்தால் பிந்திய கையெழுத்துப் பிரதிகள் பற்றிய மேலதிக விபரங்களை இந்த இடத்தில் சற்று நோக்குவது கட்டுரையின் கருத்தை முழுவடிவில் கிரகிக்க துணைபுரியும் என்பதால் முதலில் அவற்றை நோக்கிவிடுவோம்.

அலெக்ஸாந்தரியப் பிரதி,  சீனப் பிரதி,  வத்திக்கான் பிரதி, வொஷிங்டன் பிரதி போன்ற வெகு சில பிரதிகள் மாத்திரம் (நாம் மேற்கூறிய) அவைகளின் பெயர்களால் அழைக்கப்பட ஏனைய பிரதிகள், சுவடித்துண்டுகள் என்பன எண்களாலும் ஆங்கில எழுத்துக்களாலும், குறியீடுகளாலும்   அடையாளப்படுத்தப்படுகின்றன.

இங்கு இரு உண்மைகளை பைபிள் ஆர்வலர்கள் அனைவரும் அறிந்திருப்பது அவசியமாகும்.

1.’கிறிஸ்த்தவர்கள் இறைவேதமாக நம்பும் புதிய ஏற்பாட்டின் ஆயிரக்கணக்கான கையெழுத்துப்பிரதிகள் உலகில் உள்ளன’ என்று கிருஸ்தவர்கள் பெருமை கொள்ள முடியாத அளவிற்கு ஆயிரக்கணக்கான பிரதிகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று பல்லாயிரக்கணக்கான இடங்களில் வித்தியாசப்படுகின்றன; முரண்படுகின்றன.

இக்கருத்தை நாம் எமது முந்தைய கட்டுரையில் ஆதாரபூர்வமாகவும் நடைமுறை ரீதியாகவும் விளக்கியுள்ளோம்.
பார்க்க: முற்றுப் பெறாத சுவிஷேசமும் மூடிமறைக்கப்படும் உண்மைகளும்

2. ஒரு குறித்த வசனம் பைபிளில் உள்ளதா? இல்லையா? என்ற சர்ச்சை ஏற்பட்டாலும் சரி, ஒரு குறித்த வார்த்தையின் விளக்கத்தில் சர்ச்சை ஏற்பட்டாலும் சரி இன்று எம்மத்தியில் உள்ள மூலப்பிரதிகளை ஒப்பு நோக்கி தீர்வு காண முடியாது. காரணம், தமக்கிடைலேயே பல்லாயிரக்கணக்கான இடங்களில் வித்தியாசப்பட்டு, முரண்பட்டு காணப்படும் கையெழுத்துப் பிரதிகளில் எதை ஏற்க வேண்டும்?  எதை தவிர்க்க வேண்டும்? என்ற தீர்க்கமான விதி முறையோ, நெறிமுறையோ ஆய்வாளர்கள் மத்தியிலும் சரி, கிருஸ்துவ மதபீடங்கள், போதகர்கள் மத்தியிலும் சரி  கிடையவே கிடையாது! இதற்கான காரணங்களாக,

(1)இன்று கிருஸ்தவர்கள் மத்தியில் புழக்கத்தில் காணப்படும் புதிய ஏற்பாட்டுக்கும், கையெழுத்துப் பிரதிகளுக்குமிடையே காணப்படும் அதீத வித்தியாசங்கள்.
(2)இன்றுள்ள புதிய ஏற்பாட்டு ஆகமங்களை, வசனங்களை கையெழுத்துப் பிரதிகள் வேண்டுமென்றே தவிர்த்திருத்தல்.  மற்றும்
(3)இன்றைய புதிய ஏற்பாட்டில் காணப்படாத நூற்களை கையெழுத்துப் பிரதிகள் உள்ளடக்கியிருத்தல் போன்ற அம்சங்களைக் குறிப்பிடலாம்.

எனினும் மூலப்பிரதிகள் விமர்சன அறிவியல் ஆய்வாளர்கள்
(1)காலத்தால் முந்திய பிரதிகளில் ஒப்பீட்டளவில் தவறுகள் குறைந்திருக்கும்.
(2) பிரதி ஆசிரியர்களால் அழித்தல், திருத்தல் அதிகமுள்ள பிரதிகள் குறைவான தவறுகளைக் கொண்டிருக்கும்.
(3)வாசிப்பதற்கும் கிரகித்துக் கொள்வதற்கும் கடினமான வசனங்களில் பிழைகள் அதிகமிருக்காது. என்பது போன்ற எடுகோள்களைப் பிரயோகித்தே புதிய ஏற்பாட்டின் மூல வார்த்தை இன்னதாக இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள்!

மூலப்பிரதிகள் தொடர்பான இம்முன்னுரையுடன் ‘விபச்சாரப் பெண்’ குறித்த சம்பவம் இடைச் செருகல் செய்யப்பட்டதுதான் என்பதை மூலப்பிரதிகளினூடாக நோக்குவோம்.

1.யோவான் எழுதிய சுவிஷேசத்தின் ஒரு பகுதிதான் பைபிளின் கையெழுத்துப் பிரதிகளில் காலத்தால் முந்தியது, கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என நாம் முன்பு குறிப்பிட்டோம் அல்லவா! அதனை மூலப்பிரதிகள் ஆய்வாளர்கள் -Papyrus 66- என அடையாளப்படுத்துவர். அதில் நாம் கட்டமிட்டுக் காட்டியுள்ள – குறித்த இடத்தில் சம்பவம் காணப்படவில்லை. (பார்க்க 04).

2.இன்றுள்ள முழுமையான புதிய ஏற்பாட்டுப் பிரதிகளில் மிகப் பழமையான பிரதியாக கிரேக்க மொழியில் எழுதப்பட்ட ‘ஸீனா’ என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி. நாலாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் எழுதப்பட்டதாக நம்பப்படும் பிரதி காணப்படுகிறது. அதில் நாம் கட்டமிட்டுக் காட்டியுள்ள குறித்த இடத்தில் சம்பவம் காணப்படவில்லை.  (பார்க்க 05).

3.அவ்வாறே கி.பி நாலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் எழுதப்பட்டதாக நம்பப்படும் ‘வத்திக்கான் பிரதி’ யிலும் நாம் கட்டமிட்டுக் காட்டியுள்ள குறித்த இடத்தில் சம்பவம் காணப்படவில்லை. (பார்க்க 06).

4.அவ்வாறே கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக நம்பப்படும் ‘அலக்ஸாந்தரியா பிரதி’ யிலும் நாம் கட்டமிட்டுக் காட்டியுள்ள குறித்த இடத்தில் சம்பவம் காணப்படவில்லை. (பார்க்க 07).

5.அவ்வாறே கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக நம்பப் படும் ‘வொஷிங்டன் பிரதி’ யிலும் நாம் கட்டமிட்டுக் காட்டியுள்ள குறித்த இடத்தில் சம்பவம் காணப்படவில்லை. (பார்க்க 08).

6.இது போக, மூலப்பிரதிகள் விமர்சன அறிவியல் துறையில்  தன்னிகரற்ற அறிஞர் என துறை சார்ந்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘புரூச் மெட்ஜெர்’  Bruce M. Metzger அவர்கள் தனது ‘புதிய ஏற்பாட்டின் மூல வாக்கியம்: அதன் மாற்றமும் திரிபும் மீளப்பெறலும்’  -The text of the New Testament: It’s Transmission Corruption and Restoration-  என்ற தனது ஆய்வு நூலில் 223ம் பக்கத்தில் (இருப்பதிலேயே) மிகச் சிறந்த கிரேக்கப்பிரதிகளில் ‘விபச்சாரப் பெண்’ தொடர்பான சம்பவம் இடம் பெறவில்லை என வாக்குமூலம் அளித்துவிட்டு அவைகளின் பட்டியலையும் தந்துள்ளார்.

உதாரணமாகஇ P66, P75, B, L, N, T, W, 1241, 892 என அவர் அளித்துள்ள பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அத்துடன், ‘குறித்த சம்பவம் (யோவான் எழுதிய பைபிளின்) நாலாவது சுவிசேஷத்தில் இடைசெருகல் செய்யப்பட்டது என்றே முடிவு செய்வது அவசியமாகும்’  என அறுதியிட்டுக் கூறியுள்ளார். (பார்க்க 09)

7.இது தவிர வேறு  காலத்தால் பிந்திய சில பிரதிகள் குறித்த சம்பவத்தின் அரை குறை வசனங்களை மாத்திரம் கொண்டுள்ளன.

உதாரணமாக:
(1) பிரதி இல- 047   வசனங்கள்  7:53 முதல் 8:2 வரை மட்டும்
(2) பிரதி கு   வசனம்     8: 11 மட்டும்

8.இன்னும் சில பிற்காலப் பிரதிகள் சம்பவத்தை முழுமையாக உள்ளடக்கியிருந்தாலும் ‘இச்சம்பவம் சந்தேகத்திற்கிடமானது என்பதற்கான அடையாளங்களுடன் சேர்த்தே காணப்படுகிறது.

உதாரணமாக:
1.கி.பி 8-10 காலப்பகுதியில் எழுதப்பட்ட E, S, M   ஆகிய பிரதிகள்.
2.கி.பி  9 லம்தா பிரதி
3.கி.பி  9 ஒமேகா பிரதி

9. இன்னும் சில பிரதிகள் குறித்த சம்பவத்தை உள்ளடக்கியிருக்கின்றன. ஆனால் புதிய ஏற்பாட்டில் உள்ளவாறு யோவான் 7:53 முதல் 8:12 வரை அல்ல! மாறாக :
(1) பிரதி   ஆளு .225                                யோவான் 7:36 க்குப் பின்
(2) ஜோர்ஜியன் பிரதி                             யோவான் 7:44 க்குப் பின்
(3) பிரதி F13                                                 லூக்கா 21:32 க்குப் பின்
(4) பிரதிகள் 1 மற்றும் 565, 23           யோவான் சுவிஷேசத்தின் இறுதியில்.

இவ்வாறு பல்வேறுபட்ட மூலப்பிரதிகளும் குறித்த சம்பவம் யோவான் சுவிஷேச ஆசிரியரால் எழுதப்பட்டதல்ல; மாறாக பிற்காலத்தில் வாழ்ந்த அநாமோதய ஆசாமியால்தான் கற்பனை செய்யப்பட்டு சுவிஷேசத்தில் இடைச் செருகல் செய்யப்பட்டது என்பதை ஐயமற நிரூபிக்கின்றன.

5. ஆதி திருச்சபை அறியாத சம்பவம்.
இறுதியாக குறித்த ‘விபச்சாரப் பெண்’ பற்றிய பைபிளில் இடம் பெறும் சம்பவத்தை ஆதி திருச்சபை பிதாக்கள், பண்டைய விவிலிய விரிவுரையாளர்கள் யாராவது அறிந்து மேற்கோள்காட்டியுள்ளார்களா? என்பதை நோக்குவோம்.

ஆதி திருச்சபைப் பிதாக்களுள் முக்கியமானவர்களான
(1) கிளெமென்ட்
(2) தெர்துலியன்
(3) சைம்ரியன்
(4) சைரிஸ்
மற்றும் ஏனையோரும் மேற்படி சம்பவத்தை அறியவோ, மேற்கோள் காட்டவோ இல்லை என்பதை ‘நோர்மன் கைசலர்’ மற்றும் ‘தோமஸ் ஹோவி’ என்பவர்கள் தங்களது ‘விவிலிய விமர்சனமும் பதில்களும்’ என்ற நூலில் 351, 352ம் பக்கங்களில் நாம் ஏற்கனவே விபரித்த காரணங்களுடன் சேர்த்து நான்காவதாக கூறியுள்ளார்கள். (பார்க்க 10)

இவ்வாறு குறித்த சம்பவம் யோவான் எழுதிய சுவிஷேச ஆசிரியரால் எழுதப்பட்டதல்ல என்ற இவ்விருவரது கருத்தையே ‘டி. எம் மோர்டொக்’ என்பவரும் தனது ‘யார் இந்த இயேசு? கிருஸ்துவின் கைவிரல் அடையாளங்கள்’ என்ற தனது நூலில் 42ம் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார். (பார்க்க 11)

வேறு சில ஆதி திருச்சபைப் பிதாக்கள் குறித்த சம்பவத்தை மேற்கோள் காட்டியுள்ளதாக சிலர் அபிப்பிராயங் கொண்டிருந்தாலும் குறித்த சம்பவத்திற்கும் காட்டப்பட்ட மேற்கோள்களுக்குமிடையிலான வித்தியாசங்களும் முரண்பாடுகளுமே இவ்வபிப்பிராயம் தவறு என நிரூபிக்கப்போதுமானதாக உள்ளன. அவசியம் ஏற்பட்டால் அதை தனியான ஒரு கட்டுரையில் விரிவாக விளக்குவோம்.

எனவே, பைபிள் கூறும், யோவான் எழுதிய நற்செய்தி நூலில் இடம்பெறும் ‘விபச்சாரப் பெண்’ பற்றிய சம்பவம் சுவிஷேச ஆசிரியரால் எழுதப்பட்டதல்ல என்பதையும் மாறாக இச்சம்பவம் பிற்காலத்தைய அடையாளந் தெரியாத ஆசாமியால் இடைச் செருகல் செய்யப்பட்ட கற்பனைக் கதையே என்பதையும் இக்கட்டுரையில் நாம்
(1) சம்பவத் தொடர்பின்மையை  சுட்டிக்காட்டியும்,
(2) உள்ளக முரண்பாடுகளை அடையாளங்காட்டியும்,
(3)சம்பவத்தின் எழுத்து நடை, சொற்பிரயோக முறை சுவிஷேசத்திற்கு அந்நியமானது என்பதை விபரித்தும்,
(4)காலத்தால் முந்திய, ஓரளவு நம்பகத்தன்மை மிக்க மூலப்பிரதிகளில் இச்சம்பவம் இடம் பெறவில்லை என்பதை விளக்கியும்,
(5)காலத்தால் பிந்திய பிரதிகளும் கூட இடைச்செருகலை உறுதிசெய்கிறது என்பதை விபரித்தும்,
(6)ஆதி திருச்சபைப் பிதாக்களுங் கூட குறித்த சம்பவத்தை அறிந்திருக்கவில்லை என்பதை உணர்த்தியும், அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளோம்.

இது தொடர்பில் தங்களது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் ஆதாரங்கள் அடிப்படையிலான மறுப்புகளையும் பெரிதும் வரவேற்கிறோம்.

(1)

dsc034121
114

The narrative flow of this gospel makes more sense if we move from the end of chapter 7 straight to John 8:12.

(2)

dsc034121

65 MISQUOTING JESUS

its writing style is very different from what we find in the rest of John (including the stories immediately before and after); and it includes a large number of words and phrases that are otherwise alien to the Gospel. The conclusion is unavoidable: this passage was not originally part of the Gospel.

(3)

dsc034121
269\357

the writing style (in the Greek) is significantly different from the writing style of the rest of the Gospel. In addition, the story breaks the flow of the narrative of John 7–8, where it is found. In other words, if you take the story out of John, the context makes much better sense, as the story immediately before the account flows better directly into the story immediately after it. For these and numerous other reasons there is virtually no debate among New Testament scholars that this story, as wonderful, powerful, and influential as it is, was not originally part of the New Testament. It was added by a scribe.

(4)

Papyrus 66
dsc034121

(5)

“ஸீனா பிரதி”

dsc034121

(6)

“வத்திக்கான் பிரதி”

dsc034121

(7)

“அலக்ஸந்தரிய்யா பிரதி”

dsc034121

(8)

“வொஷிங்டன் பிரதி”

dsc034121

(9)

dsc034121

Bruce M. Metzger

The text of the New Testament : It’s Transmission Corruption and Restoration

Second Edition By Bruce M. Metzger Page 223

dsc034121

(10)

dsc034121

PROBLEM: This story of the woman taken in adultery is found in the KJV , the ASV , the NASB , and the NIV . However, the NEB places it at the end of the Gospel under the

caption “An incident in the temple.” And since 1971 the RSV places it in special print

set off from the rest of the text, as does the NRSV . The standard Greek NT (Nestle-

Aland Text, United Bible Societies) places brackets around it, indicating that it is not

part of the text of John. Why do many scholars believe this story is not part of the

original manuscript of the Gospel of John?

SOLUTION: There are several reasons why many scholars question whether this

passage belongs here in John’s Gospel. (1) The passage does not appear in the oldest

and most reliable Greek manuscripts. (2) It is not found in the best manuscripts of the

earliest translations of the Bible into Old Syriac, Coptic, Gothic, and Old Latin. (3)

No Greek writer commented on this passage for the first 11 centuries of Christianity.

(4) It is not cited by most of the great early church fathers, including Clement,

Tertullian, Origen, Cyprian, Cyril, and others. (5) Its style does not fit that of the rest

of the Gospel of John. (6) It interrupts the flow of thought in John. John reads better if

one goes right from John 7:52 to 8:12 . (7) The story has been found in several

different places in Bible manuscripts—after John 7:36 ; after John 21:24 ; after John

7:44 ; and after Luke 21:38 . (8) Many manuscripts that include it in John 7:53–8:11

have marked it with an obelus, indicating they believe it is doubtful.

In spite of this, many Bible scholars believe this story is authentic. It certainly

contains no doctrinal error and fits with the character of Jesus and His teaching, but

there is no certainty that it was in the original text of John.

(11)

dsc034121

42 Who Was Jesus?

In When Critics Ask, apologist Geisler gives reasons for questioning the genuineness of this periscope of the adulterous woman:

(1) The passage does not appear in the oldest and most reliable Greek manuscripts. (2) It is not found in the best manuscripts of the earliest translations of the Bible into Old Syriac, Coptic, Gothic, and Old Latin. (3) No Greek writer commented on this passage for the first 11 centuries of Christianity. (4) It is not cited by most of the great early church fathers, including Clement, Tertullian, Origen, Cyprian, Cyril, and others. (5) Its style does not fit that of the rest of the Gospel of John. (6) It interrupts the flow of thought in John. John reads better if one goes right from John 7:52 to 8:12. (7) The story has been found in several different places in Bible manuscripts—after John 7:36; after John 21:24; after John 7:44; and after Luke 21:38. (8) Many manuscripts that include it in John 7:53 8:11 have marked it with an obelus, indicating they believe it is doubtful.

முற்றுப்பெறாத சுவிசேஷமும் மூடி மறைக்கப்படும் உண்மைகளும்!

Posted May 15, 2012 by arshathalathary
Categories: Uncategorized

 அபூ ஸைத் அல் அதரி

கிருஸ்தவர்களால் இறை வேதமாக நம்பப்படும் பைபிளில் உள்ள புதிய ஏற்பாட்டின் முக்கிய சுவிஷேசமான “மாற்கு எழுதிய சுவிஷேசம்” பற்றிய மூடி மறைக்கப்படும் உண்மைகளை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தக்க சான்றுகளுடன் வெளிக்கொணரும் நாம் இது பற்றிய தங்களது அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் பெரிதும் வரவேற்கிறோம்.

இன்று உலகிலுள்ள கிருஸ்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பைபிளை இறைவேதமாக நம்புகின்றனர். குறிப்பாக இயேசு கிருஸ்துவின் வாழ்வு பற்றி பேசும் மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் என்போரால் எழுதப்பட நான்கு சுவிசேஷங்களும் இயேசுவின் சீடர்களால்  “பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு” எழுதப்பட்டது என்று அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளனர்.

மேற்படி கிருஸ்தவர்களின் நம்பிக்கை சரியானதா அல்லது யதார்த்ததிற்கும், நிரூபிக்கப்பட்ட உண்மைகளுக்கும் மாற்றமானதாக யாரோ பெயர் தெரியாத, முகவரி இல்லாதவர்களால் எழுதப்பட்டதா என்பதை நாம் இக்கட்டுரையில் ஆராயப் போவதில்லை!

மாறாக இந்நான்கு சுவிஷேசங்களும் கிருஸ்தவர்களது நம்பிக்கைப் பிரகாரமே மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் என்பவர்களாலேயே எழுதப்பட்டது என ஒரு வாதத்திற்காக வைத்துக் கொணடாலும் கூட இந்நான்கிலும் மிக முதன்மையானதும் முக்கியமானதுமான சுவிஷேசமான “மாற்கு எழுதிய சுவிசேஷத்தில்  மிக மிக‌ பிற்பட்ட காலத்தில் அநாமோதய நபரால் எழுதப்பட்ட, இன்று காணப்படும் பழமையான, நம்பகமான(?) கையெழுத்துப்பிரதிகளில் கூட காணப்படாத சில வசனங்கள் எவ்வாறு பைபிளில் சேர்க்கப்பட்டு வேத வாக்கியங்கள் என்ற சாயம் பூசப்பட்டு கிருஸ்தவ மக்கள் ஏமாற்றப்பட்டார்கள், ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையே இக்கட்டுரை ஆதாரங்கள் அடிப்படையில் ஆராய்கிறது.

கட்டுரையின் மையக் கருவுக்குள் நாம் நுழைய முன் இரு முக்கிய அடிப்படைகளை புரிந்து கொள்வது விடயத்தின் ஆழ‌, அகலத்தை அறிந்து கொள்ள பெரிதும் துணை புரியும். அவைகளாவன:

1.தொலைந்து போன மூலப் பிரதிகள்:

புதிய ஏற்பாட்டின் நான்கு ஆசிரியர்களால் எழுதப்பட்டதாக கிருஸ்துவர்கள் நம்பும் மூலப்பிரதிகள் இன்று நம் மத்தியில் கிடையாது. சரி மூலப்பிரதிகள் தொலைந்ததுதான் தொலைந்தது அம்மூலப்பிரதிகளில் இருந்து பிரதி எடுக்கப்பட்ட “இரண்டாம் தலைமுறைப் பிரதிகள்” ஆவது எம்மத்தியில் காணப்படுகிறதா? என்றால் அதுவும் இல்லை! சரி,  மூலப்பிரதிகளில் இருந்து பிரதி எடுக்கப்பட்ட பிரதிகளின் பிரதிகளாவது (அதாவது மூன்றாம் தலைமுறைப் பிரதிகளாவது) இருக்கின்றதா? என ‘கண்ணில் விளக்கெண்ணை’ விட்டுக் கொண்டு தேடினாலும் ஊஹும் கிடையவே கிடையாது. மாத்திரமின்றி இன்னுமொரு படி கீழே இறங்கி வந்து மூலப்பிரதிகளின் பிரதிகளின் பிரதிகளின் பிரதிகளாவது இன்று உலகில் காணப்படுகிறதா என்றால் ஊஹும் மருந்துக்குக் கூடக் கிடையாது!

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? அதுதான் உண்மை. அப்படியானால் கிருஸ்துவர்களால் வேதமாக, இறை வசனங்களாக நம்பப்படும் பைபிளில் எதுதான் இன்றைக்கு காணப்படுகிறது? என்ற கேள்வி எம் எல்லோருக்கும் எழுவது இயற்கையே! அதற்கான பதிலாக; மிக மிக பிற்பட்ட காலங்களில், பெரும்பாலும் பல நூற்றாண்டுகள் பிந்திய காலப்பகுதிகளில் எழுதப்பட்ட பிரதிகளே இன்று உலகில் காணப்படுகின்றன!

அவைகளாவது காணப்படுகிறதே என திருப்திப்பட்டுக் கொள்ளும் நிலையிலும் இல்லை. காரணம் இவ்வாறு காணப்படும் பிரதிகளும் ஒன்றிலிருந்து இன்னுமொன்று பல்லாயிரம் இடங்களில் (எத்தனை இடங்களில் என எம்மால் மட்டிட முடியாதவாறு) அவைகளுக்கிடையில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இவ்வித்தியாசங்களின் எண்ணிக்கையை இலகுவாக சொல்வதென்றால் ஒப்பீட்டு ரீதியான பரிபாசையில் “இன்று எம்மிடமுள்ள பிரதிகளுக்கிடையில் காணப்படும் வேறுபாடுகள் புதிய ஏற்பாட்டில் காணப்படும் மொத்த சொற்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.”

நாம் கருத்துச் சிதைவின்றி மேற் சொன்ன இவ்வுண்மையை கிருஸ்தவ மதத்தைச் சார்ந்தவரும் பைபிள் மூலப்பிரதிகள் ஆராச்சியாளருமான “ப்ரெத் டி எர்மான்” (BRAT D. EHRMAN) என்பவர் தனது “மிஸ்கோடிங் ஜீஸஸ்” (MISQUOTING JESUS) எனும் நூலின் முன்னுரையில் 10ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். (பார்க்க 1.)

இவ்வாறு தங்களது வேதத்தின் மூலப்பிரதிகளை தொலைத்து விட்டு விழி பிதுங்கி நிற்கும் கிருஸ்தவ சமுதாயத்தவர்களின் கைகளின் உள்ள மிக மிக பிற்பட்ட காலங்களில் எழுதப்பட பிரதிகளின் “தராதரம்” என்ன என்பதைப் பார்க்கும் போது “முல்லா சூப் காய்ச்சிய கதை” தான் எமக்கு நினைவுக்கு வருகிறது! அக்கதை என்ன என்பதைப் பார்த்து விட்டு எமது தலைப்பை தொடர்வோம்.

ஒரு முறை நஸ்ருதீன் முல்லா சூப் காய்ச்சினார். சூப் வாசனையை மோப்பம் பிடித்த நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்து “முல்லாவே நான் உங்கள் நண்பரல்லவா? எனக்கும் சூப் தாருங்கள் எனக் கேட்க, அவருக்கு முல்லா சூப் கொடுத்தார். இதை அவதானித்த மற்றொருவர் அந்நண்பர் சென்றதும் முல்லாவிடம் வந்து முல்லாவே நான் உங்கள் நண்பரின் நண்பர் எனக்கும் சூப் தாருங்கள் என்றார். முல்லாவும் சரி போனால் போகிறது என அவருக்கும் சூப் கொடுத்தார். இதை அவதானித்த மற்றுமொருவரும் முல்லாவிடம் வந்து நான் உங்கள் நண்பரின் நண்பரின் நண்பர் எனக்கும் சூப் தாருங்கள் எனக் கேட்க முல்லாவுக்கு வந்ததே கோபம். அவருக்கு சூப் காச்சிய சட்டியை கழுவிய தண்ணீரை முல்லா கொடுத்தார். அதை குடித்துப் பார்த்த அந்நபரோ; முல்லா, இது சூப் மாதிரி இல்லையே என்று கேட்க முல்லாவோ; அதற்கு “இது சூப் அல்ல சூப்புடைய சூப்புடைய சூப்பு” எனக் கூறி வந்தவரை வாயடைக்க வைத்தார்.

இக்கதையை நாம் நகைச்சுவைக்காக மட்டும் எழுதவில்லை மாறாக, மூலப்பிரதிகளின், பிரதிகளின், பிரதிகளின், பிரதிகளையே தொலைத்துவிட்டு மிக மிக பிற்பட்ட காலங்களில் எழுதப்பட பிரதிகளையே வைத்திருக்கும் கிருஸ்துவர்களின் வேதமாகிய பைபிள், குறிப்பாக புதிய ஏற்பாடு “சூப்புடைய சூப்புடைய சூப்” பின் தரத்தில் தான் அமைந்திருக்கும் என்பதை உணர்த்துவதற்காகவும்தான் இதை எழுதினோம். இனி தலைப்புக்குள் வருவோம்.

2. மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் முக்கியத்துவம்:

மாற்கு எழுதிய சுவிஷேசத்தில் பிற்பட்ட காலத்தில் வாழ்ந்த அநாமோதய நபர்களின் கைச்சரக்கு கலக்கப்பட்டு அவைகளுக்கு “வேத வாக்கியங்கள்” என்ற சாயம் பூசப்பட்டது என நாம் முன்பு குறிப்பிட்டோம். இதன் பாரதூரத்தை, பயங்கரத்தை நன்கு புரிந்து கொள்வதற்கு கிருஸ்துவர்களுக்கு மத்தியில் மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் முக்கியத்துவத்தை, ஏனைய லூக்கா மற்றும் மத்தேயு எழுதிய சுவிஷேசங்களுக்கு மாற்கு எழுதிய சுவிஷேசம் எவ்வாறு மூலாதாரமாக அமைந்தது என்பதை நோக்குவது அவசியமாகும். அந்த வகையில்:

முதல் மூன்று சுவிஷேசங்கள்:

புதிய ஏற்பாட்டில் காணப்படும் முதல் மூன்று சுவிஷேசங்களான மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா சுவிஷேசங்கள் “Synoptic” என்று அறியப் படுகின்றன.  “Synoptic”  என்பதன் பொருள் “ஒன்றாகப் புரிந்து கொள்ளக்கூடியது” என்பதாகும். இம்மூன்று சுவிஷேசங்களுக்குமிடையே காணப்படும் பெருமளவான ஒற்றுமையால் மூன்றையும் ஒன்றிணைத்து கற்றுக் கொள்வது இலகுவானது என்பதனாலேயே இவ்வாறு அழைக்கப்பட்டது. இம்மூன்று சுவிஷேசங்களிலும் மாற்கு எழுதிய சுவிஷேசம் மிக முக்கியமானதாகும். அதைவிடவும் கூடுதலாக உலகில் காணப்படும் கிறிஸ்த்தவ நூற்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நூல் மாற்கு எழுதிய சுவிஷேசம் என்றும் கூறமுடியும். ஏனெனில், மாற்கு எழுதிய சுவிஷேசம்தான் முதன் முதலில் எழுதப்பட்ட சுவிஷேசம் என அனைவரும் கருத்தொற்றுமை கொண்டுள்ளனர்.

எனவே, இன்று எம்மிடையே உள்ள இயேசுவின் வாழ்வு பற்றி எழுதப்பட்ட புத்தகங்களிலேயே மிக முதன்மையானது மாற்கு எழுதிய சுவிஷேசம்தான். இதன் பொருள் மாற்கு தான் முதன் முதலில் இயேசு பற்றி எழுதினார் என்பதல்ல. மாறாக, அக்காலத்தில் இயேசு பற்றி எழுதுவதற்கான ஆரம்பகால முயற்சிகள் காணப்பட்டாலும் எம்மிடையே இன்று உள்ள இயேசு பற்றிய நூல்களில் மிகப் புராதனமானது மாற்கு எழுதிய சுவிஷேசம்தான்.

சுவிசேஷங்களின் மூலம்:

சுவிஷேசங்களின் மூலம் என்ன? அவை எதிலிருந்து எழுதப்பட்டது? என்பதை அறிந்துகொள்ள அச்சகங்களோ, அச்சடிக்கப்பட்ட நூல்களோ கண்டுபிடிக்கப்படாத பல நூற்றாண்டுகள் நாம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். கரங்களால் மாத்திரம் மிகக் கஷ்டத்துடனும், கவனத்துடனும் புத்தகங்கள் எழுதப்படும் காலகட்டத்தில்தான் சுவிஷேசங்கள் எழுதப்பட்டன. எனவே அக்காலத்தில் கரங்களால் எழுதப்பட்ட வெகு சில பிரதிகளே அன்று காணப்பட்டன. அவ்வாறெனில் மாற்கு தான் இம் மூன்று சுவிஷேசங்களில் முதன் முதலில் சுவிஷேசம் எழுதினார் என்பதை நாம் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்.

இம் மூன்று சுவிஷேசங்களையும் நாம் வாசித்துப் பார்த்தால் இவைகளுக்கிடையே குறிப்பிடத்தக்க அளவு ஒற்றுமைகளைக் காணலாம். இவைகள் ஒரேவிதமான சம்பவங்களை, ஒரேவிதமான வார்த்தைப்  பிரயோகங்களில் கொண்டுள்ளதையும் இயேசுவின் போதனைகள் ஒரே வசனப் நடையில் எடுத்தெழுதப்பட்டுள்ளதையும் கண்டுகொள்ளலாம்.

உதாரணமாக, மூன்று சுவிஷேசங்களிலும் உள்ள இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார் என்ற சம்பவத்தை எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் (மாற்கு 6:30‍ 44, மத்தேயு 14:12 21, லூக்கா 9:10 17) ஒரே வகையான வார்த்தைகளில் ஒரே மாதிரியான முறையில் சொல்லப்பட்டுள்ளதை கானலாம்.

இதை இன்னும் தெளிவாக நோக்க, இயேசு பக்கவாதக்காரனை குணப்படுத்திய சம்பவத்தை எடுத்துக் கொண்டால் (மாற்கு 2:1-12, மத்தேயு 9:1-8, லூக்கா 5:17-‍‍26) என்ற பகுதிகள் ஒரே மாதிரி அமைந்துள்ளதுடன் அதில் “அப்போது இயேசு பக்கவாதக்காரனுக்கு சொன்னார்” என்ற வசனம் ஒரே இடத்தில் இடம் பெற்றுள்ளதையும் நாம் அவதானிக்கலாம்.

இவ்வாறு மூன்று சுவிஷேசங்களுக்கும் இடையே காணப்படும் தெளிவான ஒற்றுமை இரண்டு வகையான  எடுகோள்களுக்கு எம்மை இட்டுச் செல்கிறது.

1.மேற்படி மூன்று சுவிஷேசங்களும் ஒரே மூலத்தில் இருந்து தகவல்களைப் பெற்று எழுதப்பட்டது. அல்லது

2.இம் மூன்றில் ஒரு சுவிஷேசத்தை மூலமாகக் கொண்டு ஏனைய இரு சுவிஷேசங்களும் எழுதப்பட்டன.

இவ்விரண்டு எடுகோள்களில் எது சரியானது?

இதை இன்னும் சற்று ஆழமாக நோக்கினால், மாற்கு எழுதிய சுவிஷேசம் 105 பகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் 93 பகுதிகள் மத்தேயுவினதும் 81 பகுதிகள் லூக்காவினதும் சுவிஷேசங்களில் இடம் பெற்றுள்ளதைக் காண்கிறோம். 4 பகுதிகள் மாத்திரம் மத்தேயுவினதும் லூக்காவினதும் சுவிஷேசங்களில் இடம் பெறாமல் உள்ளன.

இதை இன்னும் சற்று விரிவாகப் பார்த்தால் மாற்கு எழுதிய சுவிஷேசம் மொத்தமாக 661 வசனங்களையும் மத்தேயுவின் சுவிஷேசம் 1068 வசனங்களையும் லூக்காவின் சுவிஷேசம் 1149 வசனங்களையும் கொண்டுள்ளன.

மாற்கு எழுதிய சுவிஷேசத்தில் உள்ள 661 வசனங்களில் 606 வசனங்களை மத்தேயு தனது சுவிஷேசத்தில் 51% வீதமாக உள்வாங்கியிருப்பதையும் லூக்கா 320 வசனங்களை 53% வீதமாக உள்ளடக்கியிருப்பதையும் நாம் அவதானிக்கிறோம்.

மேலும், மத்தேயு உள்ளடக்காத மாற்கின் வசனங்களில் 31 வசனங்களை லூக்கா தனது சுவிஷேசத்தில் உள்வாங்கியிருக்கிறார்.

ஆக மேற்படி ஒப்பீட்டு ரீதியான பார்வை மத்தேயுவும் லூக்காவும் தங்களது சுவிஷேசங்களை எழுதும் போது மாற்கு எழுதிய சுவிஷேசத்தை அடிப்படையாகக் கொண்டே எழுதினார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது.

மேலும், நிகழ்வுகளை விவரிக்கும் முறையை எடுத்துக் கொண்டாலும் மாற்குவின் முறையையே மத்தேயுவும் லூக்காவும் பெருமளவில் பின்பற்றியுள்ளனர். மாற்குவின் விபரிக்கும் முறைக்கு மத்தேயு மாறுபடும் இடங்களில் லூக்காவும், லூக்கா மாறுபடும் இடங்களில் மத்தேயுவும் மாற்குடன் உடன்படுவது (அக்காலத்தைய இல‌க்கியத் திருட்டு என்பதற்கு அப்பால்) மத்தேயுவும், லூக்காவும் மாற்குவின் சுவிஷேசத்தை அடிப்படையாகக் கொண்டே வேறு சில விடயங்களையும் சேர்த்து தங்களது சுவிஷேசங்களை எழுதினார்கள் என்பது நிரூபணமாகிறது.

இவ்வுண்மையை கிருஸ்துவ மத போதகரும் பிரபல்ய விவிலிய விரிவுரையாளருமான வில்லியம் பார்க்லி என்பவர் தனது “மாற்கு எழுதிய சுவிஷேசம்” என்ற நூலின் முன்னுரையில் 13ம் 14ம் பக்கங்களில் எடுத்தெழுதியுள்ளார். (பார்க்க 2)

எனினும், நாம் ஏற்கனவே வலியுறுத்தியவாறு சுவிஷேசங்களை எழுதியவர்கள் ‘யார் என்றே அறியப்படாதவர்கள்’ என்றிருந்த போதிலும் கிருஸ்தவர்களது (மூட) நம்பிக்கைப் பிரகாரமே மாற்கு, மத்தேயு மற்றும் லூக்கா என்ற பெயர்களைக் குறிப்பிட்டோம் என்பதையும் அப்படி குறிப்பிட்டதன் நோக்கம் மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதே என்பதையும் வாசகர்களுக்கு நினைவூட்டிக் கொள்கிறோம்.

இக்கருத்தையே “மாற்கு தனது சுவிஷேசத்தை எழுதி பத்தில் இருந்து இருபது ஆண்டுகளுக்குள் மத்தேயுவும் லூக்காவும் தங்களது சுவிஷேசங்களை எழுதினார்கள் என்பதில் அதிக‌ளவான (கிருஸ்துவ) அறிஞர்கள் கருத்தொற்றுமை காண்கின்றார்கள். மத்தேயுவும் லூக்காவும்  ‘உண்மையில் இவைகளை எழுதியவர்கள் அடையாளமில்லாத நபர்கள்’ என்பதை மீண்டும் ஞாபகப்படுத்திக்கொண்டு “மாற்கு எழுதிய சுவிஷேசத்தை தங்களது சுவிஷேசங்களின் முக்கியதொரு மூலமாகக் கொண்டிருந்தார்கள்.” என ஷறோன் வார்னர் என்ற கிருஸ்துவ அறிஞர் தனது “அன் லொக்கிங் த மெஸேஜ் ஒஃப் த பைபிள்” என்ற நூலில் 75ம் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். (பார்க்க 3)

புதிய ஏற்பாட்டின் மூலப்பிரதிகள் மட்டுமன்றி அவைகளின் பிரதிகளின், பிரதிகளின், பிரதிகளும் கூட இன்று எம்மத்தியில் இல்லை என்பதையும் இன்று உலகில் உள்ள பிரதிகள் மிகவும் பிற்பட்ட காலங்களில் எழுதப்பட்ட ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமான பிரதிகள் என்ற முதலாவது விடயத்தையும் மாற்கு எழுதிய சுவிஷேசம் இயேசுவின் வாழ்வு பற்றிக் கூறும் நான்கு சுவிஷேசங்களில் முதன்மையானதும் ஏனைய இரண்டு சுவிஷேசங்களுக்கு மூலாதாரமாகவும் திகழ்கிறது என்ற இரண்டாவது உண்மையையும் நினைவில் நிறுத்தியவர்களாக இக்கட்டுரையின் மையப் பகுதிக்குள் செல்வோம்.

மாற்கு எழுதிய முற்றுப் பெறாத சுவிஷேசம்

நாம் ஏலவே குறிப்பிட்டவாறு மாற்கு எழுதிய சுவிஷேசம் கிருஸ்துவர்களது நம்பிக்கைக்கு மாற்றமாக, இன்று நடைமுறையில் உள்ள பைபிள்களுக்கு மாற்றமாக முற்றுப் பெறாமல் முடிந்துள்ளது என்பது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தும் ஆணித்தரமான உண்மையாகும்.

இவ்வாறு முற்றுப் பெறாமல் முடிந்த சுவிஷேசத்தில் ஓரிரு வார்த்தைகளை அல்ல! ஓரிரு வசன‌ங்களையும் அல்ல! பிற்பட்ட காலத்தில் பெயர் முகவரி கூட தெரியாத நபர்களால் எழுதப்பட்ட மொத்தமாக பன்னிரண்டு வசனங்களை மாற்கு எழுதிய சுவிஷேசத்துடன் இணைக்கப்பட்டு அவைகளும் “வேத வாக்கியங்கள்”  என சாயம் பூசப்பட்டன.

இவற்றை சற்று விரிவாக நோக்கும் முன்பு சம்பந்தப்பட்ட வசனங்களை சற்று நோக்கிவிடுவது இக்கட்டுரையை தொடந்தும் வாசிப்பதற்கு துணை புரியும்.

இதோ மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் இறுதிப்பகுதியை அப்படியே தருகிறோம்.

8, அப்பெண்கள் மிகவும் பயந்து குழப்பம் அடைந்தனர். அவர்கள் கல்லறையை விட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் அச்சத்தால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.

சீஷர்கள் இயேசுவைப் பார்த்தல்

(மத்தேயு 28:9- 10 யோவான் 20: 11- 18  லூக்கா 24:13- 35)

9. இயேசு வாரத்தின் முதல் நாளே உயிர்த்தெழுந்து விட்டார். முதல் நாளே இயேசு மகதலேனா மரியாளுக்கு தரிசனமானார். ஒரு முறை ஏழு பேய்களை மரியாளை விட்டு இயேசு விரட்டினார்.

10.இயேசுவைப் பார்த்த பின் மரியாள் சீஷர்களிடம் போய்ச் சொன்னாள். அச்சீஷர்கள் வெகு துக்கப்பட்டு அழுது கொண்டிருந்தனர்.

11. ஆனால் மரியாளோ, “இயேசு உயிரோடு இருக்கிறார். நான் அவரைப் பார்த்தேன்” என்றாள். ஆனால் அவர்களோ அவள் சொன்னதை நம்பவில்லை.

12.பின்னர் இயேசு, சீஷர்களில் இரண்டுபேர் நகரத்திற்கு நடந்து போய்க்கொண்டிருக்கும் போது காட்சி தந்தார். இயேசு இறப்பதற்கு முன்னர் இருந்த விதமாக  அவர் பார்ப்பதற்கு இல்லை.

13.இந்த இருவரும் போய் ஏனைய சீஷர்களிடம் கூறினர்.எனினும் அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.

இயேசு சீஷர்களிட‌ம் பேசுதல்

(மத்தேயு 28:16- 20  லூக்கா 26: 36- 49 யோவான் 20:19- 23  அப்போஸ்தலர் 1:6- 8)

14.பின்னர் இயேசு பதினொரு சீஷர்களுக்கும், அவர்கள் உணவு உண்ணும் தருணத்தில் காட்சியளித்தார். உயித்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதன் நிமித்தம் அவர்களுடைய அவ நம்பிக்கையைக் குறித்தும்,  இதயக் கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார்.

15.பின்பு அவர்களிடம், “உலகின் எல்லாப் பாகங்களுக்கும் செல்லுங்கள். எல்லோரிடமும் நற்செய்தியைக் கூறுங்கள்.

16.எவனொருவன் இதனை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறானோ அவன் இரட்சிக்கப்படுவான். எவனொருவன் விசுவாசிக்கவில்லையோ  அவன் கண்டிக்கப்படுவான்.

17.விசுவாசிப்பவர்கள் பல அரிய செயல்களைச் செய்யமுடியும். அவர்கள் என்பெயரால் பிசாசுகளை விரட்டுவர், அவர்கள் இதுவரை இல்லாத மொழிகளைப் பேசுவர்,

18.அவர்கள் எவ்வித துன்பமும் இல்லாமல் பாம்புகளைப் பிடிப்பர், சாவுக்குரிய நஞ்சைக் குடித்தாலும் அவர்களுக்கு ஆபத்து இல்லை, அவர்கள் தொட்டால் நோயாளிகள் குணம் பெறுவர்” என்று தம்மைப் பின்பற்றியோருக்கு கூறினார்.

19.சீஷர்களிடம் இவற்றைச் சொன்னபிறகு, இயேசு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். அங்கு அவர் தேவனுடைய வலது பக்கத்தில் அமர்ந்தார்.

20.அவரது சீஷர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று நற்செய்தியைச் சொன்னார்கள். தேவன் அவர்களுக்கு உதவினார். அவர்கள் சொல்வ‌து உண்மை என தேவன் நிரூபித்தார். சீஷர்களுக்கு அற்புதங்கள் செய்ய அதிகாரம் கொடுத்து இதை தேவன் நிரூபித்தார்.

இதுதான் மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் இறுதிப் பகுதி. இதில் கடைசி இரு பகுதிகளான “சீஷர்கள் இயேசுவைப் பார்த்தல்” மற்றும் “இயேசு சீஷர்களிட‌ம் பேசுதல்” என்ற பகுதிகளில் காணப்படும் 9 முதல் 20 வரையிலான பன்னிரெண்டு வசனங்களும் தான் பிற்பட்ட காலத்தில் அடையாளம் தெரியாத நபரால் எழுதப்பட்டு மாற்குவின் சுவிஷேசத்தில் சேர்க்கப்பட்டன.

இதை விரிவாக நோக்கும்முன் பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பில் காணப்படும் அடிக்குறிப்பை அலசிவிடுவோம்.

நாம் மேலே குறிப்பிட்டவாறு மாற்கு எழுதிய சுவிஷேசம் எட்டாம் வசனத்துடன் முடிவடைந்து விடுகிறது. அவ்விடத்தில் ஒரு நட்சத்திர அடையாளத்தை இட்டு “சில பழைய கிரேக்க‌ பிரதிகளில் புத்தகம் இத்துடன் முடிந்துவிடுகிறது.”  என ஓர் அடிக்குறிப்பைக் கொடுத்துள்ளார்கள்.

இதன் பொருள் என்ன? “சில பழைய கிரேக்க பிரதிகளில் புத்தகம் இத்துடன் முடிந்து விடுகிறது” என்றால் வேறு “பல கிரேக்க பிரதிகளில் புத்தகம் (அதாவது மாற்கு எழுதிய சுவிஷேசம்) தொடர்கிறது” என்று தானே அர்த்தம். ஆனால் உண்மை அவ்வாறல்ல. இங்குதான் கிருஸ்துவ மத குருக்களின் மாயாஜாலங்கள் மறைந்திருக்கின்றன.

இன்றுள்ள புதிய ஏற்பாட்டின் பிரதிகளின் “தராதரம்” பற்றி நாம் ஏற்கனவே தக்க ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியிருந்தோம். இவ்விடத்தில் மாற்கு எழுதிய சுவிஷேசம் தொடர்பான பிரதிகளின் விபரத்தை சற்று விரிவாக  நோக்குவோம்.

1. இன்றுள்ள புதிய‌ ஏற்பாட்டுப் பிரதிகளில் மிகப் பழமையான பிரதியாக கிரேக்க மொழியில் எழுதப்பட்ட “ஸீனா” என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி. நாலாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் எழுதப்பட்டதாக‌ நம்பப்படும் பிரதி காணப்படுகிறது.

அதில் மாற்கு எழுதிய சுவிஷேசம் 8ம் வசனத்துடன் முடிந்து விடுகிறது. (பார்க்க 4)

2. அவ்வாறே கி.பி நாலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் எழுதப்பட்டதாக நம்பப் படும் “வத்திக்கான் பிரதி” யிலும் மாற்குவின் சுவிஷேசம் முற்றுப் பெறாமலேயே காணப்படுகிறது. (பார்க்க 5)

மேற்படி இரு பிரதிகளுமே காலத்தால் முந்தியதும் “ஓரளவு நம்பகமானதாக(?)” கருதப்படும் பிரதிகளுமாகும்.

இது அல்லாத வேறு பல பிரதிகளிலும் கூட சுவிஷேசம் முற்றுப் பெறாமலேயே முடிந்துள்ளது. உதாரணமாக பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “பைஸாந்த்தியப் பிரதி” ஜோர்ஜிய மொழியில் கி.பி 897 மற்றும் கி.பி 913 காலகட்டத்தில் எழுதப்பட்ட பிரதிகள் மற்றும் ஆர்மேனிய மொழியில் எழுதப்பட்ட பிரதிகள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இவ்வாறு மாற்கு எழுதிய சுவிஷேசம் முற்றுப் பெறாமலேயே அமைந்துள்ளது என்பதை ஆரம்பகால கிருஸ்துவ மத போதகர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூட மாற்கு எழுதிய சுவிசேஷத்தின் முடிவுரையை அறிந்திருக்கவில்லை என்பதை வைத்தும் எம்மால் உறுதி செய்ய முடியும்.

“கிலெமன்ட் ஒஃப் அலக்ஸான்டரிய்யா” மற்றும் “ஒரிஜென்” என்பவர்கள் (மாற்குவின் முடிவுரையாகிய) இவ்வசனங்கள் பற்றி அறிந்திருக்கவில்லை. மேலும் “இஸிபியூஸ்” மற்றும் “ஜிறோம்” என்ப‌வர்கள் கூட தாங்கள் அறிந்திருந்த மாற்குவின் கிரேக்கப் பிரதிகளில் இம்முடிவுரை காணப்படவில்லை என்பதை உறுதிசெய்துள்ளார்கள்” என “கிரேக்க புதிய ஏற்பாட்டின் விரிவுரை” என்ற நூலில் “புரூஸ் மெட்ஜெர்” எனும் கிருஸ்துவ மத போதகர் குறிப்பிட்டுள்ளார். (பார்க்க- 6)

இக்கருத்தையே “குர்ட் அலான்ட் மற்றும் “பர்பரா அலான்ட்” என்பவர்களும் தங்களது “புதிய ஏற்பாட்டின் மூல வாக்கியம்” என்ற நூலில் 292ம் பக்கத்தில் உறுதி செய்துள்ளனர். (பார்க்க-7)

ஆக உண்மை இவ்வாறு இருக்கும் போது மிக பிற்காலத்தில் எழுதப்பட்ட நம்பகத்தன்மையில் குறைந்த சில பிரதிகளில் யாரோ இனந்தெரியாத அநாமோதய நபர்களால் எழுதப்பட்டு மாற்கு எழுதிய சுவிஷேசத்தில் சேர்க்கப்பட்ட கைச்சரக்கையே கிருஸ்தவர்கள் இன்று வேத வசனங்களாக நம்புகிறார்கள்.

இவ்வாறு நாம் ஏலவே தெளிவுபடுத்தியது போல், ஒன்றுக்கொன்று முரணான பிற்காலத்தில் எழுதப்பட்ட நம்பகத்தன்மையில் குறைந்த சில பிரதிகளிளை மாற்குவால் எழுதப்பட்ட சுவிஷேசம் தொடர்பில் நாம் ஆய்வுக்கு உட்படுத்தினால் பல்வேறுபட்ட குழப்பங்களையும் பதில் சொல்ல முடியாத கேள்விகளையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

அவைகளாவன:

1.ஐந்தாம் ஆறாம்  நூற்றாண்டுகளில் எழுதப்பட “அலக்ஸாந்திரியப் பிரதி” ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட ‘கிரேக்க மற்றும் இலத்தீன் பிரதிகள்’, ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “தீடா” மற்றும் “டெல்டா” பிரதிகள் போன்றவைகளில் இன்றுள்ள பைபிளில் காணப்படுவது போல் நீண்ட முடிவுரை காணப்படுகிறது.

2.ஒன்பதாம் அல்லது பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டு “பரிஸ்” நகரில் இன்று வைக்கப்பட்டுள்ள, பிரதிகள் தொடர்பாக ஆய்வாளர்களால் (K) என அடையாளப்படுத்தப்படும் பிரதியில் இன்றைக்கு கிறிஸ்த்தவர்களின் கைகளில் உள்ள பைபிளில் காணப்படும் மாற்குவின் சுவிஷேசத்தில் காணப்படும் முடிவுரையை விடவும் “சுருக்கமான முடிவுரை” யையே கானப்படுகிறது.

அதன் வார்த்தைகள் “But they reported briefly to Peter and those with him all that they had been told. And after this, Jesus himself sent out by means of them, from east to west, the sacred and imperishable proclamation of eternal salvation”

“எனினும், அப்பெண்கள் பேதுருவுக்கும் அவனோடு இருந்தவர்களுக்கும், தங்களுக்கு சொல்லப்பட்டவைகளை சுருக்கமாக அறிவித்தனர். பின்னர் இயேசு அவர்களை மீட்சிக்கான நிரந்தரமும் புனிதமுமிக்க நித்திய அழைப்புடன் கிழக்கிலிருந்து மேற்குவரை அனுப்பி வைத்தார்.”

3.”சிரியப் பிரதி” மற்றும் பழைய “இலத்தீன் பிரதி” மற்றும் சில “எதியோப்பிய பிரதிகள்” என்பன நாம் ஏலவே சுட்டிக்காட்டிய “சுருக்கமான முடிவுரையையும், அதனைத் தொடர்ந்து நடைமுறையில் உள்ள மாற்குவின் சுவிஷேசத்தில் உள்ள நீண்ட முடிவுரையையும் கொண்டுள்ளன.

இவ்வியடம் முற்றுப் பெறாத மாற்கு எழுதிய சுவிஷேசத்தில் முதலில் நாம் மேலே கூறிய “சுருக்கமான முடிவுரை” சேர்க்கப்பட்டு, அதற்கு பிற்பட்ட காலத்தில்தான் இன்று பைபிளில் உள்ள “நீண்ட முடிவுரை” சேர்க்கப்பட்டது என்ற உண்மையை எமக்கு உணர்த்துகிறது.

4. பிற்காலத்தில் இலத்தீன் மொழியில் பூரணப்படுத்தப்பட்ட ” அலக்ஸாந்திரியப் பிரதியிலும்”, “அஃப்ராமிய்யாப் பிரதியிலும்”, “பீஸா பிரதியிலும்”, 15வது வசனம் வ‌ரை மாத்திரமே காணப்படுகின்றன‌.

5.”ஸுர்யானி பிரதிகளில்” 17 முதல் 20 வசனம் வரை மாத்திரம் காணப்படுகின்றன.

6.”ஹேர்குலிஸ் மற்றும் கிப்தி பிரதிகளில்” 20வது வசனம் மட்டும் காணப்படுகிறது.

7.”எதியோப்பிய மற்றும் சில கிப்தி பிரதிகளில் 12ம் வசனங்கள் வரை மட்டுமே காணப்படுகின்றன.

8.ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “வொஷிங்டன் பிரதி”யில் இன்று காணப்படும் பைபிளில் உள்ள வசனங்களை விடவும் அதிக வசனங்கள்!! காணப்படுகின்றன. அவைகளாவன:

“And they excused them selves, saying, ‘This age of lawlessness and unbelief is under Satan, who does not allow the truth and power of God to prevail over the unclean things of the spirits [or, does not allow what lies under the unclean spirits to understand the truth and power of God]. Therefore reveal thy righteousness now — thus they spoke to Christ. And Christ replied to them, ‘The term of years of Satan’s power has been fulfilled, but other terrible things draw near. And for those who have sinned I was delivered over to death, that they may return to the truth and sin no more, in order that they may inherit the spiritual and incorruptible glory of righteousness which is in heaven.”

பின்னர் இயேசு பதினொரு சீஷர்களுக்கும், அவர்கள் உணவு உண்ணும் தருணத்தில் காட்சியளித்தார். உயித்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதினிமித்தம் அவர்களுடைய அவநம்பிக்கையைக் குறித்தும், இதயக் கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார். என்ற வசனத்திற்குப் பிறகு:

“ஆவிகளின் தூய்மையில்லாதவைகள் மீது உண்மையும், கர்த்தரின் அதிகாரமும் பரவி ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்காத, சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள நிராகரிப்பும், அத்துமீறலும் காணப்படும் காலம் இது” (அல்லது அசுத்த ஆவிகளின் கீழுள்ளவைகளை சத்தியத்தையும், கர்தரின் வல்லமையையும் விளங்க அனுமதிக்காத சாத்தானின் ……..) எனவேதான் உமது அதீத தேவையை கர்த்தர் இப்போது வெளிக் கொணர்ந்துள்ளார்” எனக் கூறி அவர்கள் மன்னிப்பு வேண்டினர்.

இவ்வாறே, அவர்கள் இயேசுவுக்கு பதிலளித்தார்கள். அதற்கு இயேசு “சாத்தானின் ஆதிக்கம், பலத்துக்குரிய ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டன. எனினும் அச்சமூட்டும் பயங்கர நிகழ்வுகள் நெருங்கிவிட்டன. பாவம் செய்தவர்கள் சத்தியத்தின் பக்கம் திரும்பி மீண்டும் பாவங்களின் பக்கம் திரும்பிவிடாமல் இருக்க மரனத்தின் பால் ஒப்படைத்து விட்டேன். அவர்கள் பரலோகத்தில் என்றும் கெட்டுவிடாத உண்மையான ஆன்மீக கீர்த்தியை அநந்தரமாக அடைவார்கள்” என பதிலளித்தார்.

அதனைத் தொடர்ந்து “பின்பு அவர்களிடம், உலகின் எல்லாப் பாகங்களுக்கும் செல்லுங்கள். எல்லோரிடமும் நற்செய்தியைக் கூறுங்கள்……” என்று கிறிஸ்த்தவர்கள் மத்தியில் இன்றுள்ள மாற்குவின் சுவிஷேசத்தில் காணப்படுவது போல் வசனங்கள் தொடர்கின்றன.

மேற்கண்டவாறு மாற்குவின் சுவிஷேசத்தின் முடிவு பற்றிப் பார்த்த நாம் அதிலிருந்து பின்வரும் பெறுபேறுகளைப் பெறுகிறோம்.

1. பழைய நம்பகமான பிரதிகளில் மாற்கு எழுதிய சுவிஷேசம் முற்றுப் பெறாமலேயே முடிந்துள்ளது.

2.முற்றுப் பெறாமல் முடிவடைந்த சுவிஷேசத்தில் “சுருக்கமான முடிவுரை” ஒன்று இனந்தெரியாத யாரோ ஒருவரால் எழுதப்பட்டு சேர்க்கப்பட்டது.

3.”சுருக்கமான முடிவுரை”யில் திருப்திப்படாத வேறு யாரோ ஒருவர் இன்று நடைமுறையில் உள்ள “நீண்ட முடிவுரை” யை எழுதி மாற்குவின் சுவிஷேசத்தில் சேர்த்துவிட்டார்.

4. அந்நீண்ட விவுரையிலும் நாம் இலக்கம் 7 இல் கண்டவாறு “சில வசனங்கள் சேர்க்கப்பட்டு “மிக நீண்ட முடிவுரை” உருவாக்கப்படது. அல்லது அவ்வசனக்கள் நீக்கப்பட்டு “மிக நீண்ட முடிவுரையில்” இருந்து இன்றுள்ள “நீண்ட முடிவுரை “உருவாக்கப்பட்டது.

5. பல பிரதிகள் இன்றுள்ள “நீண்ட விரிவுரையை முழுமையாகக் கொண்டுள்ளாமல் ஒரு குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு பிரதிகள் அடிப்படையில் நோக்கும் போது “முடிவுரை இன்மை“, “சுருக்கமான முடிவுரை”, (இன்று நடைமுறையில் உள்ள) “நீண்ட முடிவுரை“, “மிக நீண்ட முடிவுரை“ மற்றும் “அரை குறை முடிவுரைகள்“ என்பன பிரதிகளில் காணப்படுவது –“மாற்குவின் சுவிஷேசத்தில் இன்று காண‌ப்படும் முடிவுரை“ மாற்குவால் தான் எழுதப்பட்டது என்ற கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை தவிடுபொடியாக தகர்த்து விடுகிறது.”

மேலும் இன்று நடைமுறையில் உள்ள பைபிள்களில் காணப்படும் மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் முடிவுரை மாற்குவால் எழுதப்பட்டதல்ல என்பது இன்னுமொருவகையிலும் நிரூபனமாகிறது.

மாற்கு எழுதிய சுவிஷேசம், 8, அப்பெண்கள் மிகவும் பயந்து குழப்பம் அடைந்தனர். அவர்கள் கல்லறையை விட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் அச்சத்தால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.

“அப்பெண்கள் தாங்கள் பார்த்த விடயத்தை யாரிடமும் எதையும் சொல்லவில்லை” என எட்டாவது வசனம் இடை நடுவில் நிற்க (பிற்காலத்தில் முகவரி இல்லாத நபரால் எழுதி சுவிஷேசத்தில் சேர்க்கப்பட்ட 10வது வசனமோ) 10.இயேசுவைப் பார்த்த பின் மரியாள் சீஷர்களிடம் போய்ச் சொன்னாள். என முற்றிலும் முரண்பாடாக அமைந்துள்ளது.

மாத்திரமின்றி, மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் இறுதியில் ஏழாம் வசனத்தில் 7. இயேசு கலீலியோவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார். உங்களுக்கு முன்னால் அவர் அங்கிருப்பார். உங்களுக்கு ஏற்கனவே சொன்னபடி நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள் என்றான். என ‘இயேசுவை சீடர்கள் கலீலியோவில் பார்ப்பார்கள்’ என்று உறுதி செய்ய,   முற்றுப் பெறாத முடிவுரையை எழுதிய நபரோ  வசனம் பன்னிரெண்டில். 12. பின்னர் இயேசு, சீஷர்களில் இரண்டுபேர் நகரத்திற்கு நடந்து போய்க்கொண்டிருக்கும் போது காட்சி தந்தார். என “இயேசுவை சீடர்கள் கலீலியோவில் பார்க்கவில்லை (கலீலியோ) நகரத்திற்குச் செல்லும் வழியில் தான் பார்த்தார்கள்” என (நாலு வரிகளுக்குள்ளேயே)  முரண்பாடாக எழுதியுள்ளார்.

மேலும், மாற்குவின் சுவிஷேசத்தில் காணப்படும் விரிவான எழுத்து நடையையும் நுணுக்கமான விபரிக்கும் முறையையும் (பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட) இன்றுள்ள முடிவுரையில் நம்மால் காண முடியாமல் அவசர அவசரமாக எழுதப்பட்டு முடிக்கப்பட்ட தோரணையில் அமைந்திருப்பது இன்று பைபிளில் உள்ள மாற்குவின் முடிவுரை உண்மையில் மாற்கு எழுதியது அல்ல என்பதற்கு மிகப் பெரும் ஆதாரமாக அமைந்துள்ளது.

இதை பல‌ கிறிஸ்த்தவ அறிஞர்கள் மற்றும் மதபோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உதாரணமாக:

“திமோதி ஆர். கர்மோடி” எனும் கிருஸ்துவ ஆய்வாளர் தனது “மாற்கு எழுதிய சுவிஷேசம் கேள்விகளாக……” என்ற நூலின் 57வது பக்கத்தில் பின்வருமாறு கூறுகிறார்:

“சட்டபூர்வமான மாற்குவின் சுவிஷேசத்தில் உள்ள 9 தொடக்கம் 20 வரையிலான வசனங்கள் சுவிஷேச ஆசிரியரால் எழுதப்படவில்லை, மாறாக அவைகள் இரண்டாம் நூர்றாண்டில் சுவிஷேசத்தில் சேர்க்கப்பட்டன என (கிருஸ்தவ) அறிஞர்கள் கருத்தொற்றுமை காண்கின்றனர்.”( பார்க்க 8)

கிருஸ்துவ மத போதகரும் பிரபல்ய விவிலிய விரிவுரையாளருமான வில்லியம் பார்க்லி என்பவர் தனது “மாற்கு எழுதிய சுவிஷேசம்” என்ற நூலின் முன்னுரையில் 17ம் பக்கத்தில் கீழ் வருமாறு கூறுகிறார்.

“மாற்கு எழுதிய சுவிஷேசம் தொடர்பில் மிக சுவாரசியமான விடயம் ஒன்றுள்ளது. சுவிஷேசத்தின் மூல வடிவில் 16:8 உடன் சுவிஷேசம் நின்றுவிடுகிறது. இரு காரணங்களால் எம்மால் அதை அறிந்து கொள்ள முடியும்.

1.சுவிஷேசத்தின் (16:9-20) வரையிலான வசனங்கள் எந்த ஆரம்பகால முக்கிய பிரதிகளிலும் காணப்படவில்லை.அவை பிற்காலத்தைய மட்டமான பிரதிகளில் மட்டுமே கானப்படுகின்றன.

2. (இரண்டுக்குமிடையிலான) கிரேக்க எழுத்து முறையும் வித்தியாசமானது. சுவிஷேசத்தை எழுதிய அதே நபரால்தான் முடிவுரையும் எழுதப்பட்டது எனக் கூற முடியாத அளவுக்கு வித்தியாசமானது…..(பார்க்க 9)

இதே கருத்தை கிருஸ்துவ இணையதளமான   http://www.christian-bible.com/Dialogue/Tests/test9.htm கீழ்வருமாறு உறுதி செய்கிறது:

Which gospel talks about handling snakes?

The earliest manuscripts of the gospel of Mark do not contain Mark 16:9-20, so the reference to handling snakes in these verses are not included in many translations of the Bible. In these versions of the New Testament, Mark 16 ends with verse 8. This is a significant different, for verse 8 reports that the women who discovered the empty tomb ran away in fear and did not tell anyone what they saw. In this ancient version of the gospel of Mark there is no report of a resurrection appearance by Jesus to his disciples. Thus, it seems likely that an editor added verses 9-20 in order to link the gospel story to the beginning of the church.

 ”பாம்புகளைக் கையாள்வது பற்றிப் பேசும் சுவிஷேசம் எது?”

“மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் காலத்தால் மிக முந்திய பிரதிகள் 16:9-20 வரையிலான வசனங்களைக் கொண்டிருக்கவில்லை. எனவேதான் பாம்புகளைக் கையாள்வது தொடர்பான ஆதாரம் பைபிளின் அதிக மொழி பெயர்ப்புகளில் காணப்படுவதில்லை. 16:8 வது வசனமே மாற்குவின் சுவிஷேசத்தின் முடிவாகும். அவ்வசனம் “கல்லறையை வெறுமையாகக் கண்ட பெண் அச்சத்தால் விரைந்தோடினாள். தான் கண்டதை யாருக்கும் சொல்லவில்லை” எனக் கூறுகிறது. மாற்கு சுவிஷேசத்தின் பழைய பிரதியில் “இயேசு உயித்தெழுந்ததும், தனது சீடர்களுக்குத் தரிசனம் கொடுத்தார்” என்ற செய்தி கிடையாது. எனவே, சுவிஷேசத்தின் கதையை திருச்சபையுடன் தொடர்புபடுத்த வேண்டி இன்றுள்ள முடிவுரையை யாரோ சுவிஷேசத்தில் சேர்த்து விட்டார் எனத் தோன்றுகிறது.

சுருங்கக் கூறின் கிருஸ்தவர்களால் மாற்கு எழுதிய சுவிஷேசம் என நம்பப் படும் சுவிஷேசத்தின் இன்றுள்ள முடிவுரை உண்மையில் மாற்குவினால் எழுதப்பட்டது அல்ல. மாறாக, அவை பிற்பட்ட காலத்தில் வாழ்ந்த பெயர், முகவரி தொரியாத அநாமோதய நபரின் சொந்த கற்பனையேஎன்பதை  (1) பிரதிகளை ஒப்பு நோக்கியும் (2) ஆரம்ப கால கிருஸ்துவ மதகுருக்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் இன்றுள்ள முடிவுரை பற்றி அறிந்திருக்கவில்லை என்பதைக் கொண்டும் (3) முற்பகுதிக்கும் முடிவுரைக்கும் மத்தியில் காணப்படும் முரண்பாடுகளைக் கொண்டும் (4) இருப‌குதிகளுக்குடையிலான வசன நடை வித்தியாசத்தைக் கொண்டும் (5) இறுதியாக கிருஸ்துவ அறிஞர்கள் ஆய்வாளர்கள் மற்றும் மத போதகர்களின் கூற்றுகளைக் கொண்டும் தக்க சான்றுகளுடன் நிரூபித்துள்ளோம்.

இது தொடர்பில் யாராவது மாற்றுக் கருத்துகளையோ, எதிர்வாதங்களையோ முன்வைத்தால் அவைகளை பரிசீலித்து அறிவுபூர்வமாகவும், ஆதாரங்கள் அடிப்படையிலும் பதில் தருவோம் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இறுதியாக, மாற்கு எழுதிய சுவிஷேசத்தில் எவ்வாறு அநாமோதய நபரின் சொந்த கற்பனை சேர்க்கப்பட்டது என்பதை அறிந்த நாம் மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் ஒரு பகுதி எவ்வாறு நீக்கப்பட்டது என்ற திடுக்கிட வைக்கும் உண்மையையும் “மாற்கு எழுதிய மர்ம சுவிஷேசம்” என்ற தலைப்பில் தக்க சான்றுகளுடன் இன்ஷா அல்லாஹ் இன்னுமொரு கட்டுரையில் நோக்குவோம்.

“தங்களது கரங்களால் நூலை எழுதி பின்பு அற்ப இலாபத்தை அடைய இது கர்த்தரிடம் இருந்து வந்தது எனக் கூறுவோருக்கு சாபம் உண்டாகட்டும்!! அவர்கள் கரங்களால் எழுதியவைகளுக்கும் (அதைக் கொண்டு) சம்பாதித்தவைகளுக்கும் சாபம் உண்டாகட்டும்”  (அல் குர் ஆன் 2:79)

துணை நின்றவை………..

(1)

dsc034121

10 MISQUOTING JESUS

maybe I don’t need to come up with a fancy explanation for how the mustard seed is the smallest of all seeds when I know full well it isn’t. And maybe these “mistakes” apply to bigger issues. Maybe when Mark says that Jesus was crucified the day after the Passover meal was eaten (Mark 14:12; 15:25) and John says he died the day before it was eaten (John 19:14)—maybe that is a genuine difference. Or when Luke indicates in his account of Jesus’s birth that Joseph and Mary returned to Nazareth just over a month after they had come to Bethlehem (and performed the rites of purification; Luke 2:39), whereas Matthew indicates they instead fled to Egypt (Matt. 2:1922)— Maybe that is a difference. Or when Paul says that after he converted on the way to Damascus he did not go to Jerusalem to see those who were apostles before him (Gal. 1:1617), whereas the book of Acts says that that was the first thing he did after leaving Damascus (Acts 9:26)— maybe that is a difference.

This kind of realization coincided with the problems I was encountering the more closely I studied the surviving Greek manuscripts of the New Testament. It is one thing to say that the originals were inspired, but the reality is that we don’t have the originals—so saying they were inspired doesn’t help me much, unless I can reconstruct the originals. Moreover, the vast majority of Christians for the entire history of the church have not had access to the originals, making

their inspiration something of a moot point. Not only do we not have the originals, we don’t have the first copies of the originals. We don’t even have copies of the copies of the originals, or copies of the copies of the copies of the originals. What we have are copies made later—much later. In most instances, they are copies made many centuries later. And these copies all differ from one another, in many thousands of places. As we will see later in this book, these copies differ

from one another in so many places that we don’t even know how many differences there are. Possibly it is easiest to put it in comparative terms: there are more differences among our manuscripts than there are words in the New Testament. Most of these differences are completely immaterial and insignificant.

A good portion of them simply show us that scribes in antiquity.

(2)

dsc034121
dsc034121
dsc034121

(3)

dsc034121

dsc034121

(4)

dsc034121

(5)

dsc034121

(6)

dsc034121

(7)

dsc034121
dsc034121

(8)

dsc034121
dsc034121

(9)

dsc034121
dsc034121

மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.

Posted May 15, 2012 by arshathalathary
Categories: Uncategorized

(மாற்றுமத அன்பர்களுக்கான கேள்வி பதில்)

மூலம்: DR. ZAKIR NAIK
தமிழில்: அபூ இஸாரா

பதில்:
1. மறுமை ( இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கை கண்மூடித்தனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல.

அறிவியல் அறிவும் – தர்க்கரீதியான உணர்வும் கொண்ட இந்த காலத்தில் இறப்புக்கு பின்பும் ஒரு வாழ்வு உண்டு என்பதை நம்புவது எப்படி?. என ஏராளமான பேர் வியப்படைகிறார்கள். மனிதன் இறந்த பிறகும் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்புவது கண்மூடித்தனமானது என்று ஏராளமானபேர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.என்னுடைய மறுமை நம்பிக்கை தர்க்க ரீதியை அடிப்படையாகக் கொண்டது.

2. மறுமை நம்பிக்கை தர்க்க ரீதியான நம்பிக்கையாகும்.
அருள்மறை குர்ஆனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் உண்மைகளைப் பற்றி சொல்லுகின்றன. (இது பற்றிய முழு விபரம் அறிய டாக்டர். ஜாகிர் நாயக் எழுதிய ‘ஞரசயn யனெ ஆழனநசn ளுஉநைnஉந ஊழஅpயவiடிடந ழுச ஐnஉழஅpயவடைடிடந’ என்ற புத்தகத்தை படியுங்கள். மேற்படி புத்தகம் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது). குர்ஆன் சொல்லும் அறிவியல் உண்மைகளில் பல சரியானதுதான் என்று கடந்த சில நூற்றாண்டுகளில்தான் கண்டறியப்பட்டுள்ளது. ஆயினும் குர்ஆன் சொல்லும் அறிவியல் உண்மைகள் அனைத்தும் சரியானதுதான் என்று கண்டறியப்படும் அளவிற்கு, அறிவியல் இன்னும் வளர்ச்சியடையவில்லை.

உதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட அறிவியல் உண்மைகளில் 80 சதவீதம் உண்மைகள் 100 சதவீதம் சரியானதுதான் என்று கண்டறியப் பட்டுள்ளதாக வைத்துக்கொண்டால், எஞ்சியிருப்பது 20 சதவீத உண்மைகள்தான். அறிவியலில் ஒரு குறிப்பிட்ட உண்மையை பற்றிய விபரம் உடனடியாக கண்டறியப் படுவதில்லை. ஏனெனில் ஒரு உண்மையை உடனடியாக அது உண்மை என்று ஒப்புக் கொள்ளம் அளவிற்கோ அல்லது உடனடியாக அது பொய் என்று ஒதுக்கித் தள்ளும் அளவிற்கோ அறிவியல் இன்னும் வளர்ச்சியடையவில்லை. இவ்வாறு மனித குலம் கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவைக் கொண்டு – அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் இதுவரை அறிவியல் ரீதியாக சரி காணப்படாத 20 சதவீத வசனங்களில் – ஒரு சதவீத வசனம் கூட சரியானது அல்ல என்பதை திட்டவட்டமாக வரையறுத்துக் கூற முடியாது.

அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் என்பது சதவீதம் உண்மைகள் – 100 சதவீதம் சரியானதுதான் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் – எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் சரியானது அல்ல என்று அறிவியல் ரீதியாக இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. எனவே தர்க்க ரீதி விதியின்படி குர்ஆன் சொன்ன அறிவியல் உண்மைகளில் எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் – சரியானதாகவே இருக்க வேண்டும். மறுமை வாழ்க்கைப் பற்றி அருள்மறை சொல்லும் வசனங்கள் யாவும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படாத 20 சதவீத உண்மைகளுக்குள் அடங்கியுள்ளது. எனவே தர்க்க ரீதியாக மறுமை வாழ்க்கை பற்றிய எங்களது நம்பிக்கை சரியானதுதான்.

3. மறுமை வாழ்க்கை பற்றிய நம்பிக்கை இல்லாமல், மனித நலம் மற்றும் மனித அமைதி போன்ற கருத்துக்களை கொண்டிருப்பது தேவையில்லாத ஒன்று.
சமுதாயத்தில் திருடுவது நல்லதா? கெட்டதா? என்று கேட்டால் சாதாரண நிலையில் உள்ள ஒரு மனிதன் சமுதாயத்தில் திருடவது கெட்டது என்றே பதிலளிப்பான். சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க, பலம் மிகுந்த ஒரு சமுதாய திருடனுக்கு, திருடுவது தவறானது என்று ஒரு சாதாரண நிலையில் உள்ள மனிதன் எவ்வாறு உணர்த்த முடியும்?.

உதாரணத்திற்கு நான் சமுதாயத்தில் செல்வாக்கு மிகுந்த – பலசாலியான ஒரு திருடன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே சமயம் நான் மிகுந்த அறிவுடைய ஒரு தர்க்கவாதியும் கூட. திருடுவது சரியானதுதான் என்று நான் சொல்கிறேன். ஏனெனில் திருடுவதால் சமுதாயத்தில் ஒரு சிறந்த ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கலாம். எனவே திருடுவது என்னைப் பொருத்தவரை, எனக்கு நல்லது என்று நான் சொல்கிறேன்.

திருடுவது சரியானது அல்ல என்று யாராவது என்னிடம் தர்க்க ரீதியாக வாதிட முயலுவார்கள் எனில் அவர்களின் வாதத்தை என்னால் உடனடியாக முறியடிக்க முடியும். திருடுவது சரியானது அல்ல என்று என்னிடம் வாதிட முற்பட்டவர்கள் வைத்த வாதங்கள் பின்வருமாறு.

அ. திருடுபவன் கஷ்டங்களை அனுபவிப்பான்.:
யார் திருடுகிறானோ, அவன் கஷ்டங்களை அனுபவிப்பான் என்று சிலர் வாதிடுவார்கள். திருட்டுக் கொடுத்தவர் வேண்டுமெனில் கஷ்டங்களை அனுபவிப்பார்களேத் தவிர, திருடியவர் கண்டிப்பாக கஷ்டங்களை அனுபவிப்பதில்லை. திருடியவன் நல்லதையே அனுபவிப்பான். ஆயிரம் டாலர்களை திருடிய ஒருவன், ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆடம்பர உணவு உண்ணலாம்.

ஆ. நீ திருடினால், உன்னிடம் வேறு எவராவது திருடுவார்கள்.

நீ யாரிடமாவது திருடினால், உன்னிடமிருந்து வேறு எவராவது திருடுவார்கள் என்று சிலர் வாதிடுவார்கள். என்னிடமிருந்து எவரும் திருட முடியாத அளவுக்கு நான் ஒரு பலம் படைத்த திருடன். தவிர என்னைப் பாதுகாக்கவென்று பல அடியாட்களை நான் வைத்திருக்கிறேன். நான் வேறு எவரிடமிருந்தும் திருட முடியுமேத் தவிர, என்னிடமிருந்து எவரும் திருட முடியாத அளவுக்கு நான் ஒரு பலம் பொருந்திய திருடன். திருடுவது ஒரு சாதாரண மனிதனுக்கு வேண்டுமெனில் கஷ்டமான வேலையாக இருக்கலாம். ஆனால் என் போன்ற படைபலம், பணபலம் உள்ள ஒருவனுக்கு திருடுவது எளிதானது.

இ. திருடினால் காவல் துறை கைது செய்யும்.
திருடினால் காவல் துறை கைது செய்யும் என்று சிலர் வாதிடலாம். நான் திருடினாலும் காவல் துறை என்னை கைது செய்ய முடியாத அளவுக்கு நான் காவல் துறையினரை விலைக்கு வாங்கியிருக்கிறேன். மந்திரிகளை கூட நான் விலைக்கு வாங்கக் கூடிய அளவிற்கு எனக்கு பணபலம் உண்டு. ஒரு சாதாரண மனிதன் திருடினால் அவனை காவல் துறை கைது செய்யும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நானோ காவல் துறை கூட கைது செய்ய முடியாத அளவிற்கு படைபலமும், பணபலமும் உள்ளவன். எனவே நான் திருடினால் என்னை காவல் துறை கைது செய்யாத அளவிற்கு நான் ஒரு பலம் பொருந்திய குற்றவாளி.

ஈ. திருடுவதன் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்.
திருடுவதன் மூலம் எளிதாக பணம் கிடைக்கிறது. பணம் கிடைக்க அதிகமாக கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சிலர் வாதிடலாம். திருடுவதால் எளிதாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். பணம் எளிதாக கிடைக்கிறது என்கிற ஒரே காரணத்தால்தான் நான் திருடுகிறேன். ஓரு மனிதன் எளிதான முறையிலும் பணம் சம்பாதிக்கலாம். கடினமான முறையிலும் பணம் சம்பாதிக்கலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு புத்திசாலியான மனிதன் எளிதான முறையில் பணம் சம்பாதிக்கும் வழியைத்தான் தேர்ந்தெடுப்பான்.

உ. திருடுவது மனிதத் தன்மைக்கு எதிரானது.
திருடுவது மனித குலத்திற்கு எதிரானது. ஓரு மனிதன் மற்ற மனிதர்களின் நலத்தைப் பற்றியும் சிந்தித்து செயல்பட வேண்டும் என சிலர் வாதிடலாம். இவ்வாறு வாதிடுபவர்களைப் பார்த்து நான் சில கேள்விகளை கேட்கிறேன். ‘மனிதத் தன்மை’ என்கிற சட்டத்தை எழுதி வைத்தது யார்?. நான் எதற்காக அந்த சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்?.

மனிதத் தன்மை என்கிற சட்டம் – உணர்வு பூர்வமான மனிதர்களுக்கு வேண்டுமெனில் சரியானதாகத் தெரியலாம். ஆனால் நான் ஒரு தர்க்க ரீதியான, சுயநலம் கொண்ட மனிதன். பிறருடைய நலம் பேணுவதால் எனக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே மனிதத் தன்மை என்பது எல்லாம் எனக்கு ஒரு பொருட்டேயல்ல.

ஊ. திருடுவது சுயநலம்.
திருடுவது சுயநலம் என்று சிலர் வாதிடலாம். திருடுவது சயநலம் என்பது நூறு சதவீதம் உண்மையானதுதான். திருடுவதால் நான் எனது வாழ்க்கையை கஷ்டமின்றி சுகமாக அனுபவிக்கலாம் என்கிற சூழ்நிலையில், நான் ஏன் ஒரு சுயநலவாதியாக இருக்கக் கூடாது?.

திருடுவது தவறு என்கிற தர்க்கரீதியான வாதம் ஒன்றைக் கூட எவராலும் எடுத்து வைக்க முடியாது.

இவ்வாறு திருடுவது தவறு என்கிற தர்க்கரீதியான வாதம் ஒன்றைக் கூட எவராலும் எடுத்து வைக்க முடியாது. மேற்காணும் தர்க்க ரீதியான வாதங்கள் யாவும் சாதாரண மனிதர்களை வேண்டுமானால் திருப்தி கொள்ள வைக்கலாம். ஆனால் மேற்படி தர்க்க ரீதியான வாதங்கள் சமுதாயத்தில் பலம் வாய்ந்த குற்றவாளிகளை திருப்தி படுத்த முடியாது. மேற்கூறப்பட்ட வாதங்கள் எதுவும் சரியான காரண காரியங்களுடன் நிரூபிக்க பட முடியாத வாதங்கள் ஆகும். எனவேதான் தற்போது உலகம் முழுவதும் எண்ணற்ற குற்றவாளிகள் இருக்கின்றனர்.

இவ்வாறுதான் சமுதாயத்தில் மலிந்து போய்க் கிடக்கும் இன்னபிற குற்றங்களான வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்றவையும் சரியானது அல்ல என்று சமுதாயத்தில் பலம் வாய்ந்த குற்றவாளிகளுக்கு முன்பு தர்க்க ரீதியாக நிரூபிக்கப்படாத குற்றங்கள் ஆகும்.

4. ஒரு முஸ்லிம் சமுதாயத்தில் பலம் வாய்ந்த, செல்வாக்கு மிகுந்த குற்றவாளியை, அவன் செய்வது குற்றம் என்று எளிதாக நம்ப வைக்க முடியும்.

இப்போது நாம் இடம் மாறிக் கொள்வோம். நீங்கள் உலகத்தில் பலம் வாய்ந்த, செல்வாக்கு மிக்க ஒரு குற்றவாளி என்று வைத்துக் கொள்வோம். உங்களது கட்டளைக்கு அடிபணிய ஆட்களும், அமைச்சர்களும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். தவிர உங்களை பாதுகாப்பதற்கு தனியாக ஒரு கூலிப்படையும் இருக்கிறது என்றும் வைத்துக் கொள்ளுங்கள். திருடுதல், வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்ற எல்லா தீயச் செயல்களும் தவறு என்று – நான் ஒரு முஸ்லிம் என்கிற ரீதியில் – என்னால் நிரூபிக்க முடியும்.

திருடுவது குற்றம் என்பது பற்றி – ஒரு குற்றவாளியின் முன்பு – நாம் மேலே விவரித்துள்ள விவாதங்களை எடுத்து வைக்கும்போது – அந்த குற்றவாளி திருடுவது குற்றம் அல்ல என்று மேலே குறிப்பிட்டுள்ளது போல் வாதாடினாலும் திருடுதல், வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்ற எல்லா தீயச் செயல்களும் தவறு என்று – நான் ஒரு முஸ்லிம் என்கிற ரீதியில் – என்னால் நிரூபிக்க முடியும்.
சமுதாயத்தில் சக்தி மிக்க மற்றும் செல்வாக்கு மிக்க ஒரு குற்றவாளி – அவன் செய்யும் குற்றங்கள் எதுவுமே குற்றமல்ல என்று தர்க்க ரீதியாக செய்யும் விவாதங்கள் யாவும் உண்மை நான் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில் திருடுதல், வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்ற எல்லா தீயச் செயல்களும் தவறு என்று – நான் ஒரு முஸ்லிம் என்கிற ரீதியில் – என்னால் நிரூபிக்க முடியும்.

4. எல்லா மனிதர்களும் நீதி நிலை நிறுத்தப்படுவதை விரும்புகிறவர்களே!
எல்லா மனிதர்களும் நீதி நிலை நிலை நிறுத்தப்படுவதை விரும்புவார்கள். பிறருக்கு நீதி கிடைப்பதை வெறுப்பவர்களாக இருந்தாலும், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விரும்புபவர்களாத்தான் இருப்பார்கள். சிலபேர் பதவி மற்றும் செல்வாக்கு என்னும் அதிகார போதை தலைக்கேறியவர்களாக – பிறரை துன்புறுத்தவும் – அநியாயம் இளைக்கவும் துணிந்து விடுவார்கள். பதவியும், செல்வாக்கும் கொண்டவர்கள் – அதன் பலத்தைக் கொண்டு பிறருக்கு அநியாயம் செய்ய முனைவதோடு – மேற்படி பதவியும் – செல்வாக்கும் – தங்களுக்கு பிறர் அநியாயம் செய்வதை தடுக்கும் என்றும் கருதுகிறார்கள். பதவி மற்றும் செல்வாக்கு என்னும் அதிகார போதையை கையில் வைத்திருப்பவர்கள் கூட – தங்களுக்கு ஒரு அநியாயம் இளைக்கப்படும் போது – நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.

இறைவன் மிக்க நீதியும், வல்லமையும் கொண்டவன்.
நான் ஒரு முஸ்லிம் என்கிற ரீதியில் குற்றவாளிக்கு முதலில் – இறைவன் இருக்கின்றான் என்பதை தெளிவாக்குவேன். (இறைவன் இருக்கின்றான் என்பதை எப்படி தெளிவாக்குவது என்ற கேள்விக்கான விடையை பாருங்கள்) இறைவன் எல்லோரையும்விட வல்லமை மிக்கவன். இறைவன் நீதியும் நேர்மையும் உடையவன் என்பதையும் அந்த குற்றவாளிக்கு தெளிவாக்குவேன். அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துந் நிஷாவின் 40வது வசனம் கூறும் ‘ நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்’ என்கிற வசனத்தை எடுத்துரைப்பேன்.

5. இறைவன், என்னை தண்டிக்கவி;ல்லை. ஏன்?
அறிவியல் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும், அருள்மறை குர்ஆனில் உள்ள அறிவியல் உண்மைகளை உணர்ந்து, இறைவன் இருக்கின்றான் என்பதை ஒப்புக் கொண்ட குற்றவாளி, இத்தனை வல்லமையும், நீதியையும் கொண்ட இறைவன் தன்னை ஏன் தண்டிக்கவில்லை என்று வாதம் செய்யலாம்.

6. யாரெல்லாம் அநியாயம் செய்கிறார்களோ, அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்
படவேண்டும்.
பணபலம், மற்றும் சமுதாய செல்வாக்கு இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, யாரெல்லாம் அநியாயம் செய்யப்பட்டார்களோ அவர்கள் – தங்களுக்கு குற்றம் இழைத்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விரும்புவார்கள். வல்லுறவு கொண்டவர்களுக்கும், திருடியவர்களுக்கும் சரியான ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று எல்லா சாதாரண மனிதர்களும் எண்ணுவது இயல்பு. இவ்வுலகில் ஏராளமான குற்றவாளிகள் அவர்கள் செய்த குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டாலும், பலர் அவர்கள் செய்த குற்றங்களுக்காக தண்டிக்கப்படாமல் விடுவிக்கப்படுவதை பார்க்கிறோம். அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியாக, ஆடம்பரமாக தொல்லையற்ற நிம்மதியோடு இவ்வுலகில் வாழ்வதை நாம் காண்கிறோம். பணபலமும், செல்வாக்கும் நிறைந்த ஒருவருக்கு, அவரைவிட அதிக பணபலமும், அதிக செல்வாக்கும் பெற்ற ஒருவரால் அநியாயம் செய்யப்படும்போது, தனக்கு அநியாயம் செய்தவர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விரும்புவார்.

7. இவ்வுலகில் நாம் வாழுகின்ற வாழ்க்கை, மறு உலக வாழ்க்கைக்கான ஒரு தேர்வு.
இவ்வுலகில் நாம் வாழுகின்ற வாழ்க்கை, மறு உலக வாழ்க்கைக்கான ஒரு தேர்வுதான் என்பதை அருள்மறை குர்ஆனின் அறுபத்து ஏழாவது அத்தியாயம் ஸுரத்துல் முல்க்கின் 02வது வசனம் கீழ்க்கண்டவாறு சுட்டிக் காட்டுகின்றது.

‘உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும், வாழ்வையும் படைத்தான். மேலும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்: மிக்க மன்னிப்பவன்.’

8. இறுதித் தீர்ப்பு மறுமை நாளில் இருக்கிறது.
இறுதித் தீர்ப்பு மறுமை நாளில் இருக்கிறது என்பதை பற்றி அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் – ஸுரத்துல் ஆல இம்ரானின் 185வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது.

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’ (அல்-குர்ஆன் 3 : 185).

இறுதித் தீர்ப்பு மறுமை நாளில்தான் வழங்கப்படும் என்பதை மேலே சொல்லப்பட்ட அருள்மறை வசனத்தின் மூலம் நாம் அறியலாம். ஒரு மனிதன் இறந்த பிறகு – அவன் மீண்டும் உயிர்பிக்கப்படுவான். ஓரு மனிதன் தான் செய்த தவறுக்காக இவ்வுலகில் கொஞ்சமாக தண்டிக்கப்படலாம். அல்லது தண்டிக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால் அவன் செய்த தவறுக்கு முழு தண்டணையும் மறுமைநாளில்தான். வல்லறவு குற்றத்தில் ஈடுபட்டவனையோ அல்லது திருடனையோ இறைவன் இவ்வுகத்தில் தண்டிக்காமல் விட்டு விடலாம். ஆனால் அவர்கள் செய்த குற்றத்திற்காக அவர்கள் மறுமை நாளில் பதில் சொல்லியேத் தீர வேண்டும். மறுமைநாளில் அதாவது மரணித்தபின் உள்ள வாழ்க்கையில் அவர்கள் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம்.

9. நாஜி கொடுங்கோலன் ஹிட்லருக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டம் என்ன தண்டனை வழங்கியிருக்க முடியும்?.
அறுபது லட்சம் யூதர்களை எரித்துக் கொன்ற சம்பவம் நாஜி கொடுங்கோலன் ஹிட்லர் ஆட்சி காலத்தில் நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். காவல்துறையினர் ஹிட்லரை கைது பண்ணி சட்டத்தின் முன்பு நிறுத்தியிருந்தால் – மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் அறுபது லட்சம் யூதர்களை எரித்துக் கொன்ற ஹிட்லருக்கு என்ன தண்டனை வழங்கியிருக்க முடியும்?. சட்டத்தின் மிகக் கூடுதல் தண்டனையான மரண தண்டனையை வழங்கியிருக்க கூடும். ஆனால் மேற்படி மரண தண்டனை ஒரேயொரு யூதரை கொன்றதற்கு ஈடான தண்டனைதான். எஞ்சியுள்ள ஐம்பத்து ஒன்பது லட்சத்து தொன்னூற்று ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது யூதர்களை எரித்துக் கொன்றதற்கான தண்டனை என்ன?.

10. அல்லாஹ் – ஹிட்லரை – அறுபது லட்சம் தடவை நரக நெருப்பினால் எரிக்கக்கூடிய வல்லமை பெற்றவன்:
அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
‘யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் பொதெல்லாம், அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையை (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டேயிருப்போம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கிறான்.’
அல்லாஹ் – அவன் நாடினால் – ஹிட்லரை – அறுபது லட்சம் தடவை நரக நெருப்பினால் எரிக்கக்கூடிய வல்லமை கொண்டவன்.
மறுமை நம்பிக்கை இல்லாமல் மனித நலன் மற்றும் நல்லது, கெட்டது என்ற சிந்தனையே இல்லை.
மறுமை வாழ்க்கை அதாவது மனிதனின் இறப்புக்குப் பின்பும் ஒரு வாழ்க்கை உண்டு என்ற நம்பிக்கை இல்லையெனில், மனித நலன் மற்றும் நல்லது, கெட்டது என்ற சிந்தனையே மனித வர்க்கத்திடம் இல்லாமல் போய்விடும். அநியாயம் செய்பவர்கள் – குறிப்பாக பணபலமும், படை பலமும், சமூக செல்வாக்கும் பெற்றவர்கள் அநியாயம் செய்யும் போது – மறுமை வாழ்க்கை என்ற நம்பிக்கை இல்லையெனில், மனித நலன் மற்றும் நல்லது, கெட்டது என்ற சிந்தனையே மனித வர்க்கத்திடம் இல்லாமல் போய்விடக் கூடும். எனவே ஒவ்வொரு மனிதருக்கும் – இறப்புக்கு பிறகும் வாழ்க்கை உண்டு என்கிற மறுமை நம்பிக்கை அவசியம்.

திருச்சபைகள் வரலாறு- ஓர் விரைவுப் பார்வை

Posted May 15, 2012 by arshathalathary
Categories: Uncategorized

அபூஸைத்அல்அதரி
abuzaidalathary@gmail.com
 
நுழையு முன்……….
 

எகிப்தின் அலக்ஸன்டரிய்யா மாநிலத்தில் கிருஸ்தவ மதப்போதகர் “ஸகரிய்யாபத்ரஸ்” என்பவர் மிகப் பிரபல்யமான ஒருவராவார். அவர் எழுதிய “திருச்சபைப் பிளவுகள் வரலாறு” எனும் அறபி நூல் கிருஸ்தவர்களும் முஸ்லிம்களும் அவசியம் வாசிக்க வேன்டிய முக்கிய நூலாகும். காலத்தின் தேவை கருதி அந்நூலின் சுருக்கத்தை தமிழில் தரும் நாம், தங்களது மேலான கருத்துகளையும் ஆலோசனைகளையும் அறிய ஆவலாய் உள்ளோம்.
 
இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு கிருஸ்தவர்கள் மத்தியில் பல்வேறுபட்ட மத ரீதியான கருத்து முரண்பாடுகள் தோன்றின. இவ்வாறு முரண்பாடுகள் தோன்றும் போதெல்லாம் உயர்நிலை பாதிரிகள் ஒன்று கூடி தங்களுக்கிடையே கருத்துக் கணிப்புகள் நடாத்தி புதிய சட்டத்தை அல்லது இறுதித் தீர்மானத்தை மேற்கொண்டனர். இவ்வாறு கூட்டப்படும் மாநாடுகளில் ஒன்றில், அனைவருக்கும் மத்தியில் கருத்தொற்றுமை ஏற்பட்டு ஒரு புதியசட்டம் உருவானது அல்லது கருத்துவேற்றுமை தோன்றி அதனடிப்படையில் ஒரு புதிய மதப்பிரிவு உருவானது.
இவ்வாறு வரலாறு நெடுகிலும் நடைபெற்ற திருச்சபைகள் மாநாடுகளை இருவகைகளாகப் பிரித்து நோக்கலாம்.
 
1.உலகளாவியமாநாடுகள்.
2.பிராந்தியமாநாடுகள்.
 
பிராந்திய ரீதியாகக் கூட்டப்பட்ட முதல் மாநாடாக ஜெருஸலம் நகரில் “போதகர் யாக்கோபு” என்பவர் தலைமையில் “யூதர்கள் அல்லாதவர்கள் விருத்த சேதனம் செய்ய வேண்டுமா?” என்பது தொடர்பில் நடந்த ஒன்று கூடலை குறிப்பிடலாம்.
 
இவ்வாறு இடம் பெற்ற பல்வேறு திருச்சபைகள் மாநாடுகளில் முக்கியமான சிலதையும் அவைகளில் விவாதித்து எடுக்கப்பட்ட தீர்மானங்களையும் பின்வருமாறு சுருக்கமாக நோக்குவோம்.
 
1.கி.பி 325 இல் “நீகியஹ்” வில் இடம் பெற்ற மாநாடு:
 
இயேசு கிருஸ்துவின் “கடவுள் தன்மை” தொடர்பில் ஏற்பட்ட!! கருத்து முரண்பாட்டை களைவதற்காக இம்மாநாடு கூட்டப்பட்டது. மதகுரு “ஆரியூஸ் மற்றும் அவரைப் பின்தொடர்ந்தோர் ‘இயேசு கடவுள் இல்லை’ எனவும் ஏனையோர் ‘இயேசு கடவுள்தான்’ எனவும் வாதிட இறுதியில் கிருஸ்துவத்தை தழுவிய முதல் ரோமப்பேரரசன் “கொனஸ்தந்தன்” அக்காலத்தில் உலகளாவிய ரீதியில் காணப்பட்ட அனைத்து திருச்சபைகளையும் ஒன்று கூட்டினான். அதில் ‘இயேசு கிருஸ்துவின் கடவுள் தன்மை’ ஒப்புக்கொள்ளப்பட்டதுடன்” நீகாவிஹ்” நம்பிக்கைச் சட்டமும் வகுக்கப்பட்டது.!!
 
 
மதகுரு ஆரியூஸ்
 
2.கி.பி 381 இல் இடம்பெற்ற “முதலாவது கொனஸ்தாந்து நோபல் மாநாடு”:
 
கொன்ஸ்தாந்து நோபலின் தலைமை மதகுரு “மெக்தினியூஸ்” என்பவர் “பரிசுத்த ஆவி என்பது தேவதூதர்கள் (மலக்குகள்) போல் படைக்கப்பட்டதுஎனக் கருதிய போது இம்மாநாடு கூட்டப்பட்டு பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
 
1.பரிசுத்த ஆவியைக் கடவுளாகக் கருதுதல்
2. ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்த “நம்பிக்கைச்சட்டத்தில் “ஆம், பிதாவில் இருந்து தோற்றம் பெற்ற பரிசுத்த ஆவியை கடவுளாக நம்புகிறோம்…….” என்ற இரண்டாவது பகுதியை இணைத்தல்.
 
இவ்வாறே ‘நீகியாஹ் மாநாட்டில் இயேசு கிருஸ்துவையும் “முதலாவது கொன்ஸ்தாந்து நோபல் மாநாட்டில் பரிசுத்த ஆவியையும் கடவுளாகப் பிரகடனம் செய்ததன் மூலம் கிருஸ்துவத்தின் அடிப்படையான “திரித்துவத்தின்” இரு பிரதான பகுதிகள் கி.பி. 381இல் இணைக்பட்டன.
 
3.கி.பி. 431இல் இடம்பெற்ற “முதலாம் அப்ஸஸ் மாநாடு:
 
கொன்ஸ்தாந்து நோபல் தலைமை மதகுரு “நொஸ்தூர்” இயேசுவின் கடவுள் தன்மையை மறுக்க ஆரம்பித்து “மரியாள் கடவுளை பெற்றெடுக்கவில்லை, ஏனெனில் ஒரு உடல் மற்றொரு உடலையே பெற்றடுக்க முடியும். ஒரு ஆத்மாதான் இன்னொரு ஆத்மாவைப் பெற்றெடுக்க முடியும். எனவே, கன்னி மரியாள் கடவுளை அடையாளங்காட்டும் ஒருமனிதனையே பெற்றெடுத்தாள். ஆகவே, இயேசு யதார்த்தத்தில் ஒரு கடவுள் அல்ல. மாறாக, கடவுள் அருள் நிறம்பப் பெற்ற ஒரு மனிதர் அல்லது கடவுளின் உந்துதலால் செயற்பட்ட ஒரு பாவமற்றவர்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
 
இவ்விடயங்களை விவாதிக்க இம்மாநாடு கூட்டப்பட்டு அதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
1.இயேசு ஒரே இயல்பையும் ஒரே நாட்டத்தையும் கொண்டவர். (அதாவது, பிரிக்க முடியாத கடவுள் இயல்பையும், மனித இயல்பையும் ஒரே நேரத்தில் கொண்டிருப்பவர். அதேபோல் பிரித்து நோக்கமுடியாத கடவுள் நாட்டத்தையும் மனித நாட்டத்தையும் கொண்டிருப்பவர்.)
 
2. கன்னி மரியாள் கடவுளையே பெற்றெடுத்தாள், இதனால் அவள் “கடவுளின் தாய்” என அழைக்கப்படுவாள்.
3. “உண்மையான ஒளியின் தாயே உம்மை துதிக்கிறோம்,              கடவுளின் தாயாகிய புனித கன்னியே உம்மைப் போற்றுகிறோம் …………” என ஆரம்பிக்கும் “நம்பிக்கைச் சட்டத்தின்” முகவுரை இம்மாநாட்டிலேயே உருவாக்கி இணைக்கப்பட்டது.
 
இந்த இடத்தில் “ஒரே இயல்பு, ஒரேநாட்டம்” என்று குறிப்பிடப்படுவதன் விளக்கம் என்ன என்பதை நோக்குவது அவசியமாகும்.
 
1.இயல்பு (கடவுள் மற்றும் மனித இயல்பு)
இயேசு கிருஸ்து சாப்பிட்டார் என்றால் கிருஸ்தவர்கள் கருத்துப் பிரகாரம் சாப்பிட்டவர் கடவுளா? அல்லது மனிதனா? என்ற கேள்வி தோன்றும்.
இரு இயல்புக் கொள்கை கொண்டுள்ளோர் ‘கடவுள் இயேசு சாப்பிடவில்லை, மனித இயேசுவே சாப்பிட்டார்’ எனக்கூறுவர்.
இவர்கள்  “இயல்பு” என்பதை இயேசு அணியும், களையும் ஆடைபோல் கருதுகின்றனர். இயேசு சாப்பிடும் போது ‘மனிதஇயல்பு’ என்றும் அற்புதங்கள் நிகழ்த்தி நோயாளர்களைக் குணப்படுத்தும் போது ‘கடவுள்இயல்பு’ என்றும் கூறுகின்றனர்.
 
ஓர் இயல்புக் கொள்கையைக் கொண்டிருப்போர் “இரு இயல்புகளையும் பிரித்து நோக்கக்கூடாது. குறித்த ஒரு சம்பவத்தில் ஒரு இயல்பை மட்டும் குறிப்பிட்டு மற்றதை விட்டு விடக்கூடாது. இயேசு சாப்பிட்டார் என்றார் (கடவுள், மனிதன்என்ற வேறுபாடு இன்றி) சாப்பிட்டார் என்று மட்டுமே கூறவேன்டும் கடவுள் இயல்பும் மனிதஇயல்பும் (இயேசுவில்) ‘கலப்படைந்தது’ ‘ஒன்றிணைந்தது’ என்று கூறாமல் அவர் ஓர் இயல்பை மாத்திரம் கொண்டிருந்தார் என்று கருதுகிறார்கள்.
 
2. நாட்டம் (மனித மற்றும் கடவுள் நாட்டம்)
 
இவ்வாறே கிருஸ்துவர்களின் கருத்துப் பிரகாரம் இயேசு ஒரு இடத்துக்குப் போக விரும்பினால் (நாடினால்) கடவுள் என்ற வகையில் போக நாடினாரா அல்லது மனிதன் என்ற ரீதியில் போக விரும்பினாரா என்ற கேள்வியாகும்.
 
‘இயல்பு’ தொடர்பில் காணப்பட்டது போன்றே நாட்டம் தொடர்பிலும் ‘இரு வேறுபட்ட நாட்டங்கள் இயேசுவுக்கு இருப்பதாக ஒருசாராரும், ஒரேநாட்டம் மாத்திரம் இருப்பதாக மறுசாராரும் கருதுகின்றனர்.
 
இயேசுவின் ஓரியல்பு , ஈரியல்பு தொடர்பிலும் ஓரே நாட்டம், இருநாட்டங்கள் தொடர்பிலும் கிருஸ்துவர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளைக் களைவதற்காக சில மாநாடுகள் நடாத்தப்பட்டு அதில் பின்வரும் மதப்பிரிவுகள் தோற்றம் பெற்றன:
 
4.கி.பி. 449 இல் இடம்பெற்ற “இரண்டாம் அப்ஸஸ் மாநாடு”:
 
கொன்ஸ்தாந்து நோபல் திருச்சபைகளின் தலைவர் “இயேசுவின் உடல் மூலக்கூறில் வேறுபட்டுள்ளதால் எமது உடல்கள் போன்றது கிடையாது. ஏனெனில், கடவுள் இயல்பு மனித இயல்பை மறைத்துவிட்டது, அதாவது, இயேசுவில் கடவுள் தன்மை மனிதத் தன்மையுடன் கலந்துவிட்டது” என்று கூறினார்.
 
இதுவே, இன்று உள்ள கிருஸ்தவப் பிரிவுகளிடையே பெரும் கருத்து முரன்பாடுகள் தோன்றக் காரனமாக அமைந்தது.
 
இவ்விடயத்தை விவாதிக்க மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் கொன்ஸ்தாந்து நோபல் திருச்சபைகளின் தலைவரின் கருத்தை மறுத்து “இயேசுவின் கடவுள்தன்மை அவரது மனிதத் தன்மையுடன் கலப்போ, மாற்றமோ இன்றி ஒன்றினைந்துவிட்டது ” என்ற கருத்தை ஏற்றுக்கொண்டனர். இதுவே இன்றைய ‘ஓர்தோடெக்ஸ்’ (வைதீகக்) கிருஸ்தவர்களது நம்பிக்கையுமாகும்.
 
எனினும், மேற்படி தீர்மானத்தை ரோமாபுரியின் பாப்பரசர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் இத்தீர்மானத்தை மறுத்தவர்களுக்காக இதன் பிறகு “கல்கீதூனியா மாநாடு” என்ற பேரில் இன்னுமொரு மாநாடு கூட்டப்பட்டு அதில் “இயேசுவின் கடவுள் தன்மையும் மனிதத்தன்மையும் ஒன்றிணையவில்லைஎன்று தீர்மானிக்கப்பட்டது.
அதாவது ‘ஓர்தோடெக்ஸ்’ (வைதீகக்) கிருஸ்தவர்கள் தவிர ஏனைய அனைவரும் இயேசுவுக்கு இரு இயல்புகலும் இருநாட்டங்களும் உள்ளன என கருத்து உடன்பாடு கண்டனர்.
 
எனவேதான், ‘ஓர்தோடெக்ஸ்’ (வைதீகக்) கிருஸ்தவர்கள் கி.பி. 449 இல் நடந்த ‘இரண்டாம் அப்ஸஸ் மாநாட்டுக்குக்குப் பின் நடந்த எந்தத் திருச்சபைகள் மாநாடுகளையும் ஏற்றுக்கொள்வதில்லை .அவ்வாறே ஏனைய மதப்பிரிவுகள் இரண்டாம் அப்ஸஸ் மாநாட்டை அங்கீகரிப்பதில்லை.
 
5. கி.பி. 451இல் இடம்பெற்ற கல்கீதூன் மாநாடு:
 
(இதில் ஓர்தொடெக்ஸ் பிரிவினர் தவிர ஏனையவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.)
இம்மாநாட்டில் பின்வரும் இருதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.முந்தையமாநாட்டின் (இயேசுவின் கடவுள் தன்மை மனிதத்தன்மையுடன் கலந்துவிட்டது என்பது போன்ற) தீர்மானங்கள் இரத்து செய்யப்பட்டன.
2. இயேசுவுக்கு (கடவுள், மனிதன்என) ‘இருஇயல்பு நிலைகளும்’ ‘இருநாட்டங்களும்’ உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளல்.
இதன் மூலம் கிருஸ்துவர்கள் இரு பெரும் பிரிவினராக தங்களுக்கிடையே பிரிந்துவிட்டனர்
 
1. ஓர்தொடெக்ஸ்பிரிவினர்: இவர்கள் இயேசுவுக்கு ‘ஒரே இயல்பு நிலையும்’ ‘ஒரேநாட்டமும்’ மாத்திரம் இருப்பதாக நம்புகின்றனர். அதாவது ‘இயேசுவின் கடவுள் பண்புகள் மனிதப்பண்புகளுடன் மாற்றமோ, கலப்போ இன்றி ஒன்றித்து விட்டதாகக ருதுகின்றனர். இன்றுவரை இப்பிரிவில் இருந்து குறிப்பிடத்தக்க எந்தபெரும் பிரிவுகளும் தோன்றவில்லை.
 
2.கத்தோலிக்கர்கள்: நாம் ஏலவே விளக்கியது போல் இவர்கள் இயேசுவுக்கு ‘இருஇயல்புநிலைகளும் இருநாட்டங்களும்’ உள்ளதாகநம்புகின்றனர்.
 
எனினும் கி.பி 667 இல் கத்தோலிக்கர்களில் இருந்து “யோவான் மாறோன்” என்பவர் தலைமையில் ஒரு கூட்டம் பிரிந்து சென்று “இயேசுவுக்கு (கடவுள், மனிதன் என) ‘இரு இயல்பு நிலைகளும்’ ‘ஒரே ஒருநாட்டமும்’ மாத்திரம் இருக்கின்றது என்ற கருத்தைக் கொண்டதால் இதுதொடர்பில் கலந்தாலோசனை செய்ய மற்றுமொரு மாநாடு கூட்டப்பட்டது.
 
 
6. கி.பி.680 இல் இடம்பெற்ற “இரண்டாம் கொனஸ்தந்து நோபல்மாநாடு”:
 
இம்மாநாட்டில் இயேசுவுக்கு ‘இருஇயல்புநிலைகளும்’ ‘இருவகையான நாட்டங்களும்’ உள்ளன என (மீண்டும்) தீர்மானிக்கப்பட்டு “யோவான் மாறோன்” என்பவரைப் பின்பற்றிய ‘மாறோனியர்கள்’ “நிராகரிப்பாளர்கள்” என பிரகடனம் செய்யப்பட்டது.
 
இதனை தொடர்ந்து மாறோனியர்கள் லெபனான் மலையில் தஞ்சமடையும் வரை கத்தோலிக்கர்களால் தொடந்தும் விரட்டியடிக்கப்பட்டார்கள் இவர்களுக்கென லெபனானில் ஒரு   தலைமை மதகுருவும் இருந்தார். “மாறோனியர்கள்” என தனியாக அடையாளங்காட்டப்பட்ட இப்பிரிவினர் தனித்துவமாக செயற்பட்டனர். பின்னர் கி. பி.1182ம் ஆண்டு “தங்கள் பிரிவின் தனித்துவத்தைப் பேணிக்காப்பதுடன், ரோமாபுரியை தலைந‌கராகக் கொண்ட கத்தோலிக்க திருச்சபைக்கு விசுவாசமாக நடப்பதாகவும்”  அறிவித்தனர்.
 
இவ்வாறு கிருஸ்தவர்களுக்குள் மூன்று மதப்பிரிவினர் தோற்றம் பெற்றனர்:
 
1.ஓர்தொடக்ஸ் பிரிவினர்: (இயேசுவுக்கு ஒரே இயல்புநிலை, ஒரே நாட்டம்).
2.கத்தோலிக்க பிரிவினர்: (இயேசுவுக்கு இருஇயல்புநிலைகள் , இருநாட்டங்கள்).
3.மாறோனிய பிரிவினர்: (இயேசுவுக்கு இருஇயல்புநிலைகள், ஒருநாட்டம் மாத்திரம்)
 
இவ்வாறு மூன்று பிரிவாகக் காணப்பட்ட கிருஸ்தவர்களுள், குறிப்பாக, கத்தோலிக்கர்களுல் ரோமாபுரியில் இருந்த தேவாலயத்திற்கும், கொனஸ்தந்துநோபலில் இருந்த தேவாலயத்திற்கும் இடையே “மகன் (சுதன்) எனும் அடிப்படையை நம்பிக்கைச் சட்டத்தில் இணைக்க வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பில் பெரும் கருத்து முரண்பாடு உருவாகியது.
 
“பரிசுத்த ஆவியானது பிதாவில் இருந்து தோற்றம்பெற்றது” என ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த “நம்பிக்கைச் சட்டத்தில்” ரோம தேவாலயம் ‘சுதனில்’ இருந்தும் என்ற வார்த்தையைச் சேர்த்து ‘பரிசுத்த ஆவியானவர்’ பிதாவிலிருந்தும், சுதனில் (மகனில்) இருந்தும் தோற்றம் பெற்றவர் என நம்பலானார்கள்.
 
இது தொடர்பில் ஆராய கொனஸ்தாந்து நோபல் தேவாலயத்தினர் கீழ்வருமாறு ஒரு மாநாட்டைக் கூட்டி ரோம தேவாலயத்தின் கருத்தை நிராகரித்துவிட்டனர்.
 
7. கி.பி. 879 இல் இடம் பெற்ற மூன்றாவது கொன்ஸ்தாந்து நோபல் மாநாடு:
 
கொன்ஸ்தாந்து நோபல் தேவாலயத்தால் கூட்டப்பட்ட இம்மாநாட்டில் ரோம தேவாலயத்தினருக்கு மாற்றமாக “பரிசுத்த ஆவியானது பிதாவிடம் இருந்து மாத்திரம் தோற்றம் பெற்றது” என தீர்மானித்தனர்.
 
இவ்வாறு கத்தோலிக்க மதப்பிரிவினர்:
1.மேற்குக்கத்தோலிக்கர் என்ற ரோமதேவாலயத்தினர்
2. ரோம ஓர்தொடக்ஸ் அல்லது கிழக்கு/கிரேக்க கிருஸ்தவர் என்ற கொன்ஸ்தாந்து நோபல் தேவாலயத்தினர்.
 
ஆக இதுவரை தோன்றிய பிரிவுகளை கீழ்வருமாறு வகைப்படுத்தலாம்:
1..ஓர்தொடக்ஸ்பிரிவினர்: இயேசுவுக்கு ‘ஒரே இயல்பு நிலை, ஒரே நாட்டம்’  பரிசுத்த ஆவியானவர் ‘பிதாவில் இருந்து’ மட்டுமே தோற்றம் பெற்றவர்.
2.கத்தோலிக்கபிரிவினர்: இயேசுவுக்கு ‘இரு இயல்பு நிலைகள்’ ‘இரு நாட்டங்கள்’ பரிசுத்த ஆவியானவர் ‘பிதாவில் இருந்தும் சுதனில்’ (மகனில்) இருந்தும் தோற்றம் பெற்றவர்.
3. ரோமஓர்தொடக்ஸ்பிரிவினர்: இயேசுவுக்கு ‘இரு இயல்பு நிலைகள் இருநாட்டங்கள்’. பரிசுத்த ஆவியானவர் ‘பிதாவில் இருந்து’ மட்டுமே தோற்றம் பெற்றவர்.
4.மாறோனிய பிரிவினர்: (இயேசுவுக்கு ‘இரு இயல்புநிலைகள் ஒருநாட்டம்’ மாத்திரம்)
 
இவ்வாறே ஒவ்வொரு பிரிவினருக்குக்கும் வேறுபட்ட மதசட்டங்கள் உருவாகி தனித்துவமான மாநாடுகளும் நடைபெற்றன.
 
உதாரணமாக: ரோம கத்தோலிக்கர்களால் மாநாடுகளாக:
 
1.கி.பி. 1225 இல் இடம்பெற்று “ரோம கத்தோலிக்க பாப்பரசர் தேவாலயத்திற்கு பாவமன்ணிப்பு வழங்கும் உரிமை உள்ளதாகவும் அதைதான் விரும்புபவர்களுக்கு வழங்கமுடியும்” எனத் தீர்மானிக்கப்பட்ட “ரோம்” மாநாட்டையும்,
 
2. கி.பி. 1869 இல் இடம்பெற்று “பாப்பரசர் என்பவர் பாவங்கள், தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்!!” எனத் தீர்மானம் எட்டப்பட்ட “ரோம்” மாநாட்டையும் குறிப்பிடலாம்.
 
புரொடஸ்தாந்து பிரிவினரின் தோற்றம்:
 
ரோம கத்தோலிக்க தேவாலயம் அக்கால மன்னர்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டது. இது அரசியல் அதிகாரத்துக்கும் மத அதிகாரத்துக்குமிடையிலான போட்டியாக உருவெடுத்து பாப்பரசரின் அதிகாரத்தை பலவீனமடையச் செய்தது.
 
இப் பலவீன நிலையை பயன்படுத்தி சில மத சீர்திருத்த இயக்கங்கள் தோன்றலாயின. அவைகளுள் பிரதானமானதாக “மார்டின்லூதர்” என்பவரால் பதினாறாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டு கத்தோலிக்க திருச்சபையில் இருந்து பிரிந்து தனியான திருச்சபையாக பிரகடனப்படுத்தப்பட்ட “புரொடஸ்தாந்து”  திருச்சபையாகும்.
 
 
“மார்டின் லூதர்”
 
கத்தோலிக்க பாதிரியாராகவும் ஜேர்மன் நாட்டில் “விட‌ன் பிரிஜ்” பல்கலைக்கழகத்தில் மதம் சார்ந்த கலைகளுக்கான பேராசிரியராகவும், ஒரு தேவாலயத்தின் பொறுப்பாளாராகவும் இருந்த ‘மார்டின் லூதர்’ கத்தோலிக்க திருச்சபையில் இருந்து பிரிந்து அதற்கெதிராக செயற்படுவதாக அ றிவித்தார்.
 
பின்பு “பாப்பரசர் எனும் நிலை கடவுளின் மூலம் அல்ல” என்பதை அறிவித்தார். இதனால் பாப்பரசர் மார்டினை ரோமுக்கு அழைத்த போது பாப்பரசரை சந்திக்க மறுத்து தனது நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் பிரச்சாரம் செய்த காரனத்தால் 1526 இல் பாப்பரசர் ‘மார்டின் லூதரை’ குற்றவாளியாக பிரகடனம் செய்து அவரது நூற்கள் அனைத்தையும் எரித்து விடும்படி கட்டளையிட்டார்.
 
கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக ‘மார்டின் லூதர்தெரிவித்த பல ஆட்சேபனைகளுள் பிரதானமானதாக இரண்டைக்குறிப்பிடலாம்.
 
1.”புனிதப்பலி” எனும் சடங்கை மறுத்தல்:
 
இச் சடங்கின் போது பாதிரி ஒருவர் ‘ரொட்டிகளில் ஒன்றை எடுத்து மத ஜெபங்களை உச்சரிக்கும் போது (கிருஸ்தவர்கள் நம்பிக்கைப் பிரகாரம்) அந்த ரொட்டியில் கர்தராகிய இயேசு கிருஸ்து முழுமையாக இடம்பிடித்துக் கொள்கிறார். அவ்வாறே பூசைக்கிண்ணத்தில் இருக்கும் மதுவும் கர்த்தரின் இரத்தமாக மாறிவிடுகிறது.
 
 
எனவே, குறித்த ரொட்டியை தின்று மதுவையும், குடிப்பவரின் உடலில் இயேசு கிருஸ்து இடம்பிடித்து அவருக்கு நல்வழியைக்காட்டுவார் எனகிருஸ்தவர்கள் அனைவரும் நம்பி செய்துவரும் திருப்பூசையை ‘மாடின்லூதர்’ கடுமையாக விமர்சித்து மறுத்தளித்தார். (இன்று வரை புறொடஸ்டான்ட் தவிர ஏனயை பிரிவினர்கள் இப்பூசையை செய்து வருகின்றனர்)
 
2. பாவ மன் னிப்புப் பட்டயங்களை மறுத்தல்:
 
1517 ம் ஆண்டு பாப்பரசர் “பத்தாம் லியோ”  உலகம் முழுவதற்குமான பொது மன்னிப்புப் பட்டயங்களை வெளியிட்டார். இதன் மூலம் அப்பட்டயமொன்றை விலை கொடுத்து வாங்குபவர் மன்னிப்புப் பெறலாம் என்றாகிவிட்டது. ரோம்நகரில் உள்ள புனித “பத்ரஸ்” தேவாலயத்தைக் கட்டுவதற்குத் தேவையான நிதியை திரட்டவே பாப்பரசர் மன்னிப்புப் பட்டயங்களை வெளியிட்டார் என்பதால் ‘மார்டின் லூதர்’ இதையும் மறுத்துரைத்தார்.
 

 

 
 
           பாவ ன்னிப்புப் பட்டயம்
 
தேவாலயங்களும் பாப்பரசரும் கிருஸ்தவர்கள் மீது விதித்த கடுமையான வரிச்சுமையில் இருந்தும் அறிவியல் மற்றும் சிந்தனை மீது இவர்கள் செலுத்திய ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை பெறவேண்டி அக்காலமக்கள் பலரும் புதிய பிரிவான புறொடஸ்டன்ட் இல் இணைந்து கொண்டார்கள். இவ்வாறு இணைந்து கொண்டவர்கள் திருச்சபைகளின் கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க அன்றைய புதிய உலகமான அமெரிக்காவுக்கு பெருமளவில் இடம்பெயர்ந்து அமெரிக்க சமூகத்தில் பெரும்பான்மையினர் என்ற இடத்தைப் பிடித்துக் கொண்டனர்.
 
மக்களை தனது கொள்கையின் பால் ஈர்க்க மார்டின் லுதர் மூன்று பிரதான வழிமுறைகளைக் கையாண்டார்.
 
1.தேவாலயங்களின் பேரில் பெருமளவு குவிந்திருந்த சொத்துகளை அபகரிக்கும்படியும் தேவாலயங்களை, மடங்களை பொதுமக்கள் பயனடையும் விதத்தில் பாடசாலைகளாக, வைத்தியசாலைகளாக மாற்றிவிடும்படி அக்கால அரசர்களை தூண்டி விடும் வகையில் நூல்களை வெளியிட்டார்.
 
2. “ஹேஷ்” ஆட்சியாளன் தனது முதல் மனைவி உயிருடன் இருக்கதான் விரும்பிய இன்னுமொரு பெண்ணை மணமுடிக்க விரும்பியபோது, இரு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் முடிக்க முடியும் என ‘மார்டின் லூதர்’ அனுமதித்ததுடன் அதற்கான புதியசடங்குகளையும் நடாத்த அனுமதித்ததன் மூலம் ஆட்சியாளரின் அன்பைப் பெற்றார்.
 
3.துறவறத்தினால் அவதியுற்றிருந்த பாதிரிகளையும், மதகுருக்களையும் தன் பக்கம் ஈர்க்கதானே முன்மாதிரியாக மாறி “கார்தரீன்” எனும் பெண் துறவியை பலவந்தமாக அடைந்து திருமணம் முடித்ததன் மூலம் அருட்தந்தை எனும் பதவியை அவமதித்ததுடன், தனது பொறுப்பிலிருந்த தேவாலயத்திலேயே குடும்ப வாழ்வில் ஈடுபட்ட ‘மார்டின் லூதர்’ நோய்வாய்ப்பட்டு 1546 இல் மரணித்தார்.
 
புரொடஸ்தாந்து பிரிவினரின் அடிப்படைகள்:
 
1.விவிலியநூற்களே சட்டமூலாதாரமாகக் கொள்ளப்படுமே அன்றி பாப்பரசர்களின் போதனைகள் அல்ல.
 
2.விவிலியநூற்களை சொல்ரீதியாக விளக்கமளிக்கவேன்டுமே அல்லாமல் சிலேடை என்ற ரீதியில் விளக்களிக்கக்கூடாது.
 
3.மதகுருக்கள், பாதிரிகள் என்று மட்டும் இல்லாமல் ஒவ்வொரு கிருஸ்தவராலும் வேதநூலுக்கு விளக்கமளிக்க முடியும்.
 
இவ்வாறு தோற்றம் பெற்ற புரொடஸ்தாந்து பிரிவினரும்கூட ‘லூதரிகள்’, ‘மோர்மோனிகள்’ என பல்வேறுபட்ட உட்பிரிவுகளாக பிரிந்துவிட்டார்கள்.
 
ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கும் ரோமன் கத்தோலிக்கருக்குமிடையே உள்ள முக்கிய முரண்பாடுகள்:
 
1.கத்தோலிக்கர்கள் இயேசுவுக்கு (கடவுள், மனிதன்என) ‘இரு இயல்புநிலைகளும்’ ‘இரு நாட்டங்களும்’ உள்ளதாக நம்ப, ஓர்தொடெக்ஸ் பிரிவினரோ ‘ஒருஇயல்பு நிலையும்’ ‘ஒரு நாட்டமும்’ மாத்திரம் இருப்பதாக நம்புகின்றனர்.
 
2.கத்தோலிக்கர்கள் பரிசுத்த ஆவியானவர் ‘பிதாவிலும், சுதனிலும்’ இருந்து தோற்றம் பெற்றவர் என நம்ப ஓர்தொடெக்ஸ் பிரிவினர் பிதாவில் இருந்து மட்டும் தோற்றம் பெற்றவர் என நம்புகின்றனர்.
 
3.புனித பூஜையின் போது கத்தோலிக்கர்களிடத்தில் ‘அப்பம்’ மாத்திரம் வினியோகிக்கப்பட ஓர்தொடெக்ஸ் பிரிவினரிடத்தில் ‘அப்பமும் மதுபானமும்’ விநியோகிக்கப்படும்.
4. கன்னிமரியாள் ‘ஆதிபாவத்திலிருந்து நீங்கியவளாக’ பிறந்தாள் என கத்தோலிக்கர் நம்ப ஓர்தொடெக்ஸ் பிரிவினரோ கன்னிமரியாள் ‘ஆதிபாவத்துடன் பிறந்ததாகவும்’ பரிசுத்தஆவியானவர் அவளை ஆதிபாவத்தில் இருந்து தூய்மைப்படுத்தியதாகவும் நம்புகின்றனர்.
 
5.கத்தோலிக்கர்கள் ஏனைய பிரிவுகளை விடவும் கன்னிமரியாளை அளவு கடந்து புகழ்ந்து ‘இயேசுவின் பலியில்’ அவளுக்கும் பங்கிருப்பதாகவும், அவள் மூலமகவே அனைத்து அருட்கொடைகளும் வழங்கப்படுவதாகவும் அவள் ‘பாவங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டவள்’ எனவும் நம்புகின்றனர்.
 
6.கத்தோலிக்கர்கள் ஏனைய பிரிவினருக்கு மாற்றமாக பாப்பரசர் தவறுகள், பாவங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டவர் என்றும் ரோம் நகரே உலகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களின் தலைமையகம் என்றும் நம்புகின்றனர்.
 
7. 1965 இல் இடம் பெற்ற வத்திக்கான் மாநாட்டில் கத்தோலிக்கர்கள் இயேசுவின் இரத்ததில் இருந்து ‘யூதர்கள் குற்றமற்றவர்கள்’ என அறிவித்தனர்!!.
 
ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கும், புரொடஸ்தாந்து பிரிவினருக்குமிடையே உள்ள முக்கிய முரண்பாடுகள்:
 
1.புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் போன்று, ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக இயேசுவுக்கு ‘இரு இயல்பு நிலைகளும்’ ‘இரு நாட்டங்களும்’ உள்ளதாக நம்புகின்றனர்.
 
2. புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் போன்று, ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக பரிசுத்த ஆவியானவர் ‘பிதா மற்றும் சுதனில்’ இருந்து தோற்றம் பெற்றவர் என நம்புகின்றனர்.
 
3.புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக மதகுருவிடம் பாவமன்னிப்பு தேடாமல், நேரடியாகவே கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என கருதுகின்றனர்.
 
4..புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக புனித பூஜையையோ, ரொட்டி மற்றும் மது இயேசுவின் சதை இரத்தமாக மாறுகிறது என்ற சித்தாந்தத்தையோ நம்புவதில்லை.
 
5.புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக சுவிசேசத்தின் சில பகுதிகளை நீக்கிவிட்டனர்.
 
6.புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக இயேசு மீண்டும் இப்பூமிக்கு வந்து ஆயிரம் வருடம் ஆட்சிசெய்வார் என நம்புகின்றனர்.
 
7.புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக இயேசுவுக்குப் பின்பு மரியாள் வேறுபிள்ளைகளையும் பெற்றதாக நம்புகின்றனர்.
 
8.புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக, பாப்பரசரின் அதிகாரத்தை மறுத்து சுவிசேசத்தை சொல் அடிப்படையிலேயே விளக்க வேண்டும், ஒவ்வொரு கிருஸ்தவருக்கும் சுவிசேசத்தை விளக்கும் உரிமை உண்டு என்றும் நம்புகின்றனர்.
 
9.‌புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக சுவிசேசத்தில் காணப்படும் வழிபாட்டு முறைகளை மாத்திரமே பேணிவருகின்றனர்.
 
புரொடஸ்தாந்து பிரிவினரின் தோற்றமும் அதன் விளைவுகளும்:
 
பாப்பரசரின் அதிகாரத்தை நிராகரித்து கிருஸ்தவ மதத்தின் அஸ்திவாரத்தை ஆட்டங்காணச் செய்யும்விதமாக புரொடஸ்தாந்து பிரிவினரின் தோற்றம் அமைந்ததால் இப்பிரிவினர் மீது பாப்பரசர்கள் பல இலட்சக் கணக்கான மக்களை பலிகொண்ட யுத்தங்களைத் தொடுத்தார்கள். அவைகளுள்:
 
1.பதினாறாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் சுமார் நாற்பது ஆண்டு காலமாக தொடர்ந்து கத்தோலிக்கர்களுக்கும், புரொடஸ்தாந்து பிரிவினருக்குமிடையே நடந்து வந்த யுத்தம்……
 

 

குறிப்பாக, 1572/08/24 அன்று பாப்பரசர் ப‌தின்மூன்றாம் ஜிரிகோரி என்பவரின் ஆசீர்வாதத்துடன் இடம்பெற்ற “சென்பர்த்தோலோமோவ் (st.Bartholomew’ s Day massacre) கொலைக்களத்தில் பண்டிகை தினமண்று கத்தோலிக்கர் புரொடஸ்தாந்து பிரிவினர் மீது தாக்குதல் நடாத்தி ஆயிரக்கணக்கான மக்களை வெட்டியும் மரங்களிள் தூக்கிலிட்டும் கொலை செய்தார்கள்.
 
 
 

“சென்பர்த்தோலோமோவ் கொலைக்களம்”

 
இதில் முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டதாக புரொடஸ்தாந்து பிரிவினர் உறுதிசெய்ய கத்தோலிக்கர்களோ, தாங்கள் வெறும் இரண்டாயிரம் பேரைத்தான் படுகொலை செய்ததாக சமாளித்தார்கள்!!.
 
2.1536ம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்கள் அயர்லாந்தில் புரொடஸ்தாந்து சித்தாந்ததை திணிக்க முற்பட்டதன் காரணமாக ஏற்பட்ட யுத்தம் ‘பதினெட்டாம் நூற்றாண்டு வரை’ நீடித்து பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்தது.
3. ஜேர்மனியில் 1618 முதல் 1648 வரை முப்பது ஆண்டுகளாக கத்தோலிக்கர்கலுக்கும், புரொடஸ்தாந்து பிரிவினருக்குமிடையே நடந்த யுத்தகளங்களில் இலட்சக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.
4. ஸ்பெயின் நாட்டில் 1936 முதல் 1939 வரை கத்தோலிக்கருக்கும் புரொடஸ்தாந்து பிரிவினருக்குமிடையே நடந்த உள்நாட்டு யுத்தத்தில் 6845 கத்தோலிக்க மதகுருக்கள் உட்பட மூன்று இலட்சத்து ஆறாயிரம் மக்கள் உயிரிழந்தனர்.
 
அவ்வாறே புரோடஸ்தாந்து காலப்பகுதியில் அச்சுஇயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் விவிலியநூற்கள் பல்வேறுபட்ட மொழிகளில் பொழிபெயர்க்கப்பட்டன.  புரோடஸ்தாந்து சித்தாந்தப்படி விவிலியத்தை விளக்கும்உரிமை அனைத்து கிருஸ்தவர்களுக்கும் உள்ளது என்பதால் பலநூற்றாண்டு காலமாக மதகுருக்களின் கைகளில் தேவாலயங்களுக்குள் முடங்கிக்கிடந்த ‘பழையஏற்பாடு’ சகலரது கைகளிலும் கிடைக்கைக் கூடியநிலை உருவாகி ‘திருத்தூதுவர் வாழ்க்கை’ வரலாற்றை கொண்டிருந்த கிருஸ்தவ இலக்கியங்களில் ‘யூத,எபிரேய சித்தாந்தங்கள்’ இடம்பிடிக்க ஆரம்பித்தன.
 
யூதர்கள் கர்த்தரின் விருப்பத்திற்குரிய சமுதாயத்தினர், ஆப்ரஹாமுடன் கர்த்தர் உடன்படிக்கை செய்து கொண்டகாலம் முதல் உலகம் அழியும்வரை பலஸ்தீன் யூதர்களின் பூர்வீகம், யூதர்கள் பலஸ்தீனத்தில், சியோனிஸ சாம்ராஜ்யத்தை உருவாக்கியதும் அங்கே இயேசு கிருஸ்து மீண்டும் தோன்றுவார் என்பது போன்ற யூதநம்பிக்கைகள் கிருஸ்துவ சமுதாயத்துக்குள் பரவ ஆரம்பித்தன.
 
இதுவே சுமார் 60%  புரோடஸ்தாந்து பிரிவினரைக் கொண்ட அமெரிக்கா இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு வழங்குவதற்கான மதரீதியான காரணமாவும் அமைந்துவிட்டன.
 
யஹ்வஹின் சாட்சியாளர்கள்:
 
பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்காவின் ‘பென்ஸ்லபீனியா’ மாநிலத்தில் ‘ஷார்லஸ்ராசல்’ என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட கிருஸ்தவப் பிரிவே ‘யஹ்வஹின் சாட்சியாளர்கள்’ (கடவுளின்சாட்சியாளர்கள்) என அழைக்கப்படுகிறார்கள்.
 
கிருஸ்தவப் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டும் இவர்கள் இன,மொழி பேதமின்றி பலரையும் தங்கள் கொள்கையில் இணைத்துள்ளனர்.
“யஹ்வஹ்” எனும் கடவுளின் பெயர் விவிலியத்தின் மூலப்பிரதியில்7200 இடங்களில் காணப்படுவதாகவும் மொழிபெயர்ப்பாளர்கள் அதை “கர்த்தர்” என திரிபடையச் செய்துவிட்டார்கள் என நம்பும் இப்பிரிவினர் ஏனைய பிரிவினர்களை கிருஸ்தவர்களாக அங்கீகரிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஓர் அமெரிக்கப் பேராசிரியரின் உணர்ச்சிகரமான முதல் தொழுகை அனுபவம்

Posted May 15, 2012 by arshathalathary
Categories: Uncategorized

 

 ஓர் அமெரிக்கப் பேராசிரியரின் உணர்ச்சிகரமான முதல் தொழுகை அனுபவம்

 
எழுதுவதற்கு முன்பு கடைசியாக கருணையாளனிடம் மன்றாடினேன்.
“மகத்தான இறைவனே! என் அதிபதியே!
மீண்டும் நாத்திகப் பாதையில் நான் செல்ல முனைந்தால்
என்னை அழித்துவிடு!
மகத்தானவனே!
நிகரில்லா அன்புடையோனே!
நிகரில்லா அன்புடையோனே!
அந்தக் கணமே எனக்கு மரணத்தைத் தந்துவிடு.
குறைபாடுகளுடனும், பலவீனங்களுடனும் கூட வாழ்ந்துவிடலாம்.
ஆனால், உன்னை நிராகரித்த நிலையில்
ஒரு நாளும் என்னால் உயிர்வாழ முடியாது.”
-ஜஃப்ரி லேங், அமெரிக்க ‘கன்ஸாஸ் யுனிவர்சிட்டி கணிதப் பேராசிரியர்.
 
இஸ்லாத்தை தழுவும் மேற்கத்தியர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவரும் அதே சமயம் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவ காரணமான திருப்பங்களையும் அவர்களின் அப்போதைய மன ஓட்டத்தையும் அவர்கள் விவரிக்கும்போது அவர்கள் மட்டுமின்றி அதை கேட்கும், பார்க்கும், படிக்கும் நமக்கும் மட்டிலா மகிழ்ச்சி உண்டாகிறது. ஓர் அமெரிக்கர் இஸ்லாத்தைத் தழுவும்போது தனக்குண்டான அனுபவத்தை விவரிப்பதை – அதுவும் சுவைபட விவரிப்பதை காண்போமா!

ஜஃப்ரி லேங் எனும் அமெரிக்கர்

ஜெஃப்ரி லேங் அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய பலகளைக்கழகங்களில் ஒன்றான ”University of Kansaas” -ன் கணிதப் பேராசிரியராவார். [ இவருடைய சுருக்கமான வாழ்க்கைக்குறிப்பு இக்கட்டுரையின் கீழே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.] இவர் Even Angels ask (வானவர்களும் கேட்கின்றார்கள்) எனும் தலைப்பில் நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த நூலில் இடம்பெற்றுள்ள இதயத்தைத் தொடும் பகுதியான “எனது முதல் தொழுகை” யைத்தான் இங்கு நாம் காணப்போகிறோம். அவர் அனுபவித்த இறைநம்பிக்கையின் – ஈமானின் சுவையை அவரது வாசகங்களிலேயே நாம் உணர முடியும்.
 
இஸ்லாத்தை எனது வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்ட சில தினங்களுக்குள்ளாகவே இமாம் சாகிப் என்னிடம் ஒரு புத்தகத்தைத் தந்துவிட்டார். கையடக்கமான அழகிய நூல் அது. வழவழப்பான தாள்களில் வண்ண வண்ண அச்சுகளில் தேவையான இடங்களில் வரைபடங்களுடன் இருந்த தொழுகைப்பற்றிய கையேடு அது.
தொழுகையில் ஓத வேண்டிய இறைவசனங்களின் மொழிபெயர்ப்பும் அதில் இடம் பெற்றிருந்தது. எனது முஸ்லிம் மாணவர்கள் உள்ளம் நிறைய அன்புடன் சொன்னார்கள், “ரொம்பவும் ஸ்ட்ரெயின் பண்ணீக்காதீங்க சார்! கொஞ்சாம் கொஞ்சமாகப் படிக்கவும், பழகவும் செய்யுங்க”. எனக்கு சிரிப்பாக வந்தது. “இறைவனைத் துதிப்பதில் போய் அப்படியென்ன கஷ்டம் இருக்கப்போகிறது” என்று நினைத்தேன்.
அன்று இரவு ஹாஸ்டலுக்குத் திரும்பியதும் நான் தூங்கப் போகவில்லை. இன்றைக்கே ஆரம்பித்துவிட வேண்டியதுதான் என்ற உறுதி எனக்குள் எழுந்தது. நண்பர்களின் ஆலோசனையை நான் பொருட்படுத்தவில்லை. என் இறைவனை – என்னைப் படைத்தவனை – எனக்கு வாழ்வளித்தவனை – அவன் காட்டிய வழியில் தொழவேண்டும் என்று மனம் பரபரத்தது. இனி மூச்சுள்ளவரை தொழுகையாளியாகவே திகழ வேண்டும் என்ற தணியாத ஆசையும் ஆர்வமும் பெருக்கெடுத்தது.
ஆர்வமும் உறுதியான எண்ணமும் மனதில் நிரப்ப மங்கலான வெளிச்சத்தில் எனது அறையில் அந்த நூலை வாசிக்க ஆரம்பித்தேன். அது ஒரு புது அனுபவமாக இருந்தது. எனக்குள் இனம் புரியாத உணர்வுகள் பொங்கின. திரும்பத் திரும்ப சின்ன நூலான அதைப் புரட்டிப் புரட்டிப் படித்தேன்.
எனது பாடங்கள், எனது வகுப்புகள், மனைவி, மக்கள் எல்லாவற்றையும் மறந்தேன். அந்த புத்தகத்தில் ஆழ்ந்து போனேன். தொழுகையில் ஓத வேண்டிய அரபி வார்த்தைகளையும், குர்ஆன் வசனங்களையும் அப்படியே திரும்பத் திரும்பக் கூறி மனனம் செய்ய முயன்றேன். வசனங்கள், பிரார்த்தனைகளின் பொருளை நெஞ்சில் பதித்துக் கொண்டேன்.
கடைசியில், என்னால் தொழ முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் வஔந்தது. என் உள்மனம் அப்படித்தான் சொன்னது. எனது வாழ்நாளின் முதல் தொழுகையை நிறைவேற்ற முடிவு செய்தேன். அப்போது நல்லிரவு ஆகிவிட்டிருந்தது. எனவே இஷா தொழுகையை நிறைவேற்ற தீர்மானித்தேன்.
குளியலறைக்கு விரைந்தேன். தொழுகை கையேட்டை பக்கத்தில் வைத்துக்கொண்டு அதைப்பார்த்துப் பார்த்து ‘உளூ’ செய்ய ஆரம்பித்தேன். புதிதாக ஒரு அயிட்டத்தை சமைக்க முனையும் மாணவியைப் போல புத்தகத்தைப் பார்த்துப் பார்த்து எல்லாவற்றையும் செய்தேன். ஒவ்வொன்றையும் நிதானமாக – மிக நிதானமாக கவனத்துடன் செய்தேன். உளூ நீர் முகத்தில் சொட்டச் சொட்ட அப்படியே அறைக்குத் திரும்பினேன். உளூச் செய்த பிறகு முகத்தைத் துண்டால் துடைக்காமல் இருப்பது விரும்பத்தக்கது என்று நான் படித்திருந்தேன்.
அறை நடுவே நின்றுகொண்டேன். கிப்லாவின் திசையைக் கவனித்து கிப்லா நோக்கி நின்று கொண்டேன். அறைக்கதவு மூடப்பட்டிருக்கிறதா என்று ஒருமுறை திரும்பிப் பார்த்துக்கொண்டேன். நீண்ட பெருமூச்சு விட்டேன். கைகளை விரித்து காதுவரை உயர்த்தினேன். காது நுனிவரை கையை உயர்த்தி மிகவும் நிம்மதியுடன் உறக்கக்கூறினேன், “அல்லாஹு அக்பர்” – இறைவன் மிகப்பெரியவன்.
யாரும் எனது குரலைக் கேட்டிருக்கமாட்டார்கள் என்று எனக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. அந்த நடுநிசியில் யார்தான் விழித்திருப்பார்கள்? “ஆ…!” திடீரென்று எனக்கொரு எண்ணம் பொறிதட்டியது. யாராவது மறைந்திருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருப்பார்களோ…! ஜன்னல் கதவு மூடாதது என் நினைவுக்கு வந்தது. பக்கத்து அறைக்காரர் என்னை இந்த நிலையில் பார்த்துவிட்டால் என்ன நினைப்பார்கள்? நான் திரும்பினேன். ஜன்னல் வழியே எட்டிப்ப்பார்த்தேன். யாருமே இல்லை. கூடம் வெறிச்சோடியிருந்தது. ஜன்னல் கதவுகளை அழுத்தமாக மூடினேன். மீண்டும் அறை நடுவே வந்து நின்றுவிட்டேன். மீண்டும் இறைவனை தொழ ஆரம்பித்தேன். கைகளை உயர்த்தினேன். கட்டை விரல்களை காது நுனிவரை உயர்த்தி உரக்க சொன்னேன் “அல்லாஹு அக்பர்”.
பிறகு மிக சன்னமான குரலில் அல்குர்ஆனின் முதல் அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தேன். பிறகு இன்னொரு சின்ன அத்தியாயத்தை ஓதினேன். அன்று இரவு அரபி எவராவது எனது உச்சரிப்பைக் கேட்டிருந்தால் அவருக்கு ஒன்றுமே புரிந்திருக்காது. என்றாலும் ஒவ்வொரு வார்த்தையை உச்சரிக்கும்போதும் நான் என்னை மறந்தேன்.

இறைவனின் வார்த்தைகள்…! அவனைத் தொழுவதற்காக அவற்றை உச்சரிக்கிறேன்…! அந்த நினைப்பே என்னைச் சிலிர்க்க வைத்தது. பிறகு ”அல்லாஹு அக்பர்” என்று கூறி குனிந்து முட்டிக்கால்களை உள்ளங்கைகளால் பற்றிக் கொண்டேன். இப்படி என் வாழ்வில் எப்போதுமே குனிந்தது கிடையாது. இனம்புரியாத உணர்வு உடல் முழுவதும் அலையலையாய் பரவியது. ஒருவித கவலையும் எனது மனதைக் கவ்வியது. ஆனால் அந்த நிலையில் யாரும் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்ற எண்ணம் எனக்கு நிம்மதியளித்தது. நான் குனிந்த நிலையிலேயே திரும்பத் திரும்பச் சொன்னேன். “ஸுப்ஹான ரப்பியல் அளீம்” – ”மகத்தான எனது இறைவன் தூய்மையானவன்”. பிறகு நிமிர்ந்து நேராக நின்றேன். “ஸமியல்லா ஹுலிமன் ஹமித” – ”தன்னைப் புகழ்வதை இறைவன் கேட்டுக்கொண்டான்.” பிறகு “ரப்பனா லகல் ஹம்து” – ”இறைவனே! புகழனைத்தும் உனக்கே!” என்று சொன்னேன்.
 
 
பிறகு ”அல்லாஹு அக்பர்” சொன்னதும் ஒரு விந்தையான சோதனையில் சிக்கிவிட்டேன். ஏதோ ஒன்று என் மனதை அழுத்தியது. நெஞ்சம் பாரமாக இருந்தது.
இப்போது இறைவன் முன்னால் நான் சிரம் தாழ்த்த வேண்டியிருந்தது. ஸஜ்தா செய்ய வேண்டியிருந்தது. நான் தரையைப் பார்த்தேன். எனது முகத்தை தரையில் பதிக்க வேண்டிய கட்டம் அது!
ஆனால், அதை செய்ய முடியாதே….! என்னால் அதனை எண்ணிப்பார்க்கவும் முடியாது. தரையில் எனது முகத்தை வைக்க முடியாது. தரையில் எனது முகம் தொடும் அவமானம் எனது வாழ்வில் எப்போதும் நிகழ்ந்தது கிடையாது. எஜமான் முன்பு சிரம் தாழ்த்தும் அடிமை நில எனக்கு வேண்டாம். இதை என்றுமே என்னால் செய்ய முடியாது. மனதில் பற்பல எண்ணங்கள் அலைமோதின.
எனது கால்கள் பாறைகளாகிவிட்டது. ஏதோ கீழே சிரம் தாழ்த்துவதிலிருந்து என்னைத் தடுப்பது போல கால்கள் இறுகிவிட்டன. வெட்கம் என்னைப் பிடுங்கித்தின்றது. அவமான உணர்வு நெஞ்சம் முழுவதும் வியாபித்திருந்தது. நண்பர்களின் சிரிப்பலைகள் எனது உள்ளத்தில் எடிரொலித்தது. மக்கள் என்னைப் பார்க்கிறார்கள். அடிமை போன்று விழுந்துகிடக்கும் நிலையைப் பார்த்து புருவங்களை உயர்த்துகிறார்கள். “பாவம், ஜஃப்!” என பரிதாபப் படுகிறார்கள். “ஸான் ஃபிரான்ஸிஸ்கோவில் இருந்து கொண்டு அரபாகி விட்டிருக்கிறான்” – இந்த ரீதியில் பற்பல எண்ணங்கள் என் மனதை வதைத்தெடுக்க என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.
”உதவி! உதவி! என் இறைவனே! என்னைப் படைத்தவனே! இந்த எளியவனுக்கு உதவி செய், இறைவனே!” நான் திரும்பத் திரும்ப இறைவனிடம் மன்றாடினேன். உடலை ஒருங்கிணைத்து நின்றேன். மீண்டும் நீண்டதொரு பெருமூச்சு விட்டேன். பிறகு தரையில் விழுந்தேன். முதலில் கைகள், முட்டிக்காலகலி ஊன்றினேன். துளியூண்டு தயக்கம் மீண்டும் எட்டிப்பார்த்தது. கடைசியில்… முகத்தைத் தரையில் வைத்துவிட்டேன்.
மனதிலிருந்து களைந்துவிட்டு ஒருமுகப்பட்டு சொன்னேன், “ஸுப்ஹான ரப்பியல் அஃலா” – ”மேன்மையான எனது இறைவன் மிகவும் தூயவன்”. இன்று எப்படியும் தொழுகையை முழுமையாக நிறைவேற்றியே தீர்வது என்ற உறுகி எனக்குள் எழுந்தது. என்ன ஆனாலும் சரி.
”அல்லாஹு அக்பர்” என்று உரத்துச் சொல்லிக் கொண்டே மறுபடியும் எழுந்து நேராக நின்றேன். “இன்னும் மூன்று சுற்று பாக்கி இருக்கிறது” எனக்குள் சொல்லிக்கொண்டேன். தொழுகையின் மீதி ”ரக்அத்”துகளை அதே மனப் போராட்டத்துக்கிடையில் நிறைவேற்றினேன்.
எனது உணர்வுகளோடு, எனது அகந்தையோடு, ஈகோவுடன் நான் மோத வேண்டியிருந்தது. ஆனால், ஒவ்வொரு ”ரக்அத்” முடிந்ததும் நிலைமை லேசாகிக் கொண்டே போனது. கடைசி ”ரக்அத்”தை மிகவும் மன நிம்மதியுடன் நிறைவேற்றினேன்.
கடைசியில் தரையில் அமர்ந்து இறைவனின் புகழ்பாடும் தஷ்ஹூத் ஓதினேன். ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்” – ”உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும், இறைவனின் அருட்கொடையும் நிலவட்டுமாக” என்று உரத்துக் கூறியவண்ணம் வலது பக்கமும் இடது பக்கமும் ஸலாம் சொன்னேன். தொழுகையை நிறைவு செய்தேன்.
 
பிறகு அதே நிலையில் அமர்ந்து எனக்குள் நிகழ்ந்த மனப்போராட்டங்களை அசை போட்டுக் கொண்டிருந்தேன். தொழுகையை நிறைவேற்றுவதில் இந்தளவுக்கு தயக்கமும் போராட்டமுமா? மிகவும் வருந்தினேன். இறைவனிடம் மன்றாடினேன். “என் இரைவனே! என்னைப்படைத்தவனே! என் அலட்சியம், எனது முட்டாள்தனம் மற்றும் அறியாமைக்காக என்னை மன்னித்தருள்வாயாக! நான் வெகுதூரத்திலிருந்து வந்திருக்கிறேன். என்னும் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது!”
 
அதே கணம் –
திடீரென்று ஒரு அற்புத சுகத்தை உணர்ந்தேன். இதற்கு முன்னால் அப்படிப்பட்ட அலாதியான சுகத்தை நானுணர்ந்தது கிடையாது. அது மிகவும் விந்தையான அனுபவம். மனம் லேசாகிவிட்டது. ஒருவித குளிமை இதயத்தை நிறைத்தது. அந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. பெரும்பனி ஊற்று ஒன்று என் உள்ளத்தின் ஒரு பகுதியிலிருந்து பொங்கிப் பெருகி வருவதைப் போன்ற உணர்வு. அதில் எனது கவலைகள், ஐயங்கள், சஞ்சலங்கள், சகடுகள் எல்லாமே கரைந்து போயின. சொல்லவியலாத உணர்வு ஒன்றால் நான் ஆட்கொள்ளப்பட்டேன். வியப்பின் உச்சிக்கே சென்று விட்டேன். எனது உடல் நடுங்கியது. அது வெறுமனே உடல் ரீதியான உணர்வுகளாக இருக்கவில்லை. இறைவனின் பேரருள் என்னுள் புகுவதாகவும் எனக்கு நிம்மதி அளிப்பதாகவும் உணர்ந்தேன்.
பிறகு நான் அழ ஆரம்பித்துவிட்டேன். கண்ணீர் பெருக்கெடுத்து கன்னங்களை நனைத்தது. அழுகைக்கு என்ன காரணம்? என்னால் சரியாக சொல்ல முடியவில்லை. ஆனால், கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. விம்மி விம்மி அழுதேன். எந்தளவுக்கு அதிகமாக அழுகிறேனோ அந்தளவுக்கு மகத்தான கருணையின் அரவணைப்பில் தஞ்சம் புகுவதாக உணர்ந்தேன்.
அந்த கண்ணீர்த்துளிகள் குற்ற உணர்வு மிகைத்ததால் துளிர்த்தவை அல்ல. வெட்கத்தினாலோ, பெருமகிழ்ச்சியாலோ, பேருவகையலோ வந்தவை அல்ல. (இத்தனைக்கும் இந்த உணர்வுகள் எனக்குள் மிகைத்தோங்க எல்லாக் காரணிகளும் இருந்தன). ஆனால், எனது அழுகைக்கான காரணமாக அந்த உணர்வுகளை என்னால் சுட்ட முடியாது. எனக்குள் ஒரு அணை பிளந்து சிதறுவதாகவும் அதில் தேக்கி வைத்திருந்த பயம், கோபம், கர்வம் போன்ற உணர்வுக் கழிவுகள் மிக வேகமாக வெளியேருவதாகவும் நான் உணர்ந்தேன்.
வெகுநேரம் அதே நிலையில் அமர்ந்திருந்தேன். எனது கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டிருந்தேன். விசும்பல்களும் விக்கல்களும் தொடர்ந்தன. எனது அழுகை நின்றுபோனபோது நான் மிகவும் களைத்துப் போயிருந்தேன். இந்த அனுபவம் மிகவும் விந்தையானதாக வியப்புக்குறியதாக இருந்தது. அறிவுப்பூர்வமாக அதனை விளக்குவது கடினமே. ஒன்று மட்டும் எனக்குத் தெளிவாக விளங்கியது. எனக்கு இறைவனும் தொழுகையும் மிக மிக அவசியமாகத் தேவை.
 
எழுதுவதற்கு முன்பு கடைசியாக கருணையாளனிடம் மன்றாடினேன். “மகத்தான இறைவனே! என் அதிபதியே! மீண்டும் நாத்திகப் பாதையில் நான் செல்ல முனைந்தால் என்னை அழித்துவிடு! மகத்தானவனே! நிகரில்லா அன்புடையோனே! நிகரில்லா அன்புடையோனே! அந்தக் கணமே எனக்கு மரணத்தைத் தந்துவிடு. குறைபாடுகளுடனும், பலவீனங்களுடனும் கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், உன்னை நிராகரித்த நிலையில் ஒரு நாளும் என்னால் உயிர்வாழ முடியாது.”
 
 
 
 
Dr. Jeffrey Lang
Lang performs the daily five-time prayers regularly and finds much spiritual satisfaction. He finds the Fajr (pre-dawn) prayer as one of the most beautiful and moving rituals in Islam. “It is as if you temporarily leave this world and communicate with the angels in singing God’s praises before dawn.”]
Dr. Jeffrey Lang is an Associate Professor of Mathematics at the University of Kansas, one of the biggest universities in the United States. He started his religious journey on Jan 30, 1954, when he was born in a Roman Catholic family in Bridgeport, Connecticut.
The first 18 years of his life were spent in Catholic schools, which left him with many unanswered questions about God and the Christian religion, Lang said, as he narrated his story of Islam. “Like most kids back in the late 60s and early 70s, I started questioning all the values that we had at those times, political, social and religious,” Lang said. “I rebelled against all the institutions that society held sacred including the Catholic Church,” he said.
By the time he reached the age of 18, Lang had become a full-fledged atheist. “If there is a God, and he is all merciful and all loving, then why is there suffering on this earth? Why does not He just take us to heaven? Why create all these people to suffer?” Such were the questions that came up in his mind in those days.
As a young lecturer in mathematics at San Francisco University, Lang found his religion where God is finally a reality. That was shown to him by a few of the Muslim friends he had met at the university. “We talked about religion. I asked them my questions, and I was really surprised by how carefully they had thought out their answers,” Lang said.
Dr. Lang met Mahmoud Qandeel, a regal looking Saudi student who attracted the attention of the entire class the moment he walked in. When Lang asked a question about medical research, Qandeel answered the question in perfect English and with great self assurance. Everyone knew Qandeel-the mayor, the police chief and the common people.
Together the professor and the student went to all the glittering places where “there was no joy or happiness, only laughter.” Yet at the end Qandeel surprisingly gave him a copy of the Qur’an and some books on Islam. Lang read the Qur’an on his own, found his way to the student-run prayer hall at the university, and basically surrendered without much struggle. He was conquered by the Qur’an. The first two chapters are an account of that encounter and it is a fascinating one.
“Painters can make the eyes of a portrait appear to be following you from one place to another, but which author can write a scripture that anticipates your daily vicissitudes? Each night I would formulate questions and objections and somehow discover the answer the next day. It seemed that the author was reading my ideas and writing in the appropriate lines in time for my next reading. I have met myself in its pagesஸ”
Lang performs the daily five-time prayers regularly and finds much spiritual satisfaction. He finds the Fajr (pre-dawn) prayer as one of the most beautiful and moving rituals in Islam. “It is as if you temporarily leave this world and communicate with the angels in singing God’s praises before dawn.”
To the question how he finds it so captivating when the recitation of the Qur’an is in Arabic, which is totally foreign to him, he responds; “Why is a baby comforted by his mother’s voice?” He said reading the Qur’an gave him a great deal of comfort and strength in difficult times. From there on, faith was a matter of practice for Lang’s spiritual growth.
On the other hand, Lang pursued a career in mathematics. He received his master’s and doctoral degrees from Purdue University. Lang said that he had always been fascinated by mathematics. “Math is logical. It consists of using facts and figures to find concrete answers,” Lang said. “That is the way my mind works, and it is frustrating when I deal with things that do not have concrete answerers.” Having a mind that accepts ideas on their factual merit makes believing in a religion difficult because most religions require acceptance by faith, he said. The Muslim religion appeals to man’s reasoning, he said.
As faculty advisor for the Muslim Student Association, Lang said he viewed himself as the liaison between the student and their universities. He gets approval from university authorities to hold Islamic lectures. “The object of being their faculty advisor is to help them get their needs met as far as adjusting to the American culture and to procedures of the university. They appreciate the opportunity to have misconceptions corrected,” he said.
Lang married a Saudi Muslim woman, Raika, 12 years ago. Lang has written several Islamic books which are best sellers among the Muslim community in the US. One of his important books is “Even Angels ask; A journey to Islam in America”. In this book, Dr. Lang shares with his readers the many insights that have unfolded for him through his self discovery and progress within the religion of Islam.
(Source: Arab News – Ammar Bakkar: Qur’an Wins Heart of US Professor)
 

விஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்…

Posted May 13, 2012 by arshathalathary
Categories: Uncategorized

 
நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.
சென்சிடிவ்வான தகவல்கள் அடங்கிய பதிவு. சகோதரிகள் மன்னிக்கவும். எழுதுவதற்கு சங்கடமாக இருந்தாலும்,  பெண்ணடிமைத்தனத்திற்கு விஞ்ஞானிகளும் காரணம் என்று புரியவைப்பதற்காகவே இந்த பதிவு. 
வரலாற்றில் நடந்த சில சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சி தரக்கூடியவை. இந்த பதிவில் கூறப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளும்  அத்தகைய ரகத்தை சார்ந்தவைதான்.
“பெண்களே நீங்கள் உடலாலும், அறிவாலும் ஆண்களை விட கீழானவர்களே” – யார் தெரியுமா இப்படி கூறியவர்கள்?…..விஞ்ஞானிகள்…ஆம் விஞ்ஞானிகளே தான். அதிலும் பிரபல விஞ்ஞானிகள்….
உங்களுக்கு இது அதிர்ச்சியை தரலாம். இவ்வளவு முக்கிய தகவலை நாங்கள் இது வரை கேள்விப்பட்டதில்லையே என்றும் உங்களில் சிலர் எண்ணலாம்.  வரலாற்றில் பல செய்திகள் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டிருப்பது புதிதில்லையே…விஞ்ஞானிகள் சொன்னார்களா?…அவர்கள் நன்கு ஆராயாமல்  எதையும் சொல்லமாட்டார்களே என்று நீங்கள் கேட்கலாம். உங்களுடைய கருத்து சரிதான். ‘ஆண்களை விட தாழ்ந்தவர்கள் பெண்கள்’ என்ற கருத்தை நன்கு ஆராய்ந்தே(??) கூறியவர்கள் நாம் மேலே பார்த்த விஞ்ஞானிகள்.

இவர்களுக்கு துணையாய் நின்றது பரிணாம கோட்பாடு. ஆம், இந்த அறிவியலாளர்கள் மேற்கூறிய முடிவுக்கு வர காரணமாக இருந்தது பரிணாம கோட்பாடுதான்.
எப்படி இனவெறியர்களுக்கு துணையாக நின்று இலட்சகணக்கான மக்கள் கொல்லப்பட காரணமாக பரிணாமம் இருந்ததோ, அதுபோலவே, ஆண்களை விட கீழானவர்கள் பெண்கள் என்ற கருத்துக்கு துணையாக நின்று மனரீதியாக பெண்கள் கொல்லப்பட காரணமாய் இருந்தது பரிணாம கோட்பாடு. இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
கொரில்லா குரங்குகளின் மூளைகளுக்கு நிகரானது பெண்களின் மூளை என்று கருத்து கூறிய பிரபல விஞ்ஞானிகள் கூட உலகில் உண்டு என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? மனைவி என்பவள் நாயை விட மேலானவள் என்று டார்வின் கூறினாரே, இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? 
“ஆண்களை விட அறிவுத்திறனிலும், உடல் வலிமையிலும் நீங்கள் தாழ்ந்தவர்களே” என்று பெண்களை நோக்கி அறிவியல் ரீதியாக விளக்கம் கொடுத்து, அவர்களை “நாம் கீழானவர்களே” என்று உளவியல்ரீதியாக நம்பவைத்து கேவலப்படுத்தியது பரிணாம கோட்பாடு.
ஆணாதிக்கம்…ஆணாதிக்கம் என்று பெண்ணுரிமைக்காக கூப்பாடு போடும் பரிணாம ஆதரவாளர்கள், தற்போது அதி விரைவாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அந்த ஆணாதிக்கத்திற்கு அறிவியல் ரீதியாக தீனி போட்டு வளர்த்ததில் பரிணாம கோட்பாட்டிற்கு முக்கிய பங்குண்டு என்பதைத்தான். ‘பெண்ணை விட உயர்ந்தவன் ஆண்’ என்பதை அழுத்தம் திரூத்தமாக சொன்னவர்களில் டார்வினும் உண்டு என்பத்தைத்தான்.
ஆதாரங்களே இல்லாத, ஒரு யூகமாக இருக்க கூட தகுதி இல்லாத பரிணாம கோட்பாடு, இவ்வுலகிற்கு பரிசாக தந்த சீர்கேடுகளில் முக்கியமானவை…இனவெறி மற்றும் பெண்ணடிமைத்தனம்.
மனிதர்களிடேயே உயர்வு தாழ்வை அறிவியல் ரீதியாக நியாயப்படுத்தியது பரிணாம கோட்பாடு. அதுபோலவே,  பெண்ணடிமைத்தனத்தை அறிவியல் ரீதியாக நியாயப்படுத்தியது பரிணாம கோட்பாடு.
சரி, மேலே பார்த்ததற்கெல்லாம் என்ன ஆதாரம்? இதோ ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றன.பெண்கள் குறித்த பரிணாமத்தின் பார்வை:

பரிணாமம் குறித்த டார்வினின் இரண்டாவது புத்தகமான “The Descent of Man, and Selection in Relation to Sex” மனித பரிணாமம் குறித்து பேசுகின்றது. இதில் ஆண், பெண் வித்தியாசம் குறித்து விரிவாக விவரித்திருகின்றார் டார்வின்.

பெண்களை சொந்தமாக்கி கொள்ள ஆதிகால ஆண்கள் போராடி வந்ததாக குறிப்பிடும் டார்வின், பெண்களை கவர வெறும் உடல் வலிமை மட்டும் போதாது என்பதால் காலப்போக்கில் ஆண்கள் அறிவுத்திறனில் வளர்ச்சியடைந்ததாக குறிப்பிடுகின்றார் (Sexual Selection Hypothesis).

மேலும், தங்களுடைய மனைவியரை அடுத்தவர் கவருவதிலிருந்து காக்கவும், தன் குடும்பத்திற்கு தேவையான உணவையும் இடத்தையும் கொடுப்பதில் ஆண்கள் மும்முரமாக செயல்பட்டதால் அறிவிலும், உடல் வலிமையிலும் ஆண்கள் உயர்ந்தவர்களாக பரிணமித்து விட்டதாக கூறினார் டார்வின்.

பெண்களுக்கு இந்த தேவைகள் இல்லாததால் அவர்கள் ஆண்களை விட தாமதமாகவே  பரிணமித்ததாக குறிப்பிடுகின்றார் டார்வின்.

We may also infer, from the law of the deviation of averages, so well illustrated by Mr. Galton, in his work on ‘Hereditary Genius,’ that if men are capable of decided eminence over women in many subjects, the average standard of mental power in man must be above that of woman.

The half-human male progenitors of man, and men in a savage state, have struggled together during many generations for the possession of the females. But mere bodily strength and size would do little for victory, unless associated with courage, perseverance, and determined energy. With social animals, the young males have to pass through many a contest before they win a female, and the older males have to retain their females by renewed battles. They have, also, in the case of man, to defend their females, as well as their young, from enemies of all kinds, and to hunt for their joint subsistence. But to avoid enemies, or to attack them with success, to capture wild animals, and to invent and fashion weapons, requires the aid of the higher mental faculties, namely, observation, reason, invention, or imagination. These various faculties will thus have been continually put to the test, and selected. — Charles Darwin,The Descent of Man, and Selection in Relation to Sex, 1871, Page No.327.

மொத்தத்தில், ஆண்கள் உயர்ந்தவர்கள் பெண்கள் தாழ்ந்தவர்கள். டார்வினுடைய இந்த கருத்தில் ஆச்சர்யமொன்றுமில்லை. அவரால் பிரபலமான பரிணாம கோட்பாட்டை பொறுத்தவரை, மனிதர்கள் என்பவர்கள் முன்னேறிய விலங்குகள். அவ்வளவே.

[இங்கு  மற்றொரு முக்கிய செய்தியையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பரிணாமத்தின் ஆணிவேரான இயற்கை தேர்வை கண்டுபிடித்ததில் டார்வினுடன் சேர்ந்து பெருமையை பகிர்ந்து கொள்பவர் அல்ப்ரெட் ரஸ்ஸல் வாலஸ் அவர்கள். அறிவியலாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் வாலஸ், டார்வினுடைய மனித பரிணாமம் குறித்த கருத்துக்களோடு உடன்படவில்லை. அதற்கு காரணம், ஒழுக்கம் மற்றும் அற்புத அறிவுத்திறனை மனித இனம் கொண்டிருந்ததுதான்.

மனிதனின் இந்த தன்மைகள் இயற்கைத் தேர்வால் வந்திருக்க வேண்டுமென்ற விளக்கத்தை நிராகரித்தார் வாலஸ். இவற்றை விளக்க இயற்கை தேர்வு ஒத்துவராது என்றும், நம்மை மீறிய ஒரு சக்தியே இவற்றிற்கு காரணமாக இருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார் வாலஸ். அதுமட்டுமல்லாமல், உலகின் முதல் உயிரினத்தையும் அந்த சக்தி தான் உருவாக்கியிருக்க வேண்டுமென்றும் கூறினார். வாலசின் இந்த கருத்துக்கள் டார்வின் மற்றும் அவரது ஆதரவாளர்களை மிகுந்த சங்கடப்படுத்தியது]

டார்வினுடைய ஆண் பெண் குறித்த கருத்துக்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் அமையாதவை. எப்படி இன்றளவும் பரிணாமத்திற்கு ஆதாரங்களில்லையோ, அதுபோலேவே அவர் கூறிய ஆண், பெண் வித்தியாசத்திற்கும் ஆதாரங்களில்லை.

டார்வின் தன் இளமை பருவத்தில் கூறிய கருத்து, பெண்கள் குறித்த அவரது பார்வையை இன்னும் மோசமாக்குகின்றது. திருமணத்தில் உள்ள நன்மைகளை பட்டியலிடும் அவர், மனைவியின் தன்மைகள் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“…Constant companion (and friend in old age) who will feel interested in one – Object to be beloved and played with. Better than a dog anyhow – Home, & someone to take care of house…” — Darwin Letters, Cambridge University Library.

நிரந்தரமான உடனிருப்பவர் ( வயதான காலத்தில் நண்பர்) – விரும்பப்படுவதற்கும், விளையாடுவதற்கும் ஏற்றவர். எப்படியானாலும் நாயை விட மேலானவர் – வீட்டை கவனித்து கொள்பவர்” — (Extract from the original quote of) Darwin Letters, Cambridge University Library.

டார்வினின் இது போன்ற கருத்துக்கள் அதிர்ச்சி அளிப்பவை. தன்னுடைய கோட்பாட்டை முன்வைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் தெரிவித்த கருத்துக்கள் இவை. அவர் முன்வைத்த கோட்பாடு, அவருடைய இது போன்ற எண்ணங்களை மாற்றாமல், ஆண் பெண் உயர்வு தாழ்வுக்கு அறிவியல் ரீதியாக சாயம் பூசியது.

பரிணாம கோட்பாடு சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள்:

பிறப்பிலேயே தாழ்ந்தவர்கள் பெண்கள் என்ற கருத்தை உருவாக்கியது பரிணாமம். பெண்களை காட்டிலும் ஆண்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை அறிவியலாளர்களிடையே உருவாக்கியது பரிணாமம். “அறிவியலே கூறிவிட்டது, நாங்கள் அறிவில் குறைந்தவர்களே” என்று உளவியல் ரீதியாக நம்பவைக்கப்பட்டார்கள் பெண்கள்.

சமூகத்தில் பரிணாமம் ஏற்படுத்திய விளைவு எந்த அளவு என்றால், உளவியல் ரீதியாக ஆண்கள் ஒரு இனமாகவும், பெண்கள் வேறு இனமாகவும் பார்க்கப்பட்டார்கள்.

“The year 1884 saw the publication of scientific book in which woman is called Homo parietalis and man is called homo frontilis” — The history of science and technology: a browser’s guide to the great discoveries, inventions, and the people who made them, from the dawn of time to today, Bryan H. Bunch, Alexander Hellemans, 2004, Page No:419.

1884 ஆம் ஆண்டு வெளியான ஒரு அறிவியல் புத்தகத்தில் பெண்கள் Homo parietalis எனவும், ஆண்கள் homo frontilis எனவும் அழைக்கப்பட்டார்கள் — The history of science and technology: a browser’s guide to the great discoveries, inventions, and the people who made them, from the dawn of time to today, Bryan H. Bunch, Alexander Hellemans, 2004, Page No:419.

பெண்கள் தாழ்ந்தவர்களாக சித்தரிக்கப்பட டார்வினுக்கு எந்த அளவு பங்குண்டோ அதே அளவு பால் ப்ரோகா (Paul Broca) என்ற பிரபல பிரெஞ்சு விஞ்ஞானிக்கும் உண்டு. இவர் என்ன செய்தாரென்றால், மனிதர்களின் மூளையை எடை போட்டு பெண்களை விட ஆண்களே உயர்ந்தவர்கள் என்று கூறினார்.

இவருடைய இந்த ஆய்வு சமூகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

பாரிசில் உள்ள நான்கு மருத்துவமனைகளில் தனிப்பட்ட முறையில் ஆய்வு நடத்தினார் ப்ரோகா. சுமார் 292 ஆண் மூளைகளை ஆய்வு செய்த அவர், அந்த மூளைகளின் சராசரி எடை சுமார் 1,325 கிராம்கள் என கண்டறிந்தார். பின்னர், சுமார் 192 பெண் மூளைகளை ஆராய்ந்த ப்ரோகா, அவற்றின் சராசரி எடை சுமார் 1,144 கிராம்கள் என கண்டறிந்தார். ஆக, ஆண்களுடைய மூளைக்கும், பெண்களுடைய மூளைக்கும் சுமார் 181 கிராம்கள் வித்தியாசம். தன்னுடைய ஆய்வு முடிவுகள் ‘ஆண்களே அறிவுத்திறனில் உயர்ந்தவர்கள்’ என்ற கூற்றை நிரூபிப்பதாக கூறினார் ப்ரோகா.

1873 ஆம் ஆண்டு, L’Homme Mort என்னும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆதிகால மனித மண்டையோடுகளை ஆராய்ந்தார் ப்ரோகா. இந்த ஆய்வின் மூலம் அவர் கண்டறிந்தது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருந்த மண்டையோடு கொள்ளளளவு வித்தியாசம் சுமார் 99.5 cubic centimeters. இன்றைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கக்கூடிய கொள்ளளவு வித்தியாசம் சுமார் 129.5  to  220.7 cubic centimeters.

ஆக, கொள்ளளவு வித்தியாசங்கள் அதிகரித்திருப்பது, பெண்களை விட ஆண்கள் வேகமாக பரிணமித்திருப்பதற்கு ஆதாரம் என எண்ண தொடங்கினர் ப்ரோகாவின் குழுவினர். இதனை தெளிவாக அறிவிக்கவும் செய்தனர்.

‘அறிவுத்திறனில் தாங்கள் தாழ்ந்தவர்களே’ என்று அறிவியல் ரீதியாக நம்பவைக்கப்பட்டார்கள் பெண்கள்.

ப்ரோகாவின் குழுவில் இருந்த L.Manouvrier என்பவர், பெண்கள் குறித்த ப்ரோகாவின் கருத்துக்களை நிராகரித்தார். இந்த ஆய்வு குறித்து வேதனையுடன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் L. Manouvrier,

“The  theologians  had  asked  if women had a soul. Several centuries later, some scientists were  ready  to  refuse  them  a  human intelligence” —  L.Manouvrier, as quoted by Stephen Jay Gould in his book The Panda’s Thumb, 1980. W.W. Norton, pp. 152-159.

பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா என்று கேட்டனர் வேத விற்பன்னர்கள். பல நூற்றாண்டுகளுக்கு பிறகு, சில விஞ்ஞானிகள், பெண்களுக்குண்டான அறிவுத்திறனை மறுக்க தயாராக இருக்கின்றனர் —  (Extract from the original quote of) L.Manouvrier, as quoted by Stephen Jay Gould in his book The Panda’s Thumb, 1980. W.W. Norton, pp. 152-159.

ப்ரோகா தோற்றுவித்த பள்ளியின் தலைமை அறிவியலாளர்களில் ஒருவரான ல பான் (Le Bon) வரலாற்றில் முக்கிய விஞ்ஞானியாக அறியப்படுபவர். ப்ரோகாவின் ஆய்வு தகவல்களை உபயோகப்படுத்தி இவர் எழுதிய கட்டுரையை பிரான்சின் மதிப்புமிக்க அறிவியல் ஆய்விதழ் 1879 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதில் மிக மோசமான, அப்போதைய அறிவியல் உலகம் காணாத நச்சு கருத்தை தெரிவித்திருந்தார் ல பான்.

(பின்வரும் பத்தி மிக மிக சென்சிடிவான தகவல்களை கொண்டது. விரும்பாதவர்கள் பின்வரும் பத்தியை தாண்டி செல்லவும்)

“In  the  most  intelligent  races,  as  among  the Parisians,  there  are  a  large  number  of  women whose  brains  are  closer  in  size  to  those  of gorillas than to the most developed male brains. This  inferiority  is  so  obvious  that  no  one  can contest it for a moment; only its degree is worth discussion. All psychologists who have studied the intelligence of women, as well as poets and novelists, recognize today that they represent the most inferior forms of human evolution and that they are closer to children and savages than to an adult,  civilized  man.  They  excel in  fickleness, inconstancy, absence of thought and logic, and incapacity to reason. Without doubt there exist some distinguished women, very superior to the average man, but they are as exceptional as the birth  of  any monstrosity,  as,  for  example,  of  a gorilla  with two  heads;  consequently,  we  may neglect them entirely” — Le Bon, as quoted by Stephen Jay Gould in his book The Panda’s Thumb, 1980. W.W. Norton, pp. 152-159.

“பாரிஸ் மக்களை போன்ற அறிவில் சிறந்த இனத்தில், நிறைய பெண்களின் மூளைகள், நன்கு வளர்ந்த ஆணின் மூளையை விடவும், கொரில்லாக்களின் மூளையையே ஒத்து வருகின்றது. இது எதிர்க்க முடியாத உண்மை. பெண்களின் அறிவுத்திறனை ஆராய்ந்த உளவியல் நிபுணர்கள் அனைவரும் இன்று உணர்ந்து கொள்ள ஆரம்பித்திருப்பது என்னவென்றால், பரிணாமத்தின் படி அவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதைத்தான்.

பெண்களின் அறிவுத்திறன், நாகரிகம் அடைந்த மனிதனை ஒத்திருப்பதை காட்டிலும், குழந்தைகளையும் காட்டுமிராண்டிகளையுமே ஒத்திருக்கின்றது. சபலத்திலும், நிலையாமையிலும், சிந்திக்க தெரியாமல் இருப்பதிலும், கேள்வி கேட்பதில் திறமையில்லாமல் இருப்பதிலும் பெண்கள் மேம்பட்டிருக்கின்றனர்.

நிச்சயமாக, சராசரி மனிதனை விட (அறிவில்) உயர்ந்த சில பெண்கள் இருக்கின்றனர். எப்படி இரண்டு தலை கொண்ட கொரில்லாக்கள் பிறக்கின்றனவோ அதுபோலவே இவர்களும் விதிவிலக்கானவர்கள். ஆகையால், இவர்களை முற்றிலுமாக நிராகரித்து விடலாம்” — Le Bon, as quoted by Stephen Jay Gould in his book The Panda’s Thumb, 1980. W.W. Norton, pp. 152-159.

ல பானின் இந்த கருத்துக்கள் எரிச்சலூட்டுபவை. ஆனால் இதே போன்றதொரு கருத்தை தான் டார்வினும் கொண்டிருந்தார். பெண்களின் சில பழக்க வழக்கங்கள் கீழ்நிலை இனங்களோடு ஒத்துபோவதாக கூறியவர் அவர்.  அதுமட்டுமல்லாமல், நாகரிகத்தில், தாழ்வான நிலையிலேயே பெண்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டவர் டார்வின்…

“It is generally admitted that with woman the powers of intuition, of rapid perception, and perhaps of imitation, are more strongly marked than in man; but some, at least, of these faculties are characteristic of the lower races, and therefore of a past and lower state of civilisation” — Charles Darwin, The Decent of Man, 1871, Page No. 326-327.

ல பான் இதோடு நிறுத்தவில்லை. பெண்களுக்கு உயர் கல்வி தரும் அமெரிக்க சீர்திருத்தவாதிகள் சிலரது திட்டத்தையும் கேள்வி கேட்டார். இயற்கை பெண்களுக்கு கொடுத்துள்ள தாழ்வான நிலையை தவறாக புரிந்து கொள்ள கூடாதென்றும், ஆண்களுக்கு நிகராக அவர்களுக்கு கல்வி கொடுக்கப்பட்டால் சமூக புரட்சி நடந்து குடும்ப பிணைப்புகள் பாதிக்கப்படும் என்றும் கூறினார்.

பான் போல தங்களது சொந்த கருத்துக்களுக்கு ஆதரவாக அறிவியலை வளைத்து கொண்ட அறிவியலாளர்கள் அன்று இருந்தனர்.

உதாரணத்திற்கு, மனிதனுடைய புத்திசாலித்தனம், மூளையின் “frontal lobe” பகுதியை சார்ந்தே அமைந்திருக்கின்றது என சில விஞ்ஞானிகள் எண்ணினர். பின்னர், பெண்களுடைய frontal lobe பகுதி ஆண்களை விட பெரியது என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தங்களுடைய எண்ணத்தை மாற்றி கொண்டனர். அதாவது, புத்திசாலித்தனதுக்கு Frontal Lobe காரணமல்ல, Parietal Lobe பகுதியே காரணமாக இருக்க வேண்டுமென்று தங்களது எண்ணத்தை மாற்றி கொண்டனர்.

(ஒருவேளை, பெண்களின் மூளை ஆண்களை விட பெரியது என்று கண்டுபிடித்திருந்தால், புத்திசாலித்தனத்துக்கும் மூளைக்கும் சம்பந்தமில்லை என்று முடிவு கட்டியிருப்பார்கள் போல…)

பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் டார்வின் முதற்கொண்டு அன்றைய விஞ்ஞானிகள் பலருக்குள்ளும் நன்கு பதிந்திருந்ததால், தங்களது எண்ணங்களுக்கு ஏற்றவாறு தான் அறிவியலை அணுகினார்களே தவிர தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் அல்ல.

இன்றைய சூழல்: 

உயரம், பருவம் ஆகியவையை சார்ந்து(ம்) மூளையின் அளவு வேறுபடும். இன்றைய மனிதர்களிலேயே கூட மூளையின் அளவில் நிறைய வேறுபாடு உண்டு. ஆக, மூளையின் அளவை கொண்டு அறிவுத்திறனை கணக்கிடுவதெல்லாம் இன்றைய அறிவியலுக்கு ஒத்துவராதது. அவை தவறென நிரூபிக்கப்பட்டவை. ப்ரோகா முதற்கொண்டு பல விஞ்ஞானிகளின் பெண்கள் குறித்த ஆய்வுகளை “non-sense” என்று கூறுகின்றது இன்றைய அறிவியல்.

அதுபோல, ஆண் பெண் வித்தியாசம் குறித்த டார்வினின் கூற்றுக்கும் ஆதாரங்கள் இல்லை.  இருந்தாலும், டார்வின் அறிமுகப்படுத்திய Sexual Selection Hypothesis இன்றளவும் ஆண், பெண் வித்தியாசங்களுக்கான சிறந்த விளக்கமாக பார்க்கப்படுவதாக விக்கிபீடியா கூறுகின்றது.

அவ்வப்போது அறிவுத்திறன் குறித்த சர்ச்சைகள் தோன்றி கொண்டுதான் இருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் தலைவர் லாரான்ஸ் சம்மர்ஸ் (Lawrence Summers) மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். அறிவியல் மற்றும் கணக்கு துறைகளில் பெண்கள் (அதிக அளவில்) வெற்றி பெற முடியாததற்கு காரணம், அவர்கள் பிறப்பிலேயே அப்படித்தான் என்று அவர் கூறினார். ஆம், அன்று டார்வின் கொண்டிருந்த அதே கருத்துக்கள் இன்று சம்மர்ஸ் வாயிலிருந்து வந்து விழுந்தன. 

டென்மார்க்கை சார்ந்த பிரபல மனோதத்துவ நிபுணரான ஹெல்முத் நைபோர்க் (Helmuth Nyborg) பெரும் சர்ச்சையை சில ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தினார். சர்ச்சைக்கு காரணம், “Personality and Individual Differences” என்ற அறிவியல் ஆய்விதழில் வெளிவந்த அவருடைய ஆய்வு கட்டுரை. அந்த கட்டுரையில், பெண்களை விட ஆண்களே அறிவில் சிறந்தவர்கள் என்று தன்னுடைய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இது மிகுந்த எதிர்ப்புகளை சந்திக்க, தன்னுடைய பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார் நைபோர்க். இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், நைபோர்க்கின் ஆய்வில் எந்த தவறுமில்லை என்று அவருக்கு ஆதரவாக பல ஆய்வாளர்கள் திரண்டது தான்.

நைபோர்க் சர்ச்சைகளில் சிக்கியது இது முதல் முறையல்ல. கருப்பினத்தரை விட வெள்ளை இனத்தவரே அறிவில் சிறந்தவர்கள் என்று ஏற்கனவே கருத்து கூறியிருந்தவர் நைபோர்க்.

நைபோர்க்கின் கருத்துக்களை உற்று நோக்குங்கள். டார்வினின்  பார்வைகளும் இப்படித்தான் இருந்தன.  

ஆக, இன்றளவும் இந்த சர்ச்சைகள் குறையவில்லை. பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறும் பிரபல ஆய்வாளர்கள் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆணாதிக்கத்திற்கு துணை போய் கொண்டு தான் இருக்கின்றனர்.

முடிவாக: 

வரலாற்றை ஆழ்ந்து நோக்கும் யாருக்கும் தெரியவரும் உண்மை என்னவென்றால், பெண்ணடிமைத்தனத்திற்கு சமூகம் மட்டுமே காரணமல்ல, விஞ்ஞானிகளும் காரணம் என்பதுதான். 

அந்த விஞ்ஞானிகளுக்கு உறுதுணையாக இருந்து, பெண்களை உளவியல் ரீதியாக காயப்படுத்தியது பரிணாமம் என்ற ஆதாரமில்லாத கோட்பாடு தான்.

உண்மைகள் வரலாற்றில் மறைத்திருக்கப்படலாம். ஆனால் அவை நிரந்தரமாக மறைந்திருக்காது.

ஆணாதிக்கத்தை அறிவியல் ரீதியாக நியாயப்படுத்தி, ஆணாதிக்க சமூகத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்தது பரிணாம கோட்பாடு. பெண்ணடிமைத்தனத்தை போற்றி வந்த மனிதர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது பரிணாம கோட்பாடு.

“Charles darwin believed in general female inferioty in reasoning, creative imagination, and so on…A refinement of the ‘inferiority’ theme took shape with the development  of evolutionay theory in the mid-19 century” – Judith Worell, Encyclopedia of women and gender: sex similarities and differences and the impact of society on gender, Volume 1, 2001, Page No.595.

படைப்பு திறன், கேள்வி கேட்கும் திறன் என இன்னும் பல பிரிவுகளில் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை டார்வின் கொண்டிருந்தார்…

பரிணாம கோட்பாடு வளர்ச்சி பெற ஆரம்பிக்க ‘(பெண்கள்) தாழ்ந்தவர்கள்’ என்ற கருத்தும் வடிவம் பெற ஆரம்பித்தது” –  (Extract from the original quote of) Judith Worell, Encyclopedia of women and gender: sex similarities and differences and the impact of society on gender, Volume 1, 2001, Page No.595.

எப்படி தன் இனவெறிக்கு பரிணாமத்தை காரணமாக காட்டி நியாயம் கற்பித்தாரோ ஹிட்லர், அதுபோலவே, பெண்கள் குறித்த தங்களது பாரபட்சமான கருத்துக்களுக்கு காரணமாக ஆய்வாளர்கள் கை நீட்டியது பரிணாம கோட்பாடை நோக்கி தான்.

அறிவியல் கருத்துக்கள் மாறக்கூடியவை. மூளையின் அளவை கொண்டு அறிவுத்திறனை(??) கணக்கிட்டார்கள் என்றால் அது அன்றைய தவறான புரிதல். அதுபோலவே, பரிணாம கோட்பாட்டிற்கு ஆதாரங்கள் இருப்பதாக அன்று நம்பினர். பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக அந்த ஆதாரங்கள் ஒன்றுமில்லாமல் ஆகி, இன்றோ, அதற்கு நேர்மாறான நிலைமையல்லவா இருக்கின்றது!!!

பரிணாம ஆதரவாளர்களிடம் மீண்டும் நான் கேட்டு கொள்வதெல்லாம், திறந்த மனதோடு பரிணாம கோட்பாட்டை ஆராய முன்வாருங்கள் என்பதுதான். பரிணாமத்தால் மனித சமுதாயம் அடைந்த பயன் என்று ஒன்றுமில்லை. அறிவியல் போர்வையில் தவறான தகவல்கள், இனவெறி, பெண்கள் தாழ்த்தப்பட்டது (and etc) என இவைதான் பரிணாம கோட்பாடு நமக்கு கொடுத்த பரிசுகள்.

பெண்ணுரிமை ஆர்வலர்கள் எதிர்த்து போராட வேண்டியது ஆணாதிக்க சமூகத்தை மட்டுமல்ல, அவர்களுக்கு துணை போய் கொண்டிருக்கும் ஆய்வாளர்களை எதிர்த்தும் தான்…

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் – ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான் – (குரான் 33:35)

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக…ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்…

References:

1. The Descent of Man – Charles Darwin, 1871, Page No.326 – 328. link
2. The Panda’s thumb – Stephen Jay Gould, 1980, W.W. Norton, Page No. 152-159. link
3. The history of the human female inferiority ideas in evolutionary biology – Bergman G, U.S. National Library of Medicine. link 
4. Encyclopedia of women and gender: sex similarities and differences and the impact of society on gender – Judith Worell, Volume 1, 2001, Page No.595.
5. The history of science and technology – Bryan H. Bunch & Alexander Hellemans, Houghton Mifflin Harcourt, 2004, Page No.419.
6. Charles Darwin, Alfred Russel Wallace, and the Evolution / Creation of the Human Brain And Mind – Stephen E. Glickman, Departments of Psychology and Integrative Biology, University of California, Berkeley, USA. link
7. Summers’ remarks on women draw fire – The Boston Globe,  January 17, 2005. link
8. Sex-related differences in general intelligence g, brain size, and social status – Helmuth Nyborg, Science Direct, 8th June 2005. link
9. Sexual Selection – evolution.berkeley.edu. link
10. Helmuth Nyborg – Wikipedia. link
11. The Descent of Man – Wikipedia. link
12. Sexual Selection – Wikipedia. link
13. Alfred Russel Wallace – Wikipedia. link
thanks:  ஆஷிக் அஹ்மத் அ

 

சீனாவின் ஹுய் முஸ்லிம்கள் – யார் இவர்கள்?

Posted May 13, 2012 by arshathalathary
Categories: Uncategorized

 

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமீன்.
சீனாவில் இஸ்லாம் – ஓர் ஆய்வு (Part 2 of 2):

சீன முஸ்லிம்கள் குறித்த இத்தளத்தின் முந்தைய பதிவை கண்ட சகோதரர் ஒருவர் தொலைப்பேசியில் அழைத்திருந்தார். சீன முஸ்லிம்களுடனான தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ள தொடங்கினார்.

1990-களில், ஹஜ் கடமையின்போது சீன சகோதரர்களை சந்தித்தாராம் இந்த சகோதரர். பலவித சவால்களுக்கு மத்தியிலும் தங்களுடைய இறைநம்பிக்கையை வலிமையாக பற்றிப்பிடித்திருக்கும் அந்த சீனர்களை கண்டு வியந்து அவர்களை கட்டியணைத்து முத்தமிட்டாராம்.

சீன முஸ்லிம்களின் வரலாற்றை ஆய்வு செய்யும்போது நம்மில் பலரையும் பிரமிக்க வைக்கும் ஒரு விஷயம், பலவித இக்கட்டான சூழ்நிலைகளை தாண்டி தங்கள் மார்க்கத்தை அவர்கள் கடைப்பிடித்து வந்திருக்கும் அந்த அர்ப்பணிப்புதான். அல்ஹம்துலில்லாஹ்.

சீனாவின் உய்குர் முஸ்லிம்கள் குறித்து முதல் பாகத்தில் பார்த்தோம். இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், சீனாவின் ஹுய் முஸ்லிம்கள் மற்றும் சீன முஸ்லிம்கள் குறித்த சில பொதுவான தகவல்களை பார்க்கவிருக்கின்றோம்.

நான் முன்னரே கூறியது போன்று, சீனாவின் பெரும்பான்மை இனமான ஹன் இனத்தவருக்கும் உய்குர் முஸ்லிம்களுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. ஆனால், ஹன் இனத்தவருக்கும் ஹுய் இன முஸ்லிம்களுக்கும் அப்படிப்பட்ட பெரிய வேறுபாடுகள் கிடையாது. பார்ப்பதற்கு அப்படியே ஹன் இனத்தவரை ஒத்திருப்பார்கள் ஹுய் முஸ்லிம்கள். இரு இனத்தவரும் பேசுவது மாண்டரின் மொழிதான். இருப்பினும் இவர்கள் வெவ்வேறு இனத்தவர், காரணம் இஸ்லாம்.

ஆம், இந்த இரண்டு இனத்தவரையும் பிரிப்பது இஸ்லாம் என்ற வாழ்வியல் நெறி மட்டுமே.

கேட்பதற்கு ஆச்சர்யமாக இருந்தாலும் நிகழ்வுகளை இப்படித்தான் விளக்குகின்றன ஊடகங்கள். 

சீனாவில் இஸ்லாம் நுழைந்த வரலாறு:

நான் இந்த பதிவுகளை எழுதத் தொடங்கியபோது, சீனாவில் சுமார் 2-10 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்ற செய்தி மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது. இதனை நான் நிச்சயம் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.

சீன முஸ்லிகளின் மக்கட்தொகையை காட்டிலும் எனக்கு வியப்பைத் தந்த மற்றொரு விசயம், அரேபிய முஸ்லிம்களின் வரலாறு எவ்வளவு பழமையானதோ (கிட்டத்தட்ட) அதே அளவு பழமையானது சீன முஸ்லிம்களின் வரலாறு என்ற செய்தி.

ஹுய் முஸ்லிம்களின் வரலாற்றை பின்தொடர்ந்து சென்றோமானால் அது நாயகம் (ஸல்) அவர்களது காலத்திற்கு (/அருகில்) செல்கின்றது.

651-ஆம் ஆண்டு, இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலிபாவான உஸ்மான் (ரலி) அவர்கள், தன்னுடைய தூதுக்குழுவை சீன பேரரசரான யுங் வீய்யிடம் (Yung-Wei) அனுப்பியதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த தூதுக்குழுவை தலைமையேற்றி நடத்திச்சென்றது நாயகம் (ஸல்) அவர்களின் உறவினரான சாத் இப்ன் அபி வக்கஸ் (ரலி) அவர்கள். இந்த தூதுக்குழு சீன ஆட்சியாளரை சந்தித்து இஸ்லாமை தழுவுமாறு அழைப்பு விடுத்தது.

இந்த அழைப்பை நிராகரித்துவிட்டாலும், இஸ்லாம் மீதான தன்னுடைய மரியாதையை வெளிப்படுத்தும்விதமாக ஒரு பள்ளிவாசலை நிர்மாணிக்க உத்தரவிட்டார் யுங் வீய். இது ‘நினைவுச்சின்ன’ பள்ளிவாசல் (Memorial or Huaisheng Mosque) என்றழைக்கப்படுகின்றது. சுமார் பதினான்கு நூற்றாண்டுகளாக இன்றுவரை நீடித்து தன்னுடைய பெருமையை பறைச்சாற்றி கொண்டிருக்கின்றது இந்த பள்ளி.

 

சீனாவிலுள்ள வரலாற்று ஆவணங்கள் மேற்கூறிய செய்தியை தெரிவித்தாலும், அரேபிய ஆவணங்கள் வேறுவிதமான செய்தியை சொல்கின்றன. அதாவது, நாயகம் (ஸல்) அவர்களது காலத்தின்போதே, நபித்தோழர்கள் மூலமாக இஸ்லாம் சீனாவிற்கு சென்றிருக்கின்றது என்ற செய்திதான் அது. இதனை சில மேற்கத்திய ஆய்வாளர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டும் உள்ளனர்.

மற்றொரு தகவலும் இருக்கின்றது. சீனர்களுடனான அரேபியர்களின் தொழில்முறை உறவானது இறுதித்தூதர் வருவதற்கு முன்பிருந்தே வலிமையாக இருந்துள்ளது. பஸ்ரா நகரிலிருந்து அரேபியர்கள் மற்றும் பெர்ஷியர்கள் வணிகம் செய்ய சீனாவிற்கு சென்றுள்ளனர். இப்படிச் சென்றவர்களில் சிலர் சீனாவிலேயே நிரந்தரமாக தங்கியும் விட்டனர். பின்னர் இஸ்லாம் பரவியபோது, தங்களது உறவினர்கள் மூலமாக சீனாவில் இருந்த அரேபியர்கள்/பெர்ஷியர்கள் இதனை அறிந்துக்கொண்டு இஸ்லாத்தை தழுவியிருக்கலாம் என்பது அந்த மற்றொரு தகவல்.

மொத்தத்தில், சீனாவில் இஸ்லாம் நுழைந்த மிகச்சரியான காலக்கட்டம் குறித்து வெவ்வேறான தகவல்கள் இருந்தாலும், அனைத்து ஆய்வாளர்களும் ஆமோதிக்கும் ஒரு தகவல், ஏழாம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் சீனாவிற்குள் நுழைந்துவிட்டது என்பதுதான்.

யார் இந்த ஹுய் முஸ்லிம்கள்?

அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் சீனாவுடனான வணிகத் தொடர்புகள், அரசியல்ரீதியான தொடர்புகள் வலுப்பட, அதிக அளவிலான முஸ்லிம்கள் சீனாவிற்கு வந்தனர். வந்தவர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் சீனர்களை மணந்துக் கொண்டு சீனாவிலேயே குடியேரியும் விட்டனர்.

இப்படி குடியேறியவர்களின் சந்ததியினர்தான் இன்று ஹுய் முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

ஹுய் என்றால் என்ன அர்த்தம்?

சீனாவிற்கு வந்த அக்கால முஸ்லிம்களை சீனர்கள் ‘ஹுய்ஹுய்’ (HuiHui) என்றழைத்தனர். இந்த வார்த்தைக்கு ‘வெளிநாட்டினர்’ என்று அர்த்தம். பிறகு இந்த வார்த்தையே ஒரு குறிப்பிட்ட இனத்தின் பெயராக நிலைத்துவிட்டது.

ஹுய் முஸ்லிம்கள் குறித்த சில சுவாரசிய தகவல்கள்:

ஹுய் இனத்தவரின் இன்றைய பெயர்களின் முதல் எழுத்துக்களை உற்றுநோக்கினால் சில சுவாரசிய தகவல்களை புரிந்துக் கொள்ளலாம். ‘ஹ’ என்ற முதற்பெயர் ‘ஹசன்’ என்ற பெயரிலிருந்து வந்தது. அதுபோல, ‘ஹு’ என்ற முதற்பெயர் ‘ஹுசைன்’ என்பதிலிருந்து வந்தது. இப்படியாக இவர்களின் பெயர்களை ஆராய்ந்தால் அது இவர்களுடைய மூதாதையர்களிடம் போய் நிற்கும்.

கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்குப்படி (2000 census), ஹுய் இன முஸ்லிம்களின் மக்கட்தொகை சுமார் ஒரு கோடி. சீன அரசால் பிரிக்கப்பட்டுள்ள முஸ்லிம் இனங்களிலேயே அதிக மக்கட்தொகையை கொண்ட இனம் ஹுய் தான். இவர்களுக்கு பிறகு உய்குர் இன முஸ்லிம்கள் வருகின்றனர்.

சீனா முழுக்க ஹுய் இன மக்கள் பரவியிருந்தாலும், ஐந்தில் ஒரு பகுதியினர் நின்க்சியா-ஹுய் தன்னாட்சி பகுதியில் (Ningxia Hui autonomous region) வாழ்கின்றனர்.

2006-ஆம் ஆண்டு நிலவரப்படி, நின்க்சியா பகுதியில் மட்டும் சுமார் 3000 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இஸ்லாமிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் உள்ளன.

அரபி மொழி மீதான ஆர்வம் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது. 2005-ஆம் ஆண்டு, நின்க்சியா பல்கலைகழகம், அரபி மொழிக்கென தனி துறையை தொடங்கி இருக்கின்றது. மேலும் பல கல்வி நிறுவனங்கள் அரபி கற்றுக்கொடுக்க தொடங்கியிருக்கின்றன.

2006-ஆம் ஆண்டு நிலவரப்படி, நின்க்சியா பகுதியில், சுமார் 3000 மாணவர்கள் இமாம்களாக பணியாற்றுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இனி, சீன முஸ்லிம்கள் குறித்த சில பொதுவான தகவல்களை பார்ப்போம். 

சீன வரலாற்றை கூர்ந்து கவனிக்கும் எவரும் ஒருசேர ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம், சீன முஸ்லிம்கள் தங்கள் நாட்டிற்கு செய்த அளப்பரிய பங்களிப்புகள்.

கடல்வழி ஆராய்ச்சி, அரசியல், ராணுவம், கலை என்று பல துறைகளில் சீனாவின் முன்னேற்றத்திற்கு பங்காற்றியுள்ளனர் முஸ்லிம்கள்.

கொலம்பஸ்சுக்கு முன்னரே அமெரிக்காவை கண்டுபிடித்தவர் என்று போற்றப்படும் ஷெங் ஹி முதற்கொண்டு இன்றைய சீனாவின் விவசாயத்துறை துணை அமைச்சரான ஹுய் லியாங்யு வரை சீனாவின் முன்னேற்றத்திற்கு பங்களித்த முஸ்லிம்கள் பலர். நாம் மேலே பார்த்த ஷெங் ஹி மற்றும் அவரது குழுவினர்தான் மலேசியாவில் இஸ்லாமை பரப்பியவர்கள் என்ற வரலாற்று தகவல் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

க்விங் (Qing Dynasty, 1644-1912) அரசப் பரம்பரை ஆட்சியை தவிர்த்து, சீனாவை ஆண்ட மற்ற பரம்பரைகளுடன் இணக்கமான உறவையே முஸ்லிம்கள் கொண்டிருந்தனர். பின்னர் 1912-ஆம் ஆண்டு சீன குடியரசு பிறந்தபோது, அரசுடனான முஸ்லிம்களின் உறவு மேம்பட தொடங்கியது.

மாவோவின் பண்பாட்டுப் புரட்சி:

மாவோ தலைமையில் நடந்த பண்பாட்டுப் புரட்சியின்போது (1966-1976), முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் கடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டன, பூட்டப்பட்டன.

மாவோவின் மரணத்திற்கு பிறகு நிலைமை சீரடையத் தொடங்கியது. பள்ளிவாசல்கள் முஸ்லிம்களிடத்தில் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. அவை சீர் செய்யப்பட அரசாங்கம் உதவி செய்தது.

நீண்ட காலத்திற்கு பிறகு தங்களுடைய மார்க்கத்தை வெளிப்படையாக பின்பற்ற வெளியே வந்த முஸ்லிம்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், புரட்சிக்கு முன்பிருந்ததை காட்டிலும் தற்போது முஸ்லிம்கள் அதிக அளவில் பெருகி இருந்தனர். அதுமட்டுமல்லாமல், இறைநம்பிக்கையில் சிறந்தவர்களாவும் இருந்தனர். இறைவனின் கிருபையை எண்ணி அகமகிழ்ந்தனர் முஸ்லிம்கள்.

அன்று தொடங்கிய மகிழ்ச்சி இன்று வரை நீடிக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ். இஸ்லாமை சரிவர பின்பற்றும் சீன முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஏசியா டைம்ஸ் இணையதளம் கூறுகின்றது. மார்க்க கல்வி கற்போரும், ஹிஜாப் அணியும் பெண்களின் எண்ணிக்கையும் பெருமளவில் உயர்ந்துவிட்டதாக அது மேலும் கூறுகின்றது.

சீன அரசின் அணுகுமுறை:

சீன அரசாங்கத்தை பொருத்தவரை முஸ்லிம்கள் விசயத்தில் (சின்ஜிஅங் பகுதியை தவிர்த்து) சிறிது அனுசரித்து போகவே விரும்புகின்றது. காரணம், முஸ்லிம் நாடுகளுடன் அது கொண்டுள்ள உறவு. சீன பொருட்களை நுகரும் நாடுகளின் வரிசையில் முன்னணியில் உள்ளன மத்திய கிழக்கு நாடுகள். இந்த உறவை எக்காரணத்தை கொண்டும் துண்டித்துக் கொள்ள விரும்பவில்லை சீனா. அரபி மொழி கற்பதை சீன அரசு ஊக்குவிப்பதும் இந்த காரணத்திற்காக தான்.

(நாட்டிற்கு முன்பாக தங்களது மார்க்கத்தை பிரதானப்படுத்த கூடாது. பதினெட்டு வயதுக்குட்பட்டோருக்கு மதக் கட்டளைகளை பிறப்பிக்க கூடாது. இமாம்களாக பணியாற்ற விரும்புபவர்கள் அரசாங்க அனுமதி பெறவேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி முஸ்லிம்கள் தங்களது மார்க்கத்தை கடைப்பிடிக்கலாம்).

முஸ்லிம்களுடனான சீன அரசின் நல்லுறவுக்கு ஒரு உதாரணத்தை சொல்லலாம். 1993-ஆம் ஆண்டு, தங்களை புண்படுத்தும்விதமாக ஒரு புத்தகம் இருக்கின்றது என்று முஸ்லிம்கள் போராட்டம் நடத்த, அந்த புத்தகத்தின் பிரதிகள் அனைத்தையும் அழிக்க உத்தரவிட்டது சீன அரசு. அதுமட்டுல்லாமல், அந்த நூலை பிரசுரித்த நிறுவத்தின் தலைமை நிர்வாகிகளை வேலை நீக்கம் செய்யச் சொல்லியும் உத்தரவிட்டது.

சீன அரசின் ஒருக் குழந்தை திட்டம் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு பொருந்தாது.

எட்டு வெவ்வேறு அறிஞர்களின் குர்ஆன் (அர்த்தங்களின்) மொழிபெயர்ப்புகள் மாண்டரின் மொழியில் உள்ளன.

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. 2007-ஆம் ஆண்டு, ஹஜ் யாத்திரை செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை முதல் முறையாக பத்தாயிரத்தை தொட்டது. சென்ற ஆண்டு இதுவே 13,100-ஆக உயர்ந்தது.

சீனாவில் 30,000-த்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருக்கின்றன (பீஜிங் நகரில் 72 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. சுமார் மூன்று லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்). 40,000-க்கும் மேற்பட்ட அரசாங்க அனுமதிப் பெற்ற இமாம்கள் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகின்றது.

பெண்களால் நடத்தப்படும் பள்ளிவாசல்கள்: (இது பித்அத்தான வழிமுறை.ஒரு வரலாற்றுத் தகவலுக்காகவே குறிப்பிடுகிறோம்-mujahidsrilanki)

தங்களின் தனித்தன்மையாக சீன முஸ்லிம்கள் கருதும் மற்றொரு விஷயம், பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் பள்ளிவாசல்கள்.

தொழ வைப்பதிலிருந்து, இந்த பள்ளிவாசல்களை நிர்வகிப்பதுவரை அனைத்தையும் பெண்களே கவனித்துக் கொள்கின்றனர்.

சீனாவின் Kaifeng நகரில் மட்டும் இதுப்போன்ற சுமார் பதினாறு பள்ளிவாசல்கள் இருக்கின்றன. நின்க்சியா பகுதியில் மட்டும் சுமார் இருநூறு பெண் இமாம்கள் உள்ளனர்.

பெண்களுக்கான பள்ளிவாசல்கள் என்பது இன்று நேற்று ஏற்பட்ட ஒன்றல்ல. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இம்மாதிரியான பள்ளிவாசல்கள் சீனாவில் இருக்கின்றன. பெண்களுக்கான பல்நோக்குகூடங்களாக திகழ்கின்றன இந்த பள்ளிவாசல்கள்.

நீங்கள் மேலே பார்த்த தகவல்கள் உங்களில் சிலருக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்திருக்கலாம். சீன முஸ்லிம்கள் பற்றிய பல அற்புத தகவல்கள் சீன அரசின் கட்டுப்பாடுகளால் உலகளாவிய முஸ்லிம்களின் கவனத்திற்கு வராமலேயே சென்று விடுகின்றன.

சுமார் 1400 ஆண்டுகளாக, (முஸ்லிம்கள் என்னும்) தங்களுடைய அடையாளத்தை சுமந்து வந்திருப்பதென்பது நிச்சயமாக சாதாரண விசயமல்ல. தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சமுதாயம், தான் சார்ந்த நாட்டின் கலாச்சாரத்தில் மூழ்கி தன்னை தொலைத்துவிடாமல் இருந்தது நிச்சயம் வியப்பளிக்கும் தகவல்…

சீன முஸ்லிம்கள் குறித்த இந்த பதிவுகளில் நான் பகிர்ந்துக் கொள்ள முயற்சித்திருப்பது மிகச் சிறிய பகுதி மட்டுமே. சீன முஸ்லிம்கள் என்னும் நம் மார்க்க சகோதரர்கள் நம்மிடமிருந்து தனிமைப்பட்டு நின்றாலும், தங்களின் ஈமானை தக்க வைத்துக் கொண்டதில் நமக்கெல்லாம் ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றனர் என்றால் அது மிகையல்ல…அல்ஹம்துலில்லாஹ்.

இளைஞர்கள் அதிகளவில் வீரியத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கும் சீன முஸ்லிம் சமூகத்தை பார்க்கும்போது, அவர்களின் எதிர்காலம் பிரகாசமான ஒன்றாகவே தோன்றுகின்றது. இன்ஷா அல்லாஹ்.

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக…ஆமீன்.

References:

1. Muslims in China keep their faith –  Chow How Ban, 13th Jan 2011, The Star. link
2. China’s ‘lost’ Muslims go back to the future – Hamish McDonald, 26th Feb 2005, The Age. link
3. From Mulberry to Silk – The Journey of Islam in China – Musaddique Thange, Whyislam.org. link
4. Islam in China – BBC. link
5. Islam in China Revisited – Razib Khan, 28th May 2010. islaminchina.info. link
6. Islam in China: FAQ – islaminchina.wordpress.com. link
7. Islam History in China – China Discoverer. link
8. Hui Muslims in China – Shanghaiist. link
9. Hui People – My china tours. link
10. Islam with Chinese characteristics – Pallavi Aiyer, 6th Sep 2006, Asia Times. link
11. Islam in China (650 – 1980 CE) – Yusuf Abdul Rahman, Islam Awareness. link
12. Islam grows in Red China – Dietmar Muehlboeck, Mail Archive. link
13. Islam in China – cinaoggi.it. link
14. History of Islam in China – Chinese School. link
15. The Land of the Pure and True – Muslims in China Feature: Ethar El-Katatney, Issue 73 October 2010, Emel. Link

16. (Reprinted with permission from Aramco World Magazine, July-August 1985) Muslims in China – Columbia University, East Asian Curriculum Project.link
17. History of Islam in China and the distribution of the Islamic Faith in China – Asia Travel. link
18. Female Imams Blaze Trail Amid China’s Muslims – LOUISA LIM, 21st July 2010, NPR. link
19. All-Female Mosques in China – Reem, 21st Sep 2010, Inside Islam: Dialogues and Debates. link
20. The Silk Road – Ancient China for Kids. link
21. Women imams of China – Bruno Philip, 26th Aug 2005, The Guardian. link
22. Chronology for Hui Muslims in China – Minorities at Risk Project, UNHCR. link
23. Oldest Mosque in China – Built during Tang Dynasty: China History forum. link
24. Islam in china – Wikipedia. link
25. Hui people – Wikipedia. link
26. Hui Liangyu – Wikipedia. link
27. Go: Another facet to China – ANNIE FREEDA CRUEZ, 9th Sep 2010, New Straights times. link
Thanks:
ஆஷிக் அஹமத் அ.

 

சீனாவின் உய்குர் முஸ்லிம்கள் – யார் இவர்கள்?

Posted May 13, 2012 by arshathalathary
Categories: Uncategorized

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமீன்.
சீனாவில் இஸ்லாம் – ஓர் ஆய்வு (Part 1 of 2):
————–
Please Note:
சீன பெயர்களின் உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும் தவறுகள் இருக்கலாம். சுட்டி காட்டப்படும்பட்சத்தில் தவறுகள் திருத்தப்படும்.
————–
நீர்மூழ்கி தொழில்நுட்ப வல்லுனரும், வரலாற்றாசிரியருமான பிரிட்டனை சார்ந்த கவின் மென்சிஸ் (Gavin Menzies), கடந்த 2002 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி, தன்னுடைய கோட்பாடு பற்றிய உரையை இலண்டன் இராயல் புவியியல் சங்கத்தில் முன்வைத்தார். அவருடைய உரை அங்கிருந்தவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்க வேண்டும். காரணம், அவருடைய கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அது வரலாற்றையே மாற்றியமைப்பதாய் அமையும்.
அப்படி என்ன வாதத்தை வைத்தார் அவர்?
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே (1421), சீன முஸ்லிம் கடல்வழி ஆய்வாளரான ஷெங் ஹி (Zheng He, இவரை ஷெங் ஹோ என்றால் தான் பல சீனர்களுக்கு தெரியும்) அமெரிக்காவை கண்டுபிடித்து விட்டார் என்ற தகவல் தான் அது. 
பல ஆவணங்களை முன்வைத்து தன்னுடைய வாதத்தை வைத்தார் அவர். ஆனால் அவருடைய கோட்பாடு மிகுந்த சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு பின்னர் அவர் போன்ற துறைச்சார்ந்தவர்களால் நிராகரிக்கப்பட்டது.
ஷெங் ஹி என்ற சீன முஸ்லிம் அமெரிக்காவை கண்டுபிடித்தாரோ இல்லையோ, அவர் கடல்வழி ஆராய்ச்சியில் செய்த பங்களிப்புகள் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன.
சீன வரலாறு முழுக்க ஷெங் ஹி போன்ற முஸ்லிம்கள் தங்கள் மண்ணிற்கு செய்த பங்களிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
சீன முஸ்லிம்கள் குறித்த தகவல்கள் சுவாரசியமானவை, ஆச்சர்யமூட்டுபவை. தங்களின் வசிப்பிடத்தால், அரசியல் சூழ்நிலைகளால் உலகளாவிய முஸ்லிம்களிடமிருந்து தனிமைப்பட்டு இருந்தாலும், கடந்த பதிமூன்று நூற்றாண்டுகளாக பல தடைகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வந்திருக்கின்றனர் (அல்ஹம்துலில்லாஹ்).   
சீன முஸ்லிம்கள் கடந்து வந்த பாதையை, அவர்களின் தற்போதைய நிலையை ஆராய முற்படுவதே இந்த பதிவுகள். இன்ஷா அல்லாஹ்.
சீன இனங்கள்:
சீனாவை பொறுத்தவரை இனம் சார்ந்தே மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகின்றது. இதுவரை 56 இனங்கள் சீன அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹன் (Han) இன மக்களே பெரும்பான்மையினர் (91%). மீதமுள்ள 55 இனத்தவர் சிறுபான்மையினர். இந்த 55-ல் பத்து இனத்தவர்கள் முஸ்லிம்கள். இந்த பத்து முஸ்லிம் இனத்தவரில் பெரும்பான்மையாக இருக்கக்கூடியவர்கள் உய்குர் (Uyghur or Uighur) மற்றும் ஹுய் (Hui) இனத்தவர்கள்.
உய்குர் இன மக்கள் (வீகுர் எனவும் உச்சரிக்கப்படுகின்றது) அதிகமாக வாழும் பகுதி சின்ஜிஅங் உய்கூர் தன்னாட்சி பகுதி (Xinjiang Uyghur Autonomous Region) என்று அழைக்கப்படுகின்றது. அது போல, ஹுய் இன மக்கள் அதிகம் வாழும் பகுதி நின்க்சியா ஹுய் தன்னாட்சி பகுதி என்றழைக்கப்படுகின்றது (Ningxia Hui Autonomous region).
உய்குர் இன மக்கள்: 
சீன முஸ்லிம்கள் குறித்து பேசும் போது பலரும் எதிர்ப்பார்க்கக்கூடிய முதல் தகவல் சின்ஜிஅங் பகுதி குறித்தே இருக்கும். இந்த பகுதி கடந்த சில வருடங்களாக ஊடங்களில் அதிகம் வலம் வருகின்றது. அங்கு நடக்கும் கலவரங்கள் உலகளவில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளன.
இன்றைய சீனாவின் முஸ்லிம் மக்கள் தொகை, சுமார் இரண்டு கோடியில் இருந்து பத்து கோடி வரை இருக்கலாமென்று தகவல்கள் கூறுகின்றன. இது சீன மக்கள் தொகையில் 2% – 7.5%-மாக இருக்கின்றது.
சீனாவின் மக்கள் தொகையில் இருபதில் ஒரு பங்கு தான் முஸ்லிம்கள் என்றாலும், சீனாவின் நிலப்பரப்பில், ஆறில் ஒரு பங்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர்.
ஆம், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய சின்ஜிஅங் பகுதி, சீனாவின் நிலப்பரப்பில் பதினாறு சதவிதத்தை கொண்டது. இது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம். ஏனென்றால், பிரிவினைவாதிகளுக்கு இணங்கி இந்த பகுதிக்கு சீனா சுதந்திரத்தை வழங்கினால் தன் நிலப்பரப்பில் கணிசமான அளவை அது இழக்க வேண்டிவரும்.
இங்குள்ள உய்குர் இனத்தவரின் எண்ணிக்கை 45%. இந்த பகுதியில் உள்ள மற்ற முஸ்லிம் இனத்தவரையும் சேர்த்தால், சின்ஜிஅங் பகுதியில் வாழும் மக்கள் தொகையில் சுமார் 60% பேர் முஸ்லிம்கள். மீதம் இருப்பவர்கள் ஹன் இன சீன மக்கள்.
தமிழ் பேசுவதால் நாம் தமிழர்கள் என்று அழைக்கப்படுவது போல, உய்குர் மொழி பேசுவதால் இவர்கள் உய்குர்கள் என்றழைக்கப்படுகின்றார்கள். உய்குர் மொழி துருக்கிய மொழிகளில் ஒன்றாகும். அரபி எழுத்துக்களை கையெழுத்து படிவமாக (Script) கொண்ட மொழியாகும்.
உய்குர் இனத்தவரை பொறுத்தவரை, இவர்கள் மதத்தால், கலாச்சாரத்தால், மொழியால் ஹன் இனத்தவரிடமிருந்து (இவர்கள் மாண்டரின் மொழி பேசுபவர்கள்) வேறுபட்டவர்கள். உய்குர் இனத்தவரின் முன்னோர்கள் மத்திய ஆசியாவை சார்ந்தவர்கள்.
எப்படி ரஷ்யாவிற்கு ஒரு செசன்யாவோ அது போல தான் சீனாவிற்கு சின்ஜிஅங். எப்படி ரஷ்யாவால் செசன்யாவை விட்டு கொடுக்க முடியாதோ அது போல சீனாவினாலும் சின்ஜிஅங்கை விட்டு கொடுக்க முடியாது. எண்ணை, இயற்கை எரிவாயு மற்றும் கனிம வளங்கள் இந்த பகுதியில் மிகுந்திருப்பது இதற்கு முக்கிய காரணம்.
1949-ஆம் ஆண்டுக்கு முன், சின்ஜிஅங்கின் சில பகுதிகளை ஒருங்கிணைத்து, ரஷ்யாவின் உதவிக்கொண்டு தங்களை குடியரசாக அறிவித்து கொண்டார்கள் உய்குர் இன மக்கள். அந்த குடியரசின் பெயர் கிழக்கு துர்கெஸ்தான் (East Turkestan). அந்த ஆண்டு, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் இந்த பகுதியை மீண்டும் பிடித்தது. இதனை தன்னாட்சி பகுதியாக அறிவித்தது. அப்போது அங்கிருந்த ஹன் இன மக்களின் எண்ணிக்கை ஆறு சதவிதம் மட்டுமே. உய்குர் இன மக்களோ 80-90% இருந்தனர். இன்றோ ஹன் இனத்தவர் 40% இருக்கின்றார்கள், உய்குர் இனத்தவரோ 45% இருக்கின்றார்கள்.
இது எப்படி சாத்தியம்?
இந்த பகுதியில் எழும்பும் சுதந்திர கோஷத்தை நீர்த்துப்போக செய்ய அங்கு ஹன் இன மக்களை அதிகளவில் குடியமர்த்தி வருகின்றது சீன அரசு என்பது உய்குர் மக்களின் குற்றச்சாட்டாகும்.  
ஆனால் சீன அரசு இதனை மறுக்கின்றது. இயற்கை வளங்கள் அதிகம் வாய்ந்த சின்ஜிஅங்கில், பொருளாதார நடவடிக்கைகள் பெருகும்போது, இயல்பாகவே, மற்ற இடங்களில் வசிக்கும் ஹன் இன சீன மக்கள் அந்த பகுதியை நோக்கி நகர்வது வாடிக்கையானது தான் என்பது சீன அரசின் வாதமாக இருக்கின்றது.
சீன அரசின் வாதத்தில் நியாயம் இருப்பதாக தோன்றும் அதே நேரத்தில், நாம் மற்றொரு விசயத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். உய்குர் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி சின்ஜிஅங். இவர்கள் அறிந்ததெல்லாம் தங்களுடைய தாய்மொழியும், அரபியும் மட்டுமே. அப்படியிருக்க, கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதியில் மாண்டரின் (சீன பெரும்பான்மையினரால் பேசப்படும் மொழி) மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
(இதுமட்டுமல்லாமல், 2002-ஆம் ஆண்டு, சின்ஜிஅங் பல்கலைகழகத்தில் உய்குர் மொழி பயிற்றுவிக்கப்படுவதை தடை செய்தது அரசு)
இதனால், இயல்பாகவே, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளனர் உய்குர் இன மக்கள். தங்களுடைய பொருளாதார வாய்ப்புகள் ஹன் இனத்தவருக்கு போகின்றன என்பது உய்குர் இனத்தவரின் நீண்ட கால ஆதங்கமாக இருக்கின்றது. சின்ஜிஅங் பகுதியை உற்று நோக்கும் எவருக்கும் எளிதாக புரியக்கூடிய விஷயம் இது. 
பல ஆண்டுகளாக பனிப்போராக நீடித்து வந்த உய்குர்-ஹன் இனத்தவருக்குள்ளான பிரச்சனையின் வெளிப்பாடே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கோரமான இனக்கலவரங்கள் (July, 2009). இதில் சுமார் 156 பேர் இறந்தார்கள், 800-ருக்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள். இந்த கலவரத்திற்கு பிரிவினைவாதிகளே காரணமென சீன அரசு குற்றஞ்சாட்டியது. சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 1400 பேர் கைது செய்யப்பட, தங்களின் கணவர்கள் பிள்ளைகள் வஞ்சிக்கப்படுவதாக கூறி பெண்கள் போராட்டங்களில் குதிக்க, பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.
பிரிவினைவாதம் குறித்து பேசும்போது சில சுவாரசிய செய்திகள் கவனிக்கப்பட வேண்டியவை. சின்ஜிஅங்கில் சுதந்திர கோஷம் கேட்பதென்பது அறுபது ஆண்டுகளாக நடந்து வருவது தான். ஆனால், 2001-க்கு பிறகு இதில் முக்கிய திருப்புமுனையாக, இந்த பிரிவினைவாதத்தை பயங்கரவாதத்தோடு (அதிகளவில்) தொடர்புப்படுத்தி பேச ஆரம்பித்தது சீன அரசு. தன்னுடைய சின்ஜிஅங் நடவடிக்கைகளுக்கு தீவிரவாதத்தை காரணம் காட்டி உலகளவில் ஆதரவை தேட ஆரம்பித்தது சீனா.
ஆனால் சீனாவின் இத்தகைய அணுகுமுறையை கடுமையாக கண்டித்தன மனித உரிமை இயக்கங்கள். தீவிரவாதத்தின் மீதான நடவடிக்கை என்று கூறி உய்குர் இனத்தவர் மீதான தங்களது அடக்குமுறையை அதிகரிக்கப்பார்க்கின்றது சீன அரசு என அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல இருக்கக்கூடிய மற்றொரு முக்கிய பிரச்சனை, உய்குர் இன மக்களின் மத நம்பிக்கைகள் மீதான சீன அரசின் அடக்குமுறை. வேலை நாட்களில் தொழுவதோ, நோன்பு நோற்பதோ கூடாது. இளைஞர்களை பள்ளிவாசல்களை விட்டு தூரத்தில் வைக்கவே விரும்புகின்றது அரசு. 
நிச்சயமாக சீன அரசின் இத்தகைய நடவடிக்கைகள் வினோதமானவை. ஏனென்றால், கடந்த காலங்களில் முஸ்லிம்களுடன் இணக்கமாகவே இருந்துள்ளது சீன அரசாங்கம் (இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் பதிவில் இவற்றை பார்ப்போம்). பலவிதத்திலும் முஸ்லிம்களுக்கு உதவியாக இருந்துள்ளது சீன அரசு. அப்படியிருந்தவர்கள் இன்று இப்படி செயல்பட என்ன காரணம்? மத நம்பிக்கைகளை விட்டு இவர்களை விலக்குவதால் பிரிவினைவாதம் குறையலாம் என்பது சீன அரசாங்கத்தின் கணக்காக இருக்கலாம்.
தற்போதைய நிலையில், பிரிவினைவாத கோரிக்கைகள் குறைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், “தனி நாடு” கோரிக்கை உய்குர் இனத்தவரிடையே ஒருமித்த ஆதரவை பெற்றதும் இல்லை.
இப்போது இவர்களுக்கு இருக்கக்கூடிய கவலையெல்லாம், சீன அரசின் நடவடிக்கைகளால் தங்களின் இனம் அழிக்கப்பட்டுவிடுமோ  என்பது தான். 
பின்வரும் நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொள்ளும்பட்சத்தில் இந்த பகுதியில் நிரந்தர அமைதி திரும்பலாம்,
 • உய்குர் மொழியில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது,
 • அதன் மூலமாக இவர்களுடைய பொருளாதாரத்தை உயர்த்துவது,
 • பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் உய்குர் இனத்தவர் மீது நடத்தும் அடக்குமுறையை கைவிடுவது,
 • மத நம்பிக்கைகள் மீதான தன்னுடைய அதிகாரத்தை கைவிடுவது,
 • உய்குர் இனத்தவரின் தனித்தன்மையை பாதுகாப்பது.
ஆக, இவை தான் சின்ஜிஅங் பிரச்சனையின் முக்கிய சாரம்சங்கள். அப்பகுதியில் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவத்தின் மூலம் நிரந்தர அமைதி திரும்பலாம்.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பதிவில்:
உய்குர்களுக்கும், ஹன் இனத்தவருக்குமிடையே பல வேறுபாடுகள் என்றால், ஹுய் இனத்தவருக்கும் ஹன் இனத்தவருக்குமிடையே (பெரிய அளவில்) ஒரு வேறுபாடும் கிடையாது.
ஆம்…மொழியாலும், உடலமைப்பாலும் ஹன் இன சீனர்களை அப்படியே ஒத்திருப்பார்கள் இவர்கள். இவர்களுக்குள்ளான (வெளிப்படையாக தெரியும்) வித்தியாசங்கள் என்றால், அது, ஹுய் இனத்தவர்,

 • பன்றி இறைச்சி உண்ண மாட்டார்கள்,
 • மதுவை விலக்குவார்கள்,
 • பெண்கள் ஹிஜாப் அணிவார்கள்

என்பன போன்றவை தான்.

இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், இந்த இரண்டு இனத்தவரையும் பிரிப்பது இஸ்லாம் என்ற வாழ்வியல் நெறி மட்டுமே. 
யார் இந்த ஹுய் இனத்தவர்?இந்த கேள்விக்கு விடை காண நாம் நாயகம் (ஸல்) அவர்களது காலத்திற்கு அருகில் செல்ல வேண்டும். இது குறித்த தகவல்கள், மற்றும் சீன முஸ்லிம்கள் குறித்த பொதுவான சில சுவாரசிய தகவல்கள் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பதிவில்…
…அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
References:
1. Uyghur Muslim Ethnic Separatism in Xinjiang, china – Elizabeth Van Wie Davis, Asia-Paciifc Center for Security Studies, January, 2008. (Document available upon request)
2. China’s Xinjiang problem – The Hindu, Aug 12, 2008. link
3. Q+A – Who are the Uighurs and why did they riot? – Reuters, 7th July, 2009. link
4. Strangers in their own Land – By Ron Gluckman /Kashgar, Turpin, Urumchi and around Xinjiang, China. link
5. Who are the Uyghur? – Islamicity, 4th March 2011. link
6. 1421: The Year China Discovered America -gavinmenzies.net, link
7. 1421: The Year a Chinese Muslim Discovered America – Islamicity, link
8. The Silk Road – Ancient China for kids. link
9. Zheng He – Wikipedia. link
10. Gavin Menzies – Wikipedia. link
11. Islam in China: The Uyghur – Muslim Voices. link
12. Fresh protests erupt in China’s Xinjiang region – Japan Today. 12th July 2009. link
13. China’s Xinjiang Problem Has Nothing Much to Do With Islam – New York Times. November 30, 2001. link
14. Xinjiang Uyghur Autonomous Region – Wikipedia. link
15. Uighur – Asian History. link
16. Uyghur people – wikipedia. link
17. The Xinjiang Conflict: Uyghur Identity, Language, Policy, and Political Discourse – Arienne M. Dwyer, East West center. link
18. Uighur language – Encyclopedia Britannica. link
உங்கள் சகோதரன்,
thanks: ஆஷிக் அஹ்மத் அ

கொலம்பஸுக்கு முன்னரே அமெரிக்காவில் முஸ்லிம்கள் உண்மை வெளிவந்தது-part-1

Posted April 27, 2012 by arshathalathary
Categories: Uncategorized

அமெரிக்காவில் முஸ்லிம்கள் – கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்…I

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்தது இருபதாம் நுற்றாண்டிலோ அல்லது பத்தொம்பதாம் நூற்றாண்டின் இறுதியிலோதான் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
அப்படியென்றால் இன்று முதல் அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஆம். கொலம்பஸ் அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர். வரலாற்றில் மறக்கப்பட்ட/மறைக்கப்பட்ட உண்மைகளைத்தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.
 
மேற்கொண்டு செல்லும் முன் ஒரு சிறு தகவல். அமெரிக்காவில் வாழ்கின்ற பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களை அமெரிக்க முஸ்லிம்கள் என்று கூறுவதில்லை, முஸ்லிம் அமெரிக்கர்கள் என்று தான் கூறிக்கொள்கின்றனர். அதனால் இந்த பதிவு முழுவதும் அந்த பதமே குறிப்பிடப்படுகிறது.
 
மேற்கொண்டு பதிவிற்கு…
 
முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாற்றை அலசும்போது கொலம்பஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரண்டும் தவிர்க்க முடியாத பெயர்களாகின்றன. இந்த இரண்டும் சார்ந்த முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாறு மிக விநோதமானது.
இஸ்லாம் மிகவேகமாக பரவிய காலம். ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி 711 ஆம் ஆண்டு தொடங்கியது, 1492ல் அது முடிவுற்றது. முஸ்லிம்களின் கையில் இருந்த கடைசி நகரமான க்ரனடாவும் (Granada) அந்த ஆண்டில் வீழ்ச்சியடைந்தது. ராணி இசபெல்லாவிடம் ஸ்பெயினின் ஆட்சி அதிகாரம் வந்தது. ஸ்பெயின்வாழ் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் மிக மோசமான தருணம் அது.
ஆதாவது அவர்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள், ஏற்காவிடில் மிகப்பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இப்படி கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த முஸ்லிம்கள் ஏராளம். இந்த தருணத்தில் தான் வட ஆப்பிரிக்காவில் இருக்ககூடிய இமாம்களிடமிருந்து ஸ்பெயின் முஸ்லிம்களுக்கு ஒரு தகவல். அதாவது கொடுமைகளிருந்து தப்பிக்க தாங்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டதாக அரசாங்கத்திடம் அறிவித்துவிடுவது, ஆனால் மறைவில் முஸ்லிம்களாக தொடர்வது. முஸ்லிம்களும் அதை செய்தனர்.

இவ்வாறு செய்தவர்களும் இவர்களது சந்ததியினரும் “மொரிஸ்கோஸ்” (Moriscos) என்று அழைக்கப்பட்டார்கள்.

சுருக்கமாக சொல்லப்போனால், இவர்கள் கிருத்துவர்களாகவே அரசாங்கத்தினால் அறியப்படுவார்கள், சரித்திரமும் இவர்களை கிருத்துவர்களாகவே பதிவு செய்யும், ஆனால் தங்களை பொறுத்தவரை அவர்கள் முஸ்லிம்கள். இப்படி மொரிஸ்கோசாக மாறியவர்கள் பலர்.
ஆக 1492 ஆம் ஆண்டு சரித்திரத்தில் மிக முக்கியமான ஆண்டு, முஸ்லிம்களின் ஆட்சி ஸ்பெயினில் நிறைவு பெற்ற ஆண்டு, முஸ்லிம்கள் மொரிஸ்கோசாக மாறிய ஆண்டு. இந்த ஆண்டு மற்றுமொரு நிகழ்வுக்கும் பிரபலமான ஆண்டு. ஆம் கொலம்பஸ் ஸ்பெயினின் உதவிக்கொண்டு அமெரிக்காவை அடைந்ததும் இதே ஆண்டுத்தான்.
கிறிஸ்தோபர் கொலம்பஸ் (Christopher columbus) இத்தாலி நாட்டுக்காரர். ஆனால் ஸ்பெயினின் கொடியின் கீழ்தான் கடற்பயணம்  மேற்கொண்டார். அவர் ஒரு சிறந்த கடல் வழி ஆராச்சியாளர் (Explorar and navigator).
கொலம்பஸ், தான் இண்டீஸ் என்ற செல்வ செழிப்புள்ள பகுதிக்கு செல்வதற்கான கடல்வழியை கண்டுபிடிக்க போவதாகவும் அதற்கு ராணி இசபெல்லா தேவையான உதவிகளை செய்யவேண்டும் என்றும் 1491 ஆம் ஆண்டு முதலே வற்புறுத்தி வந்தார். ராணி இசபெல்லாவும் சிறிது தயக்கத்திற்கு பிறகு 1492 இல் கடற்பயணத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக ஒப்புக்கொண்டார்.
உள்நோக்கம் வேறு என்ன இருக்க முடியும், அப்படி இண்டீசை அடைந்தால் அதனை காலனியாக்கி அதன் செல்வ செழிப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும். கொலம்பஸ்சும், தான் அப்படி ஒரு இடத்தை அடைந்துவிட்டால், ராணி தன்னை அந்த நிலத்தின் கவர்னராகவும் அங்கிருந்து எடுத்து வரும் பொருள்களில் பத்து சதவீதத்தை கொடுத்து விட வேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். உயிரை பணயம் வைத்து சும்மா செல்வாரா என்ன?
கொலம்பஸ், மூன்று கப்பல்களுடன் (The Pinta, The Nina and The Santa Maria)  தன் பயணத்தை மேற்கு நோக்கி அட்லாண்டிக் கடலில் மேற்க்கொண்டார். அவருடன் கப்பல்களில் பயணம் செய்தது மொத்தம் 120 பேர். அதில் மொரிஸ்கோஸ்களும் அடங்குவர். அதிலும் சில மொரிஸ்கோஸ்கள் அந்த கப்பல்களின் முக்கிய பதவிகளில் இருந்தனர், அவர்களில் குறிப்பிட தக்கவர்கள் “பின்சோன் சகோதரர்கள்” (The Pinson or Pinzone brothers), அவர்களில்
1. மார்டின் பின்சோன் (Martin Pinzone), தி பின்டா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்,
2. தேசெண்டே பின்சோன் (Thesentae Pinzone), தி நினா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்,
3. பிரான்சிஸ்கோ பின்சோன் (Francisco Pinzone), தி பின்டா என்ற கப்பலை செலுத்தும் பொறுப்பிலும் இருந்தார்கள்.
இந்த மொரிஸ்கோஸ்களை தவிர கொலம்பஸ்சுக்கு மாபெரும் உதவியாய் இருந்தது ஒரு ஆப்ரிக்க முஸ்லிம். அவர் பெயர் பேடர் ஓலன்சோ நீனோ (Pedar Alonso Niño).கடல்வழி பாதைகளை ஆராய்வதில் கெட்டிக்காரர்.
ஆக கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிவதற்கு பங்காற்றியவர்களில்  மொரிஸ்கோஸ் மற்றும் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பறியது.
1492 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொலம்பஸ்சும் அவரது ஆட்களும் அமெரிக்காவின் கிழக்கில் உள்ள பஹாமாஸ் (The Bahamas) பகுதியை அடைந்தனர். தான் கிழக்கு இண்டீசை அடைந்து விட்டதாக நினைத்த கொலம்பஸ், அங்கு வசித்தவர்களை “இந்தியன்ஸ்” என்று அழைத்தார்.
சரித்திர ஆர்வலர்களுக்கு மற்றுமொரு கூடுதல் தகவல். உலகவரைப்படத்தில், ஸ்பெயின் ஐரோப்பிய கண்டத்தில் கீழ உள்ளது. ஸ்பெயினிலிருந்து மேற்கே அட்லாண்டிக் கடலில் ஒரு நேர்க்கோடு வரைந்தீர்களானால் அது அமெரிக்காவை அடைவதை காணலாம். கொலம்பஸ், மேற்கே பயணம் செய்தால் தான் விரும்பிய இண்டீசை அடைந்துவிடலாம் என்று நினைத்திருக்கலாம்.
இண்டீஸ் என்பது செல்வ செழிப்புள்ள பகுதியாக அறியப்பட்டிருந்தது. இந்த இண்டீஸ் என்பது தற்போதைய ஆசிய நிலப்பரப்பு. ஆக அவர் ஆசியாவின் செல்வ செழிப்பை அடைவதற்காகதான் பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவை அடைந்ததும் அதை இண்டீசென நினைத்து விட்டார்.
இங்கு மற்றுமொரு ஆச்சர்ய செய்தி. அவர் அந்த மக்களை “இந்தியன்ஸ்” என்று அழைத்தது,இந்தியன்ஸ் என்றால் பூர்வீக குடிமக்கள் என்று பொருள். அதாவது கொலம்பஸ் மற்றும் அவரது பரிவாரங்கள் எந்த ஒரு புதுப்பகுதியை அடைந்திருந்தாலும், அந்த பகுதியில் உள்ள மக்களை இந்தியன்ஸ் என்று தான் அழைத்திருப்பார்கள்.
ஆக, அவர் இண்டீசை அடைந்து விட்டதாகவே நினைத்தார். அங்கு சிறிது நாட்கள் இருந்துவிட்டு, ஸ்பெயின் திரும்பினார். இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும், கொலம்பஸ்சுடன் பயணம் மேற்கொண்டிருந்த கிருத்துவரான த்திரியாநா (Triana) என்பவர் ஸ்பெயினை அடைந்தவுடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். இது மிகப்பெரும் ஆச்சர்யமான விஷயம். ஏனென்றால் அப்போதைய ஸ்பெயினின் சூழ்நிலை அப்படி.
இருந்த முஸ்லிம்களே கொடுமைத்தாளாமல் மொரிஸ்கோசாக மாறிக்கொண்டிருந்த நேரம். அப்போதைய நிலையில் இஸ்லாத்தை தழுவதற்கு மாபெரும் தைரியம் வேண்டும். அல்லாஹ் அவருக்கு அப்படியொரு மனவலிமையை கொடுத்திருந்தான். இந்த நிகழ்வு ஸ்பெயினின் ஆட்சியாளர்களை பெருத்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அதற்கு அடுத்த வருடம், 1493 இல் மறுபடியும் அமெரிக்காவை நோக்கி சென்றார் கொலம்பஸ். ஆனால் இந்த முறை 17 கப்பல்களுடனும் 1500 தொழிலாளர்களுடனும்.
இம்முறை அவர் இறங்கியது ப்புர்டோ ரிகோவில் (Puerto Rico). அங்கு தங்கதாதுக்களை கண்ட அவர் அளப்பரிய மகிழ்ச்சி அடைந்தார். அப்புறம் என்ன… காலனி ஆதிக்கந்தான்.  ஸ்பெயினிலிருந்து ஆட்கள் வந்து குவிய ஆரம்பித்தார்கள். அதில் மொரிஸ்கோஸ்களும் பெரிய அளவில் இருந்தார்கள்.
அதேபோல் ஆப்ரிக்காவில் இருந்து மக்கள் அடிமைகளாகவும், துருக்கியில் இருந்து தொழிலாளிகளும் வர வைக்கப்பட்டு பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் மிக அதிகமானோர் முஸ்லிம்கள். இதில் கவனிக்கவேண்டிய மற்றுமொரு செய்தி என்னவென்றால், ஆப்ரிக்காவில் இருந்து வந்த முஸ்லிம்களில் 20-30% பேர் நன்கு படித்தவர்கள், இஸ்லாமிய வல்லுனர்கள்.
ஸ்பெயினிற்கு பிறகு பிரான்ஸ், டென்மார்க், பிரிட்டன் போன்ற நாடுகளும் தங்களது காலனிகளை 1500 ஆம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்காவில் தொடங்கின. இவர்களும் வேலைக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆட்களை கொண்டுவர ஆரம்பித்தார்கள்.
இப்படியாக முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்துச்சேர்ந்தார்கள். அன்றிலிருந்து அமெரிக்க வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பணி இன்றியமையாதது, மறுக்க முடியாதது.

அக்கால முஸ்லிம் அமெரிக்கர்கள் பலரின் வரலாறு மிகத்தெளிவாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

ஆக,      
 • அமெரிக்கா என்ற பகுதி அறியப்படுவதற்கு கொலம்பஸ்சுக்கு பெரிதும் உதவியவர்கள் முஸ்லிம்கள் (1492).
 • பல்வேறு காலனிகளின் கீழ் பணியாற்றியவர்கள் முஸ்லிம்கள் (1500-1775).
 • அமெரிக்க விடுதலை போராட்டத்தில் பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள்  (1776-1789).
 • அமெரிக்க கடற்கரையை பிரிட்டன் படையெடுப்பிலிருந்து காத்தவர்கள் முஸ்லிம்கள் (1812).
 • அமெரிக்க சிவில் யுத்தத்தில் பெரும் பங்கு வகித்தவர்கள் முஸ்லிம்கள் (1849-1865).
இன்றும் பல ஆப்ரிக்க அமெரிக்க முஸ்லிம்கள் தம் முன்னோர்களின் வரலாற்றை நன்கு அறிந்தே வைத்திருக்கின்றனர். அதுபோல “முஸ்லிம் லடினோஸ்” (Muslim Latinos) என்றழைக்கப்படும் ஸ்பானிஷ் அமெரிக்க முஸ்லிம்களும் தங்களுடைய முன்னோர்களின் வரலாற்றை நன்றாகவே அறிந்திருக்கின்றனர்.
ஆக, பெரும்பாலானோர் நினைப்பது போல முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு இருபதாம் நூற்றாண்டில் வந்தவர்கள் கிடையாது. மிக நீண்ட காலமாகவே அதுதான் அவர்கள் நாடு.
கொலம்பஸ்சுக்கு பின்னர் சரி, கொலம்பஸ்சுக்கு முன்னர்?
இது மாபெரும் ஆச்சர்யம், ஆம் உண்மைதான். கொலம்பஸ் அமெரிக்கா வருவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர், கொலம்பஸ்சுக்கு முன்னரே முஸ்லிம்கள் பெரும் படையுடன் அமெரிக்க மண்ணில் காலடிவைத்துள்ளனர், அங்கே வாழ்ந்துள்ளனர்.
கேட்பவர்களை வியப்பின் விளிம்பிற்கு அழைத்து செல்லும் இந்த தகவலுக்கு ஆதாரங்கள்?
இன்றளவும் அமெரிக்காவில் இருக்கும் பழங்கால நூல்கள்.
இன்ஷா அல்லாஹ்…தொடரும்…
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்…
நம் எல்லோருக்கும் இறைவன் நல்வழி நல்குவானாக…ஆமின்…

References:
1. Deeper Roots – Dr.Abdullah Hakim Quick.
2. Muslims in American History, the forgotten legacy – Dr.Jerald F.Dirks
3. History of Muslims in North America, the Audio Lecture – Dr.Abdullah Hakim Quick
4. History of United States – endotwikipediadotorg
5. Islamic Spain – British Broadcasting Service (BBC)
6. Isabella I of castile – endotwikipediadotorg.
7. Histroy of Puerto Rico – welcomedotopuertoricodotorg
8. Christopher columbus ships – elizabethan-eradotorgdotuk

My sincere thanks to
1. Br.Eddie of thedeenshowdotcom

உங்கள் சகோதரன்…
ஆஷிக் அஹ்மத் அ